மதங்கள் ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மதங்கள் ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 நவம்பர், 2011

மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்




கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீ
ரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டுடும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.
ஆனால், என்ன வியப்பு! உலகத்தில் வேற எந்த நூலிலும காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களைக் குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.
நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல. குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரைத் திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்துவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம் கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.
நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்படிருந்தது. மில்லரின் வியப்பைக் கூட்டியது.
“குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்னில் ஒரு வசனம் அவரைத் தூக்கி வாரிப் போட்டது.

“இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள்” (4:82)என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.
இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: “இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவென்றால், சிந்தனைகளில் தவறு இருக்கும். தவறு இல்லை என்பது நரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால் தான் அது முடியவில்லை.
உலகில் எந்தப படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது. இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.
டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:

“இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (21:30}1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். “பெருவெடிப்பு” (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பல கோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.
‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தைின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்குஇணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறித்த மூலத்தில் ‘அல்ஃபதக்’ எனம் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். {ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!}
நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார் போலும், இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதை கண்டு திகைத்துப் போனார் மில்லர்.

“இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல. அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211) என்று கூறும் குர்ஆன்,“(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!’ (18:98) என்ற கடடளையிடுகின்றது.ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்கு முன் என்னை விட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?
டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்க வைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம் பெறுகின்றன. அவற்றை ‘அற்புதங்கள்’ என்கிறார் அற்புதகக் கூட்டங்கள பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீ லஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படடையாகவே கூறுகிறது.
அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை – தான் நரகவாசி என்பதை பொய்யாக்கியிருக்கலாம்.
ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப் பெற்றது

வியாழன், 20 அக்டோபர், 2011

பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 1)

இன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்...

கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான புத்தகங்களுக்கு ஆசிரியர் என்று நம்பப்படுபவர்...

இயேசுவே அறியாத பல புதிய கொள்கைகளை அவரின் பெயராலேயே போதித்தவர்...

இவர் இல்லையேல் இன்றைய கிறிஸ்தவமதமோ அதன் கொள்கைகளோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த மதத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்...

இயேசு, சத்தியத்தை உரத்து போதித்தார் என்பதன் காரணமாக யூதர்களின் கொலை வெறிக்கு ஆளாகி (பைபிளின் படி) சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, ஆதாம் செய்த பாவத்தின் காரணமாக - அந்த பாவத்தைப் போக்கும் வகையில், இயேசு நமக்காக தன்னைத்தானே பலியிட்டுக்கொண்டார் என்று சொல்லி, அந்த கொலை சம்பவத்தை தியாகத்தின் சின்னமாக மாற்றி பிரச்சாரம் செய்தவர் ...

முன்னர் உள்ள தீர்க்கதரிசிகளும் இயேசுவும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்ட பழைய ஏற்பாட்டையோ அல்லது அதன் கட்டளைகளையோ நாம் பின்பற்றத் தேவையில்லை, அது பலவீனமடைந்துவிட்டது, அது பயனற்று போய்விட்டது என்று போதித்தவர் ... அவற்றில் தடுக்கப்படவைகளை அனுமதித்தவர்... அவற்றில் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதை செய்யலாம் என்று போதித்தவர்...

இவர் எதை போதித்தாரோ அதுதான் இன்றைய கிறிஸ்தவமதத்தின் ஆணிவேர், அது தான் இன்றைய கிறிஸ்தவ மதத்தின்தலையாய கொள்கை, இவர் சொன்ன கொள்கைகளை நம்பாதவன் கிறிஸ்தவனே அல்ல, அவன் இரட்சிப்பை பெற முடியாது - அவன் நித்திய ஜீவனை அடைய முடியாது என்று சொல்லப்படும் அளவுக்கு கிறிஸ்தவ மதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் அவர் யார்? என்றால்,


அவர் தான் கிறிதவர்களால் மிக உயர்வாக மதிக்கப்படும் புனிதப் பவுல் !

இப்படி சொன்னது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனால் அது தான் மறுக்கமுடியாத சத்தியமான உன்மை!

இவரைப்பற்றி வரலாற்று ஆசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் தனது 'THE 100'என்ற புத்தகத்தில் சொல்லும்போது,

'புதிய கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் முன்னனியில் இருந்தவர். பிற கிறிஸ்தவ எழுத்தாளரையும் சிநிதனையாளரையும் விட இவரே கிறிஸ்துவ இறையியலில் நிலையான, மிகப் பரந்த விளைவுகளை ஏற்படுத்தியவராவார்' என்கிறார். மற்றோர் இடத்தில்,

'கிறிஸ்துவத்தின் முக்கியமான அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு இயேசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை (THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால் மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்' என்கிறார்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா பவுலைப் பற்றிக் கூறும் போது :

எழுத்தாளர்களின் ஒரு அங்கம், உதாரணத்திற்கு W. Wrede அவர்களைப் போன்றவர்கள் பவுலை கடுமையாக எதிர்க்கின்றார்கள். கிறிஸ்தவ மதத்தின் இரண்டாவது நிறுவனர் என்று ஆகும் அளவுக்கு பவுல் அதை மாற்றி விட்டார் என அவர்கள் கருதுகின்றனர்.உண்மையைச் சொல்லப் போனால், அவர் தான் சர்ச்சினுடைய கிறிஸ்தவ மதத்தின் நிறுவனரே ஆவார். அந்த சர்ச்சினுடைய கிறிஸ்தவமோ இயேசு போதித்த கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் முரணானதாகும். நீங்கள் இயேசுவைப் பின்பற்றலாம் அல்லது பவுலைப் பின்பற்றலாம். ஆனால் இருவரையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முடியாது என அவர்கள் கூறுகின்றார்கள்.

தலைசிறந்த கிறிஸ்தவ வரலாற்றாசிரியரான ஜேம்ஸ் மாக்கினோன் பகிரங்கமாக உன்மைகளை ஒப்புக்கொள்கின்றார் :

'அவர் போதித்த கருத்தோட்டஙகள் அவரிலிருந்து உதித்தது தான் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. அவருக்கு இயேசு நேரடியாகப் போதித்தார் என்று அவர் கூறினாலும் அவர் போதித்தது இயேசுவின் போதனைகளுக்கு ஒத்ததா என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது. அதே நேரத்தில், நியாயப் பிரமாணம் பற்றி இயேசுவின் கொள்கை பவுலின் கொள்கையோடு ஒத்துப் போகவில்லை. இதை வைத்துப் பார்க்கும் போது, தான் இயேசுவிடமிருந்து நேரடியாக செய்திகளைப் பெற்றேன் என்று பவுல் கூறுவது பிரச்சினைக்குரிய ஒன்றாகத் தான் இருக்கின்றது'என்று கூறுகின்றார்.

இன்றைய கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பைபிளின் புதிய ஏற்பாட்டின் மொத்தமுள்ள 27 புத்தகங்களில் 14 புத்கங்களுக்கு சொந்தக்காரர் இந்த பவுல் என்று சொல்லப்படுகின்றது. இவர் எழுதியதாக சொல்லப்படும் புத்தகங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் உள்ளவர்களுக்கு கடிதங்களாக எழுதப்பட்டது என்றாலும், அவற்றையே தற்போது வேதம் என்றப்பெரில் பைபிளில் இனைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், புதிய ஏற்பாடு முழுவதும் இயேசுவுக்கோ அல்லது இயேசுவின் சீடர்களுக்கோ சொந்தமானதல்ல. (இது குறித்து மேலும் விரிவான கட்டுரை விரைவில் இன்ஷா அல்லாஹ்) மாறாக இவரும் இவரைச்சார்ந்தவர்களும் எழுதியதே. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், இவரும் இவரைச் சார்ந்தவர்களும் ஏற்படுத்தியதே புதிய ஏற்பாடும், அதைச் சார்ந்துள்ளதாக சொல்லப்படும் இன்றைய கிறிஸ்தவ மதமும்.

பவுலின் நன்பரான லூக்காவால் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டின் - அப்போஸ்தலர்களின் செயல் பாடுகள் பற்றி கூறும் - Acts of Appostle - என்ற புத்தகத்தில் மற்றவர்களைக் காட்டிலும் பவுலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. Acts of Appostle என்ற ஆகாமம் இயேசுவின் சீடர்களின் செயல்பாடுகளைப் பற்றிக் கூறப்படும் புத்தகம் என்று கிறிஸ்தவர்கள் நினைத்துக்கொண்டிருந்தாலும் 28 அதிகாரங்கள் உள்ள புத்தகத்தில் 9 முதல் 28 வரையிலான அதிகாரங்கள் - கிட்டத்தட்ட 19 அதிகாரங்கள் - பவுலின் செயல்பாடுகள் பற்றித்தான் பேசுகின்றது. இந்த புத்தகத்தை அப்போஸ்தலர்களின் செயல் பாடுகள் என்று குறிப்பிடுவதை விட பவுலின் செயல்பாடுகள் என்று குறிப்பிட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றுச் சொல்லலாம், என்கிற அளவுக்கு அந்த புத்தகத்தில் இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பவுலும் பவுலைச் சார்ந்தவர்களும் எதை எல்லாம் எழுதிவைத்தார்களோ அவை அனைத்துமே வேதவாக்கியம் என்ற சாயத்தை பூசி அவை அனைத்தும் கடவுளால் அருளப்பட்டது என்று சான்றிதழ் கொடுத்தவரும் இவரே. அதனால் தான் புதிய ஏற்பாட்டாளர்கள் எதை எழுதிவைத்தாலும் எப்படி எழுதி வைத்திருந்தாலும், அது எந்த அளவுக்கு முரண்பாடாகவும் குழப்பமானதாகவும் அறிவுக்கு பொருந்தாததாக இருந்தாலும், ஏன் இயேசுவின் வார்த்தைகளுக்கும் அவரது போதனைகளுக்குமே நேர் முரணாக இருந்தாலும் அவை அனைத்தையும் இன்றைய கிறிஸ்தவர்கள் அப்படியே கண்மூடி பின்பற்றுவதற்கு காரணம், பவுல் 2 திமோத்தேயு 3:16ன் மூலம் 'அவை அனைத்து வேதவாக்கியங்கள்' என்று கொடுத்த சான்றிதழே.

பவுலும் அவர் சொன்ன கொள்கைகளும் இல்லையேல் இன்றைய கிறிஸ்தவமதமே இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்கிற அளவுக்கு அம் மதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் பவுல் என்பவர் யார்? அவர் இயேசுவின் சீடரா? அல்லது இயேசுவின் உறவினரா? அல்லது இயேசு வாழ்ந்த காலத்தில் ஏதாவது ஒரு வகையில் அவருக்கு உதவி செய்தவரா? உன்மையில் அவர் யார்?

சனி, 29 ஜனவரி, 2011

அல்வாவில் கஞ்சா வைத்து 200 பெண்களுடன் காமக்களியாட்டம் நடத்திய போலிச்சாமியார். போலீஸ் தீவிர விசாரணை.

கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் சி.ஜி.வி. நகரை சேர்ந்தவர் வி.டி. ஈஸ்வரன். இவர் வசிய ஜோதிட மருத்துவ நிலையம் நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளாக குடும்ப பிரச்சினை, கணவன்- மனைவி பிரச்சினை, குழந்தையின்மை, தீராத நோய்களுக்கு தீர்வு, தீராத வலிக்கு தீர்வு போன்ற பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு ஜோதிடம் மற்றும் மருத்துவம் செய்து வந்தார்.


குறிப்பாக பெண்களுக்கு குறைந்த கட்டணம் வசூலித்ததால் இவரிடம் கூட்டம் அலைமோத தொடங்கியது. துண்டு பிரசுரங்கள் மூலமும், டி.வி. மற்றும் ஜோதிட திலகம் என்று தனக்கு தானே பட்டம் சூட்டிக்கொண்டு குடும்ப பிரச்சினை தீர ஆலோசனை வழங்கி வந்தார்.

இதனால் அவருக்கு லட்சக்கணக்கில் பணம் குவிந்தது. இந்த நிலையில் செல்வபுரத்தை சேர்ந்த சந்திரிகா (வயது 47), பாக்கியலட்சுமி (47) ஆகிய 2 பெண்கள் குடும்பத்தில் கணவன்- மனைவி பிரச்சினையை தீர்ப்பதற்கு குறி கேட்பதற்காக சென்றனர். ஜோதிட நிலையத்தில் வி.டி.ஈஸ்வரன் அவர்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசி உள்ளார்.

பின்னர் இருவரிடமும் தனிமையில் தியானம் செய்து நான் சொல்லும் மந்திரத்தை சொன்னால் தீர்வு கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

அதன்படி சந்திரிகா, பாக்கியலட்சுமி ஆகிய 2 பேரையும் தனிதனியாக அமர வைத்து செக்ஸ் குறித்து பேசி பாலியல் உணர்வுகளை தூண்டி உள்ளார். தொடர்ந்து விளக்குகளை அணைத்துவிட்டு பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.

2 பேரும் அதற்கு இணங்க மறுத்து தப்பி வந்துவிட்டனர். இதுகுறித்து 2 பேரும் போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபுவிடம் புகார் செய்தனர். அவரது உத்தரவின் பேரில் செல்வபுரம் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் அதிரடியாக சென்று செக்ஸ் ஜோதிடர் வி.டி.ஈஸ்வரனை கைது செய்தனர்.

அவரது ஜோதிட நிலையத்தில் இருந்து, 15 ஆபாச சி.டி.களையும், உணர்ச்சிகளை தூண்டக்கூடிய பாடல் காசெட்டுகளையும் போலி எந்திர தகடுகள், வசிய மை போன்றவற்றையும், அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியதாக வைத்திருந்த போலி ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.

அவரிடம் கமிஷனர் சைலேந்திரபாபுவின் நேரடி மேற்பார்வையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில் வி.டி.ஈஸ்வரன், கடந்த 10 ஆண்டுகளாக ஏராளமான பெண்களை மயக்கி காமகளியாட்டம் நடத்தி செக்ஸ் ஜோதிடராக வலம் வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாது:-

வி.டி.ஈஸ்வரன், 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். வயிற்று பிழைப்புக்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவில் சித்த மருத்துவ நிலையம் தொடங்கி உள்ளார். பின்னர் தன்னை ஜோதிடர் என்ற சொல்லிக் கொண்டு குறி சொல்ல ஆரம்பித்துள்ளார்.

குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தது போல சிலருக்கு சில விஷயங்கள் நடந்துள்ளது. உடனே அதை தனது சாதனை என்று துண்டு பிரசுரங்களாக அடித்து வினியோகித்து விளம்பரப்படுத்தி உள்ளார். அதை பார்த்து இவரிடம் குறி கேட்க வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ரூ. 11 கட்டணத்தில் ஆரம்பித்து ரூ. 1000-ஆக உயர்த்தி உள்ளார்.

ஜோதிடம் பார்க்க வரும் பெண்களின் மனநிலையை அவர்களிடம் பேச்சு கொடுத்து அறிவார். அவர்கள் குடும்ப தாம்பத்யத்தில் திருப்தி இல்லாமல் இருப்பது தெரிய வந்தால் முதல் வேளையாக அவர்களுக்கு பாலுணர்வை தூண்டும் விதமாக நடந்து கொண்டு தனது பள்ளியறைக்கு கூட்டிச் சென்று “சாமி உங்களுக்கு மன்மதன் மூலம் மகிழ்ச்சி தர போகிறார்” என்று கூறி மயக்கி அவர்களுடன் உல்லாசமாக இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் ஏராளமான பெண்கள் இவர் வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்துள்ளனர். அவர்களிடம் ஒவ்வொரு முறையும் ரூ. 1000 முதல் ரூ. 3 ஆயிரம் வரை வாங்கி ஏமாற்றி உள்ளார். திருமணமான பெண்களிடம் மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்வார்.

இளம் பெண்களிடம் சில்மிஷத்துடன் நிறுத்திக் கொள்வார். ஒரு வேளை எல்லை மீறினால் கற்பழிப்பு வழக்கில் உள்ளே போய்விடுவோம் என்று உஷாராக இருந்துள்ளார். தன்னிடம் வந்து சென்ற பெண்கள் பற்றிய விஷயங்களையும் அவர்களிடம் வசூலித்த தொகைகளையும் டைரியில் முகவரியுடன் குறிப்பிட்டு வைத்துள்ளார்.

யார் -யாருடன் உடலுறவு வைத்தாரோ அவர்களது பெயரில் சிகப்பு நட்சத்திர குறியீட்டை அடையாளமாக குறித்துள்ளார். தினமும் வி.டி.ஈஸ்வரனை பார்க்க குறைந்த பட்சம் 6 பேர் முதல் 12 பேர் வரை வந்து சென்றுள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் அதிகபட்சமாக 1500-க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர்.

இவர்களில் 1200-க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்களில் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் பெயர்களில் சிகப்பு நட்சத்திர குறியீடு போட்டு வைத்துள்ளார். பெண்களிடம் முதலில் தன்னை ஒரு சித்தர் என்று கூறுவார். தான் ஆண்மை சக்தி மிக்கவன். நாளை என்ன நடக்கும் என்பதை அறியும் 7-வது அறிவு என்னிடம் உள்ளது என்று கூறியபடியே பெண்களின் அங்கங்களை அவர் வர்ணித்து செக்ஸ் ஆசையை தூண்டுவார்.

யாரையும் வற்புறுத்தி செக்ஸ் கொள்ள விரும்புவதில்லை. அவர்களது மனதை கெடுத்து அவர்களுக்கு தன்னிடம் உள்ள காதல் வலி (லவ் பெயின்) என்ற ஆபாச சி.டி.யை போட்டு காட்டுவார். அவர்களுடன் அமர்ந்து அதை பார்த்து அவர்களின் உணர்ச்சியை மேலும் தூண்டி தனது இச்சையை தீர்த்து கொள்வார்.

எந்த பெண்களாவது இங்கு நடப்பதை வெளியில் சொன்னால் பில்லி, சூனியம் வைத்து விடுவேன் பிறகு கைகள் செயல் இழந்து ரத்தம் கக்கி செத்து விடுவீர்கள் என்று மிரட்டி உள்ளார். இதனால் யாரும் போலீசில் புகார் செய்யாமல் இருந்துள்ளனர். நாளொன்றுக்கு ரூ. 12 ஆயிரம் வரை சம்பாதிப்பதாகவும் அமெரிக்கா பல்கலைக்கழகம் தனக்கு டாக்டர் பட்டம் வழங்கி உள்ளதாகவும் கூறி கோர்ட் ஷூட் போட்டுக் கொண்டும் ஒரு சில வசதி படைத்த பெண்களிடமும் கைவரிசை காட்டி உள்ளார்.

செய்வினை எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். டி.வி.க்களில் வசிய ஆலோசனை வழங்குவதாக கூறியே பல பெண்களை வெளியூர்களில் இருந்து தன்னை தேடி வரவழைத்துள்ளார். அதன்படி காதலனை வசியபடுத்த மை தருவதாக கூறி ஏராளமான பெண்களிடம் எல்லை மீறியுள்ளார்.

ஒரு சில பெண்களுக்கு அல்வாவில் கஞ்சா வைத்து கொடுத்து “செக்ஸ்” அடிமையாக வைத்துள்ளார். பொள்ளாச்சி ராணி, சேலம் குருவம்மாள், திருப்பூர் சவிதா உள்ளிட்ட 12 பெண்களை நிரந்தரமாக வைத்து செக்ஸ் அனுபவித்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்தால் அவர்களது பெயர்கள் ரகசியமாக வைக்கப்படும்.வி.டி.ஈஸ்வரன் தன்னுடன் தொடர்பு வைத்துள்ள பெண்களை ஆபாச படம் எடுத்தாரா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி : http://www.thedipaar.com/news/news.php?id=௨௩௭௬௩


வெள்ளி, 26 நவம்பர், 2010

155 சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு ஏழு ஆண்டு சிறை

பெர்லின்,நவ.27:பாலகர்களை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் கத்தோலிக்க பாதிரியாருக்கு ஜெர்மன் நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

155 சிறுவர்களை இவர் பாலியல் கொடுமைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 50 வயது பாதிரியாரான இவர் காஸ்ஸல் நகரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்தார்.

நீதிமன்றத்தில் இவர் 155 சிறுவர்களை பாலியல் கொடுமைகள் செய்ததை மறுத்தார் ஆனால் 1992-2003 காலக்கட்டத்தில் தனக்கு உதவிச்செய்த ஆறு சிறுவர்களுக்கு பாலியல் கொடுமை இழைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டைத் தொடர்ந்து கடந்த மே மாதம் மதரீதியான பணிகளிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். ஜூன் மாதம் வரை கஸ்டடியிலிருந்த இவரின் பாதிரியார் பதவியை கத்தோலிக்க சபை ரத்துச் செய்துள்ளது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

செவ்வாய், 23 நவம்பர், 2010

"செவன்த் டே அட்வென்டிஸ்ட்" -வெளிநாட்டிலிருந்து வரும் நிதியில் முறைகேடு

ஓசூர் : ஓசூர் "செவன்த் டே அட்வென்டிஸ்ட்" கிறிஸ்தவ திருச்சபையில், வெளிநாட்டிலிருந்து வரும் நிதியில் முறைகேடு நடப்பதாகக் கூறி ஓசூர் தாசில்தார் அலுவலகம் முன் போராட்டம் நடந்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது

ஓசூர் அடுத்த மத்திகிரி கூட்டு ரோட்டில், "செவன்த் டே அட்வென்டிஸ்ட்' திருச்சபைக்கான தென் ஆசியாவின் தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு தற்போது இந்தியாவுக்கான திருச்சபை நிர்வாக உறுப்பினர் தேர்தல், நேற்று முன்தினம் முதல் துவங்கி நடக்கிறது. தேர்தல் பணிகளை பார்வையிடவும், கூடுதல் நன்கொடை நிதியுதவி வழங்குவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யவும், "செவன்த் டே அட்வென்டிஸ்ட்' திருச்சபையின் சர்வதேச தலைவர் வில்சன், அமெரிக்காவில் இருந்து நேற்று முன்தினம் ஓசூர் வந்தார். நேற்று, "செவன்த் டே அட்வென்டிஸ்ட்' நிர்வாகத்தில் ஒரு தரப்பைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள், ஓசூர் தாசில்தார் அலுவலகம் முன் திருச்சபை தேர்தலை கண்டித்தும், வெளிநாட்டில் இருந்து வரும் பல கோடி ரூபாய் நிதியில் முறைகேடு நடப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"செவன்த் டே அட்வென்டிஸ்ட்' நிர்வாக உறுப்பினர் வேதமுத்து தலைமை வகித்தார். "செவன்த் டே' கல்வி நிறுவனங்களில் நடக்கும் முறைகேடுகளை தமிழக அரசு தடுக்க வேண்டும்; பாரபட்சமாக நடக்கும் நிர்வாகிகள் தேர்தலை நிறுத்த வேண்டும்' என கோஷம் எழுப்பினர்.

நன்றி : தினமலர் - (18-11-1010)

ஞாயிறு, 21 நவம்பர், 2010

ஆண் விபச்சாரிகள் ஆணுறைகளைப் பயன்படுத்தலாம்-போப் 16ம் பெனடிக்ட்

Pope Benedict XVI


ஆணுறைகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான நிலையைக் கொண்டுள்ள போப் 16ம் பெனடிக்ட், விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஆணுறைகளின் பயன்பாட்டுக்கு எதிரான நிலையைக் கொண்டுள்ளது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாட்டிகன். இது ஐ.நா, ஐரோப்பிய நாடுகள், எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரக் குழுக்களின் கண்டனத்தை சம்பாதித்தது.

குறிப்பாக ஆணுறைகளுக்கு எதிரான நிலையை எடுத்துள்ள போப்பாண்டவருக்கு எதிரான விமர்சனங்களும் வலுத்தபடி உள்ளன. ஆணுறைகள் குறித்து போப்பாண்டவர் முன்பு ஒருமுறை கூறுகையில், ஆணுறைகளை கொடுப்பதன் மூலம் எய்ட்ஸையும், எச்ஐவி பரவலையும் தடுத்து நிறுத்தி விட முடியாது. மாறாக ஆணுறைகளால் நிலைமை மோசமாகத்தான் செய்யும் என்றார்.

இந்த நிலையில், திடீரென தற்போது ஆணுறைகளுக்கு ஆதரவான கருத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் போப்பாண்டவர். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண் விபச்சாரிகள் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.

ஜெர்மன் நாட்டு பத்திரிக்கையாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியின்போது இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.

செயற்கைக் கருத்தரித்தல் முறை என்பதால் ஆணுறைகளுக்கு எதிரான நிலையை வாட்டிகன் மேற்கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் பல தார முறை அமலில் இருப்பதாலும், பாதுகாப்பற்ற உடலுறவு அங்கு படு சாதாரணம் என்பதாலும் அங்குதான் உலகிலேயே அதிக அளவில் எய்ட்ஸ் தாக்குதல் உள்ளது.

ஆனால் ஆப்பிரிக்காவில் ஆணுறைகளை கொடுப்பதன் மூலம் எய்ட்ஸைத் தடுத்து விட முடியாது என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து கடந்த ஆண்டு அவர் கூறுகையில், ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் அதிகம் இருக்கிறது என்பதற்காக ஆணுறைகளைக் கொடுத்து அதைத் தடுத்து விட முடியாது. அது சாத்தியமும் அல்ல. ஆணுறைகளைக் கொடுப்பதால் பிரச்சினை தீரும் என்று கூற முடியாது. மாறாக மோசமாகலாம் என்று கூறியிருந்தார் போப்பாண்டவர்.

புதன், 22 செப்டம்பர், 2010

நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே இஸ்லாத்துக்கு தாங்கள் புரிந்த சேவைக்காக

நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே இஸ்லாத்துக்கு தாங்கள் புரிந்த சேவைக்காக
(செப்டம்பர் 11 அன்று குரானை எரிக்க போவதாக சொன்னவர் இப்பாதிரியார்)





1. குரான் அதிக விற்பனையானது : அமேசான், உள்ளூர் மற்றும் வெளியூர் கடைகளிலும் இணையம் மூலமாகவும் குரான் அதிக அளவு விற்பனையானது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட குரானை மானுடம் சிந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.

2. வியாபரம் சூடு பிடித்தது : நிறைய குரான்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் விற்பனையானதின் மூலம் இஸ்லாமிய நிறுவனங்களின் உரிமையாளர்களூக்கு நல்ல லாபம் கிடைத்தது.

3. பள்ளிவாயில்களுக்கு அதிகமானோர் வருகை : உங்கள் சர்ச்சையால் இஸ்லாத்தை அறிந்து கொள்ள பள்ளி வாயில்களுக்கு அதிகமானோர் வருகை புரிந்ததின் மூலம் இஸ்லாத்தின் செய்தியை பெற்று கொன்டனர்.

4. இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது : இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.

5. கூகுளில் குரான் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன : நீங்கள் குரானை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குரான் குறித்து தேடுவோரின், இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

6. நூலகங்களில் குரான் காணாமல் போயின : எத்துணை பிரதிகள் வாங்கிய போதும் ஐரோப்பா, கனடா, அமெரிக்காவில் உள்ள நூலகங்களில் குரானை அனைவரும் எடுத்து கொண்டு போவதால் குரான் ஸ்டாக் இல்லாமல் போனது.

7. முஸ்லீம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் : மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பிரச்சாரத்தை தங்களின் வெறும் அறிக்கைகள் உண்டாக்கியதால் தஃவாவில் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.

8. முஸ்லீம்கள் உணர்வுகள் தூக்கத்திலிருந்து எழுந்தன : உலகெங்கும் வாழும் முஸ்லீம் சமூகம் உங்களின் உரைக்கு பின் தன் தூக்கத்தை கலைத்து குரானின் செய்தியை அறிந்து கொள்வதில், குரானுடனான தங்கள் உறவை புதுப்பித்து கொள்வதில், குரானின் செய்தியை பிற மக்களுக்கு அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டின.

9. நிறைய மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் : முன்பை காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்று கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

10. நீதியை நேசிப்பவர்களை ஒன்றிணைத்தது : இஸ்லாம், கிறிஸ்துவம், யூதர்கள், ஹிந்துக்கள், இறை மறுப்பாளர்கள் என அனைத்து பிரிவிலும் உள்ள நீதியை நேசிப்பவர்களை இக்கொடுமைகளை கண்டித்ததன் மூலம் ஒன்றிணைத்தது.

பாதிரியார் டெர்ரி ஜோன்ஸூக்கு ஒரு வேண்டுகோள் : நீங்கள் எரிக்க நினைத்த அக்குரானை திறந்த மனதோடு படியுங்கள். இயேசுவை பின்பற்றுபவராக இருந்தால் இயேசுவின் மார்க்கமான, நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா, முஹம்மது (ஸல்) போன்ற நபிமார்களின் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள்.

குரானோடு மோதியவர்கள் ஒன்று குரானால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அழிந்து போயிருக்கின்றார்கள். எது வேண்டும் என்று தீர்மானிப்பது உங்கள் கையில் தான் உள்ளது சகோதரரே

(Gain peace.org எனும் இணையத்தில் வெளியான மடலை தழுவி சில மாற்றங்களுடன் எழுதப்பட்டது)

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

கிறிஸ்தவ சகோதரர்களே பைபிலில் உள்ள இந்த கதையை உங்கல் மகளுக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா.......?

அப்பாவைக் கற்பழித்த மகள்கள்

ஆதியாகமம்(GENESIS)19-வது அதிகாரம் வசனம் 31 முதல் 38 முடிய
...
31. அப்பொழுது மூத்தவள் இளையவனைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்வயதானார். பூமியெங்கும் நடக்கிற முறைமயின் படியே நம்மோட சேர பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.

32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து, அவரோட சயனிப்போம் வா என்றாள்.

33. அப்படியே என்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் , தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோட சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள்.

35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய் அவனோட சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்ப்வதியானார்கள்.

37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள். அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியாருக்குத் தகப்பன்.

38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள். அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.

சனி, 19 ஜூன், 2010

கத்தோலிக்க திருச்சபை நிர்வகிக்கும் விபச்சார விடுதி.

கத்தோலிக்க திருச்சபை ஆன்மீகப் பணியை மட்டும் ஆற்றவில்லை. விபச்சார விடுதி கட்டிக் கொடுத்து சமூகத்திற்கு சேவை செய்துள்ளது! கரீபியன் கடல் பகுதியில் குரசாவோ தீவில் Campo Alegre (மகிழ்ச்சியான முகாம்) என்ற மிகப் பெரிய திறந்த வெளி விபச்சார விடுதி ஒன்றுள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்னர் நெதர்லாந்து அரசும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து உருவாக்கிய விபச்சார விடுதி இப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளை சேர்ந்த விபச்சாரிகள் ஐரோப்பாவுக்கு செல்லும் நுழைவாயிலாக பயன்படுத்தும் அந்த விடுதி அண்மையில் கண்காட்சி ஒன்றை நடத்தியது.அப்பொழுது குரசாவோ தீவில் வாழும் கத்தோலிக்க இளைஞர்கள் அதற்கெதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஆனால் தாம் அங்கம் வகிக்கும் அதே கத்தோலிக்க திருச்சபை தான் விபச்சார விடுதியை நிர்வகித்து வருகின்றது என்ற உண்மை அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

வெனிசுவேலா நாட்டிற்கு அருகில் அமைந்துள்ள மிகச் சிறிய குரசாவோ தீவு, நெதர்லாந்துக்கு சொந்தமானது. பெரும்பான்மையான தீவுவாசிகள் கறுப்பின மக்கள். கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு அழைத்து வரப்பட்ட முன்னாள் அடிமைகளின் வாரிசுகள். அவர்கள் மத்தியில் கத்தோலிக்க திருச்சபையின் செல்வாக்கு அதிகம். குரசாவோ மக்கள் நெதர்லாந்தில் உள்ள வெள்ளையர்களை விட அதிக மதப் பற்றாளர்கள். இன்று வேலையில்லாப் பிரச்சினையும், கூடவே வறுமையும் அதிகரித்து வரும் குரசாவோ, ஒரு காலத்தில் வளர்ச்சியடைந்த பொருளாதாரத்தைக் கொண்டிருந்தது. அதற்கு காரணம் ஷெல் நிறுவனம் கட்டிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை. ஆலையில் வேலை செய்வதற்கு பக்கத்து நாடுகளில் இருந்தெல்லாம் பல தொழிலாளர்கள் முண்டியடித்துக் கொண்டு வந்தார்கள். தீவு நெதர்லாந்துக்கு சொந்தமாக இருந்த போதிலும், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு வழங்கியது. இதனால் அமெரிக்க கடற்படை வீரர்களும் அந்த தீவில் நிலை கொண்டிருந்தார்கள்.

ஆலையில் வேலைக்கு வந்த வெளிநாட்டு தொழிலாளர்களும், பாதுகாப்புக்கு வந்த கடற்படை வீரர்களும் தமது பாலியல் இச்சையை பூர்த்தி செய்வதற்காக தீவில் வாழும் பெண்களை தேடிச் செல்ல விடாமல் தடுக்க வேண்டியிருந்தது. இதனால் (நெதர்லாந்து) அரசும், கத்தோலிக்க திருச்சபையும் சேர்ந்து Campo Alegre விபச்சார விடுதியை கட்டினார்கள். பால்வினை நோய்கள் பரவ விடாது தடுப்பதும் நோக்கமாக இருந்தது. "கத்தோலிக்க திருச்சபை அதிக தீமை பயக்கும் தோற்று நோயை எதிர்கொள்வதை விட, விபச்சார விடுதி பரவாயில்லை." என்று கருதியதாக இந்த தகவலை வெளிக் கொணர்ந்த Coks van Eysden எழுதியுள்ளார். அவர் நெதர்லாந்து கத்தோலிக்க திருக்கன்னியர் மடத்தை சேர்ந்தவர். "Verhandelingen" என்ற சஞ்சிகையில் இந்த தகவல் ஆதாரங்களுடன் வெளிவந்துள்ளது.

Campo Alegre யில் வேலை செய்வதற்கு, டொமினிக்கன் குடியரசு, கொலம்பியா ஆகிய நாடுகளில் இருந்து அழகிய பெண்கள், பாலியல் தொழிலாளிகளாக ஒப்பந்தம் செய்யப்பட்டனர். அந்த ஒப்பந்தம் அதிக பட்சம் மூன்று மாதத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும். பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் வாடிக்கையாளர்களுடன் நட்பு கொண்டு அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ செல்லவிடாமல் தடுக்கும் நோக்கிலேயே அவ்வாறு குறுகிய கால ஒப்பந்தம் போடப்பட்டது. ஆயினும் ஒரு முறை குரசாவோ தீவில் வேலை கிடைத்து விட்டால், அந்தப் பெண்களுக்கு ஐரோப்பிய விசா எடுப்பது இலகுவாக இருந்தது. (அந்த தீவு நெதர்லாந்து நாட்டின் கடல் கடந்த பிரதேசம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.) இதனால் பெருமளவு கொலம்பிய பாலியல் தொழிலாளர்கள் நெதர்லாந்து விபச்சார விடுதிகளில் வந்து சேர்ந்தனர். கடந்த பத்தாண்டுகளாக நெதர்லாந்து அரசு எடுத்து வரும் கடுமையான குடிவரவு சட்டங்களின் காரணமாக அந்தப் பிரச்சினை கட்டுப்படுத்தப் பட்டது.

விபச்சார விடுதி குறித்து அங்கேயுள்ள கத்தோலிக்க திருச்சபை என்ன கூறுகின்றது? "திருமணத்திற்கு அப்பாலான உடலுறவை கத்தோலிக்க மதம் தடை செய்திருந்தாலும், நடைமுறை வேறாக உள்ளது. சமூகத்தில் விபச்சாரத்தை ஒழிக்க முடியாது. ஆனால் பெண்களை வற்புறுத்தி பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை, பணத்திற்காக பெண்களைக் கடத்துபவர்களை தடுக்க வேண்டியது அவசியம்." என்று நியாயம் கற்பித்தனர். Campo Alegre விபச்சார விடுதி குறித்து Frank Martinus Arion என்ற குரசாவாவை சேர்ந்த எழுத்தாளர் ஒரு நாவல் எழுதியுள்ளார். Dubbelspel (Double Game ) என்ற அவரது நாவல் முழுவதும் அந்த விபச்சார விடுதியை சுற்றி புனையப்பட்டுள்ளது. அந்த நாவலில் ஏதாவது உண்மையிருக்கலாம் என்று சந்தேகித்த ஊடகவியலாளர் ஒருவர் மேற்கொண்டு ஆராய்ந்துள்ளார். அதன் பின்னரே கத்தோலிக்க திருச்சபையின் இரட்டை வேடமும் அம்பலத்திற்கு வந்தது.

செவ்வாய், 15 ஜூன், 2010

ஓரினச்சேர்க்கையில் ஈடுபட முனைந்த பாதிரி கேமராவில் பதிவு

இத்தாலியை சேர்ந்த பாதிரி ஓருவர் இளைஞர் ஒருவரிடம் ஓரினச் சேர்க்கைக்காக அணுகியதை ஒரு தொலைக்காட்சி சேனல் ரகசியமாகப் பதிவுச் செய்துள்ளது. இதனையடுத்து அவர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதனை ANSA செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இத்தாலியில் மிலன் பகுதியிலுள்ள ஓர் இளைஞர் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு தொலைக்காட்சிச் சேனலில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கராவாகியோ (Caravaggio) என்ற பகுதியை சேர்ந்த 51 வயதுள்ள பாதிரியிடம் தான் தனது பிரச்சனைகளுக்காக ஆலோசனை கேட்கச் சென்றதாகவும், அந்த சமயத்தில் அவர் ஓரினச்சேர்க்கைக்காக தன்னை அழைத்ததாகவும் அந்த இளைஞர் தொலைக்காட்சியில் கூறினார்.

இதனையடுத்து அந்த தொலைக்காட்சி சேனல் ஓர் இளம் நடிகரை அவரிடம் சென்று ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் உள்ளது போல நடிக்கச் சொன்னது அத்தோடு அந்த நிகழ்வை கேமராவிலும் ரகசியமாக படம் பிடித்தது.

அந்த பாதிரி கடந்த காலங்களில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட அனுபவம் உண்டு என்று கூறினார். அத்தோடு அந்த இளம் நடிகரை பாதிரி முத்தம் இட முனைந்ததும் கேமராவில் பதிவாகியுள்ளது என்று ANSA செய்தி நிறுவனம் கூறுகின்றது.

இதனையடுத்து அந்த நிகழ்வு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, பாரதியாரிடம் இதற்கான விளக்கமும் கேட்கப்பட்டது.

"நான் அந்த இளைஞருக்கு உதவி செய்யத்தான் முனைந்தேன், எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை" என்று அவர் கூறியுள்ளார்.

இந்த நிகழ்ச்சி அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. ஆனால் அந்த செயலில் ஈடுபட்ட பாதிரி யார் என்று சொல்லப்படவில்லை.

ரோம் கத்தோலிக்க சபை அந்த பாதிரியாரின் மேலுள்ள குற்றச்சாட்டு தெளிவடையும் வரை அவரைத் தற்காலிகமாக பணி நீக்கம் செய்துள்ளது.
செய்தி ஆதாரம்:7 Days

திங்கள், 14 ஜூன், 2010

கத்தோலிக்க மதகுருமார்களின் பாலியல் துன்புறுத்தல்: மன்னிக்குமாறு போப் கெஞ்சல்

கத்தோலிக்க மதகுருமார்களின் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களுக்காக அவர்களை மன்னிக்குமாறு கடவுளிடமும், பாதிக்கப்பட்ட குழந்தைகளிடமும் கெஞ்சுவதாக கத்தோலிக்க மதத் தலைவர் போப் 16வது பெனடிக்ட் கூறியுள்ளார்.

இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் கத்தோலிக்க திருச்சபை பார்த்துக் கொள்ளும் என்றும் போப் உறுதி அளித்துள்ளார்.

வாடிகன் நகரில் சுமார் 15 ஆயிரம் பாதிரியார்கள் பங்கேற்ற நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய போப் 16வது பெனடிக்ட், பாதிரியார்களுக்கான ஆண்டு விழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், இந்த விழா, சில பாதிரியார்களின் பாவங்கள், இளம் சிறார்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததால் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்த பாவத்திற்காக கடவுளிடமும், பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோரி கெஞ்சுவதாக தெரிவித்த அவர், இது போன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படும் என்றார்.

பாதிரியார்களாக வருபவர்களை தேர்வு செய்வதற்கு இனி கடுமையான முறைகள் பின்பற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளில் ஏராளமான குழந்தைகள் பாதிரியார்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட செய்திகள் வெளியானது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 8 ஜூன், 2010

ஜட்கா ஹராமானது! ஹலால் மாமிசம் உண்ண வாங்க!

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

தமிழ்ஹிந்து தளத்தில் ஜட்கா என்ற உயிர்பலியிடும் முறைக்கு வரவேற்பு அளித்து இஸ்லாமியர்கள் உண்ணும் ஹலால் மாமிசத்தை இகழ்ந்து பேசுகிறார்கள் எனவே தமிழ்ஹிந்து சகோதரர்களுக்கு ஜட்கா பற்றிய உண்மையை அறியச் செய்த பதிலளிக்கிறோம்!

ஜட்கா என்பது என்ன?

ஜட்கா (Jhatka) என்ற சொல் சமஸ்கிருத மொழியிலிருந்து வந்தது இதற்கு கொல்வது என்று பெயர். ஜட்கா என்ற பெயரை வடமாநிலத்தவர்கள் சட்கா (Chatka) என்றும் அழைப்பர்.

ஜட்கா முறைப்படி எவ்வாறு பலியிடுகிறார்கள்?

ஒரு பலியிடக்கூடிய பிராணியை ஒரு இடத்தில் கட்டி வைத்து விட்டு அந்த பிராணியின் கழுத்தை நோக்கி ஓங்கி ஒரே அடியாக கூர்மையான கத்தி, வால் மற்றும் கோடாரியால் வெட்டுவதுதான் ஜட்கா எனப்படு வதாகும். ஒரு பிராணியை இவ்வாறு வெட்டுவது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.


தமிழ்ஹிந்து என்ற தளத்தில் இவ்வாறு கூறுகிறார்கள்: ஹலால் முறைப்படி வெட்டப்பட்ட மிருகத்தில் ரத்தம் இருப்பதில்லை. ரத்தம் வடிய விடப்பட்டு விடுகிறது. இந்த கறி சுவையற்றதாக ஆனாலும், மென்மையாக ஆகிவிடுவதால், இந்த கறியை பல இந்துக்கள் வாங்கி உண்கின்றனர். அதனால், அந்த துடிக்க துடிக்க கொல்லப்பட்ட மிருகத்தின் துயரத்துக்கு பொறுப்பாளியாகவும் ஆகி விடுகின்றனர். ஆனால் இவர்களின் வாதம் அடிப்படை ஆதாரமற்றதாகும் மேலும் ஜட்கா முறையில் பிராணியின் மரணம் எவ்வாறு ஏற்படுகிறது? என்பதை கவனிக்கவும்!

பலி பிராணியின் கழுத்தை ஓங்கி வெட்டுவதால் அந்த பிராணியின் தலை முழுவதுமாக வெட்டப்பட்டு கீழே விழுந்து விடுகிறது. இதனால் மூளை செயலிழந்துவிடுகிறது மேலும் மூளைக்கும் உடலுக்கும் உள்ள உறவு துண்டிக்கப்பட்டு அந்த பிராணியின் உடலில் ஓடிக்கொண்டிருக்கும் இரத்த ஓட்டம் ஸ்தம்பிக்கப்பட்டு ஆங்காங்கே நின்றுவிடுகிறது. இதனால் அந்த பிராணியின் இரத்தில் உள்ள நோய்க்கிருமிகள் வெளியேற வழியின்றி மாமிசத்தில் தங்கிவிடுகிறது. நோய்க்கிருமிகள் கலந்த மாமிசத்தை உண்பதில் ஏனோ இவர்களுக்கு இவ்வளவு மகிழ்ச்சி!


ஜட்கா முறையும் சீக்கியர்களின் ஈனச் செயலும்


ஜட்கா முறையில் ஒரு பலி பிராணியை கொல்வது சீக்கியர்களின் விருப்பமான நடவடிக்கையாகும் ஏனெனில் சீக்கிய மதம் இஸ்லாமிய மார்க்கத்தின் போதனைகளை எதிர்க்கும் மதமாகும். இந்த சீக்கிய மதவாதிகள் இஸ்லாம் எதை தடுக்கிறதோ அதை செய்து காட்டும் திறமைசாலிகள் அந்த அளவுக்கு அவர்களின் மத போதகர்களால் மூலைச் சலவை செய்யப்பட்டவர்கள்.

சீக்கியர்களின் வீரதீர விளையாட்டுக்களில் ஜட்கா என்பதும் ஒன்றாகும் இவர்கள் பலி பிராணியை மக்கள் நிறைந்த கூட்டத்திற்கு நடுவே நிற்க வைத்து அதன் பின்னால் நின்று ஆரவாரமிட்டு அந்த பலி பிராணி பயந்து நடுங்க வேண்டும் இப்படிப்பட்ட சித்திரவதைக்கு பின்னர் ஒரே வெட்டு தலையும் உடலும் இரண்டாக பிரிந்துவிடும் இவ்வாறு பலி பிராணியை வெட்டுவது சீக்கியர்களின் வர்மக்கலையாம்!


சீக்கியர்களின் முட்டாள்தனம்!

சீக்கியர்கள் இஸ்லாமிய முறைப்படி ஹலாலான மாமிசத்தை உண்பதால் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பாவத்திற்கு ஆளாகிறார்களாம் காரணம் நாம் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆடு வெட்டுகிறோமாம்! எனவேதான் அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்து வெட்டப்படும் ஹலால் மாமிசத்தை இவர்கள் விரும்புவதில்லையாம்! எனவேதான் ஜட்கா முறையில் இவர்கள் பலிகொடுக்கும் போது Sat Sri Akaal” (சாத்திரிகால்) என்ற போர் முழக்கமிட்டு பலியிடுகிறார்கள்! ஆடு வெட்ட போர் முழக்கமா? என்ன வேடிக்கை இது!


சீக்கிய மதத்தில் இரு பிரிவுகள் உள்ளன அதில் ஒரு பிரிவினர் மட்டும்தான் ஜட்கா முறையில் அறுத்த மாமிசத்தை உட்கொள்கிறார்கள்! மேலும் இன்றொரு சீக்கிய பிரிவினர் அசைவ உணவை வெறுக்கிறார்கள். குறிப்பாக முக்கிய பிரதிநிதிகளான SGPC (SHIROMANI GURDWARA PARBANDHAK COMMITTEE) அதாவது சிரோன்மனி குருத்துவாரா பிரபந்தக் கமீட்டியும், தம்தாமி தக்சால் (Damdami Taksal) என்ற அமைப்பும் அசைவ உணவையும் ஜட்கா முறையையும் கடுமையாக எதிர்க்கிறார்கள் மேலும் இவர்களின் கூற்றுப்படி தங்களுடைய எந்த சீக்கிய குருவும் ஜட்கா முறையை ஆதரிக்கவில்லை என்று குரல் எழுப்புகிறார்கள்.


பொற்கோவில் என்று பரவலாக பேசப்படும் குருத்துவாராவில் ஜட்கா முறை நடைபெறுவதில்லை மேலும் இந்த ஜட்கா முறையை பல்வேறு சீக்கிய அமைப்பகளும் வருடாவருடம் கண்டிக்கின்றன. ஆனால் இஸ்லாத்திற்கு எதிராக கலம் இறங்கக் கூடிய சில மாற்றுமத தீவிரவாதிகள் தான் இந்த ஜட்கா என்ற முறையை ஆதரிக்கின்றன மாறாக மாற்றமதத்தவர்களில் பெரும்பாலானோர் ஹலால் முறைப்படி வெட்டப்பட்ட இறைச்சி யைத்தான் புசிக்கின்றனர் இதிலிருந்தே ஜட்கா முறைக்கு மாற்று மத்தவர்களிடம் செல்வாக்கு இல்லை என்பது தெளிவாக புரிகிறது!


ஜட்கா என்ற பழக்கம் பகவத் கீதைக்க எதிரானது

பகவத் கீதையில் உயிர் பலியிடுவதற்கு பல்வேறு தடைகள் இருக்கின்ற அப்படியிருக்க உயிர்பலி கொடுக்க ஜட்கா முறையை அனுமதிப்பது ஏன்?


ஒரு உயிரை துடிக்க துடிக்க கொல்வதும் அதன் கஷ்டத்தை அதிகரிப்பதும் தவறானது என்றும் ஒரு மிருகம் மெல்ல மெல்ல துடிக்க துடிக்க கொல்லப்படுகிறது என்றும் தமிழ்ஹிந்து என்ற இணையதளத்தில் செய்தி வெளியிடுகிறார்கள் ஆனால் இவர்கள் ஜட்கா முறையில் நடைபெறும் அக்கிரமங்களை மூடிமறைத்துவிடுகிறார்கள் இதோ ஹிந்துக்களின் ஜட்கா முறையில் உயிர் எவ்வாறு சித்ரவதை செய்யப்படுகிறது என்பதை சற்று கேளுங்கள்!


ஜட்கா கொடுப்பதற்கு முன் பலி பிராணியின் Testicles எனப்படும் இந்திரிய விதைகள் அறுக்கப்படுகின்றன அந்த பலி பிராணி துடிக்கிறது இதற்கு இவர்களின் வேத புராணங்களில் ஆதாரம் உள்ளது மற்ற வேத புராணங்களில் உள்ள சமஸ்கிருத சுலோகங்களை படியுங்கள்!


விருஷ்னிக மேஷ சம்பந்தா க்ரஹீ

(Vrishanika mesha sambanda grahee)

முக்தைக மேஷ ஜீவோத சாஹி

(Muktaika meshaha jeevoda sahee)



மேஷம் எனப்படும் ஜட்கா கொடுக்கும் போது உயிருள்ள ஆட்டின் விந்து விதைகளை அறுக்க இந்த சுலோகம் வலியுறுத்து கிறதாம்! இந்த வேத சுலோகங்களை இந்த தமிழ்ஹிந்து மறுக்குமா?


கோழியாக இருந்தால் அதன் தலையை கதவின் துவாரத்தில் இட்டு நசுக்குகிறார்கள்

காளியம்மண் பண்டிகைகளின் போதும் சுடுகாட்டு கொல்லி என்ற விழாவின் போதும் ஆடு, கோழி இவைகளை பலி பிராணியாக நேர்ச்சை செய்து உயிரோடு இந்த மிருகங்களை பற்களால் கடித்து கொல்கிறார்கள்!


இஸ்லாமிய முறைப்படி ஹலாலான மாமிசத்தை உண்ண அருள்மறையின் வசனங்களை இந்த தமிழ்ஹிந்து இணைய தளவாதிகளிடம் இங்கிருந்தே சமர்பிக்கிறோம் இனியாவது இவர்கள் இஸ்லாத்தை சிந்தித்து நேர்வழிக்கு வர முயலட்டும்!

மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் – நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் 2:168)


அல்லாஹ் உங்களுக்கு அனுமதியளித்துள்ள (ஹலாலான) நல்ல பொருட்களையே புசியுங்கள்;. நீங்கள் ஈமான் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 5:88)

ஈமான் கொண்டு, நற்கருமங்கள் செய்பவர்கள் (எதிர்காலத்தில்) தங்களைப் (பாவத்திலிருந்து) காத்துக் கொண்டும், ஈமான் கொண்டும், மேலும் நற்கருமங்கள் செய்து கொண்டும், (விலக்கப்பட்டவற்றை விட்டுத்) தங்களைப்(பின்னரும்) பாதுகாத்துக் கொண்டும், ஈமானில் உறுதியாக இருந்து கொண்டும், மேலும் (அல்லாஹ்வுக்கு) அஞ்சியவர்களாக அழகிய நன்மைகளைச் செய்து வருவார்களானால், சென்ற காலத்தில் (இவ்விதிமுறைகள் வருமுன்) தடுக்கப்பட்டவற்றை அவர்கள் புசித்து விட்டது குறித்து அவர்கள் மீது குற்றம் ஏற்படாது. நன்மை செய்கிறவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். (அல்குர்ஆன்5:93)

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக ஆக்கிருக்கிறான்;. ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் – வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்2:173)

இஸ்லாத்திற்குள் வாருங்கள்! தமிழ்ஹிந்து சகோதரர்களுக்கு இஸ்லாத்தின் அழைப்பிதழ் இனிதே விடப்பட்டுள்ளது! அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழிகாட்டுவானாக!

அல்ஹம்துலில்லாஹ்
thanks to http://islamicparadise.wordpress.com

சனி, 8 ஆகஸ்ட், 2009

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் - பாகம் 5

பைபிளின் முதல் புத்தகமான ஆதியாகமத்தில் இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைக்கப்பட்டது பற்றி கூறப்படுகின்றது. அவற்றிலும் ஏராளமான முரண்பாடுகளும் குழப்பங்களும், எதார்த்தத்திற்கு மாற்றமான செய்திகளும், விஞ்ஞானத்திற்கு முரனான செய்திகளும் மலிந்து காணப்படுகின்றது. அவற்றில் சில முரண்பாடுகள் இதோ:


முரண்பாடு 20:

முதலில் படைக்கப்பட்டது மனிதர்களா? அல்லது தாவரங்களா?

ஆதியாகமம் 1 ம் அதிகாரத்தில் மனிதர்களையும் தாவரங்களையும் படைத்தது பற்றி கூறும்பொழுது முதலில் தாவரங்களே படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே மனிதர்கள் படைக்கப்பட்டதாகவும் கூறுகின்றது.

அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்: அது அப்படியே ஆயிற்று. பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.- ஆதியாகமம் 1:11-13

இந்த வசனங்களில் மூன்றாம் நாளிலேயே தாவரங்கள் படைக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது. அடுத்து மனிதன் எப்பொழுது படைக்கப்பட்டான் என்பதை பின்வரும் வசனங்களில் குறிப்பிடப்படுகின்றது:

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பின்னும் தேவன்: இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள் எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும் ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார் அது அப்படியே ஆயிற்று. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:27-31

இந்த வசனங்களில் மிகத் தெளிவாக அறாம் நாளில் தான் மனிதர்கள் படைக்கப்பட்டதாகவும், அதற்கு 3 நாட்களுக்கு முன்பே தாவரங்கள் படைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் இதற்கு நேர் மாற்றமாக இதே ஆதியாகமத்தின் 2 ம் அதிகாரத்தில் இந்த வசனங்களுக்கு நேர் முரணான செய்தி காணப்படுவதை பாருங்கள்:

தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே. நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும் முளைக்கவில்லை ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை நிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். - ஆதியாகமம் 2:4-7

இந்த வசனங்களில் கர்த்தர் மனிதனைப் படைத்தது பற்றி கூறப்படுகின்றது. ஆனால் அச்சமயம் வரை புற்பூண்டுகளோ தவாரங்களோ பூமியில் முளைக்கவில்லை என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் 3ம் நாளிலே கர்த்தர் பூமியில் புற்பூண்டுகளை முளைபிக்கச் செய்ததாகவும் அதன் பின் ஆறாம் நாளில் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. இதில் எந்த அறிவிப்பு சரியானது? முதலில் படைக்கப்பட்டது எது? ஒரே ஆகாமத்தில் அதுவும் கர்த்தரின் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகத்தில் இப்படிப்பட்ட முரண்பாடுகள் வரலாமா?

முரண்பாடு 21:

ஏவாள் படைக்கப்பட்டது எப்போது?

ஆதியாகமத்தில் கர்த்தர் மனிதனைப் படைத்ததைப் பற்றி பின்வருமாறு கூறப்படுகின்றது:

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார். ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:27

இந்த வசனத்தில் கர்த்தர் மனிதனைப் படைத்ததாகவும், அப்போதே ஆணையும் பெண்னையும் - இருவரையும் - படைத்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் அதே ஆதியாகமத்தின் 2:20ல் பின்வருமாறு கூறப்படுகின்றது.

அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவித காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான். ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. - ஆதியாகமம் 2:20

இந்த வசனத்தில் ஆதாம் படைக்கப்படும் வரை ஆதாமுக்கு துணையாக யாரும் படைக்கப்படவில்லை என்றும், அதன் பிறகே ஏவாள் படைக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது (மேலும் பார்க்க ஆதியாகமம் 2:21-25)

உன்மையில் ஏவாள் எப்போது படைக்கப்பட்டார்? ஒரே புத்தகத்திற்குள்ளேயே ஏன் இந்த முரண்பாடு? உன்மையில் கர்த்தரின் பரிசுத்த ஆவியின் ஏவுதலால் தான் எழுதப்பட்டது என்றால் இப்படி முரண்பாடு வருமா?

முரண்பாடு 22:

முதலில் படைக்கப்பட்டது மனிதர்களா? அல்லது மிருகங்களா?

தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார் தேவன் அது நல்லது என்று கண்டார். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக்கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். - ஆதியாகமம் 1:25-27

இந்த வசனங்களில் முதலில் மிருகங்கள் மற்றும் ஆகாயத்து பறவைகள் படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே மனிதன் படைக்கப்பட்டான் என்றும் கூறப்படுகின்றது. அதோடு கூடுதலாக அவற்றை ஆளும் சக்தியையும் மனிதனுக்கு கர்த்தர் கொடுத்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால், இதற்கு மாற்றமாக இதே ஆதியாகமத்தில் சொல்லப்படும் மற்றொரு செய்தியை பாருங்கள்:

பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. - ஆதியாகமம் 2:18-19

இந்த வசனங்களில் மனிதன் படைத்தபின்னர் தான் அனைத்து மிருகங்களும் ஆகாயத்துப் பறவைகளும் உண்டாக்கப்பட்டதாகவும், அந்த மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் பெயர் வைத்ததே ஆதாம் தான் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் மேலே நாம் எடுத்துக்காட்டிய வசனங்களில் மிருகங்களைப் படைத்ததற்குப் பின்னர் தான் மனிதன் படைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகின்றது. இதில் எந்த அறிவிப்பு சரியானது?

முரண்பாடு 23:

ஆகாயத்து பறவைகள் எதன் மூலம் படைக்கப்பட்டது ?

ஆகாயத்து பறவைகள் நீரிலிருந்து படைக்கப்பட்டதாக ஆதியாகமம் 1ம் அதிகாரம் கூறுகின்றது:

பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார். தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள் ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர்வாழும் ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப் பட்சிகளையும் சிருஷ்டித்தார் தேவன் அது நல்லது என்று கண்டார். - ஆதியாகமம் 1:20-21

ஆனால் இந்த வசனங்களுக்கு நேர் மாற்றமாக இதே ஆதியாகமத்தின் 2ம் அதிகாரத்தில் ஆகாயத்து பறவைகளும் இன்னும் சில உயிரினங்களையும மண்ணிலிருந்து படைத்ததாக கூறப்படுகின்றது:

தேவனாகிய கர்த்தர் வெளியின் சகல வித மிருகங்களையும், ஆகாயத்தின் சகல விதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார். அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. - ஆதியாகமம் 2:19

ஆகாயத்து பறவைகளும் இன்னபிற உயிரினங்களும் தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டதா? அல்லது மண்ணிலிருந்து படைக்கப்பட்டதா?

முரண்பாடு 24:

நட்சத்திரங்கள் படைக்கப்பட்டது எப்போது? பூமி படைக்கப்படுவதற்கு முன்பா அல்லது அதன் பிறகா?

முதலில் பூமி படைக்கப்பட்டது என்றும் அதன் பிறகே நட்சத்திரங்கள் படைக்கப்பட்து என்றும் ஆதியாகமம் கூறுகின்றது :


ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். - ஆதியாமம் 1:1

இதே ஆதியாகமத்தின் மற்றொரு இடத்தில் :

தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும், பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாயவிரிவிலே வைத்தார் தேவன் அது நல்லது என்று கண்டார். சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று. - ஆதியாகமம் 1:16-19

இந்த வசனங்களில் முதலில் பூமி படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னரே நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் - அதாவது பூமி படைக்கப்பட்டு 3 நாட்கள் கழித்து நான்காம் நாளில் தான் நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் இங்கே சொல்லப்படுகின்றது. ஆனால் யோபு என்ற புத்தகத்திலோ இதற்கு நேர் முரணான செய்தி பதிவுசெய்யப்பட்டுள்ளது:

நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி. அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு. அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லை வைத்தவர் யார்? அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே. - யோபு 38:4-7

இந்த வசனத்தில் நட்சத்திரங்கள் படைக்கப்பட்ட பின்னரே பூமி படைக்கப்பட்டதாகவும் அச்சமயம் விடியற்கால நட்சத்திரங்கள் ஏகமாயப்ப பாடியதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் மேலே சொல்லப்பட்டுள்ள ஆதியாகமத்தின் வசனங்களிலோ முதலில் பூமி படைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் மூன்று நாட்கள் கழித்து நான்காம் தினத்தன்றே நட்சத்திரங்கள் படைக்கப்பட்டதாகவும் சொல்லப்பட்டது? இதில் எந்த புத்தகம் சொல்வது சரியானது? முதலில் படைக்கப்பட்டது பூமியா அல்லது நட்சத்திரங்களா?


இறைவன் நாடினால் தொடரும்...

வெள்ளி, 10 ஜூலை, 2009

திருக்குர்ஆனில் சரித்திர தவறா?


திருக்குர்ஆனில் சரித்திர தவறா?

பைபிளில் உள்ளது போல் தீர்க்கதரிசிகளின் வரலாறுகளை புராணக் கதைகள் போன்று விரிவாக தொடர் அத்தியாயங்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்குமாயின், அது ஒரு நல்லுபதேசம் வழங்கும் இறைநூல் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு வெறும் ஒரு வரலாற்றுப் புத்தகமாக ஒதுங்கியிருந்திருக்கும்.

அகிலங்களின்ன இறைவனிடமிருந்து இது இறக்கப்பட்டது என்று பிரகடனம் செய்யும் ஒரே இறைநூல் திருக்குர்ஆன்! (26: 192) மானிடரும் ஜின் இனமும் ஒன்றிணைந்து முயற்சி செய்தாலும் இதற்குச் சமமான ஒரு நூலைக் கொண்டு வர இயலாது என்று அறைகூவல் விடுக்கும் ஒரே வேதம்! (2:23, 17:88) மாறுதல்களோ, முரண்பாடுகளோ தவறுகளோ அதனை நெருங்காது என்ற உத்தரவாதம் வழங்கப்பட்ட ஒரே வேதமும் திருக்குர்ஆன் மட்டுமே! (4:82, 15:9, 41:42)

அன்று முதல் இன்று வரை இறை மறுப்பாளர்கள் திருக்குர்ஆனை விமர்சித்து வந்த போதிலும் அவை எல்லாவற்றையும் கடந்து இன்றளவும் மேலோங்கி நிற்கும் சிகரமாக திருக்குர்ஆன் விளங்குகிறது. இறைவனின் அறைகூவலுக்கு எதிராக திருக்குர்ஆனைப் போன்று ஒரு நூலை உருவாக்க முயன்றவர்கள் இறுதியில் தங்கள் முயற்சியில் தோல்வி கண்டு இதற்கு முன் சரணடைந்ததே சரித்திரமாக உள்ளது.

அன்றைய இறை மறுப்பாளர்களைப் போன்று இன்றைய காலகட்டத்திலும் மேற்கத்திய, கீழைத்தேயத்தவரும் யூத கிறிஸ்தவ விமர்சகர்களும் திருக்குர்ஆன் மீது சில குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றன. அவற்றுள் ஒன்று தான் திருக்குர்ஆனில் சரித்திர தவறுகள் உள்ளன என்பதுவாகும். குறிப்பாக சில கிறிஸ்தவர்கள் இதை ஒரு பிரச்சாரமாக ஆக்கி கிறிஸ்தவத்தை வளர்துக்கொள்ள முயன்று வருகின்றனர். திருக்குர்ஆன் மீது அவர்களால் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றது என்பதுடன் அவர்களுக்கே எதிரான ஆதாரங்களாக அவை அமைந்துள்ளன என்பதை இத்தொடரில் நாம் நிரூபிப்போம் இன்ஷா அல்லாஹ்!

திருக்குர்ஆனில் பல வரலாற்றுத் தகவல்கள் காணப்படுகின்றன. ஆதி பிதா எனப்படும் ஆதம் (அலை) அவர்கள் முதற் கொண்டு ஒவ்வொரு கால கட்டத்திலும் பல்வேறு சமுதாயங்களுக்கு அனுப்பப்பட்ட இறைதூதர்கள் மற்றும் சான்றோர்களைப் பற்றிய வரலாற்றத் தகவல்கள் திருக்குர்ஆனில் உள்ளன. இத்தகைய வரலாறுகளைப் பொறுத்தவரை மக்களுக்கு ஒரு படிப்பினையாகவே அவை தேவைக்கு ஏற்றார் போல் தேவைப்பட்ட இடங்களில் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறதேயன்றி ஒரு வரலாற்றுப் புத்தகத்தைப் போன்று காலக் கிரம வரிசைப் படி சம்பவங்களை வரிசைப் படுத்திச் சொல்லவில்லை. காரணம் திருக்குர்ஆன் முழுக்க முழுக்க ஒரு வரலாற்றுப் புத்தகம் அல்ல. நன்மை தீமையைப் பிரித்தறிவித்து மக்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நல்லுபதேசமாகவும் அருளப்பட்ட வேதம்! திருக்குர்ஆனைப் பொறுத்த மட்டில் மக்கள் படிப்பினை பெறும் அளவுக்கு போதுமான வரலாற்று சம்பவங்கள் மிகத் தெளிவாகவும் முரண்பாடுகளின்றியும் குழப்பங்களின்றியும் விவரிக்கப்பட்டுள்ளன. திருக்குர்ஆனில் வரலாற்றுச் செய்திகள் என்ன நோக்கத்திற்காக விவரிக்கப்பட்டிருக்கின்றன என்பதைத் தெளிவு படுத்தும் ஏதேனும் சில வசனங்களைக் காண்க:

“நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன” (11:120)

நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் – இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர்” (12:3)

திட்டமாக நாம் உமக்கு முன்னர் தூதர்களை அனுப்பியிருக்கின்றோம்; அவர்களில் சிலருடைய வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம்; இன்னும் எவர்களுடைய வரலாற்றை உமக்குக் கூறவில்லையோ (அவர்களும்) அத்தூதர்களில் இருக்கின்றனர்” (40:78)

மேற்கண்ட வசனங்கள் நமக்கு தரும் செய்திகள்:

தன்னைப் போன்ற ஒரு தூதுப் பணியுடன் தனக்கு முன்னரும் இறைதூதர்கள் அனுப்பப்ட்டிருக்கின்றனர். தனக்கு ஏற்பட்டது போன்ற இன்னல்கள் அவர்களுக்கும் ஏற்பட்டது என்பதை விளக்குவதன் மூலம் இறைதூதரின் உள்ளத்தைத் திடப்படுத்தவும், இறை நம்பிக்கையாளர்கள் வரலாற்றுச் செய்திகளின் மூலம் படிப்பினையும் நல்லுபதேசமும் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், அவர்களின் உள்ளம் அதனால் பண்பட வேண்டும் என்ற நோக்கிலும் தான் வரலாறுகள் திருக்குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ளது.

திருக்குர்ஆனில் விவரிக்கப்பட்டுள்ள எந்த வரலாற்றுச் செய்திகள் குறித்தும் முஹம்மத் (ஸல்) அவர்கள் முன்பு அறிந்திருக்கவில்லை.

மனித சமூகத்துக்கு பல்வேறு காலகட்டங்களில் ஏராளமான இறைதூதர்க்ள அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அளனவரின் வரலாறும் திருக்குர்ஆனில் சொல்லப்படவில்லை. அவர்களில் சிலரது வரலாறுகள் மட்டுமே கூறப்பட்டுள்ளது.

கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான குறிப்புகள்:

பைபிளில் உள்ளது போல் தீர்க்கதரிசிகளின் வரலாறுகளை புராணக் கதைகள் போன்று விரிவாக தொடர் அத்தியாயங்களில் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்குமாயின், அது ஒரு நல்லுபதேசம் வழங்கும் இறைநூல் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு வெறும் ஒரு வரலாற்றுப் புத்தகமாக ஒதுங்கியிருந்திருக்கும்.

திருக்குர்ஆன் வசனங்கள் ஓதுவதற்கும் மனனம் செய்வதற்கும் எளிமையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஐவேளைத் தெழுகை தொழுகையிலும், மற்ற நேரங்களிலும் கோடிக்கணக்கான மக்களால் திருக்குர்ஆன் ஓதப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதுவே பைபிளைப் போன்று ஒரு கதை சொல்லும் பாங்கில் இருந்திருந்தால் அது மிகப் பெரிய புத்தகமாகி ஓதுவதற்கும் மனனமிடுவதற்கும் கடினமாகி திருக்குர்ஆன் ஏட்டளவில் ஒதுங்கியிருக்கும். கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நடமாடும் குர்ஆன்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்க. இது போன்று பைபிளை முழுக்க மனப்பாடமிட்டவர்கள் என்று உலகில் எத்தனை பேரைக் காட்ட முடியும்?

திருக்குர்ஆனில் ஒரே இறைதூதரைப் பற்றிய வரலாறுகள் பல அத்தியாயங்களில் தேவைக்கு ஏற்ற இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவை நினைவில் நிற்பதற்கு எளிதாகவும் இறைநம்பிக்கையை அதிகரிக்கவும் தோதுவாக இருக்கிறது.

அல்லாஹ் மிக அழகான விஷயங்களை வேதமாக இறக்கியருளினான்; (இவை முரண்பாடில்லாமல்) ஒன்றுகொன்று ஒப்பான (முதஷாபிஹ் ஆன)தாகவும், (மனதில் பதியுமாறு) திரும்பத் திரும்பக் கூறப்படுவதாகவும் இருக்கின்றன தங்கள் இறைவனுக்கு எவர்கள் அஞ்சுகிறார்களோ அவர்களுடைய தொலி(களின் உரோமக்கால்)கள் (இவற்றை கேட்கும் போது) சிலிர்த்து – விடுகின்றன. பிறகு, அவர்களுடைய தொலிகளும், இருதயங்களும் அல்லாஹ்வின் தியானத்தில் இளகுகின்றன – இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் – இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை” (39:23)

பைபிளில் இடம் பெறாத இறைதூதர்களின் வரலாறுகளும், பைபிள் குறிப்பிட்டு்ள்ள இறைதூதர்கள் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் பைபிள் குறிப்பிடாத நிகழ்ச்சிகளும் திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது இது எல்லாவற்றையும் அறிந்த இறைவனால் அருளப்பட்ட இறைநூல் என்பதற்கான சான்று ஆகும்.

பைபிள் என்பது தீர்க்கதரிசிகளின் வரலாற்றை பிற்கால எழுத்தர்களால் தங்களுக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட நூற்களின் தொகுப்பு ஆகும். உதாரணத்திற்கு உபாகமம் 34 ஆம் அத்தியாயம் மோசேயின் வரலாறு பற்றிக்கூறும் போது மோவாப் என்ற தேசத்தில் அவர் இறந்ததாகவும் அவரது கல்லறை எங்குள்ளது என்பது பற்றி யாருக்கும் தெரியாது என்றும் கூறப்பட்டுள்ளது. மோசேக்கு இறக்கப்பட்டதாக கிறிஸ்தவர்கள் கூறும் தோராவின் ஒரு பகுதியாகக் கருதப்படும் இவ்வத்தியாயத்தில் மோசேவின் இறப்புச் செய்தியும் அவரது கல்லறையை யாரும் அறியவில்லை என்பது குறித்தும் வந்துள்ள செய்தி இது யாராலோ எழுதப்பட்டது என்பதற்கான சான்றாக உள்ளது. இது குறித்து கிறிஸ்தவ அறிஞர்களும் இதற்கு விளக்கம் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு ஏராளமான ஆசிரியர்களைக் கொண்டு பைபிள் தொகுக்கப்பட்டிருப்பதால் அதில் ஏராளமான முரண்பாடுகள் வந்துள்ளன.

என்றோ நடந்து முடிந்த சம்பவங்களைக் குறித்து அதற்கு நேரடி சாட்சியம் வகித்த ஒருவர் மூலம் திருக்குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக அது குறித்து எந்தத் தகவலையும் அறிந்திராத ஒருவர் மூலமே உலகம் அதைக் கேட்டது. அதிலும் முரண்பாடுகள் எதுவுமன்றி மிகவும் நேர்த்தியான தகவல்கள்! ஒரு கதை சொல்லும் பாங்கை விட “நீர் சொல்வீராக!” “நீர் ஓதிக் காட்டுவீராக!” நாம் விளக்கிக் காட்டுகிறோம்” என்பது போன்ற வார்த்தைப் பிரயோகங்களில் உள்ளத்தில் சிலிர்ப்பை ஏற்படுத்தும் வசன நடைகளில்! அதை உலகுக்கு அறிவித்தவரோ அகிலங்களின் இறைவனிடமிருந்து எனக்கு செய்திகள் வருகின்றது என்று கூறுகிறார்! அவ்வாறு வருவதாக அவர் கூறும் செய்திகளோ அற்புதமாகவும் நேர்த்தியாகவும், முரண்பாடுகளின்றியும், தெளிவாகவும், கேட்பவரின் உள்ளங்களை சிலிர்க்க வைப்பதாகவும் இருக்கின்றது. தனது நாற்பது வயது வரை அவரிலிருந்து வெளிப்படாத அற்புதங்கள் வெளிப்படுகின்றன! அரைக் குறித்து பொய்யர் என்றோ மோசடிக்காரர் என்றோ எந்த குற்றச்சாட்டும் அவரது சமூகத்தில் இல்லை. மாறாக தனது சமூகத்தில் மிகவும் நல்லவராகவும் கண்ணியம் மிக்கவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் இருக்கிறார். இந்நிலையில் தன்னைப் படைத்த இறைவனைக் குறித்து அவர் பொய்யுரைக்கிறார் என்று எங்ஙனம் கூற இயலும்? அவர் கூறும் செய்திகளில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்வதல்லவா அறிவுடைமை? இத்தகைய நடுநிலையான சிந்தனையின் மூலம் திருக்குர்ஆன் கூறும் வரலாற்றுச் செய்திகளை ஆராய்வோமானால் எல்லாம் அறிந்த இறைவனால் அருளப்பட்ட செய்திகளே இவை என்பதை விளங்கிக் கொள்ள இயலும்.

(நபியே!) நாம் வஹீ மூலம் உம் மீது இந்த குர்ஆனை அருள் செய்தது கொண்டு மிக அழகான வரலாற்றை உமக்கு நாம் கூறுகின்றோம் – இதற்குமுன் (இது குறித்து) ஏதம் அறியாதவர்களில் (ஒருவராய்) நீர் இருந்தீர். (12:3)

திருக்குர்ஆனின் சரித்திரத் தவறுகள் என எந்தெந்த செய்திகளை கிறிஸ்தவர்கள் மேற்கோள் காட்டுகிறார்களோ, அதே செய்திகள் கூட பைபிளை ஒப்பு நோக்கி ஆராயுமிடத்து திருக்குர்ஆனின் தனிச்சிறப்பையும்பும் ஒரு இறைநூலுக்கே உரிய அதன் கம்பீரத்தையும் பறைசாற்றி நிற்கிறது என்பது தான் அற்புதமான செய்தியாக உள்ளது. சரித்திரத் தவறுகள் என்ற கிறிஸ்தவர்களின் மேற்கோள்களையும் அதற்கான விளக்கங்களையும்தொடர்ந்து வரும் பதிவுகளில் காணலாம். இன்ஷா அல்லாஹ்!

திங்கள், 1 ஜூன், 2009

குர்ஆனில் பேசும் எறும்புகள்

நபிசுலைமானிடம் பேசிய எறும்பு27:16-19(نملة سليمان)

حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِي النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ

இறுதியாக அவர்கள் (எறும்புகள் நிறைந்த) எறும்புப் புற்றின் அருகே வந்தபோது, ''எறும்புகளே! உங்கள் குடியிருப்புக்களுக்குள் நுழையுங்கள்! சுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது என்று ஓரு எறும்பு கூறியது.'' (அல்குர்ஆன்:27:18)

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا

அது சொல்வதைக் கேட்டு சுலைமான் புன்னகை சிந்தி சிரித்தார் (அல்குர்ஆன்: 27:19) என்று அருள்மறை கூறுகிறது.

எறும்பு பேசியது:-

அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன் ''எறும்புகள் பேசியதாகவும்,அது கேட்டு பறவைகள், உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை) அவர்கள் சிரித்ததாகவும்'' இங்கே கூறப்படுகிறது.

அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமான எறும்புகள்; பேசியதையும், அதற்கொரு முக்கியத்துவம் அளித்தும் தனது வேதத்திருமறை யில் குறிப்பிடுவதாயின் அந்த அரிய படைப்பில் நிச்சயம் பல அதிசயங்கள் அமைந்திருக்கும் என ஆய்வு செய்தபோது நமக்குத் தெரியாத பல உண்மைகள் தெரியவருகின்றன. இப்போது நாம் அதுபற்றி விரிவாகக் காண்போம்.

எறும்பும் அதன் வகைகளும்

எறும்பு ஒருகுழுவாக வாழும் ஒரு பூச்சியனமாகும். அது உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. அண்மையில் இதுபற்றி ஆய்வு செய்த அறிவியலார் ''உலகில் 11,880 வகையான எறும்பினங்கள் உள்ளதாகக் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர், இவை 90,000 க்கும் மேலிருக்கும் எனக்கூறுகிறார்.இவற்றில் பெரும்பாலானவை வெப்பமுள்ள நாடுகளில் தான் வாழ்கின்றன.

பாதை மாறாது திரும்பும் அதிசயம்

நாம் ஒரு பதிய ஊருக்கோ நாட்டிற்கோ செல்லும் போது பாதைகளையும் இடங்களையும் தெரிந்து கொள்ள வரைபடமோ,வழிகாட்டியோ தேவப்படுகிறது.

அது போல இரை தேடச் செல்லும் உயிரினங்கள் பலமைல் தூரம் சென்று விட்டு தமது வசிப்பிடங் களுக்கு எப்படி திரும்பி வந்து சேருகின்றன என்பதை ஆராயும் போது நமக்கெல்லாம் வியப்பாக உள்ளன.ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒவ்வொரு புதுமையான ஏற்பாட்டையும் அறிவையும் அதனுள் அதைப் படைத்த நாயன் அமைத்துள்ளான். இங்கே அவன், எறும்புக்கு என்ன ஏற்பாட்டைச் செய்துள்ளான் எனபதைப் பார்ப்போம்.

துனீசியா நாட்டின் மத்திய தரைக் கடல் பகுதியில் வாழும் ஒருவகை கறுப்பு இன எறும்புகள் (
Black Aunts) பாலைவனத்தில் கூடுகள் அமைத்து வாழந்து வருகின்றன.

காலையில் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்கெல்லாம் வெப்பநிலை எழுபது டிகிரி சென்டி கிரேடு வரை உயரும் அந்த வெப்பநிலையில் உள்ள பகல் வேளையில் தனக்குத் தேவையான இரையைத்தேடி வீட்டைவிட்டு வெளியேறுகிறது.

அடிக்கடி நின்றும் திரும்பியும் வேகமாக ஊர்ந்து செல்லும் எறும்பு தனது கூட்டிலிருந்து 200 மீட்டர் (655 அடி) பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும் ஊர்ந்து வெகுதூரம் வரை சென்று விடுகின்;றன. பாதைகளை அறிவதற்கு அடையாளமாக அங்கே ஆறு,குளம்,குட்டை,ஏரி,மரம்,கட்டடம் என எதுவுமே இல்லை. அது தேடிய பருப்பொருட்களை சுமந்து கொண்டு என எந்தவகை அடையாளங்களும் இல்லாத பாலைவனத்தில் எப்படி துல்லியமாக தன் வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து வருகிறது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

எறும்புகளின் நீளம்,உயரம்,பருமன்,எடை இவைகளை கருத்தில் கொண்டு,அவைகள் பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித ஆற்றலோடு ஒப்பிடும்; போது அதே பாலைவனத்தில் 35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு மனிதன் பயணிப்பதற்கு சமமாகும். மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத இந்த அற்புதச் செயலை சாதாரண எறும்புகள் வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே! இது எப்படி ? என சிந்திதாலே தலை சுற்றுகிறது.

கண்களில் திசைகாட்டும் கருவி

அல்லாஹ் எறும்புகளுக்கு வழங்கியிருக்கும் தனிப்பட்ட உடலமைப்பே இந்த அரிய செயல்களுக்குக் காரணமாகும். எறும்புகளின் கண்களில் பிரத்தியேகமாக திசையை அறியக்கூடிய அற்புதமான ஒரு கருவியை இறைவன் பொருத்தியிருக்கிறான்.

அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள இந்த ஆற்றல் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட திசைகாட்டும் கருவியைவிட பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தது. இந்த சிறப்புமிகு அம்சத்தால் மனிதனால் உணரமுடியாத ஒருவகை கதிர்களை எறும்புகள் உணர்கின்றன. இந்த உணரும் கதிர்களால் வடக்கு,தெற்கு என திசைகளை சரியாக அறிந்து கொள்கின்றன. இவ்வாறு திசைகளை அறியும் எறும்புகள் தங்களது கூடுகளையும் தவறாமல் அடையாளம் கண்டு கொள்கின்றன. ஒளியின் குணநலன்களை மனிதன் அறிவதற்கு முன்னரே எறும்புகள் ஒளியைப்பற்றித் தெரிந்து கொண்டு அதனைப் பயன்படுத்திவருவது விந்தையிலும் விந்தையல்லவா? இது அல்லாஹ் வழங்கிய அற்புத ஆற்றல் அல்லவா?

நோய்கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல்

மனிதன் தன்னை நோய்கிருமிகளிலிருந்து தடுத்துக் கொள்வதைப்போல மற்றஉயிரினங்களும் தங்களை தற்காத்துக் கொள்ள சில தடுப்பு முறைகளைக் கையாளுகின்றன. அந்த வகையில் எறும்புகள் நோய்கிருமிகளை தடுக்க ஒரு வகை திராவகம் போன்ற திரவப் பொருளை உற்பத்திச் செய்கின்றன. இந்த திரவப் பொருளை தங்களின் உடலில் பரவச் செய்வதுடன் தங்களின் கூடுகளின் சுவர்களிலும் தடவுகின்றன. எறும்புகள் தங்களின் உடலை மட்டுமல்ல,தங்களது வசிப்பிடத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இதனை ஆராயும் போது எப்படிப்பட்ட பாதுகாப்பு முறையை இந்த அற்பமான எறும்பினத்தில் அல்லாஹ் அமைத்திருக்கிறான் எனபதை எண்ணி அவன் வல்லமையை உணர்ந்து அவனுக்கு ஒவ்வொரு உயிரினமும் தஸ்பீஹ் செய்த வண்ணமுள்ளன என வான்மறை குர்ஆன் கூறுவதை மனிதர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது மட்டுமா? இன்னும் எத்தனையோ அதிசயங்கள் அவற்றில் உள்ளன.

ஏளனம் செய்தோர் வியந்து நிற்கின்றனர்.

''கடந்த காலங்களில் எறும்புகள் ஒன்றோடொன்று உரையாடிக்கொள்கின்றன.மிக நுட்பமான தகவல்களை பரிhறிக்கொளகின்றன'' என்று குர்ஆன் கூறியபோது எள்ளி நகையாடியோர் ஏராளம். ''இவையெல்லாம் கற்பனைகள்'' என பரிகாசம் செய்தனர். ஆனால், அண்மையில் எறும்புகளைப் பற்றி வெளியட்டுள்ள ஆய்வுகள் மனிதனை வியக்கவைக்கின்றன.

விலங்குகள், பூச்சிகள்; ஆகியவற்றின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்தோர் ''எறும்புகளின் வாழ்கைப் போக்கு மனிதனின் வாழ்க்கை போக்கோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவை எனக் கண்டுள்ளனர். அவை பின்வருமாறு :-

வியப்பூட்டும் வாழ்க்கை முறைகள்!

1. மனிதர்களைப் போன்றே எறும்புகள் இறந்த உடலகளை மண்ணில் புதைத்து விடுகின்றன.

2. தங்களின் அன்றாடப் பணிகளை மனிதர்களைப் போல் சீராக பங்கிட்டு நிர்வாகங்களை ஒரு திட்டமிட்டுக் கவனித்துக் கொள்;கின்றன. மேலாளர்கள் (
Managers), மேற்பார்வையாளர்கள் (Supervisors), தொழிலாளர்களை மேலாண்மை செயபவர்கள் ( Foremen),உழைப்பாளர்கள் (Workers) என்று தனித்தனியாக துறைகளை (Departments) வகுத்துச் செயலாற்றுகின்றன.3. அவ்வப்போது ஒன்று கூடி தங்களிடையே அனைவரும் மகிழ்ச்சியோடு (Chatting) அளவளாவிக் கொள்கின்றன.

4. தங்களுக்கிடையே மிகவும் நவீன முறைகளை கையாண்டு தகவல் பரிமாற்றங்கள் செய்கின்றன.

5. சீரான பொதுச் சந்தைகள் நடத்தி, பண்டமாற்றும் செய்து வருகின்றன.

6. வெய்யில் காலத்திலேயே மழைகாலத்திற்குரிய நீண்ட நாள் தேவைக்கான தானிய மணிகளை சேமித்து வைக்கின்றன.

7. தானிய மணிகள் முளைவிட்டு வளரும் போது அவற்றின் அடிவேர்களை அறுத்துவிடுகின்றன. அவ்வாறு அறுக்காது விட்டுவிடின் அவை அழுகிப்போகும் என்பதைத் தெரிந்து வைத்துள்ளன.

8. சேமித்து வைத்திருக்கும் தானியக்களஞ்சியம் மாரிகாலத்தில் ஈரப்பசைமிக்கதாய் மாறிவிடும்போது, அவற்றை வெளியே கொண்டு வந்து சூரிய கதிர் ஒளியில் காயவைக்கின்றன. அந்த தானிய மணிகள் சூரிய ஒளியில் காய்ந்ததும் உடனே உள்ளே கொண்டு சென்று பாதுகாக்கின்றன. ஈரப்பசையால் வேர்விட்டு அழுகிப்போய்விடும் என்ற வேளாண்மை அறிவைப் பெற்றிருப்பது விந்தையிலும் விந்தையல்லவா?

இறைவனின் அருள் வேதம் கூறிய அனைத்தும் இன்று உண்மையாகிவருவது

''குர்ஆன் அல்லாஹ்வின் வேதம்'' என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளாகும்.

அறியுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?

சிந்தித்துப்பார்க:கும் மக்களுக்கு அரிய படிப்பனை உள்ளது (குர்ஆன்)

''Jazaakallaahu khairan'' albaqavi.com

ஞாயிறு, 31 மே, 2009

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்

நன்றி : மதுக்கூர் இராமலிங்கம்
சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.

இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.

''சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.''

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம்.

இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,

''பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்தவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது'' என்று கூறினார்.

ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.

கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,

மலபார் பகுதியில் நடந்தது என்ன? ஏழை, எளிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர்களது வீடுகள் அகதிகள் முகாம்களைப் போல ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விழுந்தால் கூட நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இவ்வளவுக்கும் காரணம் உங்களது கேடுகெட்ட ஜாதி முறைதான். அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அல்லது இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கிறது. நிலமை இப்படி இருக்கும் போது, நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது உங்கள் மதத்தினுடைய பழமையான பழக்க வழக்கங்களையும், ஜாதி முறையையும் தானே தவிர நிச்சயமாக முஸ்லிம்களை எதிர்த்து அல்ல.''

இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர், அவர் மேலும் பேசுகிறார் ..

''இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்'' இன்றுள்ள நிலைகளுக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது.

இந்துக்கள் புத்தமதத்திற்கு மாறியதற்கும் அடிப்படைக் காரணம் ஜாதிய ஒடுக்குமுறைதான் என்பதையும் விவேகானந்தர் தெளிவாக கூறியுள்ளார். அவர் கேட்கிறார்..

''புத்தப் புரட்சி இல்லாமல் செல்வாக்கு மிகுந்த மேல் ஜாதியினரின் கொடுங்கோன்மையிலிருந்து அவதிக்குள்ளாயிருக்கும் லட்சக் கணக்கான கீழ்ஜாதி மக்களுக்கு வேறு எது விடுதலை அளித்திருக்கும்.''

என்று விவேகானந்தர் வினா தொடுத்தார். ஜாதியக் கொடுமையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரே பின்னாளில் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்பது மனங் கொள்ளத்தக்கது.

பசுக்கள் புனிதமானது. ஆனால் இஸ்லாமியர்கள் பசு மாமிசத்தைப் புசிக்கிறார்கள். எனவே அவர்கள் நமது எதிரிகள் என்று கூறினர். அரியானா மாநிலத்தில் இறந்து போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. ''இறந்து போன பசுமாடு, உயிருள்ள தலித்துகளை விட புனிதமானது..?'' என்று கூறுகிறார் ஒருவர்! ஆனால் விவேகானந்தர் பார்வை வித்தியாசமானது.

ஒருமுறை பசுபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க வந்தார்கள். இந்து மதத்தின் புனித சின்னமான பசுக்களை பாதுகாக்க உங்களால் இயன்ற நன்கொடையைத் தாருங்கள்..! என்று வந்தவர்கள் கேட்டார்கள்.

அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் சுருண்டு விடுந்து செத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிஜி வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். 'பட்டினியால் சாகும் மனிதர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்வீர்களா?

வந்தவர்கள் பதில் சொல்லும் போது ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன். அவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது, பசுக்களைக் காப்பாற்றுவது தான் எங்கள் கடமை'' என்றார்கள்.

வெகுண்டெழுந்த விவேகானந்தர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப் பலன் என்றால், பசுக்கள் சாவதும் அதன் கர்மப்பலனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத உங்களுக்கு பசுக்களைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது'' என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.

அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் 'சகோதரர், சகோதரிகளே..!'' என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும்.

இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு அடங்கி நடத்த வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு.

''என்னுடைய மனக்கண்ணில் எதிர்காலம் குற்றம் குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடும். வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான, யாராலும் அடக்க முடியாத இந்தியாவாகத் திகழும்.''

இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனா..!

விவேகானந்தரைப் பொறுத்தவரை இஸ்லாம் என்ற மார்க்கம் சமத்துவம் மற்றும் அன்பு மயமானது. அது ஆக்கிரமிப்பு மதம் அல்ல

செவ்வாய், 26 மே, 2009

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1

கிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்டதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அக்காலத்தில் வாழ்ந்த பலரால் எழுதப்பட்ட பல புத்தகங்களின் தொகுப்பான பைபிளை - கர்த்தரின் பரிசுத்த ஆவியின் மூலம் உந்தப்பட்டு எழுதப்பட்டதால் இந்த பைபிள் முழுவதும் கர்த்தரின் வார்த்தை என்று அவர்களால் நம்பப்படுகின்றது.

இந்த பைபிள் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று பழைய ஏற்பாடு மற்றொன்று புதிய ஏற்பாடு.

புரொடஸ்டன்ட் பிரிவினரால் நம்பப்படும் பைபிளில் (பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 66 புத்தகங்களும், ரோமன் கத்தோலிக்கர்களால் நம்பப்படும் பைபிளில் (பழைய ஏற்பாட்டில் 46 புத்தகங்களும் புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 73 புத்தகங்களும் இடம் பெற்றுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையான கிழக்கு மரபுவழி திருச்சபையினரால் (Eastern Orthodox Church) நம்பப்படும் பைபிளில் (கத்தோலிக்கர்கள் ஏற்றுக்கொள்ளும் பழைய ஏற்பாட்டு நூல்கலான 46 நூல்களுடன் மேலும் 5 நூல்களை சேர்த்து) பழைய ஏற்பாட்டில் மொத்தம் 51 நூல்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 78 புத்தகங்களும் இடம்பெற்றுள்ளது.

பைபிள் உள்ள புத்தகங்களை யார் யார் எழுதினார்கள்? மொத்தம் எத்தனைப்பேர் எழுதினார்கள்? ஒவ்வொரு புத்தகங்களையும் ஒருவர் மட்டும் எழுதினாரா அல்லது பலரும் சேர்ந்து எழுதினார்களா? அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் தான் எழுதினார்கள் என்பதற்கு என்ன சான்று? என்பன போன்ற கேள்விகளெல்லாம் ஒரு புறம் இருக்க, இவை அனைத்தும் கடவுளால் தான் அருளப்பட்டதென்றால் அவற்றில் கண்டிப்பாக முரண்பாடு என்பது இருக்க முடியாது - இருக்கவும்கூடாது என்பதை யாரும் மறுக்கவும் மாட்டார்கள் - மறுக்கவும் முடியாது.

காரணம் கர்த்தர் என்பவர் இவ்வுலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலித்து வருபவர். இதுவரை நடந்தவற்றையும் அறிந்தவர். இனி நடக்கப்போவதையும் அறிந்தவர். எல்லாவற்றையும் அடக்கி ஆளக்கூடிய - அனைத்துப் பொருட்களின் மீதும் சக்திபெற்ற கடவுள் - ஒரு சம்பவத்தையோ அல்லது வேறு ஒரு செய்தியையோ சொல்லும்போது மிகத்தெளிவாகச் சொல்லக்கூடியவராகத்தான் இருப்பார். அவருடைய வார்த்தையில் கண்டிப்பாக முரண்பாடோ அல்லது குழப்பங்களோ இருக்காது. இருக்கவும் முடியாது. அப்படி இருந்தால் அது இறைவனின் வார்த்தையாக ஒரு போதும் இருக்க முடிhயது.

இந்த பொதுவான நியதிக்கு மாற்றமாக பைபிளில் ஏராளமான முரண்பாடுகள் காணக்கிடைக்கின்றன. ஏராளமான குழப்பத்தை ஏற்படுத்தும் வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. எந்த சம்பவம் உன்மை - எந்தச் சம்பவம் பொய் என்று புரியாத அளவுக்கு குழப்பத்தை விளைவிக்கும் ஆயிரக்கனக்கான வசனங்கள் இருக்கின்றன. இப்படி ஏராளமான முரண்பாடுகளைக் - குழப்பங்களையும் கொண்ட பைபிளை எப்படி கடவுளால் அருளப்பட்டது என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

சாதாரன மனிதனின் வார்த்தையிலோ அல்லது எழுத்திலோ முரண்பாடுகள் இருந்தால் அதை நம்பாத - ஏற்றுக்கொள்ளாத நாம், கடவுளின் வாத்தையில் மட்டும் முரண்பாடு இருக்கும் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இன்று ஒருவனைக் குற்றவாளி என்று அடையாளம் கண்டுக்கொள்வதற்கு அவனது செல்பாடுகளில் உள்ள தவறுகளும் அவனது வார்த்தையில் உள்ள முரண்பாடுகளையுமே ஆதாரமாக கொள்ளப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் ஒரு இறைவேதம் என்று சொல்லக்கூடிய புத்தகத்தில் ஆயிரக்கணக்கான முரண்பாடுகளும் ஏரளமான குளருடிகளும் இருக்கும் ஒரு புத்தகத்தை மட்டும் எப்படி கடவுளின் வேதமாக ஏற்க முடியும்?

இதனால் தான் வல்ல இறைவன் தனது இறுதி இறைவேதமான திருமறைக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

'அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்' (அல்குர்ஆன் 4 : 82)

அதாவது இந்த திருக்குர்ஆன் இறைவன் அல்லாதவர்களிடம் வந்திருந்தால் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் என்று சொல்லும் வல்ல இறைவன், இந்த முரண்பாடின்மையே ஒரு இறைவேதத்திற்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான தகுதி என்றும் கூறுகின்றான்.

ஆனால் இந்த பொதுவான நியதிக்கு மாற்றமாக இருக்கும் பைபிள் முரண்பாடுகளின் பட்டியல்களை இனி தொடராக கான்போம்.

ஒரே சம்பவத்தை முரண்பாடாகச் சொல்லும் பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் :

முரண்பாடு 1:

இஸ்ரவேல் மக்கள் மீது கடவுள் கோபம் அடைந்தாராம். இஸ்ரவேலருக்கு எதிராகத் திரும்பும் படி தாவீது ராஜா கடவுளால் ஏவப்பட்டாராம். இதனால் தாவீது ராஜா தனது சேனாதிபதியாகிய யோவாபிடம் இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் தொகையை கணக்கெடுக்கும் படி ஆனையிட்டாராம். இதை பழைய ஏற்பாட்டின் 2 சாமுவேல் 24:1 பின்வருமாறு கூறுகின்றது:

'கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.' - 2 சாமுவேல் 24:1

இந்த வசனத்தில் கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலரின் மீது மூண்டதாகவும், அதன் தொடர்ச்சியாக இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் தொகையை கணக்கிடும் படி தாவீது ராஜா கர்த்தரால் ஏவப்பட்டதாகவும் இந்த வசனம் கூறுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக 1 நாளாகமம் 21:1ம் வசனம் தாவீதை கணக்கெடுக்கும் படி தூண்டியது கர்த்தரல்ல, சாத்தானே தூண்டினான் என்று கூறுகின்றது:

'சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது' - 1 நாளாகமம் 21:1

இந்த வசனத்தில் தாவீதை இஸ்ரவேலருக்கு எதிராக திருப்பியது கர்த்தரல்ல சாத்தானே என்கிறது. ஆனால் 2 சாமுவேல் 24:1ம் வசனமோ கர்த்தர்தான் தாவீதை ஏவினார் என்கிறது. உன்மையில் தாவீதை இஸ்ரவேலர்களுக்கு எதிராக திருப்பியது சாத்தானா? அல்லது கர்த்தரா? சாத்தான் தான் தூண்டினான் என்றால் 2 சாமுவேல் 24:1ல் கர்த்தர் என்று சொல்லப்படுவது எப்படி? சாத்தானுடைய இடத்தில் எப்படி கர்த்தர் வந்தார்? அல்லது கர்த்தருடைய இடத்தில் சாத்தான் வந்தானா? இந்த இரண்டு வசனங்களில் எது சரி?

முரண்பாடு 2:

தாவீது ராஜா தனது சேனாதிபதியாகிய யோவாபிடம் போர்வீரர்களின் கணக்கெடுக்க சொல்கின்றார். ஆந்த கணக்கெடுத்த சம்பவத்தை பழையஏற்பாட்டின் இரண்டு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதன் படி அவர் கணக்கெடுத்து தாவீதிடம் கணக்கை ஒப்படைத்தாராம்.

இஸ்ரவேலர்களில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர்?

மொத்தம் '11 லட்சம் பேர்' என்று கணக்கு கொடுத்ததாக 1 நாளாகமம் 21:5 லும் அதற்கு மாற்றமாக மொத்தம் '8 லட்சம் பேர்' என்று கணக்கு கொடுத்ததாக 2 சாமுவேல் 24:9 லும் நேர் முரணாக சொல்லப்பட்டுள்ளது. உன்மையில் யோவாப் இஸ்ரவேலர்கள் பற்றி கணக்கெடுத்தது எவ்வளவு?

முரண்பாடு 3:

அதே யோவாப் யூதாவில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர் என்றும் கணக்கெடுத்து தாவீது ராஜாவிடம் கொடுத்தாராம்.

யூதா கோத்திரத்தில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர்?

மோத்தம் '4 லட்சத்து எழுபதினாயிரம் பேர் இருந்தார்கள்' என்று கணக்கு கொடுத்ததாக 1 நாளாகமம் 21:5 லும் அதற்கு மாற்றமாக மொத்தம் '5 லட்சம் பேர் இருந்ததார்கள்' என்று கணக்கு கொடுத்ததாக 2 சாமுவேல் 24:9 லும் நேர் முரணாக சொல்லப்பட்டுள்ளது. உன்மையில் யோவாப், யூதாக் கோத்திரத்தில் உள்ள போர்வீரர்களைப் பற்றி கணக்கெடுத்தது எவ்வளவு?

முரண்பாடு 4:

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக காத் என்பவன் தாவீதிடத்தில் கார்த்தர் சொன்ன செய்தியை சொன்னதாக சொல்லப்படுகின்றது. அந்தச் செய்தியில் சில வருடங்களுக்கு பஞ்சம் வராலாம் என்று சொன்னதாக சொல்லப்படுகின்றது. அது எத்தனை வருடம் என்று காத் தாவீதிடத்தில் சொன்னான்?

ஏழு வருடங்களுக்கு பஞ்சம் வரும் என்று சொன்னான் - 2 சாமுவேல் 24:13

இல்லை இல்லை மூன்று வருடங்களுக்கு பஞ்சம் வரும் என்று சொன்னான் என்று 1 நாளாகமம் 21:12 ல் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

முரண்பாடு 5:

அடுத்ததாக காத் என்பவன் மற்றொரு செய்தியையும் தாவீதினிடத்தில் சொன்னதாகவும், அதன் படி தாவீது எபூசியனாகிய அர்வான் என்பவனிடத்தில் கார்த்தருக்காக பலிபீடத்தை கட்டும் வகையில் ஒரு இடத்தை வாங்கியதாகவும் அதற்காக ஒரு தொகை கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

தாவீது எவ்வளவு தொகையை அர்வானிடத்தில் கொடுத்தான்?

ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல, நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான். - 2 சாமுவேல் 24:24

இந்த வசனத்தில் தாவீது அர்வானிடத்தில் 50 சேக்கால் நிறை வெள்ளியைக் கொடுத்து வாங்கிக்கொண்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் 1 நாளாகமம் 21:25ல் 600 சேக்கல் நிறைபொன்னைக் கொடுத்து வாங்கியதாக சொல்லப்படுகின்றது.

தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான் - 1 நாளாகமம் 21:25, 26

இதில் எது சரி? தாவீது அர்வானிடம் எவ்வளவு கொடுத்து வாங்கினான்?

சகோதரார்களே இந்த இரண்டு ஆகாமங்களிலும் தாவீதின் காலத்தில் நடந்த ஒரே சம்பவத்தை இரண்டு விதமாகச் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?நாம் இதில் 1 நாளாகமம் 21:1-12 வரை சொல்லப்படுவது உன்மை என்று நம்புவதா அல்லது 2 சாமுவேல் 24:1-13 வரை சொல்லப்படுவது உன்மை என்று நம்புவதா? இவை அனைத்து கடவுள் தான் அருளினார் என்றால் எப்படி இந்த அளவுக்கு முரண்பாடுகள் வரும்? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!

இறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்

Thanks to : http://www.egathuvam.blogspot.com/

புதன், 15 ஏப்ரல், 2009

இயேசுவின் சிலுவை மரணம் - பைபிளின் முரண்பட்ட நிலை

இயேசு, பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார். (லூக்கா 23:46)

உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்காளானை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்தான். . மற்றவர்களோ, பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள். இயேசு மறுபடியும் மகாசத்தமாய்க் கூப்பிட்டு, ஆவியை விட்டார். (மத்தேயு 27: 48-50)

கடவுள் மரணமடைவாரா? இல்லை. ஒரு போதும் இல்லை. பிறப்போ இறப்போ இல்லாதவனே இறைவன். ஆனால் கடவுளின் மூன்று ஆள்த் துவங்களில் ஒருவராகக் கிறித்தவர்களால் கருதப்படும் இயேசு பிறப்பும் இறப்பும் உடையவர். மரியாளின் மகனாகப் பிறக்கின்றார். மரணித்தபின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாகவும் கிறித்தவர்கள் நம்புகின்றனர். இதனை பைபிளும் கூறுகின்றது. இயேசுவின் மரணத்துக்கும் உயிர்த்தெழுதலுக்கும் இடையே திரித்துவத்தின் மூன்று ஆள்த்துவங்களில் ஒருவர் இல்லை. அந்த இடைவேளையில் இருந்தது இருவர் மட்டுமே! அப்படியானால் இருமைத்துவமும் கிறித்தவத்தில் உள்ளது என்று கூறலாமா? காரணம் திரித்துவத்தை மீட்சி அடைவதற்கான கொள்கையாகக் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இயேசு இல்லாதிருந்த அந்த மூன்று நாட்கள் கடவுள் இருவராக மட்டுமே இருந்துள்ளனர். ஒருவர் இல்லை. திரித்துவத்தின் அடிப்படையை இது கேள்விக்குறியாக்குகிறது.

இயேசு தன் ஆன்மாவை ஒப்புக் கொடுத்தார் என்றும் கிறித்தவர்கள் கூறுகின்றனர். இயேசுவே கடவுள் எனில் பிறகு ஏன் மற்றொரு கடவுளிடம் தன் ஆன்மாவை ஒப்புவிக்க வேண்டும்? அவ்வாறெனில் பிதாவும் புத்திரனும் ஓரே சக்தி பெற்றவர்கள் என்றும் மகத்துவத்தில் சமமானவர்கள் என்றும் கிறித்தவர்கள் கூறுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை தன்னை விட்டும் அகற்றுமாறு இயேசு கடவுளிடம் மன்றாடுவதாக பைபிள் கூறுகிறது. தன்னை சிலுவை மரணத்திலிருந்து காப்பாற்ற பிரார்த்திக்குமாறு தன் சீடர்களிடமும் வேண்டிக் கொள்கிறார். இந்த பிரார்த்தனையை கடவுள் ஏன் ஏற்றுக் கொள்ளவில்லை?

பைபிளின் அடிப்படையில் இயேசுவின் பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டதா?

பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவ பக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். (யோவான் 9:31)

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் இயேசுவின் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்க வேண்டும் அல்லவா? இல்லை என்றால் இயேசு தெய்வ பக்தியுள்ளவராக இருந்து, தெய்வத்தின் சித்தத்தைச் செய்தவராக இருந்தும் அவரது பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படவில்லையா?

பைபிள் குறிப்பிடும் இன்னுமொரு சம்பவம்:

இறந்து கிடந்த லாசர் என்பவரின் சகோதரி மார்த்தாள் என்ற பெண் இயேசுவிடம் கூறினாள்,

மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து, ஆண்டவரே, நீர் இங்கு இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக் கொள்ளுவது எதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவார் என்று அறிந்திருக்கிறேன் என்றாள் (யோவான் 11: 21,22)

கடவுளிடம் நீர் எதைக் கேட்டாலும் உனக்குத் தருவார் என்று இயேசுவைப் பற்றி நன்கறிந்த அப்பெண் கூறுகிறாள். இயேசுவும் அதனை மறுக்கவில்லை. அப்படியெனில் சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை தன்னை விட்டும் நீக்குமாறு இயேசு மனமுருகி வேண்டிய போது அது இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படாமல் இருந்திருக்குமா?

அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பரிசுத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, (எபிரேயர் 5:7)

சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து, என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார். (மத்தேயு 26: 39)

மேற்கண்ட எபிரேயர் 5:7 வசனம் இயேசுவின் சிலுவை மரணம் என்ற பான பாத்திரத்தை அவரிலிருந்து அகற்ற வேண்டும் என்ற வேண்டுதலை கடவுள் ஏற்றுக் கொண்டார் என்ற செய்தியை அல்லவா கூறுகிறது? இல்லை என்று இதனை யாரேனும் மறுப்பார்களானால் “பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவ பக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்..” என்ற யோவான் 9:31 வசனத்தின் படி இயேசுவைப் பாவி என்று கூற வேண்டிய அபத்தமான நிலைக்கு தள்ளப்படுவர். அத்துடன் தேவ ஆவியானவரின் உந்துதலால் எழுதப்பட்டது என்று வாதிக்கப் படும் பைபிளின் வசனங்களையும் நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும். இயேசுவின் பிரார்த்தனையை ஊன்றிக் கவனிக்கும் எவருக்கும் அவர் மரணத்திலிருந்து தன்னைக் காப்பாற்றவே அவ்வாறு காப்பாற்ற சக்தியுடைய கடவுளிடம் பிரார்த்தித்தார் என்பது புலப்படும். பயபக்தியுடன் கேட்ட அவரது வேண்டுதல் ஏற்றுக் கொள்ளவும் பட்டது. சிலுவை மரணத்திலிருந்து அவர் காப்பாற்றப்பட்டார். பைபிளின் கூற்றுப் படி இவ்வாறே கருத இடமுண்டு. திரித்துவக் கொள்கைப் படி பிதாவின் விருப்பமும் புத்திரனின் விருப்பமும் ஒன்றாக இருக்க வேண்டுமல்லவா? அவ்வாறு இல்லை எனில் திரித்துவக் கொள்கையின் அடிப்படைக்கு இது முரணாக அமைகிறது.

கிறித்தவர்கள் இயேசு என்று குறிப்பிடும் ஈஸா நபி அலைஹிஸ்ஸலாம் ஒரு மனிதராக இருந்தார். இஸ்ராயீல் சமூகத்துக்கு அனுப்பப்பட்ட ஒரு நபியாக இருந்தார். அவரைக் குறித்து குர்ஆன் குறிப்பிடும் போது இப்னு மர்யம் (மர்யமின் மகன்) என்று குறிப்பிடுகிறது. அவர் சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டதாகக் கிறித்தவர்கள் நம்புகின்றனர். அது வெறும் யூகம் மட்டுமே என்று குர்ஆன் கூறுகிறது. இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப் பட்டதாக பைபிள் குறிப்பிட்டாலும் அநேக இடங்களில் அதற்கு முரணான தகவலையும் தருகிறது. இத்தகைய முரண்பாடுகள் குர்ஆனின் கூற்றை உண்மைப் படுத்துவதுடன் அகிலங்களின் இறைவனால் அருளப்பட்ட இறைவேதத்தின் உறுதித் தன்மையைப் பறைசாற்றுகிறது.

மேலும், ‘நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வுடைய தூதரான மர்யமின் மகன் ‘ஈஸா மஸீஹை’ கொன்று விட்டோம்’ என்று அவர்கள் கூறியதாலும் (சபிக்கப்பட்டனர்.) மேலும், அவரை அவர்கள் கொல்லவுமில்லை; அவரைச் சிலுவையில் அறையவுமில்லை; ஆயினும், அவர்களுக்கு, அவர் (போன்று ஒருவர்) ஒப்பாக்கப்பட்டார். நிச்சயமாக இதில் கருத்து வேறுபாடுகள் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே உள்ளனர். வெறும் யூகத்தை பின்பற்றுவதைத் தவிர அவர்களுக்கு அதுபற்றிய (உண்மையான) எந்த அறிவும் இல்லை. அவரை அவர்கள் உறுதியாகக் கொல்லவேயில்லை. எனினும், அல்லாஹ் அவரைத் தன்பால் உயர்த்திக் கொண்டான். மேலும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனும், ஞானமுள்ள வனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4: 157, 158)