சனி, 31 அக்டோபர், 2009

இராமநாதபுரம் மர்கசில் இஸ்லாத்தை ஏற்ற திருப்பாலைக்குடி சரோஜாதேவி


இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைகுடியை சேர்ந்த சகோதரி:சரோஜாதேவி என்பவர் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டு தனது பெயரை பாத்திமா என மாற்றிக் கொண்டார். மாவட்டச் செயலாளர் ஆரிஃப் கான் உடன் இருந்தார்கள்.

செவ்வாய், 27 அக்டோபர், 2009

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானவர் இஸ்லாத்தை தழுவினார்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிர் பிழைத்த அமெரிக்கர் ஒருவர் இஸ்லாத்தை தழுவியுள்ளார். ஆமெரிக்காவில் உள்ள கிரீன்வில்லே என்ற ஊரைச் சேர்ந்த அவரது பெயர் டென்னிஸ் ஒ பிரைன்.
கத்தோலிக்க கிறிஸ்த்தவரான ஒ பிரைன் சென்ற ஆண்டு வியாபாரம் நிமித்தமாக மும்பை வந்துள்ளார். நட்சத்திர ஒட்டலில் அவர் தங்கியிருந்த போது பயங்கரவாதிகளின் தாக்குதல் நடைபெற்றது. பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது வெறுப்பு கொள்ளாமல் அவர்களது மார்க்கத்தை ஆய்வு செய்ய அவர் முடிவுச் செய்தார். இந்த ஆய்வின் முடிவில் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்.

சென்ற ஈகைத் திருநாள் அன்று பெருநாள் தொழுகைக்காக குழுமியிருந்த மக்கள் முன்னிலையில் கலிமா (இஸ்லாத்தில் தன்னை இணைத்துக் கொள்வதற்கான பிரமாண வாக்குமூலத்தை) மொழிந்து தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.

வில்மிங்டனில் உள்ள புனித அந்தோனியார் கத்தோலிக்க தேவாலயத்தின் கல்வி குழு தலைவராக ஒபிரைன் சேவையாற்றி வந்தார். தான் இஸ்லாத்தில் இணைந்தது தனக்கே ஆச்சரியம் தரக் கூடிய செயலாக அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார். ஆனால் தான் இஸ்லாத்தில் இணைந்தது தனக்கு மனநிம்மதியை தருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இஸ்லாத்தை நோக்கிய தனது பயணம் நவம்பர் 26 அன்று இரவு தாஜ் மகால் ஒட்டலின் அறை எண் 343ல் இருந்து தொடங்கியதாக ஒபிரைன் தெரிவித்தார். தானும் தனது நண்பர் ரிச் திபந்தபரும் இரவு உணவை முடித்துக் கொண்டு ஐஸ் கிரீம் சாப்படாமல் தமது அறைகளுக்கு திரும்பிய சற்று நேரத்தில் துப்பாக்கி சப்தம் கேட்டதாக ஒபிரைன் கூறினார். தனது அறைக் கதவு வழியாக பார்த்த போது துப்பாக்கி ஏந்திய மூவர் சப்தமிட்டு கொண்டு செல்வதை தான் கண்டதாக அவர் குறிப்பிட்டார். ஒரு கட்டத்தில் வியட்னாம் போரில் பங்குக் கொண்ட அனுபவம் உள்ள ஒபிரைன் அறையை விட்டு வெளியே வந்து துப்பாக்கி ஏந்தியவர்களை வீழ்த்தி ஆயுதங்களை பறிக்கலாம் என்று எண்ணியதாகவும் ஆனால் பிறகு தனது சிந்தனையை மாற்றிக் கொண்டு கதவை தாழித்துக் கொண்டதாகவும் ஒபிரைன் குறிப்பிட்டார்.

பிறகு தனது அறை புகைமூட்டமாகியதாகவும் அறையை விட்டு வெளியேற எண்ணி கதவை திறந்த போது தீ எரிவதை தான் கண்டதாகவும் பிறகு தீயணைப்பு படையினர் தன்னை காப்பாற்றினர் என்றும் ஒபிரைன் குறிப்பிட்டார்.

தாக்குதலை நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை பற்றி பிறகு தான் படிக்க தொடங்கியதாகவும் பிறகு திருக்குர்ஆனை படித்ததாகவும் ஒபிரைன் தெரிவித்தார். பிறகு இஸ்லாத்தைப் பற்றி விரிவாக படித்ததாகவும் அது பற்றி பலரிடம் விசாரித்த அறிந்ததாகவும் ஒபிரைன் கூறினார். பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தியவர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளுக்கேற்ப நடந்துக் கொள்ளவில்லை என்ற தெளிவை இஸ்லாத்தை நோக்கிய தனது பயணத்தின் போது அறிந்துக் கொண்டதாகவும் அவர் கூறினார். தனது முஸ்லிம் நண்பரான அஹ்மது அமீர் தான் இஸ்லாத்தைப் பற்றி அறிய பெரிதும் உதவினார் என்றும் ஒபிரைன் குறிப்பிட்டார்.

ஒபிரைன் இஸ்லாத்தை தழுவி இந்த விபரம் திலாவரே நியூஸ் என்ற உள்ளூர் பத்திரிகையில் முதலில் வெளியாகியது.

புதன், 14 அக்டோபர், 2009

தலித் சகோதரா எம் தோளோடு,தோள்சேர்ந்து தொழவாருங்கள்.

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றபோது ஊர் மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதையடுத்து போலீசார் சுப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகிறது.

வேதாரண்யம் அருகே உள்ள செட்டிக்குளம் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குள் தலித்கள் அனுமதிக்கபடுவதில்லை.

இதை எதிர்த்து பல போராட்டங்கள் நடந்து வந்தன. இந் நிலையில் தலித்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்ல அரசு நடவடிக்கை எடுத்தது.

ஆர்டிஓ ராஜேந்திரன் தலைமையில் இன்று தலித்துக்கள் ஆலய பிரவேசம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தலித்துக்களை இன்று காலை ஆர்டிஓ அழைத்து வந்தபோது அதை எதிர்த்து ஊர் மக்கள் திரண்டனர். தலித்துக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மாட்டோம் என்று கூறி கலாட்டா செய்தனர்.

எதிர்ப்பை மீறி தலித்களை போலீசார் ஆலயத்துக்குள் அழைத்துச் சென்றபோது அவர்கள் மீது கூட்டத்தினர் சரமாரியாக கல் வீச்சு தாக்குதல் நடத்தினர்.

இதையடுத்து கூட்டத்தைக் கலைக்க போலீசார் 10 வானத்தை நோக்கி சுட்டானர்.இதையடுத்து கூட்டம் கூட்டம் கலைந்து ஓடியது.

அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

(தலித் சகோதரா எம் தோளோடு,தோள்சேர்ந்து தொழவாருங்கள்.எம் மார்கத்தில் இணைந்து விட்டால் சாதி,பேதம் உயர்வு தாழ்வில்லை சகோதரா! நீ
என்னேரத்திலும் இறையில்லம் நுழையலாம் தடைப்போட யாருக்கும் அதிகாரம் இல்லை.யாவரும் ஒரே தட்டில் உண்ணலாம்,ஓரே குவளையில் பருகலாம்.
வா சகோதர உன் வாழ்வின் வசந்த வாசல் திறந்தே இருக்கிறது ,சமத்துவம் என்னும் மகத்துவம் அடையலாம்)

ஞாயிறு, 11 அக்டோபர், 2009

இந்த வருடம் மலேசியாவில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை 759

மலேசியாவில் இந்த வருடம் மொத்தம் 759 மக்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். இந்த தொகை கடந்த செப்டம்பர் மாதம் வரை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோர்களின் எண்ணிக்கை ஆகும். சென்ற வருடம் இந்த எண்ணிக்கை 597 ஆக இருந்தது. இதனை Federal Territory Malaysian Islamic Development Department தெரிவித்துள்ளது.

இந்த Federal Territory Malaysian Islamic Development Department யின் துணை இயக்குனர் ஜைனல் ஆபிதின் ஜாபர், "இந்த எண்ணிக்கை இந்த வருடத்தின் முடிவில் 1000 எட்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று கூறினார்.

சென்ற வருடத்திலிருந்து இந்த இஸ்லாமிய வளர்ச்சித் துறை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்பவர்களுக்கு மொத்தம் 1.5 மில்லியன் மலேசிய ரிங்கிட்களை ஊக்கத் தொகையாக வழங்கியுள்ளது. இந்த செய்தியினை ஜாபர் ஊனமுற்றவர்கள் மற்றும் இஸ்லாத்தை எற்றுக் கொண்டவர்களுக்கான மறுவாழ்வு மையத்தை திறந்தது வைத்தப் பின் பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.

அவர் மேலும், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்களில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு 1500 மலேசிய ரிங்கிட்களும், 7 -17 வயது உடையவர்களுக்கு 1000 மலேசிய ரிங்கிட்களும் மற்றும் அதற்கு குறைவான வயதுடையவர்களுக்கு 500 மலேசிய ரிங்கிட்க்ளும் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

சென்ற வருடம் இஸ்லாத்தை தழுவியவர்களில் 2% மக்கள் மீண்டும் அவர்களின் பழைய மதத்திற்கு சென்று விட்டனர் என்று அவர் கூறினார்.

நன்றி
ABNA.

சனி, 10 அக்டோபர், 2009

உலகம் முழுவதும் முஸ்லீம்களின் தொகை ஆச்சரியப்பட வைக்கிறது


உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களின் தொகை குறித்த ஆய்வொன்றை அமெரிக்காவின் சி.என்.என் தொலைக்காட்சி நடாத்தியுள்ளது. நேற்று நடந்த இது குறித்த விசேட நிகழ்ச்சியில் பல ஆச்சரியம் தரும் உண்மைகள் வெளியாகியுள்ளன. உலகம் முழுவதும் தற்போது 1.57 மில்லியாட் முஸ்லீம்கள் உள்ளனர். உலகில் உள்ள ஒவ்வொரு நான்கு பேருக்கும் ஒருவர் முஸ்லீமாக இருக்கிறார்கள். மேலும் அதைவிட ஆச்சரியமான விடயம் லெபனானைவிட கூடுதலான முஸ்லீம்கள் ஜேர்மனியிலேயே இருக்கிறார்கள். ஜோர்டான், லிபியா ஆகிய நாடுகளைவிட அதிகமான முஸ்லீம்கள் ரஸ்யாவில் வாழ்கிறார்கள் என்பதுதான். அதேவேளை உலக முஸ்லீம்களில் 60 வீதமானவர்கள் ஆசியா கண்டத்திலேயே வாழ்வது குறிப்பிடத்தக்கது. இலக்கற்று பெருகும் முஸ்லீம்களின் சனத்தொகை ஆச்சரியம் தருவதாக இருப்பதாகவும் அது கூறுகிறது. சீனாவில் ஒரு குடும்பம் ஒரு பிள்ளையை மட்டுமே பெற முடியுமென சட்டம் போட்டுள்ள நிலையில் முஸ்லீம்களிடையே அது பேணப்படாதிருப்பதும் கவனத்தைத் தொடுவதாக இருந்தது.