புதன், 28 ஜூலை, 2010

பாதிரியாரின் செக்ஸ் தொல்லை-உடன்பட வலியுறுத்தும் கணவர் குடும்பத்தார்-பெண் புகார்

திருச்சி: வேலை பார்க்கப் போன இடத்தில் பாதிரியார் செக்ஸ் வைத்துக் கொள்ள வற்புறுத்துகிறார். இதுகுறித்து கணவர், மாமனார், மாமியாரிடம் கூறினால் அதற்கு உடன்பட வற்புறுத்துகின்றனர். கூடுதலாக வரதட்சணை கேட்டும் கொடுமைப்படுத்துகின்றனர் என்று திருச்சி பெண் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

திருச்சி சுப்பிரமணியபுரம் காந்திநகரைச் சேர்ந்தவர் லாசர். அவரது மகள் பாரதி என்ற எஸ்தர் (19). கடந்த 24.2.10 அன்று தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் மாரநாதா சபையில் பாலாஜி என்ற மனோபாவுக்கும் (29), பாரதிக்கும் திருமணம் நடந்தது.

இத்தனைக்கும் பாரதி, பாலாஜிக்கு சொந்த அத்தை மகள் ஆவார். திருமணத்தின்போது தனது மகளுக்கு சீர் வரிசையாக, ரூ. 1 லட்சம் ரொக்கம், ரூ. 50 ஆயிரத்துக்கு சீர் வரிசை பொருட்களையும் கொடுத்தார் லாசர்.

திருமணத்திற்குப் பின்னர் போடிநாயக்கனூரில் குடித்தனத்தை ஆரம்பித்தனர் பாரதியும், பாலாஜியும். ஆனால் பாலாஜிக்கு குடும்ப வாழ்க்கையிலும், தாம்பத்யத்திலும் ஈடுபாடு இல்லை. இதனால் பாரதி மனம் உடைந்தார்.

மனைவியிடம் சரியாக பேசுவதும் இல்லையாம் பாலாஜி. இதுபோதாதென்று பாலாஜியின் பெற்றோர் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், போடி நாயக்கனூர் மாரநாத சபையில் பைபிள் படிப்புக்கு, ஆசிரைய வேலைக்கும் செல்ல வற்புறுத்தினர். இதையடுத்து கடந்த மே மாதம் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை அப்பணிக்குச் சென்றுள்ளார் பாரதி.

அந்த நாட்களில் அங்கிருந்த பாதிரியார் டேவிட் புஷ்பராஜ் (இவருக்கு வயது 55 என்பது குறிப்பிடத்தக்கது) என்பவர் பாரதியை வற்புறுத்தி ஆபாச சிடிக்களைப் போட்டுப் பார்க்கக் கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த பாரதி, இதுகுறித்து தனது மாமியாரிடம் கூற அவரோ, அதைக் கண்டு கொள்ளவே இல்லையாம்.

இதை எதிர்பாராத பாரதி, கணவரிடம் முறையிட்டுள்ளார். அவரோ, பாதிரியார் சொல்படி நடந்து கொள் என்று கூற மேலும் அதிர்ச்சியாகியுள்ளது பாரதிக்கு.

அடுத்த அதிர்ச்சியாக, என் இஷ்டப்படி நீ நடக்கவில்லை. இனியும் நீ இங்கு இருக்கக் கூடாது. வாழ வேண்டும் என விரும்பினால், ரூ. 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 10 பவுன் நகையை வாங்கி வா என்று கூறியுள்ளார் பாலாஜி.

இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார் பாரதி. தந்தை லாசர் உடனடியாக விரைந்து வந்து சம்பதியிடம் இதுகுறித்துப் பேசியுள்ளார். ஆனால் அவர்களோ சரியாக பேசவில்லையாம். இதையடுத்து மகளை வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டார் லாசர்.

இந்த நிலையில், 30.6.10 அன்று திருச்சி மண்டல போலீஸ் ஐ.ஜி.யை நேரில் சென்று சந்தித்து பாரதி புகார் மனு அளித்தார்.

அதில், எனது கணவர் பாரதி தாம்பத்திய உறவில் விருப்பம் இல்லாமல் இருந்து வருகிறார். பாதிரியார் டேவிட் புஷ்ப ராஜ் என்னிடம் அடிக்கடி செக்ஸ் தொல்லை கொடுத்து வருகிறார். இதற்கு எனது மாமனார், மாமியார், கணவர் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். அடிக்கடி பணம்- நகை கேட்டு சித்ரவதை செய்து வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கன்டோன்மென்ட் மகளிர் காவல் நிலைய போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

திங்கள், 26 ஜூலை, 2010

சென்னையில் கற்பழிப்பு கிறிஸ்தவ மத போதகர் கைது

சென்னையில் கற்பழிப்பு வழக்கில் மதபோதகர் கைது செய்யப்பட்டார். அப்பாவி பெண்களை ஏமாற்றி `செக்ஸ்' உறவு வைத்ததோடு, லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்திருப்பதாகவும், அவர் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை அயனாவரம் பழனி ஆண்டவர் கோயில் தெருவில் "பெயித் அசெம்பிளி" என்ற பெயரில் பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபை உள்ளது. இதில் 150 பேர் வரை உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த சபையில் போதகராக பணியாற்றியவர் செல்வராஜன்(வயது 53). இவர் மீது ஏராளமான புகார்கள் கூறப்பட்டன.

சபைக்கு வரும் அப்பாவி பெண்களை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்வதாகவும், கோவில் கட்டியதில் கடன் பட்டு விட்டதாக சொல்லி, சபை உறுப்பினர்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்து மோசடி செய்து விட்டதாகவும், புகார்கள் வந்தன.

நேற்று மாலையில் இவர் மீது மேரி, பிலோமினா(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) என்ற 2 பெண்கள் அயனாவரம் போலீஸ் நிலையத்தில் பாலியல் புகார் கொடுத்தனர்.

பிலோமினா செல்வராஜனிடம் குமாஸ்தாவாக மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்தார். மேரி சபையில் உறுப்பினராக உள்ளார். மேரி கொடுத்த புகாரில் கர்த்தர் பெயரைச் சொல்லி ஏமாற்றி, செல்வராஜன் தன்னிடம் கடந்த 6 வருடங்களாக செக்ஸ் உறவு வைத்ததாகவும், மேலும் தன்னிடம் 5 சவரன் நகைகளையும், ரூ.3 லட்சம் பணமும் ஏமாற்றி விட்டார் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

பிலோமினா கொடுத்த புகாரில், "கர்த்தர் என்னை மனைவியாக வைத்துக் கொள்ள ஆசீர்வதித்து விட்டார் என்று பொய் சொல்லி, செல்வராஜன் ஏமாற்றி என்னை கற்பழிக்க முயற்சித்தார் என்றும், ரூ.63 ஆயிரம் பணத்தையும், 5 சவரன் நகைகளையும் ஏமாற்றி விட்டார்" என்றும் குற்றம் சாட்டி இருந்தார்.

மேரி திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தாய். பிலோமினா திருமணமாகி குழந்தை இல்லாதவர்.

இந்த 2 புகார்கள் மீதும் மத்திய சென்னை இணை கமிஷனர் தாமரைக்கண்ணன் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் லட்சுமி, உதவி கமிஷனர் சங்கரலிங்கம், ஆகியோர் மேற்பார்வையில் அயனாவரம் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்தார். கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்சி, மோசடி, மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் செல்வராஜன் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

பின்னர் உடனடியாக செல்வராஜன் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

எனது சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகே உள்ள நாகலாபுரம் புதூர் ஆகும். நான் பி.ï.சி.படித்து விட்டு ஐ.டி.ஐ.யும் படித்துள்ளேன். சிறிது காலம் சென்னை மாநகர பேருந்து கழகத்தில் மெக்கானிக்காக பணி புரிந்தேன். அதன் பிறகுதான் இந்த பெந்தேகோஸ்தே கிறிஸ்தவ சபையை தொடங்கினேன்.

கடந்த 14 ஆண்டுகளாக இந்த சபையை நடத்தி வருகிறேன். நான் பாதிரியாருக்கு படிக்கவில்லை. அனுபவ ரீதியாக மதபோதகராக பணியாற்றினேன். எனக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். ஒரு மகன் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டான். இன்னொரு மகன் படித்து வருகிறான். எனது மனைவி வில்லிவாக்கத்தில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறாள்.

மேரி இந்துவாக இருந்து மதம் மாறியவர். அவர் தனது கணவருடன் தகராறு என்றும், அதனால் மனக்குழப்பம் அடைந்துள்ளதாகவும், இதனால் ஜெபம் செய்யும்படியும் கூறினார். அப்போதுதான் எனக்கும், எனது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு நானும் மனக்குழப்பத்தில் இருந்தேன்.

இதனால் நாங்கள் இருவரும் எங்கள் கதையை ஒருவருக்கொருவர் சொல்லி மன ஆறுதல் அடைந்தோம். அப்படித்தான் எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாகி விட்டோம். அவர் விரும்பித்தான் என்னோடு உறவு வைத்துக் கொண்டார்.

பிலோமினாவும் அவரது கணவரோடு சண்டை என்று சொல்லித்தான் என்னோடு பழக ஆரம்பித்தார். ஆனால் நான் அவரோடு தொடர்பு எதுவும் வைக்கவில்லை. அவருக்கு ஆறுதல் மட்டுமே சொன்னேன்.

நான் கர்த்தர் பெயரை தவறாக சொல்லித்தான் தவறான தொடர்பு வைத்து விட்டேன். இதற்கு கர்த்தர் என்னை தண்டித்து விட்டார். அதனால்தான் நான் இப்போது போலீஸ் கையில் மாட்டி ஜெயிலுக்கு போகிறேன்.

இவ்வாறு செல்வராஜன் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்


தேங்க்ஸ் டு : http://www.tamilkurinji.com

ஞாயிறு, 25 ஜூலை, 2010

பராஅத் இரவு என்ற பெயரில்..

எழுதியவர்/பதிந்தவர்/உரை மௌலவி இம்தியாஸ் ஸலஃபி

- இம்தியாஸ் ஸலபி

இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்கள் கடை பிடிக்கும் அமல்கள் (செயற்பாடுகள்) ஏராளம். அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களும் காட்டித் தந்த அமல்கள், இபாதத்கள் ஒரு புறமிருக்க, முஸ்லிம்கள் கண்டுபிடித்த அமல்கள், மறுபுறம் மலையாய் குவிந்து நிற்கின்றன.

அமல்களை நிர்ணயிப்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுமே தவிர முஸ்லிம்களோ, முஸ்லிம்களுடைய வழித் தோன்றல்களோ அல்ல! துர திஷ்டவசமாக இன்று இந்நிலை பரவலாக காணமுடிகிறது.

மார்க்கத்தில் எல்லை மீறி செல்கின்ற போது தனி மனித வழிபாடும், மூட நம்பிக்கைகளும், வழிகேடுகளும் தோற்றம் பெறுகின்றன. இறுதியில் கைசேதப்பட்டவனாக மனிதன் நரகில் நுழைகிறான். இந்த அபா யத்திலிருந்து பாதுகாப்பதற்காகத்தான் நபியவர்கள் ”மார்க்கத்தில் எல்லை மீறி செல்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன்” (நூல் முஸ்லிம்) என்றும் ”எங்களுடைய கட்டளையில்லாமல் எவர் ஒரு செயலை (அமலை) செய்கிறாரோ அது நிராகரிக்கப்படும் (நூல்: முஸ்லிம்) என்றும் கண்டித்துள்ளார்கள்.

எனவே எந்த ஒரு அமலை செய்வதானாலும் அதற்கு நபிவழியில் ஆதாரமுண்டா? என்று பார்க்க வேண்டும். இருந்தால் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஒதுங்கி விட வேண்டும். இதுவே சுன்னாவை கடைபிடிக்கும் ஒழுங்கு முறையாகும்.

இன்று பராஅத் இரவு என்ற பெயரில் முஸ்லிம்களால் ஒரு இரவு விசேடமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய இரவில் நின்று வணங்கியும், நோன்பு நோற்றும் மூன்று வகையான பிரார்த்தனைகளை (1. உணவு விஸ்தீரணம், 2. நீண்ட ஆயுள், 3. எல்லாவித துன்பங்களை விட்டும் நீங்கியிருத்தல் போன்ற துஆக் களை) கேட்டும், மூன்று யாசீன் ஒதியும் விஷேடமான தொழுகைகளை நடாத்தியும் இன்னும் இது போன்ற செயல்களையும் செய்கிறார்கள். பள்ளிவாசல்களிலும் விசேடமான நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்படுகின்றன. இதற்கான ஆதாரங்கள் உண்டா? என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் அவசியமாகும்.

سنن ابن ماجه – (ج 4 / ص 301)
1378 – حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْخَلَّالُ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَنْبَأَنَا ابْنُ أَبِي سَبْرَةَ عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَتْ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَقُومُوا لَيْلَهَا وَصُومُوا نَهَارَهَا فَإِنَّ اللَّهَ يَنْزِلُ فِيهَا لِغُرُوبِ الشَّمْسِ إِلَى سَمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلَا مِنْ مُسْتَغْفِرٍ لِي فَأَغْفِرَ لَهُ أَلَا مُسْتَرْزِقٌ فَأَرْزُقَهُ أَلَا مُبْتَلًى فَأُعَافِيَهُ أَلَا كَذَا أَلَا كَذَا حَتَّى يَطْلُعَ الْفَجْرُ

سنن ابن ماجه بحاشية السندي – (ج 3 / ص 178)
1378 – قَوْله ( فَقُومُوا لَيْلهَا )
وَفِي الزَّوَائِد إِسْنَاده ضَعِيف لِضَعْفِ اِبْن أَبِي بُسْرَة وَاسْمه أَبُو بَكْر بْن عَبْد اللَّه بْن مُحَمَّد أَبِي بُسْرَة قَالَ فِيهِ أَحْمَد بْن حَنْبَل وَابْن مُعِين يَضَع الْحَدِيث .

ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவு வந்துவிட்டால் அவ்விரவில் நின்று வணங்குங்கள். பகலில் நோன்பு பிடியுங்கள். அன்றைய நாளில் சூரியன் மறைந்த பின் அல்லாஹ் கடைசி வானத்திற்கு இறங்கி வந்து ”என்னிடம் பாவமன்னிப்பு கோருபவர் உண்டா? நான் அவருக்க மன்னிப்பு வழங்குகிறேன். என்னிடம் உணவு கேட்பவர் உண்டா? நான் அவருக்கு உணவளிக்கி றேன். சோதனைக்கு ஆளாவனவர் உண்டா? அவருக்கு நிவாரணம் வழங்குகிறேன் என்று சுபுஹ் நேரம் வரை கேட்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரழி) அறிவிக்கிறார்கள். இந்தச் செய்தி இப்னு மாஜாவில் பதிவாகியுள்ளது.
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை யில் ‘இப்னு அபீசப்ரா’ என்பவர் இடம்பெறு கிறார். இவர் பலஹீனமாவர். இவர் பொய் யான ஹதீஸ்களை இட்டுக் கட்டக் கூடிய வர் என இமாம் அஹ்மத் (ரஹ்), இப்னு ஹன்பல் (ரஹ்) இமாம் இப்னு முயீன் (ரஹ்) குறிப் பிடுகிறார். எனவே இந்த ஹதீஸைக் கொண்டு செயல்பட முடியாது.

سنن الترمذي – (ج 3 / ص 193)
670 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ
فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ

وَفِي الْبَاب عَنْ أَبِي بَكرٍ الصِّدِّيقِ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْحَجَّاجِ و سَمِعْت مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ و قَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ

ஆயிஷா (ரழி) அறிவிக்கிறார்: ”நான் (ஸல்) அவர்களை இரவில் படுக்கையில் காணாததால் அவர்களைத் தேடி வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ‘பகீய்’ மையவாடியில் இருந்தார்கள். அப்போது ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதி இரவில் அல் லாஹ் கடைசி வானத்திற்க இறங்கி ஆட்டின் உரோமத்தின் எண்ணிக்கையை விட அதிகமாக பாவமன்னிப்பு வழங்குகிறான் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்று ஆயிஷா (ரழி) அறிவிக்கும் செய்தி திர்மிதியில் பதிவாகியுள்ளது.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ‘ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத்’ என்பவர் இடம்பெறுகிறார். இவர் மற்ற அறிவிப்பாளரான யஹ்யா இப்னு அபூ கஸீல் என்பவரிடம் எதையும் செவியுற்றதில்லை. இது பலஹீனமான செய்தி என்று இமாம் புகாரி (ரஹ்) விமர்சனம் செய்கிறார்கள் என இமாம் திர்மிதி (ரஹ்) குறிப்பிடுகிறார்க்ள. எனவே இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டும் செயல்பட முடியாது.

سنن ابن ماجه – (ج 4 / ص 303)
1380 – حَدَّثَنَا رَاشِدُ بْنُ سَعِيدِ بْنِ رَاشِدٍ الرَّمْلِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ الضَّحَّاكِ بْنِ أَيْمَنَ عَنْ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَرْزَبٍ عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ
عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ

سنن ابن ماجه بحاشية السندي – (ج 3 / ص 180)
وَفِي الزَّوَائِد إِسْنَاده ضَعِيف لِضَعْفِ عَبْد اللَّه بْن لَهِيعَة وَتَدْلِيس الْوَلِيد بْن مُسْلِم وَاَللَّه أَعْلَم

ஷஃபான் மாதத்தின் பதினைந்தாம் இரவில் இணைவைப்பவனுக்கும் குரோதம் பாரட்டுபவனையும் தவிர அல்லாஹ் தன்னுடைய எல்லா படைப்பினங்களுக்கும் மன்னிப்பு வழங்குகிறான்.. என நபி (ஸல்) கூறினார்கள்.(இப்னுமாஜா)

இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் இப்னு லஹீஆ என்பவர் பலஹீனமானவர் என்றும் வலீத் இப்னு முஸ்லிம் செய்திகளை இருட்டடிப்பு செய்பவர் என்றும் ஹதீஸ் துறை அறிஞர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

எனவே ஷஃபான் பதினைந்தாம் இரவின் சிறப்பு மற்றும் நோன்பு பற்றி வரக்கூடிய எந்தச் செய்தியும் ஸஹீஹானதாக இல்லை என்று ஹதீஸ் கலை இமாம்களே தெளிவுப்படுத்துகிறார்கள். உண்மை இவ்வாறு இருக்கும்போது பலஹீனமான செய்திகளைக் கொண்டு எப்படி அமல் செய்ய முடியும் என்பதை சிந்திக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல ‘பராஅத் இரவு’ என்று குறிப்பிட்டுஎந்த ஒரு ஹதீஸும் வரவில்லை. இதற்கு எப்படி இந்த பெயரை சூட்டினார்கள் என்பதும் மர்மமாகவே இருக்கிறது.

‘இந்த இரவில் நோன்பு நோற்றால் தப்பில்லையே அதுவும் நன்மைதானே என்று மேலேயுள்ள விபரங்களை தெரிந்த பின் சில நேரம் கேட்கலாம்.

‘தப்பில்லையே! நன்மை தானே, என்று நாமாக சமாதானம் கூறிக் கொள்ளவோ ஆறுதல் அடையவோ எமக்கு எந்த அதிகார முமில்லை. எதை எப்படி எந்த நேரத்தில் எந்த இடத்தில் எந்த முறையில் செய்ய வேண்டும் என்பதை தெளிவுபடுத்திக் கூறுவதற்குதான் அல்லாஹ் இறைத்தூதரை அனுப்பி வைத்தான்.இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காட்டித்தராத எந்த செயலும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மேலேயுள்ள ஹதீஸ் தெரிவிக்கின்றது.

இமாம் நவவீ (ரஹ்) அவர்கள்: ரஜப் மாதத்திலும், ஷஃபான் மாதத்திலும் விசேடமான தொழும் தொழுகை மோசமான நிராகரிக்கக் கூடிய பித்அத்கள். (இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை) என்று கூறுகிறார்கள். நூல்: அஸ்ஸுனனு வல்முப்த திஆது) இது தவிர ஸஹீஹான ஹதீஸ்கள் மூலம் நிரூபனமாகும் சுன்னத்தான நோன்புகளை நோற்க பழகிக் கொள்ள வேண்டும். எனவே உண்மையைஅறிந்து கொண்ட பின் அதனடிப்படையில் செயல்பட அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக.

تفسير القرآن العظيم لابن كثير – (ج 7 / ص 246)

وقد ذكرنا الأحاديث (1) الواردة في ذلك في ‘سورة البقرة’ بما أغنى عن إعادته.
ومن قال: إنها ليلة النصف من شعبان -كما روي عن عكرمة-فقد أبعد النَّجْعَة فإن نص القرآن أنها في رمضان. والحديث الذي رواه عبد الله بن صالح، عن الليث، عن عقيل عن الزهري: أخبرني عثمان بن محمد بن المغيرة بن الأخنس أن رسول الله صلى الله عليه وسلم قال: ‘تقطع الآجال من شعبان إلى شعبان، حتى إن الرجل لينكح ويولد له، وقد أخرج اسمه في الموتى’ (2) فهو حديث مرسل، ومثله لا يعارض به النصوص

செவ்வாய், 13 ஜூலை, 2010

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?

அளவிலா கருணையும் இணையிலா கிருபையுமுடைய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால்.

இஸ்லாத்தைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
-: ஆங்கிலத்தில் :- டாக்டர் ஜாகிர் நாயக்.
(நிறுவனர்ää இஸ்லாமிய ஆய்வு மையம்ää மும்பை.)

-: தமிழாக்கம் :- அப-இஸாரா

கேள்வி : இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய வேண்டும் என கட்டாயப்படுத்தி அவர்களை இழிவு படுத்துவது ஏன்?.

பதில்: இஸ்லாத்தில் பெண்களின் நிலை பற்றி தாக்குவதை இலக்காக கொண்டு உலக ஊடகங்கள் செயல்படுகின்றன. இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்கள் உடை அணிவதை விமரிசிக்காத ஊடகங்களே உலகில் இல்லை எனலாம். இஸ்லாம் வலியுறுத்தும் - இஸ்லாமிய உடை பற்றிய காரண காரியங்களை அறியும் முன்பு இஸ்லாம் தோன்றும் முன்பு - உலகில் உள்ள ஒவ்வொரு சமுதாயத்திலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.

1. முந்தைய காலங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்பட்டு - போகப் பொருளாக மட்டுமே
பயன்படுத்தப்பட்டார்கள். பண்டைய காலங்களில் பெண்கள் சமுதாயத்தில் மிகவும் கீழத்தரமாக மதிக்கப்பட்டு - மனிதனுக்கு உண்டான அடிப்படை கௌரவம் கூட மறுக்கப்பட்டவர்களாக நடத்தப்பட்டார்கள் என்பதை கீழ்க்காணும் வரலாற்று உண்மைகள் நமக்கு போதுமான விளக்கத்தை தருகின்றன.

a. பாபிலோனிய நாகரீகம்:
பாபிலோனிய சட்டப்படி பெண்கள் கீழ்த்தரமாக மதிக்கப்பட்டு அவர்களுக்கு உரிய அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டார்கள். ஒரு மனிதன் ஒரு பெண்ணைக் கொலை செய்து விட்டால் அவருக்கு மரண தன்டனை வழங்குவதற்கு பதிலாக அவருடைய மனைவிக்கு மரண தண்டனை வழங்கும் வழக்கம் பாபிலோனிய நாகரீகத்தில் இருந்தது.

b. கிரேக்க நாகரீகம்:
பண்டைகால நாகரீகங்களில் கிரேக்க நாகரீகம் பெருமைக்குரியதாக கருதப்பட்டது. மேற்படி 'பெருமைக்குரிய" நாகரீக காலத்தில் - பெண்கள் தங்கள் அடிப்படை உரிமைகள்
மறுக்கப்பட்டவர்களாக கீழ்த்தரமாக நடத்தப்பட்டார்கள். 'பண்டோரா" என்றழைக்கப்பட்ட “'கற்பனைப் பெண்மணி" யே மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகள் அனைத்திற்கும் அடிப்படை காரணமாக அமைந்தவள் என்று கிரேக்க புராணங்கள் பறை சாற்றுகின்றன. கிரேக்கர்கள் பெண்களை மனித குலத்தில் தாழந்தவர்கள் என்றும் - ஆண்களுக்கு அடிமைகள் என்றும் கருதினார்கள். கிரேக்க நாகரீகத்தின் பிற்பட்டக் காலத்தில் பெண்கள் - உயர்வானவர்களாக மதிக்கப்பட்டாலும் - ஆண்களுக்கு உரிய 'தான்" என்ற அகம்பாவத்தாலும் - பாலியியல் பலாத்காரங்களுக்கும் - பெண்கள் உட்படுத்தப்பட்டார்கள். கிரேக்க சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் - விபச்சாரம் பரவலாக காணப்பட்டது.

c. ரோமானிய நாகரீகம்:
ரோமானிய நாகரீகம் புகழின் உச்சநிலையில் இருந்தபோது கூட ஒரு ஆண் தனது மனைவியை கொலை செய்வதை தனது உரிமையாக கொண்டிருந்தான். விபச்சாரமும் - பெண்களை நிர்வாணமாக பாப்பதுவும் - ரோமானியர்களின் மிகச் சாதாரண பழக்க வழக்கமாக இருந்தது.

d. எகிப்திய நாகரீகம்:
எகிப்தியர்கள் பெண்களை ஒரு தீமையாகவும் - சாத்தானின் சின்னமாகவும் கருதினார்கள்.

e. அருள்மறை குர்ஆன் வருவதற்கு முன்பிருந்த அரேபிய நாகரீகம்:
அரேபியாவில் அருள்மறை குர்ஆன் வருவதற்கு முன்பு - அரேபியர்கள் பெண்களை கீழத்தரமாக மதித்தார்கள். பெண்குழந்தைகள் பிறந்தால்ää அவைகளை உயிரோடு மண்ணில் புதைத்தார்கள்.

2. இஸ்லாம் பெண்களுக்கு சமூகத்தில் சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது. அவர்கள் சமுதாயத்தில் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை வலியுறுத்தியது.
ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாம் பெண்களுக்கு சம உரிமையும் அந்தஸ்தும் வழங்கியது. சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்குரிய கௌரவத்தோடு வாழ்வதை இஸ்லாம் வலியுறுத்தியது.

'ஆண்களுக்குரிய “ஹிஜாப்"
வழக்கமாக இஸ்லாத்தில் பெண்களுக்கு மாத்திரம்தான் “'ஹிஜாப்" முறை உள்ளதாக பொதுமக்கள் வாதிடுவார்கள். ஆனால் அருள்மறை குர்ஆனில் அல்லாஹ் பெண்களுக்கான “'ஹிஜாப்" பற்றி அறிவிக்கும் முன்பு ஆண்களுக்கான “'ஹிஜாப்" பற்றி அறிவிக்கின்றான். அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸ_ரத்துன் நூரின் முப்பதாவது வசனத்தில் “'(நபியே!) விசுவாசம்கொண்ட ஆண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: அது அவர்களுக்கு மிக்க பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்" என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஒரு மனிதன் ஒரு பெண்ணை பார்த்தவுடன் அவனது மனதில் மானக்கேடான எண்ணம் தோன்றுமேயானால் - அந்த மனிதன் தனது பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

'பெண்களுக்குரிய “ஹிஜாப்"
அருள்மறை குர்ஆனின் 24வது அத்தியாயம் ஸ{ரத்துன் நூரின் 31வது வசனத்தில் '(நபியே!) இன்னும் விசுவாசம்கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக: அவர்கள் தங்கள்
பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்: தங்கள் வெட்கத் தலங்களை பேணிப்
பாதுகாத்துக் கொள்ள வேண்டும்: தங்கள் அழகலங்காரத்தை அதனின்று
(சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத்தவிர (வேறு எதையும்) வெளிக்
காட்டலாகாது: இன்னும் தங்கள் முன்றானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை
மறைத்துக் கொள்ள வேண்டும்: மேலும் (விசுவாசம்கொண்ட பெண்கள்) தம்
கணவர்கள் தம் தந்தையர்கள் அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது
தம் புதல்வர்கள்..".ஆகிய இவர்களைத் தவிர(வேறு ஆண்களுக்குத் ) தங்களுடைய
அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது." என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ஹிஜாப் அணிவதற்கான ஆறு வரைமுறைகளை இஸ்லாம் வலியுறுத்துகிறது.
1. ஹிஜாப் அணிவதற்கான அளவுகோல்கள்:
நீங்கள் அணியக் கூடிய ஆடை உடல் முழுவதையும் மறைக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய ஆடை அணிவதற்கான முதல் அளவுகோல். இந்த அளவுகோல் ஆண்களுக்கும் - பெண்களுக்கும் வித்தியாசப்படும். ஆண்கள் தொப்புள் முதல் கரண்டைவரை மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்கள் சாதாரணமாக வெளியில் தெரியக்கூடிய பாகங்களான முகம் - கரண்டை வரை உள்ள கைகள் ஆகியவைத் தவிர தங்கள் உடல் முழுவதும் மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும். அவர்கள் விரும்பினால் மேற்படி வெளியில் தெரியக் கூடிய
இந்த பாகங்களையும் மறைத்துக் கொள்ளலாம். இஸ்லாமிய ஆடையில் எஞ்சிய ஐந்து அளவுகோல்களும் - ஆண்களுக்கும் - பெண்களுக்கும் சமமானவையே.

2. அணியக் கூடிய ஆடை உடல் பரிணாமத்தை வெளிக்காட்டாத அளவுக்கு தொய்வாக இருக்க வேண்டும்.
3. அணியக் கூடிய ஆடை உற்றுப் பார்த்தால் உடல் பாகங்கள் அனைத்தும் தெரியும்படியான மெல்லிய ஆடையாக இல்லாது - கெட்டியான ஆடையாக இருக்க வேண்டும்
4. அணியக் கூடிய ஆடை (பெண்கள் ஆண்களை வசீகரிக்கக் கூடியவாறும் - ஆண்கள் -
பெண்களை வசீகரிக்கக் கூடியவாரும்) எதிர்தரப்பாரை கவரக்கூடிய அளவுக்கு கவர்ச்சியாக இல்லாமல் இருக்க வேண்டும்.
5. ஆண்கள் பெண்களைப் போல் ஆடை அணிவதையும் - பெண்கள் ஆண்களைப் போல் ஆடை அணிவதையும் இஸ்லாம் தடை செய்துள்ளது.
6. அணியக் கூடிய ஆடை இறை நிராகரிப்பாளர்கள் அணியக் கூடிய ஆடையைப் போன்று இருக்கக் கூடாது. உதாரணத்திற்கு இறை நிராகரிப்பவர்கள் உடுத்துகின்ற காவி நிறம் - கருப்பு நிறம் - போன்ற ஆடைகள் அணிவதை இஸ்லாம் தடை செய்துள்ளது.
3. இஸ்லாமிய ஆடைமுறை மனிதர்களின் நடத்தையையும் - பழக்கவழக்கங்களையும்
உள்ளடக்கியது. மேற்கூறிய ஆறு நெறிமுறைகள் தவிர மனிதனின் நன்னடத்தை அவனது பழக்கவழக்கம் அவனது மனோபாவம் மற்றும் தனிமனித எண்ணங்கள் ஆகியவையும் இஸ்லாமிய ஆடை முறையில் உள்ளடங்கும். ஒரு மனிதர் ஆடைகளில் மாத்திரம் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைபிடிப்பாரேயானல் - இஸ்லாமிய ஆடையின் ஒரு பகுதியை மாத்திரம் பின்பற்றுவது போன்றதாகும்.
ஆடைகளிலும் இஸ்லாமிய நெறிமுறைகளை கடைபிடிப்பதோடு - தனது கண்களிலும் - தனது உள்ளத்திலும் - தனது எண்ணத்திலும் - இஸ்லாமிய ஹிஜாப் முறையை கடைபிடிக்க வேண்டும். இஸ்லாமிய ஹிஜாப் என்பது - ஒருவர் நடக்கும் விதத்திலும் - அவர் பேசும் விதத்திலும் - அவர் பழகும் விதத்திலும் பிரதிபலிக்க வேண்டும்.

4. 'ஹிஜாப்" பெண்களை தொல்லைகளிலிருந்தும் பாதுகாக்கிறது:
பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியதற்கான காரணத்தை அருள் மறையின் 33 வது அத்தியாயம் ஸ{ரத்துல் அஹ்ஜாப் பின் 59வது வசனம் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது. 'நபியே! நீர் உம் மனைவிகளுக்கும் உம் பெண் மக்களுக்கும் ஈமான்
கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முன்றானைகளை
தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர்கள் என)
அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். மேலும்
அல்லாஹ் மிக மன்னிப்பவன்: மிக்க அன்புடையவன். பெண்கள் கண்ணியமானவர்கள் என்று அறியப்படுவதற்காகவும் - அவர்கள் தொல்லைகளிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டியும் - ஹிஜாப் அணிவது பெண்களுக்கு பரிந்துரைக்கப்பட்ருக்கிறது
என
அருள்மறை குர்ஆன் சுட்டிக் காட்டுகிறது.

இரட்டை சகோதரிகள் - ஓர் உதாரணம்:
இரட்டைப் பிறவியான சகோதரிகள் - இரண்டு பேரும் அழகிலும் சமமானவர்கள். கடைத்தெருவில் நடந்து போகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒருவர் முற்றிலும் இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்தவராக செல்கிறார். அதாவது தனது முகம் - மற்றும் தனது இரண்டு கைகள் மாத்திரம் கரண்டை வரையில் வெளியில் தெரியும்படி தனது முழு உடலையும் மறைத்து ஆடை அணிந்தவராக நடந்து செல்கிறார். மற்றவர் மேற்கத்திய கலாச்சார முறைப்படி ஒரு குட்டைப்பாவாடையோ அல்லது அரைக்காற் சட்டையோ அணிந்து செல்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள். கடைத் தெருவில் பெண்களை கேலி செய்வதற்காகவே நிற்கும் காலிகள் யாரை
கேலியும் - கிண்டலும் செய்வார்கள்? இஸ்லாமிய முறையில் ஆடை அணிந்து செல்பவரையா? அல்லது குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவரையா? கண்டிப்பாக குட்டைப்பாவாடை அல்லது அரைக்காற் சட்டை அணிந்து செல்பவர்தான் கேலியும் கிண்டலுக்கும் உள்ளாவார். மேற்படி வகையான ஆடைகள் ஆண்பாலரை கேலியும் கிண்டலும் - தொல்லைகளும் செய்யவைப்பதற்கான மறைமுகமான அழைப்பேயாகும். எனவேதான் இஸ்லாமிய ஆடை முறை
கண்டிப்பாக பெண்கள் தொல்லைகள் செய்யப்படுவதை தவிர்க்கிறது என்று அருள்மறை குர்ஆன் குறிப்பிடுகிறது.

7. வல்லுறவு கொள்வோருக்கு (பாலியல் பலாத்காரம்) மரண தண்டனை.
இஸ்லாமிய சட்டத்தின்படி ஒரு மனிதன் ஒரு பெண்ணோடு வல்லுறவு கொண்டதாக
நிரூபிக்கப்பட்டால் - அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். மரண தண்டனை என்ற வார்த்தையை கேட்டவுடன் பலர் அதிர்ச்சியுறுகின்றனர். சிலர் இஸ்லாம் கருணையில்லாத - காட்டுமிராண்டித்தனமான மார்க்கம் என்றெல்லாம் விமர்சிக்க ஆரம்பித்து விடுகின்றனர். இஸ்லாம் அல்லாத சகோதரர்களை நான் ஒரு சிறிய கேள்வியை கேட்டிருக்கிறேன். தங்களுடைய மனைவியுடனோ - அல்லது தங்களது சகோதரியுடனோ அல்லது தங்களது தாயுடனோ ஒருவன் வல்லுறவு (அவ்வாறு நடக்காமல் அல்லாஹ் பாதுகாப்பானாக!) கொண்டு விட்டான் என்று வைத்துக்
கொள்ளுங்கள். வழக்காடு மன்றத்தில் வல்லுறவு கொண்டவனுக்கு - தீர்ப்பு வழங்கக் கூடிய நீதிபதியாக தாங்கள் இருக்கிறீர்கள் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். தாங்கள் வல்லுறவு கொண்டவனுக்கு என்ன தண்டணை வழங்குவீர்கள்? நான் கேள்வி கேட்ட கேள்விக்கு இஸ்லாம் அல்லாத சகோதரர்கள் எல்லோரும் அளித்த பதில் என்னவென்றால் வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனையேத் தருவோம் என்பதுதான். அதில் இன்னும் சிலர் - வல்லுறவு கொண்டவன் மரணிக்கும்வரை சித்ரவதை செய்து கொல்வோம் என்றும் சொன்னார்கள். அவர்களிடம் நான்
கேட்கும் இன்னொரு கேள்வி - யாராவது ஒருவன் உங்களது உறவுகளோடு - வல்லுறவு கொண்டு விட்டால் - மரண தண்டனை கொடுக்க விரும்பும் நீங்கள் - வேறு யாரோ ஒருவரின் மனைவியோ - சகோதரியோ - அல்லது தாயோ வல்லுறவு கொள்ளப்பட்டு - வல்லுறவு கொண்டவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால் மாத்திரம் அதனை காட்டுமிராண்டித்தனம் என்கிறீர்களே ஏன்? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?

8.மேற்கத்திய சமூகம் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்து விட்டதாக தவறான கருத்தை
கொண்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் சொல்லும் பெண் விடுதலை என்பது - பெண்களின் உடலை பயன் படுத்திக்கொள்வதற்கும் - பெண்களின் ஆன்மாக்களை கொச்சைப் படுத்தவதற்கும் - பெண்களின் கௌரவத்தை இழக்கச் செய்யவும் - மேலை நாட்டினர் அணிந்திருக்கும் மாறுவேடமேத் தவிர வேறில்லை. மேற்கத்திய உலகம் - சமூகத்தில் பெண்களின் நிலையை உயர்த்திவிட்டதாக கூறிக்கொள்கிறார்கள். உண்மையில் பெண்களின் உயர்வான நிலை என்பது - பெண்களை போகப்பொருளாக பயன்படுத்திக் கொள்ளவும் - அவர்களை சமூகத்தின் காட்சிப்பொருளாக மாற்றுவதையுமே - பெண்விடுதலை என்கிறார்கள். “'கலை" மற்றும் “'கலாச்சாரம்" என்கிற பெயரில் வண்ணத்திரைகளில் வியாபாரிகள் தங்களின் பொருட்களை விற்பதற்கு பெண்களை ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்வதைத்தான் பெண் விடுதலை என்கிறார்கள்.

9. அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. உலகில் உள்ள நாடுகளில் அமெரிக்காதான் முற்றிலும் நாகரீகமடைந்த நாடாக கருதப்படுகிறது. அதே அமெரிக்காவில்தான் உலகத்திலேயே அதிக அளவிலான வல்லுறவு குற்றங்கள் நிகழ்கின்றன. 1990 ஆம் ஆண்டில் - அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1756 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்ததாக அந்த நாட்டின் உளவுத்துறையான எஃப். பி. ஐ. யின் அறிக்கை சொல்கிறது. பின்னர் சராசரியாக நாள் ஒன்றுக்கு 1900 வல்லுறவு குற்றங்கள் நிகழ்ந்தாக மற்றொரு அறிக்கை சொல்கிறது. குற்றம் நிகழ்ந்த ஆண்டு குறிப்பிடப் படவில்லை. அந்த ஆண்டு - 1992 அல்லது 1993
ஆக இருக்கலாம். பிறகு வந்த ஆண்டுகளில் அமெரிக்கர்கள் இன்னும் “'தீவிரமாக" வல்லுறவு குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம்.

அமெரிக்காவில் இஸ்லாமிய “'ஹிஜாப்" முறை நடைமுறைபடுத்தப்பட்டிருப்பதாக கற்பனை செய்து பாருங்கள். ஒரு ஆண் ஒரு பெண்ணை பார்க்கும் பொழுது அவனது எண்ணத்தில் நாணமற்ற அல்லது வெட்கமில்லாத எண்ணம் தோன்றுமாயின் - அவர் தனது பார்வையை தாழ்த்திக் கொண்டிருப்பார். அமெரிக்காவின் ஒவ்வொரு பெண்ணும் முகம் மற்றும் தனது கைகளின் கரண்டை வரை மட்டும் தெரியும்படி - மற்றுமுள்ள உடலின் அனைத்து பாகங்களும் மறைக்கப்பட்டிருக்கும் இஸ்லாமிய ஆடை முறையை பின்பற்றி இருப்பார்கள். இதற்கு பிறகும் ஒரு மனிதன் வல்லுறவு குற்றத்தில் ஈடுபடுவான் எனில் - அவனுக்கு மரண தண்டனை என்ற நிலை பின்பற்ற பட்டிருக்கும்.
மேற்கண்டவாறு இஸ்லாமிய ஆடை முறை அமெரிக்காவில் நடைமுறை படுத்தப்பட்டால் - அமெரிக்காவில் வல்லுறவு குற்றங்கள் அதிகரிக்குமா? அல்லது முன்னர் இருந்தது போன்ற அதே நிலையில் இருக்குமா? அல்லது குறையுமா?.

10. இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் - வல்லுறவு குற்றம் கண்டிப்பாக குறையும். இஸ்லாமிய சட்டதிட்டங்கள் நடைமுறை படுத்தப்பட்டால் - தூய்மையான சமுதாயம் அமைவதை எவராலும் தவிர்க்க முடியாது. அமெரிக்காவாக இருக்கட்டும் - ஐரோப்பாவாக இருக்கட்டும் - அல்லது உலகில் எந்த நாடாக இருந்தாலும் எங்கெல்லாம் இஸ்லாமிய சட்டத் திட்டங்கள் நடைமுறை படுத்தப்படுகிறதோ - அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ்வார்கள். எனவே இஸ்லாமிய
ஆடை முறை பெண்களை இழிவுபடுத்துவதில்லை. மாறாக பெண்களின் மானத்தையும் - கற்பையும் காப்பாற்றி அவர்களை சமூகத்தில் அந்தஸ்து உள்ளவர்களாக மாற்றுகிறது.

புதன், 7 ஜூலை, 2010

'என் பெயரால் பொய் கூறாதீர்கள்!'' நபி صلى الله عليه وسلم

E-mail

சாதாரண பாமரன் பொய் சொல்லும் நிலை மாறி, சில ஆலிம்கள் தங்கள் 'வாதம்' வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அல்லது முழுக்க முழுக்க சுயஆதாயத்துக்காக ''இறையச்சத்தை தூக்கி எரிந்துவிட்டு'' துணிந்து பொய் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கும் மறுமையில் கேள்வி கணக்கு உண்டு என்பதை நினைவு படுத்தும் விதமாக...

o என் பெயரால் பொய் கூறாதீர்கள்! ஏனென்றால் என் பெயரால் பொய் கூறுவது நரகில் சேர்க்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, புகாரி, முஸ்லிம்)

o யார் என் பெயரால் பொய் கூறுகிறானோ, அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 'வேண்டுமென்றே' என்ற வார்த்தையையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நான் நினைக்கின்றேன் என்று அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, புகாரி, முஸ்லிம்)

o யார் என்மீது திட்டமிட்டு பொய் கூறுகின்றானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, புகாரி, முஸ்லிம்)

o நான் சொல்லாத ஒன்றை என் மீது யார் இட்டுக்கட்டிக் கூறுகிறானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா)

o என்னைப் பற்றி அதிகமாக அறிவிப்பதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன், என் பெயரால் சொல்வதென்றால் உண்மையையே சொல்ல வேண்டும், நான் சொல்லாத ஒன்றை என் பெயரால் எவரேனும் கூறினால் அவர் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த மிம்பர் (படி) மீது இருந்து கூற நான் செவியுற்றிருக்கிறேன் என்று அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள். ((நூல்: இப்னு மாஜா, அஹ்மத், தாரிமி)

o இப்னு மஸ்வூது ரளியல்லாஹு அன்ஹு மற்றும் சிலரிடம் நான் (ஹதீஸ்களைக்) கேட்பது போல், நீங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாயிலாக எந்த ஒன்றையும் கூற நான் கேட்டதில்லையே! அது ஏன் என்று ஸுபைர் இப்னுல் அவாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டேன்.

அதற்கு அவர்கள் 'நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் பிரிந்தது இல்லை, எனினும் 'யார் என் பெயரால் பொய் கூறினானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு சொல்லை நான் செவியுற்றுள்ளேன். (அதற்கு அஞ்சியே நான் அதிகமாக அறிவிப்பதில்லை) என்று ஸுபைர் இப்னுல் அவாம் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாக,

அவரது மகன் அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.(நூல்: இப்னு மாஜா, புகாரி)

o யார் என் பெயரால் வேண்டுமென்றே பொய் கூறுகிறானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, முஸ்லிம்)

o நிச்சயம் பொய் தான் என்று தெரிந்து கொண்டே என் பெயரால் யாரேனும் ஒரு செய்தியைக் கூறினால் அவனும் பொய்யர்களில் ஒருவனாவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா)

மேற்கூறிய இதே ஹதீஸே ஸமுரத் இப்னு ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாகவும், முகீரா இப்னு ஷுஃபா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாகவும் இடம் பெற்றுள்ளது. (குறிப்பு: இந்த ஹதீஸ்கள் முஸ்லிம் நூலிலும் இடம் பெற்றுள்ளது.)