ஓசூர் : ஓசூர் "செவன்த் டே அட்வென்டிஸ்ட்" கிறிஸ்தவ திருச்சபையில், வெளிநாட்டிலிருந்து வரும் நிதியில் முறைகேடு நடப்பதாகக் கூறி ஓசூர் தாசில்தார் அலுவலகம் முன் போராட்டம் நடந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது
ஓசூர் அடுத்த மத்திகிரி கூட்டு ரோட்டில், "செவன்த் டே அட்வென்டிஸ்ட்' திருச்சபைக்கான தென் ஆசியாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு தற்போது இந்தியாவுக்கான திருச்சபை நிர்வாக உறுப்பினர் தேர்தல், நேற்று முன்தினம் முதல் துவங்கி நடக்கிறது. தேர்தல் பணிகளை பார்வையிடவும், கூடுதல் நன்கொடை நிதியுதவி வழங்குவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யவும், "செவன்த் டே அட்வென்டிஸ்ட்' திருச்சபையின் சர்வதேச தலைவர் வில்சன், அமெரிக்காவில் இருந்து நேற்று முன்தினம் ஓசூர் வந்தார். நேற்று, "செவன்த் டே அட்வென்டிஸ்ட்' நிர்வாகத்தில் ஒரு தரப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள், ஓசூர் தாசில்தார் அலுவலகம் முன் திருச்சபை தேர்தலை கண்டித்தும், வெளிநாட்டில் இருந்து வரும் பல கோடி ரூபாய் நிதியில் முறைகேடு நடப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"செவன்த் டே அட்வென்டிஸ்ட்' நிர்வாக உறுப்பினர் வேதமுத்து தலைமை வகித்தார். "செவன்த் டே' கல்வி நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகளை தமிழக அரசு தடுக்க வேண்டும்; பாரபட்சமாக நடக்கும் நிர்வாகிகள் தேர்தலை நிறுத்த வேண்டும்' என கோஷம் எழுப்பினர்.
நன்றி : தினமலர் - (18-11-1010)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக