சனி, 30 ஜூலை, 2011

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

இந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில் அவர் நடந்துக்கொண்டவிதம். இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர்.

இந்த மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம்.

இந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர்.



ஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு உதாரணம் சகோதரர் பார்னெல்.

இருபத்தி இரண்டு வயதாகும் பார்னெல், தான் இஸ்லாமை தழுவியதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தின்போதே தான் இஸ்லாத்தை தழுவிவிட்டதாகவும், அதனை இதுநாள் வரை தனக்குள்ளாகவே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை "வாலீத்" என மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வாலீத் என்றால் "புதிதாக பிறந்தவன்" என்று பொருள்.

பார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அவருடைய முடிவிற்கு சக தென்ஆப்பிரிக்க வீரர்களான ஹாசிம் அம்லாவோ அல்லது இம்ரான் தாஹீரோ காரணமல்ல என்று தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளரான முஹம்மது மூசாஜி குறிப்பிட்டுள்ளார்.

இதனை உறுதிப்படுத்தியுள்ள தென்ஆப்பிரிக்க வீரர்கள், பார்னெல்லின் மனமாற்றத்திற்கு ஹாசிம் அம்லா காரணமில்லாத அதே வேலையில், அம்லாவின் இஸ்லாம் மீதான பற்றைக்கண்டு தாங்கள் கவரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

பயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூறுகின்றனர்.

அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.

தன்னுடைய முதல் ரமலானை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய முடிவு இந்த சிறப்பான நேரத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா குறித்து பேசும்போது அஹ்மத் தீதத் அவர்களும், அவர் தொடங்கி வைத்த இஸ்லாமிய அழைப்பு அமைப்பான IPCI-யும் நினைவுக்கு வருகின்றது (இது குறித்த இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்). தென் ஆப்பிரிக்காவில் ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமூகத்தை இறைவனின் கிருபையால் உருவாக்கியவர் தீதத். அவர் தொடங்கிய IPCI இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு பலரையும் இஸ்லாமின்பால் கவர்ந்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்...

சகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக...ஆமீன்.

புதன், 27 ஜூலை, 2011

புளியங்குடி அருகே இளம் பெண்ணுடன் பாதிரியார் ஓட்டம்-சர்ச்சுக்கு தீ வைப்பு

புளியங்குடி: புளியங்குடி அருகே தேவாலயத்திற்கு வந்த இளம் பெண்ணுடன், பாதிரியார் தலைமறைவாகியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் உறவினர்கள் தேவாலயத்திற்கு தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

புளியங்குடி அருகே உள்ளது நெல்கட்டும் செவல் பச்சேரி கிராமம். இங்கு சுமார் 250 வீடுகள் உள்ளன. இங்கு அதிக அளவில் கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் சால்வேஷன் கிறிஸ்தவ ஆலயத்தில் வாரம்தோறும் ஞாயிறன்று நடக்கும் ஜெபக்கூட்டத்தில் கலந்து கொள்வது வழக்கம்.

அதே போல் அந்த தேவாலயத்தில் நடக்கும் திருமண விழா, ஞானஸ்தான விழா ஆகியவறறிலும் கலந்து கொள்வர். அனைவரையும் போல் வேதக்கோவில் தெருவைச் சேர்ந்த மதியழகன் மகள் பரிமளா தேவியும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் ஜெபக்கூட்டத்திற்கு சென்று வந்தார்.

இதற்கிடையே மூன்று மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலைச் சேர்ந்த பாதிரியார் மோகன்தாஸ் இந்த தேவாலயத்தில் பாதிரியாராக பொறுப்பேற்றார். அப்போது மோகன்தாசுககும், பரிமளாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசினர்.

இதையறிந்த மோகன்தாசின் மனைவி அவரை கண்டித்துள்ளார். ஆனால் தொடர்ந்து மோகன்தாஸ் பரிமளா தேவியுடன் பழகி வந்ததுடன் கண்டித்த மனைவியையும் அடித்து உதைத்தார். இவர்களது கள்ளக்காதல் ஊருக்கு தெரிந்ததால் அவர்களது குடும்பதுத்துக்கு அவமானம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த 25-ம் தேதி பரிமளா தேவியுடன், பாதிரியார் மோகன்தாஸ் தலைமறைவாகிவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த பரிமளா தேவியின் தந்தை மதியழகன் தேவாலயத்திற்கு தீ வைத்தார். இதில் ஆலயத்திலிருந்த நாற்காலிகள், திரை மற்றும் பைபிள் உள்ளிட்ட நூல்கள் தீயில் கருகின.

திடீரென்று தேவாலயத்தில் தீ எரிவதைப் பார்த்த அப்பகுதி மக்கள் புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் புளியங்குடி டிஎஸ்பி தமீம், இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து இளம்பெண் பரிமளா தேவியுடன் தலைமறைவான பாதிரியார் மோகன்தாசையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் புளியங்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.