ஞாயிறு, 21 நவம்பர், 2010

ஆண் விபச்சாரிகள் ஆணுறைகளைப் பயன்படுத்தலாம்-போப் 16ம் பெனடிக்ட்

Pope Benedict XVI


ஆணுறைகளைப் பயன்படுத்துவதற்கு எதிரான நிலையைக் கொண்டுள்ள போப் 16ம் பெனடிக்ட், விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் ஆணுறைகளைப் பயன்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஆணுறைகளின் பயன்பாட்டுக்கு எதிரான நிலையைக் கொண்டுள்ளது கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமையகமான வாட்டிகன். இது ஐ.நா, ஐரோப்பிய நாடுகள், எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரக் குழுக்களின் கண்டனத்தை சம்பாதித்தது.

குறிப்பாக ஆணுறைகளுக்கு எதிரான நிலையை எடுத்துள்ள போப்பாண்டவருக்கு எதிரான விமர்சனங்களும் வலுத்தபடி உள்ளன. ஆணுறைகள் குறித்து போப்பாண்டவர் முன்பு ஒருமுறை கூறுகையில், ஆணுறைகளை கொடுப்பதன் மூலம் எய்ட்ஸையும், எச்ஐவி பரவலையும் தடுத்து நிறுத்தி விட முடியாது. மாறாக ஆணுறைகளால் நிலைமை மோசமாகத்தான் செய்யும் என்றார்.

இந்த நிலையில், திடீரென தற்போது ஆணுறைகளுக்கு ஆதரவான கருத்தை முதல் முறையாக வெளியிட்டுள்ளார் போப்பாண்டவர். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆண் விபச்சாரிகள் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.

ஜெர்மன் நாட்டு பத்திரிக்கையாளர் ஒருவருக்கு அளித்த பேட்டியின்போது இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.

செயற்கைக் கருத்தரித்தல் முறை என்பதால் ஆணுறைகளுக்கு எதிரான நிலையை வாட்டிகன் மேற்கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவில் பல தார முறை அமலில் இருப்பதாலும், பாதுகாப்பற்ற உடலுறவு அங்கு படு சாதாரணம் என்பதாலும் அங்குதான் உலகிலேயே அதிக அளவில் எய்ட்ஸ் தாக்குதல் உள்ளது.

ஆனால் ஆப்பிரிக்காவில் ஆணுறைகளை கொடுப்பதன் மூலம் எய்ட்ஸைத் தடுத்து விட முடியாது என்று அவர் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து கடந்த ஆண்டு அவர் கூறுகையில், ஆப்பிரிக்காவில் எய்ட்ஸ் அதிகம் இருக்கிறது என்பதற்காக ஆணுறைகளைக் கொடுத்து அதைத் தடுத்து விட முடியாது. அது சாத்தியமும் அல்ல. ஆணுறைகளைக் கொடுப்பதால் பிரச்சினை தீரும் என்று கூற முடியாது. மாறாக மோசமாகலாம் என்று கூறியிருந்தார் போப்பாண்டவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக