ஈமான் (நம்பிக்கை) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈமான் (நம்பிக்கை) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 ஆகஸ்ட், 2010

குர்ஆன் = ஆச்சர்யங்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக..

குர்ஆன் அருளப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அது மிக ஆழமான ஆராய்ச்சிக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. அறிவியல், இலக்கியம் என பல பிரிவுகளில் அது ஆராயப்பட்டிருக்கிறது. உலகில் அதிகம் ஆராயப்பட்ட புத்தகங்களில் குரானும் ஒன்று.

குரானின் இலக்கிய (literary miracles) ஆச்சர்யங்களை இந்த பதிவில் சிறிது பார்க்கவிருக்கிறோம்.


1. குரானை எந்த மொழிகளிலும் முழுமையாக மொழிப்பெயர்க்க முடியாது என சிலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். அது முற்றிலும் உண்மைதான். நீங்கள் அரபி தெரியாமல் தமிழ் மொழிப்பெயர்ப்பை மட்டுமே படிப்பவரா? அப்படியெனில் நீங்கள் குரானின் அழகை மிக சொற்பமே உணர்கிறீர்கள்.

ஏன்? இந்த பதிவின் முடிவில் அறிந்துக்கொள்வீர்கள்.

குர்ஆன் அருளப்பட்ட சமயம், மக்கா நகரம் அரேபிய ஷேக்ஸ்பியர்கள் நிரம்பி இருந்த நேரம். அரபி மொழி புகழின் உச்சத்தில் இருந்த தருணம். அப்படிப்பட்ட சமயத்தில் தான் குரான் இறங்கி அரேபிய இலக்கியவாதிகளை ஆச்சர்யத்தில் அதிர்ச்சி அடையச்செய்தது. தாங்கள் இதுவரை நினைத்திராத எழுத்து நடை. கொள்ளை அழகான வார்த்தைகள். நெஞ்சை ஊடுருவ செய்யும் பொருள்கள்.

அரேபிய புலவர்களால் நம்ப முடியவில்லை, நேற்று வரை நம்முடன் இருந்த எழுதப் படிக்க தெரியாத முஹம்மதா இந்த அற்புத வாக்கியங்களை கற்பனை செய்தார்? நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயம் இது. வேறு வழியில்லாமல் நம்பினார்கள், ஏனென்றால் இறைவனிடத்தில் இருந்து வந்ததென நம்புவது இன்னும் கடினமானது. அதற்கு முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பனை வளத்தை பாராட்டுவது எவ்வளவோ மேல்.

நபிகள் நாயகம் (ஸல்) எவ்வளவோ எடுத்து கூறியும் இது இறைவனின் வார்த்தைகள் என்பதை நம்ப மறுத்து விட்டார்கள். குரான் அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது.

நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால் இது போன்ற ஒரு புத்தகத்தை, அல்லது பத்து சூராக்களை அல்லது ஒரு சூராவையாவது கொண்டு வாருங்கள் என்று அந்த அரபு ஷேக்ஸ்பியர்களை சவாலுக்கு அழைத்தது.

இன்று வரை எந்த அரபியராலும் அல்லது அரபி தெரிந்த எவராலும் குரானின் சவாலை எதிர்க்கொள்ள முடியவில்லை.

நீங்கள் கேட்கலாம், சரி முஸ்லிம் அரபியரால் தான் குரான் போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை, ஏனென்றால் அது அவர்களது உயிர் மூச்சு, குரான் போன்ற ஒன்றை உருவாக்க அவர்கள் தயக்கம் காட்டலாம், ஆனால் வளைகுடாவில் தான் பத்து மில்லியன் அரேபிய கிருத்துவர்களும், யூதர்களும் இருக்கிறார்களே, அவர்களால் கூடவா குரானை போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை?.

மிகச்சரியான கேள்விதான். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், யாராலும் குரானின் சவாலை எதிர்க்கொள்ளமுடியாது , முறியடிக்கமுடியாது...

ஏன்?

இதற்கு ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விடை சொல்லிவிடலாம்.

நாம் பல புத்தகங்களை படித்திருப்போம், புத்தகத்தின் ஆசிரியர் ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு சொல்லுக்கு அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த சொல்லுக்கு பக்கத்தில் ஒரு எண்ணை (called superscript, eg. Hello1) குறிப்பிட்டு அந்த எண்ணுக்கான விளக்கத்தை அந்த பக்கத்தின் அடியில் (footnote) விளக்கமாக எடுத்துரைப்பார். இதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கலாம்.



ஆனால் குரானிலோ இது வேறு விதமாக வியப்பளிக்கும் விதத்தில் கையாளப்பட்டிருக்கிறது. எப்படியென்றால், ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு வார்த்தைக்கோ அல்லது ஒரு சம்பவத்திற்கோ அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த வாக்கியம் அதே இடத்திலேயே நிறுத்தப்பட்டு எந்த சொல்லுக்கு விளக்கம் தேவையோ அதை விளக்க சென்றுவிடுகிறது. அந்த சொல்லை விளக்கியபிறகு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது.

இங்கு நீங்கள் ஒன்றை மிக கூர்மையாக கவனிக்க வேண்டும். ஒன்றை முதலில் சொல்லிவிட்டு நடுவில் வேறொன்றை விளக்கிவிட்டு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது.

குரானின் தனித்துவம் என்ன தெரியுமா? சொன்னால் மிரண்டு விடாதீர்கள்....

ஒன்றை சொல்லிக்கொண்டே வரும்போது அதை ஒரு சத்தத்திலும் (ஒரு வார்த்தையை உச்சரிப்பதால் ஏற்படக்கூடிய சத்தம்), நடுவில் ஒரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்பட்டால் அந்த விளக்கத்தை வேறொரு சத்தத்திலும், அந்த விளக்கத்தை முடித்துவிட்டு பழைய இடத்திலிருந்து தொடரும்போது மறுபடியும் பழைய சத்தத்திலும் தொடர்கிறது (Qur'an distinguishes those in an amazing audio format).

எளிமையாக சொல்லப் போனால் இரண்டு பழைய சத்தத்திற்கு நடுவில் ஒரு புது சத்தம். புது சத்தம் ஒரு சொல்லுக்கான விளக்கத்தை நடுவிலே அறியவைப்பதற்காக.

குரானை ஓதுபவரும் எளிதிலே அறிந்து கொள்வார், இது ஒரு சொல்லுக்கான விளக்கம் என்று. என்ன வியப்பின் நுனிக்கே சென்று விட்டீர்களா? இது குரானின் அதிஅழகான (The royal literature) இலக்கணத்திற்கு ஒரு சிறிய உதாரணம் தான்.

இப்போது சொல்லுங்கள், எந்த அரேபிய புலவரால் சத்தத்தை மாற்றி மாற்றி, அதே சமயம் பொருளும் மாறாமல் ஒரு முழு சூராவை கொண்டுவரமுடியும். சத்தத்தை மாற்றுவதெல்லாம் அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. குரான் முழுக்க இந்த நடை பின்பற்றப்படுகிறது, பொருள் மாறாமல் சுவை மாறாமல். படிப்பவரை கட்டிப் போடும் வல்லமை. ஒரு சிறிய உதாரணம் தான் இது, இன்னும் பல பல காரணங்கள் இருக்கின்றன ஏன் அவர்களால் முடியவில்லையென்று. இன்ஷா அல்லாஹ் மற்றுமொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

இப்போது என் முதல் கேள்விக்கு வாருங்கள், ஏன் தமிழிலோ அல்லது வேறொரு மொழியிலோ குரானை முழுமையாக மொழிப்பெயர்க்க முடியவில்லை?

விளக்கம் இந்நேரம் கண்டுபிடுத்திருப்பீர்கள், வார்த்தைகளை மொழிப்பெயர்க்கலாம் (இதுவும் குரானை பொறுத்தவரை கடினந்தான்), சத்தங்களை?

Qur'an is the most difficult book on the face of earth to translate...

இறைவனே எல்லாம் அறிந்தவன்....

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக...ஆமின்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Note:
My sincere thanks to Br.Nouman of Bayyinah Institute for inspiring me to write this article.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

திங்கள், 8 ஜூன், 2009

அனைத்திலும் ஜோடி

மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான். இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான். அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் 13:3

'(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான். இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்¢ மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான். இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்" (என்று இறைவன் கூறுகிறான்). அல்குர்ஆன் 20:53

பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். அல்குர்ஆன் 36:36

நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். அல்குர்ஆன் 51:49

திருக்குர்ஆன் பல வசனங்களில் உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது.

தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது பிற்காலக் கண்டுபிடிப்பாகும். தாவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்களில் இவர்கள் அறியாமல் இருப்பவற்றிலிருந்தும் ஜோடிகளைப் படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.

அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். மின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன. அது போல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன. இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்களிலும் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து இது முஹம்மது நபியின் சொந்த சொல் இல்லை, இறைவனின் வார்த்தை தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்குதல்

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான். அல்குர்ஆன் 6:125

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் சுருங்குவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான்.

ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்கமாட்டார்கள்.

இத்தகைய கால கட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்.

கரு உருவாகுதல் மற்றும் கரு வளர்ச்சி

மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்¢) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்¢ பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்¢ உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்¢ பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும், (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள்¢ (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள்¢ இன்னும், நீங்கள் (தரிசாய்க் கிடக்கும்) வறண்ட பூமியைப் பார்க்கின்றீர்கள்¢ அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) பல்வகைப் புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது. அல்குர்ஆன் 22:5

பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்¢ பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்¢ பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்¢ பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்¢ பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் - (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன். அல்குர்ஆன் 23:14இவ்வசனத்தில் கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது ''பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்'' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் இரண்டு மூன்று மாதங்கள் அவற்றுக்கான வடிவத்தை பெறுவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும்.

இதைத் தான் ''பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம்'' என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

பால் எவ்வாறு உற்பத்தியாகிறது

நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது¢ அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66

உணவுகளில் தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற் காலத்தில் கண்டு பிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.

உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகிறன்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக இருக்கும் போது அங்குள்ள உறிஞ்சுகள் மூலமாக அதிலிருந்து உறிஞ்சப்படும் சத்துகள் தான் இரத்தமாகவும், இன்னபிற பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன.

இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உருமாகிறது.

அதாவது அரைக்கப்பட்ட உணவுக் கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்து தான் பால் உற்பத்தியாகிறது என்ற 21ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை அதே வார்த்தைகளைச் சுற்றி வளைக்காமல் நேரடியாக திருக்குர்ஆன் கூறியிருப்பது, இது மனிதனின் வார்த்தையே அல்ல என்பதற்கும், கடவுளின் வார்தையே என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது.

இரு கடல்களுக்கிடையே தடுப்பு

அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்¢ ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது¢ மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான். அல்குர்ஆன் 25:53 இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனிடையே ஆறுகளை உண்டாக்கியவனும்¢ அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? இல்லை! (எனினும்) அவர்களில் பெரும்பாலோர் அறியாதவர்களாக இருக்கின்றனர். அல்குர்ஆன் 27:61

இன்னும் இரண்டு கடல்கள் சமமாகா¢ ஒன்று மிகவும் இனிமையாக, (தாகம்தீரக்) குடிப்பதற்குச் சுவையாக இருக்கிறது¢ மற்றொன்று உவர்ப்பாக, கசப்பாக இருக்கிறது. எனினும் இவை ஒவ்வொன்றிலிருந்தும் நீங்கள் சுவையான (மீன்) மாமிசத்தை உண்ணுகிறீர்கள். இன்னும், (முத்து, பவளம் போன்ற) ஆபரணமாக நீங்கள் அணிவதையும் எடுத்துக் கொள்கிறீர்கள்¢ மேலும் (அல்லாஹ்வின்) அருளை நீங்கள் தேடிக்கொள்வதற்காக (நீங்கள் பிரயாணம் செய்யும் போது) கப்பல்கள் நீரைப்பிளந்து செல்வதையும் நீங்கள் காண்கிறீர்கள் - இதற்கு நீங்கள் நன்றி செலுத்துவீர்களாக! அல்குர்ஆன் 35:12

அவனே, இரண்டு கடல்களையும் ஒன்றோடொன்று சந்திக்கச் செய்தான். (ஆயினும்) அவற்றிடையே ஒரு தடுப்பும் இருக்கிறது. அதை அவை மீறமாட்டா. அல்குர்ஆன் 55:19-20.

திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது.

இதை கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இது எழுதப் படிக்க தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி தெரியும்?.

எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

அனைத்திலும் ஜோடி

மேலும், அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து, அதில் உறுதியான மலைகளையும், ஆறுகளையும் உண்டாக்கினான்¢ இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்¢ அவனே இரவைப் பகலால் மூடுகிறான் - நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் 13:3

'(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்¢ இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்¢ மேலும் வானத்திலிருந்து நீரையும் இறக்கினான்¢ இம் மழை நீரைக் கொண்டு நாம் பல விதமான தாவரவர்க்கங்களை ஜோடி ஜோடியாக வெளிப்படுத்துகிறோம்" (என்று இறைவன் கூறுகிறான்). அல்குர்ஆன் 20:53

பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். அல்குர்ஆன் 36:36

நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம். அல்குர்ஆன் 51:49

திருக்குர்ஆன் பல வசனங்களில் உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது.

தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது பிற்காலக் கண்டுபிடிப்பாகும்.

தாவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்களில் இவர்கள் அறியாமல் இருப்பவற்றிலிருந்தும் ஜோடிகளைப் படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.

அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டு பிடித்திருக்கிறான். மின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன. அது போல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன. இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்களிலும் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து இது முஹம்மது நபியின் சொந்த சொல் இல்லை, இறைவனின் வார்த்தை தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

பெருவெடிப்பு கொள்கை

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா? அல்குர்ஆன் 21:30

இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்து என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்திய நூல்கள் கூறுகின்றன.

திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம் பூமி எல்லாம் ஓரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்த பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.

எனவே திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் சான்றாக அமைந்திருக்கிறது.

சூரியனும் கோள்களும்

(இவ்வேதத்தை அருளிய) அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தியுள்ளான்¢ நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்¢ பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்¢ இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்¢ (இவை) அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன¢ அவனே (எல்லாக்) காரியத்தையும் நிர்வகிக்கின்றான் - நீங்கள் உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்ளும் பொருட்டு, அவன் (இவ்வாறு தன்) வசனங்களை விளக்குகின்றான். அல்குர்ஆன் 13:2

'நிச்சயமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்¢ பகலை இரவில் புகுத்துகிறான்¢ இன்னும் சூரியனையும், சந்திரனையும் வசப்படுத்தினான்" என்பதை நீர் பார்க்கவில்லையா? ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட தவணைவரை செல்கின்றன¢ அன்றியும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிபவன். அல்குர்ஆன் 31:29அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான்

¢ பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்¢ இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன¢ அவனே உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்¢ அரசாட்சியெல்லாம் அவனுக்குரியதே, அவனையன்றி நீங்கள் எவர்களை பிரார்த்தி(த்து அழை)க்கின்றீர்களோ, அவர்களுக்கு அணுவளவு அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 35:13 இன்னும் (அவர்களுக்கு அத்தாட்சி) சூரியன் தன் வரையரைக்குள் அது சென்று கொண்டிருக்கிறது¢ இது யாவரையும் மிகைத்தோனும், யாவற்றையும் நன்கறிந்தோனுமாகிய (இறை)வன் விதித்ததாகும். இன்னும் (உலர்ந்த வளைந்த) பழைய பேரீத்த மட்டையைப் போலாகும் வரையில் சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (தங்குமிடங்களை) ஏற்படுத்தியிருக்கின்றோம். சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது¢ இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. அல்குர்ஆன் 36:38-40

அவன் வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்¢ அவனே பகலின் மீது இரவைச் சுற்றுகிறான்¢ இன்னும் இரவின் மீது பகலைச் சுற்றுகிறான்¢ சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது¢ (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்¢ மிக மன்னிப்பவன். அல்குர்ஆன் 39:5

சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகவும் திருக்குர்அன் கூறுகிறது.

பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான். பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான். உருண்டையாக இருக்கிற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான். பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது, சூரியன் அப்படியே இருக்கிறது என்றான்.

இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது¢ சூரியனையும் சுற்றுகிறது¢ தன்னைத்தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

ஆக சூரியன் சூழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல¢ ஓடிக் கொண்டே இருக்கின்றது¢ அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால், நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.

இந்த உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல்லி இருக்கவே முடியாது.

இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல¢ கடவளின் வார்த்தை என்பதை தெளிவாக அறிந்து கொள்வார். திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்று.

ஓரங்களில் குறையும் பூமி

பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்¢ அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். அல்குர்ஆன் 13:41

எனினும், இவர்களையும் இவர்களுடைய மூதாதையரையும், அவர்களுடைய ஆயுட்காலம் வளர்ந்தோங்கும் வரை சுகங்களை அனுபவிக்கச் செய்தோம்¢ நாம் (இவர்களிடமுள்ள) பூமியை அதன் அருகுகளிலிருந்து குறைத்து கொண்டு வருகிறோம் என்பதை இவர்கள் காணவில்லையா? இவர்களா மிகைத்து வெற்றிக் கொள்பவர்கள்? அல்குர்ஆன் 21:44

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

எனவே நிலப்பரப்பு ஓரங்களில் சிறிது சிறிதாகக் குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது, திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.

தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது, தேனின் மருத்துவ குணம்.

உம் இறைவன் தேனீக்கு அதன் உள்ளுணர்வை அளித்தான். 'நீ மலைகளிலும், மரங்களிலும், உயர்ந்த கட்டடங்களிலும் கூடுகளை அமைத்துக்கொள் (என்றும்), 'பின், நீ எல்லாவிதமான கனி(களின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்" (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது¢ அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு¢ நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. அல்குர்ஆன் 16:68-69

இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.

பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று விளங்கி வைத்திருக்கின்றனர்.

உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு திரவம் தான் தேன்.

இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூப்பித்திருக்கின்றார்கள். தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனா. இது மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகக் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாகும்.

திங்கள், 1 ஜூன், 2009

குர்ஆனில் பேசும் எறும்புகள்

நபிசுலைமானிடம் பேசிய எறும்பு27:16-19(نملة سليمان)

حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِي النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ

இறுதியாக அவர்கள் (எறும்புகள் நிறைந்த) எறும்புப் புற்றின் அருகே வந்தபோது, ''எறும்புகளே! உங்கள் குடியிருப்புக்களுக்குள் நுழையுங்கள்! சுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது என்று ஓரு எறும்பு கூறியது.'' (அல்குர்ஆன்:27:18)

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا

அது சொல்வதைக் கேட்டு சுலைமான் புன்னகை சிந்தி சிரித்தார் (அல்குர்ஆன்: 27:19) என்று அருள்மறை கூறுகிறது.

எறும்பு பேசியது:-

அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன் ''எறும்புகள் பேசியதாகவும்,அது கேட்டு பறவைகள், உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை) அவர்கள் சிரித்ததாகவும்'' இங்கே கூறப்படுகிறது.

அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமான எறும்புகள்; பேசியதையும், அதற்கொரு முக்கியத்துவம் அளித்தும் தனது வேதத்திருமறை யில் குறிப்பிடுவதாயின் அந்த அரிய படைப்பில் நிச்சயம் பல அதிசயங்கள் அமைந்திருக்கும் என ஆய்வு செய்தபோது நமக்குத் தெரியாத பல உண்மைகள் தெரியவருகின்றன. இப்போது நாம் அதுபற்றி விரிவாகக் காண்போம்.

எறும்பும் அதன் வகைகளும்

எறும்பு ஒருகுழுவாக வாழும் ஒரு பூச்சியனமாகும். அது உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. அண்மையில் இதுபற்றி ஆய்வு செய்த அறிவியலார் ''உலகில் 11,880 வகையான எறும்பினங்கள் உள்ளதாகக் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், இவை 90,000 க்கும் மேலிருக்கும் எனக்கூறுகிறார்.இவற்றில் பெரும்பாலானவை வெப்பமுள்ள நாடுகளில் தான் வாழ்கின்றன.

பாதை மாறாது திரும்பும் அதிசயம்

நாம் ஒரு பதிய ஊருக்கோ நாட்டிற்கோ செல்லும் போது பாதைகளையும் இடங்களையும் தெரிந்து கொள்ள வரைபடமோ,வழிகாட்டியோ தேவப்படுகிறது.

அது போல இரை தேடச் செல்லும் உயிரினங்கள் பலமைல் தூரம் சென்று விட்டு தமது வசிப்பிடங் களுக்கு எப்படி திரும்பி வந்து சேருகின்றன என்பதை ஆராயும் போது நமக்கெல்லாம் வியப்பாக உள்ளன.ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒவ்வொரு புதுமையான ஏற்பாட்டையும் அறிவையும் அதனுள் அதைப் படைத்த நாயன் அமைத்துள்ளான். இங்கே அவன், எறும்புக்கு என்ன ஏற்பாட்டைச் செய்துள்ளான் எனபதைப் பார்ப்போம்.

துனீசியா நாட்டின் மத்திய தரைக் கடல் பகுதியில் வாழும் ஒருவகை கறுப்பு இன எறும்புகள் (
Black Aunts) பாலைவனத்தில் கூடுகள் அமைத்து வாழந்து வருகின்றன.

காலையில் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்கெல்லாம் வெப்பநிலை எழுபது டிகிரி சென்டி கிரேடு வரை உயரும் அந்த வெப்பநிலையில் உள்ள பகல் வேளையில் தனக்குத் தேவையான இரையைத்தேடி வீட்டைவிட்டு வெளியேறுகிறது.

அடிக்கடி நின்றும் திரும்பியும் வேகமாக ஊர்ந்து செல்லும் எறும்பு தனது கூட்டிலிருந்து 200 மீட்டர் (655 அடி) பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும் ஊர்ந்து வெகுதூரம் வரை சென்று விடுகின்;றன. பாதைகளை அறிவதற்கு அடையாளமாக அங்கே ஆறு,குளம்,குட்டை,ஏரி,மரம்,கட்டடம் என எதுவுமே இல்லை. அது தேடிய பருப்பொருட்களை சுமந்து கொண்டு என எந்தவகை அடையாளங்களும் இல்லாத பாலைவனத்தில் எப்படி துல்லியமாக தன் வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து வருகிறது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

எறும்புகளின் நீளம்,உயரம்,பருமன்,எடை இவைகளை கருத்தில் கொண்டு,அவைகள் பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித ஆற்றலோடு ஒப்பிடும்; போது அதே பாலைவனத்தில் 35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு மனிதன் பயணிப்பதற்கு சமமாகும். மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத இந்த அற்புதச் செயலை சாதாரண எறும்புகள் வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே! இது எப்படி ? என சிந்திதாலே தலை சுற்றுகிறது.

கண்களில் திசைகாட்டும் கருவி

அல்லாஹ் எறும்புகளுக்கு வழங்கியிருக்கும் தனிப்பட்ட உடலமைப்பே இந்த அரிய செயல்களுக்குக் காரணமாகும். எறும்புகளின் கண்களில் பிரத்தியேகமாக திசையை அறியக்கூடிய அற்புதமான ஒரு கருவியை இறைவன் பொருத்தியிருக்கிறான்.

அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள இந்த ஆற்றல் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட திசைகாட்டும் கருவியைவிட பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தது. இந்த சிறப்புமிகு அம்சத்தால் மனிதனால் உணரமுடியாத ஒருவகை கதிர்களை எறும்புகள் உணர்கின்றன. இந்த உணரும் கதிர்களால் வடக்கு,தெற்கு என திசைகளை சரியாக அறிந்து கொள்கின்றன. இவ்வாறு திசைகளை அறியும் எறும்புகள் தங்களது கூடுகளையும் தவறாமல் அடையாளம் கண்டு கொள்கின்றன. ஒளியின் குணநலன்களை மனிதன் அறிவதற்கு முன்னரே எறும்புகள் ஒளியைப்பற்றித் தெரிந்து கொண்டு அதனைப் பயன்படுத்திவருவது விந்தையிலும் விந்தையல்லவா? இது அல்லாஹ் வழங்கிய அற்புத ஆற்றல் அல்லவா?

நோய்கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல்

மனிதன் தன்னை நோய்கிருமிகளிலிருந்து தடுத்துக் கொள்வதைப்போல மற்றஉயிரினங்களும் தங்களை தற்காத்துக் கொள்ள சில தடுப்பு முறைகளைக் கையாளுகின்றன. அந்த வகையில் எறும்புகள் நோய்கிருமிகளை தடுக்க ஒரு வகை திராவகம் போன்ற திரவப் பொருளை உற்பத்திச் செய்கின்றன. இந்த திரவப் பொருளை தங்களின் உடலில் பரவச் செய்வதுடன் தங்களின் கூடுகளின் சுவர்களிலும் தடவுகின்றன. எறும்புகள் தங்களின் உடலை மட்டுமல்ல,தங்களது வசிப்பிடத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இதனை ஆராயும் போது எப்படிப்பட்ட பாதுகாப்பு முறையை இந்த அற்பமான எறும்பினத்தில் அல்லாஹ் அமைத்திருக்கிறான் எனபதை எண்ணி அவன் வல்லமையை உணர்ந்து அவனுக்கு ஒவ்வொரு உயிரினமும் தஸ்பீஹ் செய்த வண்ணமுள்ளன என வான்மறை குர்ஆன் கூறுவதை மனிதர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது மட்டுமா? இன்னும் எத்தனையோ அதிசயங்கள் அவற்றில் உள்ளன.

ஏளனம் செய்தோர் வியந்து நிற்கின்றனர்.

''கடந்த காலங்களில் எறும்புகள் ஒன்றோடொன்று உரையாடிக்கொள்கின்றன.மிக நுட்பமான தகவல்களை பரிhறிக்கொளகின்றன'' என்று குர்ஆன் கூறியபோது எள்ளி நகையாடியோர் ஏராளம். ''இவையெல்லாம் கற்பனைகள்'' என பரிகாசம் செய்தனர். ஆனால், அண்மையில் எறும்புகளைப் பற்றி வெளியட்டுள்ள ஆய்வுகள் மனிதனை வியக்கவைக்கின்றன.

விலங்குகள், பூச்சிகள்; ஆகியவற்றின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்தோர் ''எறும்புகளின் வாழ்கைப் போக்கு மனிதனின் வாழ்க்கை போக்கோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவை எனக் கண்டுள்ளனர். அவை பின்வருமாறு :-

வியப்பூட்டும் வாழ்க்கை முறைகள்!

1. மனிதர்களைப் போன்றே எறும்புகள் இறந்த உடலகளை மண்ணில் புதைத்து விடுகின்றன.

2. தங்களின் அன்றாடப் பணிகளை மனிதர்களைப் போல் சீராக பங்கிட்டு நிர்வாகங்களை ஒரு திட்டமிட்டுக் கவனித்துக் கொள்;கின்றன. மேலாளர்கள் (
Managers), மேற்பார்வையாளர்கள் (Supervisors), தொழிலாளர்களை மேலாண்மை செயபவர்கள் ( Foremen),உழைப்பாளர்கள் (Workers) என்று தனித்தனியாக துறைகளை (Departments) வகுத்துச் செயலாற்றுகின்றன.3. அவ்வப்போது ஒன்று கூடி தங்களிடையே அனைவரும் மகிழ்ச்சியோடு (Chatting) அளவளாவிக் கொள்கின்றன.

4. தங்களுக்கிடையே மிகவும் நவீன முறைகளை கையாண்டு தகவல் பரிமாற்றங்கள் செய்கின்றன.

5. சீரான பொதுச் சந்தைகள் நடத்தி, பண்டமாற்றும் செய்து வருகின்றன.

6. வெய்யில் காலத்திலேயே மழைகாலத்திற்குரிய நீண்ட நாள் தேவைக்கான தானிய மணிகளை சேமித்து வைக்கின்றன.

7. தானிய மணிகள் முளைவிட்டு வளரும் போது அவற்றின் அடிவேர்களை அறுத்துவிடுகின்றன. அவ்வாறு அறுக்காது விட்டுவிடின் அவை அழுகிப்போகும் என்பதைத் தெரிந்து வைத்துள்ளன.

8. சேமித்து வைத்திருக்கும் தானியக்களஞ்சியம் மாரிகாலத்தில் ஈரப்பசைமிக்கதாய் மாறிவிடும்போது, அவற்றை வெளியே கொண்டு வந்து சூரிய கதிர் ஒளியில் காயவைக்கின்றன. அந்த தானிய மணிகள் சூரிய ஒளியில் காய்ந்ததும் உடனே உள்ளே கொண்டு சென்று பாதுகாக்கின்றன. ஈரப்பசையால் வேர்விட்டு அழுகிப்போய்விடும் என்ற வேளாண்மை அறிவைப் பெற்றிருப்பது விந்தையிலும் விந்தையல்லவா?

இறைவனின் அருள் வேதம் கூறிய அனைத்தும் இன்று உண்மையாகிவருவது

''குர்ஆன் அல்லாஹ்வின் வேதம்'' என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளாகும்.

அறியுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

சிந்தித்துப்பார்க:கும் மக்களுக்கு அரிய படிப்பனை உள்ளது (குர்ஆன்)

''Jazaakallaahu khairan'' albaqavi.com

புதன், 29 ஏப்ரல், 2009

முத்திரை பதித்த வித்தகர் முஹம்மது (ஸல்)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களைப் பற்றி இறைவன் இவ்வாறு கூறுகிறான்,

நாம் உம்மை அகிலாத்தாருக்கு ஓர் அருட்கொடையாக அனுப்பியுள்ளோம் (21:107)

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வுலகத்தில் ஏற்படுத்தியத் தாக்கம், அவர்கள் ஏற்படுத்திய சமூக புரட்சி, அவர்களிடம் இருந்த நற்பண்புகள் ஆகியவைகளை முஸ்லிம்கள் சொல்லுவிதைவிட முஸ்லிமல்லாத அறிஞர்கள், அறிவுஜீவிகள் போன்றோர் சொல்லுவதே இந்த தலைப்பிற்கு மேன்மையாக இருக்கும் என்று நினைக்கின்றோம்.

மைக்கேல் ஹெச். ஹார்ட் என்ற ஆய்வு வல்லுனர் உலகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நபர்களில், முதலில் 1000 பேரை தெரிவு செய்தார் பின்பு அதிலிருந்து 100 நபர்களை மட்டும் தேர்வு செய்தார்.இப்படி ஆய்வு செய்து முதலிடத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு கொடுத்தார்.பின்பு இவ்வாறு கூறுகிறார் இந்த உலகத்தில் அளப்பரிய செல்வாக்குடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களின் பட்டியலில் முஹம்மது அவர்களை முதலாமானவராகத் தேர்ந்தெடுத்தது வாசகர்களில் சிலருக்கு வியப்பாக இருக்கும். மற்றும் சிலர் "ஏன் அப்படி?" என்று வினாவும் தொடுக்கலாம். ஆனால் சமயம், உலகியல் ஆகிய இரு நிலைகளிலும் ஒரு சேர மகத்தான வெற்றி பெற்றவர், வரலாற்றில் அவர் ஒருவரே தாம்.எளிமையான வாழ்க்கைப் படியில் துவங்கிய அன்றைய உலகத்தின் பெரும் கொள்கை ஒன்றை நிறுவி, அதனைப் பரப்பிய பேராற்றல் வாய்ந்த அரசியல் தலைவருமாவார்கள். அவர்கள் உயிர் நீத்து பதினான்கு நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் அவர்களின் தாக்கம் சக்தி மிக்கதும், எல்லாத் துறைகளிலும் பரவி நிற்பதுமாக இன்றும் விளங்குகிறது.

இந்நிலையில், மனிதகுல வரலாற்றில் முஹம்மது நபியின் தாக்கத்தை-செல்வாக்கை-எப்படிக் கணக்கிடுவது? ஏனைய சமயங்களைப் போன்றே இஸ்லாமும் அதனைப் பின்பற்றுவோரின் வாழ்க்கைகளில் மிகப் பெரும் தாக்கத்தை உண்டு பண்ணி, ஆதிக்கம் செலுத்துகின்றது. இதன் காரணமாகத்தான் உலகப் பெரும் சமயங்களை நிறுவியவர்கள் இந்நூலில் முக்கியமாக இடம் பெற்றுள்ளனர். உலகத்தின் முஸ்லிம்களைவிடக் கிறிஸ்துவர்கள் ஏறத்தாழ இருமடங்கினராக இருப்பினும் கூட முஹம்மது நபியவர்களை ஏசு நாதரைவிட முதன்மையாக இடம் பெறச் செய்திருப்பது, எடுத்த எடுப்பில் புதுமையாகத் தோன்றலாம். இந்த முடிவுக்கு இரண்டு காரணங்கள் உண்டு.

[ஒன்று: கிறிஸ்துவ வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பணியினை முஹம்மது அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு(அவை யூத சமயத்திலிருந்து வேறுபட்ட அம்சங்களைப் பொறுத்தவரை) ஏசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை(THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால், மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்.( St. PAUL) ஆனால், இஸ்லாத்தின் இறைமையியல் (THEOLOGY), அதன் அறநெறி, ஒழுக்க இயல் யாவற்றுக்குமே பொறுப்பானவர் முஹம்மது நபிதான். அன்றியும் அச்சமயத்தை மக்களிடையே பரப்புவதிலும் இஸ்லாமிய அனுஷ்டான மரபுகளை வகுப்பதிலும் அவர்கள் மூலாதாரமான பொறுப்பினை மேற்கொண்டிருந்தார்கள். மேலும், இறைவனிடமிருந்து தங்களுக்கு நேரடியாய் அருளப்பட்ட அவர்கள் நம்பிய திருவெளிப்பாடான புனித குர்ஆனின் போதகரும் அவர்தாம். முஹம்மது வாழ்நாளிலேயே இவ்விறை வெளிப்பாடுகள் பற்றுதியுடனும், கடமையுணர்வுடனும், பதிவுச் செய்யப்பட்டன. அவர்கள் காலமான சிறிது காலத்துக்குள் ஆதாரபூர்வமாக அவை ஒரு சேரத் தொகுக்கப்பட்டன. எனவே, முஹம்மது நபியின் கருத்துகளும், போதனைகளும், கொள்கைகளும், குர்ஆனுடன் நெருக்கமானவை. ஆனால், ஏசுநாதரின் இது போன்ற விரிவான போதனைகள் அடங்கிய எதுவும்(மூலாதாரத்துடன்) எஞ்சவில்லை. கிறிஸ்துவர்களுக்கு பைபிளைப் போன்று, முஸ்லிம்களுக்கு குர்ஆன் முக்கியம் வாய்ந்ததாகும். குர்ஆன் வாயிலாக முஹம்மது நபி உண்டுபண்ணிய தாக்கம், மிகப்பெரும் அளவினதாகும். கிறிஸ்துவத்தின் மீது ஏசுநாதரும், தூய பவுலும் ஒருங்கிணைந்து உண்டுபண்ணிய தாக்கத்தை விட, முஹம்மது நபி இஸ்லாத்தின் மீது உண்டு பண்ணிய தாக்கம் மிகுந்தது என்றே சொல்லலாம். சமய அடிப்படையில் மட்டும் பார்க்கப் போனால் மனித வரலாற்றில் ஏசுநாதருக்கு இருந்த செல்வாக்கைப் போன்றே முஹம்மதுவுக்கும் இருந்தது என்று சொல்லலாம்.

இரண்டாவது: மேலும், ஏசுநாதரைப் போலில்லாமல், முஹம்மது நபி சமயத் தலைவராக மட்டுமின்றி, உலகியல் துறைகளிலும் தலைவராக இருந்தார்கள். உண்மையில் அரபுகளின் வெற்றிகளுக்கு, பின்னிருந்து இயக்கிய உந்து சக்தியான அன்னார் எல்லாக் காலத்துக்கும் தாக்கத்தை உண்டு பண்ணும் செல்வாக்கு மிக்க தலைவராக இடம் பெறலாம்.] Source - (The Hundred) தமிழில் அந்த நூறு பேர்.

ஒற்றுமையற்று, ஒழுக்கம் குலைந்து, இறைத்தன்மை உணராமல், தறிகெட்டு வாழும் அரபுக்களின் வாழ்க்கை நிலையை மாற்றி உயர்த்த இறைவனால் நியமிக்கப்பட்ட ஓர் ஊழியராகவே அவர் தம்மை உணர்ந்தார். துளி அகங்காரம் கிடையாது. பெருமையோ, வானவர் வந்து "இறைத்தூதர்" என்று அறிவித்துப்போன பெருமிதமோ, கர்வமோ கிடையாது. ஊழியன். வெறும் ஊழியன். இப்படித்தான் முகம்மது தம்மை இறுதிவரை கருதினார். (எழுத்தாளர் பா. ராகவன்)

முஹம்மது நபியின் நற்பண்புகள் எனக்குப் பிடித்திருக்கின்றன. மனித வாழ்க்கையைப் பற்றிய அவருடைய கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். இந்த நூற்றான்டின் இறுதிக்குள் பிரிட்டன் இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்டு விடும் என்று எதிர்பார்க்கிறேன். (பெர்னாட்ஷா)

நிச்சயமாக நீர் மிக உயர்ந்த நற்குணம் உடையவராக இருக்கின்றீர் (68:04)

காந்திஜி இவ்வாறு கூறுகிறார், ஆட்சி புரியும் அமைச்சர்கள் நபிபெருமான் வகுத்த சீர் திருத்தங்களை பின்பற்றி நடக்கவேண்டும். (மகாத்மா காந்தி)

நபிகள் நாயகம் தோற்றுவித்த தெய்வத்தன்மை பொருந்திய புனிதமான அரசாங்கம் முற்றமுற்ற ஜனநாயகக் கொள்கையை மேற்கொண்டதாகும். மனித குலம் முழுவதும் பின்பற்றத் தக்க உயரிய கோட்பாடுகளை உடையது நபிகள் நாயகம் கொண்டுவந்த இஸ்லாம். அனைத்தையும் உள்ளடக்கியது இஸ்லாம். அகிலமே ஏற்றுக்கொள்ளக் கூடியது. அண்ணல் நபிகள் எளிய வாழ்க்கை அவருடைய மனிதத்தன்மையை தெளிவாக்கியுள்ளது.
(
டாக்டர் ஜான்சன்)

இறைவனின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது (33:21)

முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும். (ஜவஹர்லால் நேரு)

(நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம் (48:01)

துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், 'முஹம்மது ஒரு சரித்திர நாயகர்' என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். (எஸ். எச். லீடர்)

இறுதி மூச்சுவரை ஏகத்துவத்தை, ஒருவனே தேவன் என்பதை பிரச்சாரம் செய்து, அசைக்கமுடியாத இறைநம்பிக்கையுடன் இருந்து, தாமே இறைவனின் தீர்க்கதரிசி என்ற உள்ளுணர்வுடன் உரிமை கொண்டாடிய முஹம்மது நபி அவர்களின் நபித்துவத்தை எவரே மறுக்க முடியும்? (வாஷிங்டன் இர்விங்)

முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார் (48:29)

நபிகள் நாயகம் இவ்வுலகில் மக்களுக்குப்புரிந்த போதனைகள் அனைத்தும் உண்மை பொதிந்தவை. கருத்தாழம் மிக்கவை. விசுவாசம் கொள்ளத்தக்க வேதம் ஒன்றிருந்தால் அது நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட திருக்குர்ஆனேயாகும். (தாமஸ் கார்லைல்)

(நபியே!) நிச்சயமாக நாம் மிகத்தெளிவான வசனங்களை உம்மீது இறக்கிவைத்திருக்கிறோம் பாவிகளைத் தவிர (வேறு எவரும்) அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.(2:99)

நாகரிகம் முதிர்ந்த இந்நாளில் கூட மக்களைச் சீர்திருத்த முனைகிறவர்கள் படுகிற பாட்டைப் பார்க்கும்போது, பல நூற்றாண்டுகளுக்கு முன் அநாகரிகத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் முஹம்மது நபி அவர்கள் புரிந்த சாதனைகளும், சீர்திருத்தங்களும் முரடர்களுக்கும் சகிப்புத் தன்மையும் நேர்மையையும் வழங்கி, அவர்களை மெய்யான வாழ்க்கையின் பக்கம் இழுத்துவந்து வெற்றியை நிலைபெறச் செய்த பெருமை வெறும் நாவினால் புகழ்ந்து விடக்கூடியதல்ல. (டால்ஸ்டாய்)

இவர்களுக்காக துக்கமும், வேதனையும் அடைந்தே உமது உயிர் போய்விட வேண்டாம். (35:08)

செந்தழலைக் குளிராகவும், சினங்கொண்டு சீறிவரும் பகையைக் குணங்கொண்ட நட்பாகவும் மாற்றவல்ல மனவலிமைமிக்க மேலோர் நபிகள் நாயகம். நபிகள் நாயகம் மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்திக்கொண்டார் என்பதற்கு ஏராளமான எடுத்துக்காட்டுகள் உண்டு. (கலைஞர் கருணாநிதி)

முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது கொள்கைகளுக்காக எல்லாவித சித்திரவதைகளையும் கொடுமைகளையும் சகித்துக் கொண்டு அவர்களைத் தமது தலைவராகக் கருதிய அவர்களின் தோழர்களுடைய உயர்ந்த ஒழுக்கப் பண்புகளும் அவர்கள் இறுதியில் நிகழ்த்திய சாதனையின் மகத்துவமும் இவையனைத்தும் அவர்களின் அடிப்படையான நேர்மையான நம்பகமான தன்மையை நன்கு எடுத்துரைக்கின்றன. முஹம்மத் (ஸல்) அவர்களை ஏமாற்றுக்காரராகவும் மோசடிக்காரராகவும் கருதுவது பல பிரச்னைகளையும் கேள்விகளையும் தாம் எழுப்புகிறதே தவிர பிரச்னைகளைத் தீர்க்கக் கூடியதாயில்லை. மேலும் உலக வரலாற்றின் மகத்தான மனிதர்களில் முஹம்மதைப் போல் மேற்குலகில் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் வேறெவருமில்லை.(Mohammed at Mecca , Oxford 1932, P.52)

அவர் தமது மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது வியப்புக்குரியதல்ல மாறாக அது என்றும் நீடித்து நிலைத்திருக்கும் பாங்குதான் வியப்புக்குரிய ஒன்றாகும். மக்கா நகரிலும் மதீனா நகரிலும் அவர் வடிதளித்த இஸ்லாத்தின் அதே அசல்வடிவம் தூய்மை கெடாமல் மாற்றப்படாமல் திரிக்கப்படாமல் பன்னிரண்டு நூற்றாண்டுகளில் நடந்தேறிய புரட்சிகள் பலவற்றிற்குப் பின்னரும் இன்று வரை இந்திய ஆப்ரிக்க துருக்கியப் பகுதிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றது. சமயத்தைக் குறித்து கற்பனை மற்றும் ஊகத்தின் அடிப்படையிலான கருத்தோட்டங்களிலிருந்து முஹம்மதியர்கள் ஒதுங்கியே நின்றனர். அவற்றை அடியோடு கிள்ளி எறிந்தும் விட்டார்கள்.நான் ஒரே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைவனின் திருத்தூதராவார் என்பது தான் இஸ்லாத்தின் முன்மாதிரியான மாறுபாடற்ற ஒரேவிதமான பறைசாற்றலாகும். ஒருபுறம் கடவுள் பற்றிய அறிவார்ந்த கருத்தோட்டத்தின் மதிப்பு கண்ணுக்குப் புலப்படும் உயிரினங்கள் சிலைகள் மற்றும் பொருள்களின் அளவுக்குக் குறைக்கப்பட்டதில்லை. இறைத்தூதருக்கு அளிக்கப்பட்ட உயர்மதிப்புகள் மனிதர் என்கிற அந்தஸ்தை தாண்டி (கடவுள் என்கிற அளவுக்கு) உயர்த்தியதில்லை. அவர் அளித்து விட்டுச் சென்ற சிரஞ்சீவியான கட்டளைகள் அவரைப் பின்பற்றுவோர் அவருக்குக் காட்டும் நன்றியுணர்வை பகுத்தறிவு மற்றும் சமயத்தின் எல்லைக்குள் கட்டுப்படுத்தி (மிகைத்து விடாமல் தடுத்து) வைத்திருக்கின்றன.(Edaward Gibbon Simon Ocklay, History of the Saracen Empire. London, 1870, p.54)

மனித சமுதாயத்திலுள்ள கோடிக்கணக்கான மக்களின் உள்ளங்களின் மீது சர்ச்சைக்கிடமின்றி இன்று ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒருவரின் மிகச் சிறந்த வாழ்க்கையை அறிந்திட நான் ஆவல் கொண்டேன். (அவ்விதம் அதனை நான் படித்தறிய முற்பட்ட போது) இஸ்லாத்திற்கு அக்காலத்திய வாழ்க்கையமைப்பில் உயர்ந்த ஓர் இடத்தைப் பெற்றுத் தந்தது வாள் பலமல்ல என்று முன் எப்பொழுதையும் விட அதிகமாக உணர்ந்தேன். நபிகள் நாயகத்தின் மாறாத எளிமை தம்மைப் பெரிதாகக் கருதாமல் சாதாரணமானவராக நடந்து கொள்ளும் உயர்பண்பு. எந்நிலையிலும் வாக்குறுதியைப் பேணிக் காத்த தன்மை தம் தோழர்கள் மீது கொண்டிருந்த அழியாத அன்பு அவரது அஞ்சாமை இறைவன் மீதும் தமது பிரச்சாரப் பணியிலும் அவர் கொண்டிருந்த முழுமையான நம்பிக்கை ஆகியவை தான் அவரது வெற்றிக்குக் காரணங்கள். இவையே உலகச்சக்திகள் அனைத்தையும் நபிகள் நாயகத்தின் முன்பும் அவர்களின் தோழர்கள் முன்பும் கொண்டு வந்து குவித்தன. எல்லாத் தடைகளையும் வெற்றி கொண்டன. அவரது மகத்தான வெற்றிக்கு இவை தான் காரணமே தவிர வாள்பலம் அல்ல. (Young India, Quoted in The light, Lahore, for 16th Sep 1824. Mahatma Gandhi)

அவன் தான் என்னுடைய தூதரை நேரான வழியைக் கெண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணை வைத்து வணங்குவோர் (அதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் வெற்றி பெற்றே தீரும். (2:32)

இவ்வளவு மகத்தான சிறப்புக்குரிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை சில அறிவற்றவர்கள் அவர்கள் மீது தூற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை பார்க்கும் பொழுது பெரும் நகைப்புக்குரிய ஒரு விடயமாகவே உள்ளது. இஸ்லாத்திற்கு எதிரான தவறான சிந்தனையும் முஸ்லிம்களுக்கெதிரான காழ்புணர்ச்சியே அவர்களின் தவறான கொள்கைக்கு காரணமாக உள்ளது. ஆகவே பகுத்தறிவுமிக்க மனிதனாக படைக்கப்பட்ட நாம் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். மேலேயுள்ள கூற்றுக்கள் எல்லாம் உண்மைதானா? இந்த அசாதாரணமான, புரட்சிகரமான சாதனைகள் உண்மையில் நடைபெற்றனவா? என்பதை நாம் அனைவரும் தூயவடிவில் அறிவதற்கு முன்வர வேண்டும். நமக்கு இருக்கின்ற கருத்துவேருபாடுகளை கழைந்து ஒரு மாசற்ற மனிதாக அவரை நாம் அறிவதற்கு முயற்சி செய்ய வேண்டும். பழையபடி நாம் மனதுக்குள் சில கருப்புப்புள்ளிகளை வைத்துக்கொண்டு இன்னும் அவர்கள் மீது மனித தன்மையற்ற செயல்களை செய்ய முற்பட்டால் இன்னும் ஒரு நபியல்ல ஓராயிரம் நபி வந்தாலும் உங்களை திருத்தமுடியாது. எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்துவனாக!