திங்கள், 14 ஜனவரி, 2013

66-வயதில் இஸ்லாத்தை ஏற்ற ராஜா நரசிம்மன் அப்துல்லாஹ் ஆனார்.

தவ்ஹீத் இதழின் ஸ்டாலில் இஸ்லாத்தை ஏற்ற
66-வயது ராஜா நரசிம்மன் அப்துல்லாஹ் ஆனார்.

சென்னையில் நடக்கும் பீஸ் கண்காட்சியில் தவ்ஹீத் மாத இதழின் ஸ்டாலில் மஸ்ஜிதுல் முஃமின் தாஃவா குழுவின் சார்பில் முஸ்லிமல்லாத சகோதரகளுக்காக குர்ஆன் தமிழாக்கமும் இஸ்லாம் குறித்த புத்தகங்களும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று அங்கு வந்த கொட்டிவாக்கத்தை சேர்ந்த 66 வயது ராஜா நரசிம்மன் அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிய தேடலுடன் இரண்டு நாட்களாக பீஸ் மாநாட்டில் சுற்றி வரும் அவருக்கு நமது மஸ்ஜிதுல் முஃமின் தஃவா குழுவை சேர்ந்த அப்துர் ரஹ்மான் [இவரும் இஸ்லாத்தை ஏற்றவர்] உள்ளிட்ட சகோதரர்கள் இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல தவ்ஹீத் இதழின் ஸ்டாலிலேயே கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றார்.அப்துல்லாஹ் எனும் பெயரோடு தீனுல் இஸ்லாத்தில் நுழைந்தார்.அல்ஹம்து லில்லாஹ்!


ஜசகல்லாஹ் கைர் : Sengis Khan

செவ்வாய், 4 டிசம்பர், 2012

நான் மதம் மாறினேனா??

அன்பான சஹோதரர்களே 

சாந்தமும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக !
ஒரு சஹோதரன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டி இந்த இடுகை இடப்பட்டுள்ளது .இதோ அவரின் அனுபவம் .
அனைத்து சஹோதர சஹோதரிகளுக்கும் அன்பான வணக்கங்கள் .

நான் மதம் மாறினேன் என யாரும் சொல்லாதீர்கள் .நான் என் தாய் மதத்தை தெரிந்து கொண்டு அதன் பக்கமே சென்று விட்டேன் என்பது தான் உண்மை .ஆம் எல்லோரும் ஒரே மார்க்கத்தை பின்பற்ற படைக்கப்பட்டு பின்னர் மனிதன் தன் மனம் போன போக்கில் பல மதங்களை உருவாக்கி விட்டான் .அந்த வழியில் வந்த நான் மறுபடியும் சொந்த மார்க்கத்தை அடைந்து விட்டேன் .
நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் ? என்பதை உங்களுக்கு சொல்ல கடமை பட்டுள்ளேன்.
திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை வட்டம் முத்துலிங்க புறம் என்ற கிராமத்தில் பிறந்த நான் செந்தில் குமார் என்ற பெயர் வைத்து அழைக்கப்பட்டேன் .
சிறு வயது முதலே அவ்வளவாக கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பண்டிகை காலங்களில் கோவிலுக்கு போகும் வழக்கம் உடையவனாக இருந்தேன் .
எனது குல தெய்வம் கருப்பு சாமி என்ற கடவுள் என எனக்கு பயிற்றுவிக்க பட்டது .அந்த கடவுளுக்கு சாராயமும் ,சுருட்டும் படைக்க பட்டது என்னை அந்த சிறு வயதிலேயே சிந்திக்க வைத்தது .வழி நடத்துபவன் இறைவனா?? இல்லை வழி கெடுப்பவன் இறைவனா?? என ..
சில நேரங்களில் பெரிய கோவில்களுக்கும் போனது உண்டு அச்சமயத்தில் இறைவனை தரிசிக்க பாமர மக்கள் வரிசையில் காத்து கொண்டிருக்கும் போது பணம் படைத்த மக்கள் நேரடியாக கர்ப்ப கிரகத்திற்குள் நுழைவதையும் ,சில கோவில்களில் ,கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை .
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான இன்ஜினியரிங் காலேஜ் ல் B.E  சேர்ந்தேன் .அப்போது கோவில்களுக்கு போவதை அறவே நிறுத்திவிட்டேன் .
ஆனாலும் கடவுள் நம்பிக்கை என்னை விட்டு அகலாமல் ஆழப்புதைந்து கிடந்தது .மனிதன் படைத்த கடவுள்கள் தான் இப்படி தீண்டாமை ,வாழ்விற்கு பொருந்தாத வழிகாட்டல்கள் ,வர்ணாசிரமம் என மனித குலத்தை சீரழிக்கும் கொள்கைகளோடு இருக்கும் ஆனால் மனிதனை படைத்த கடவுள் கண்டிப்பாக இவர்கள் கூறும் இலக்கணத்தின் படி இருக்காது  எப்படியேனும் அந்த கடவுளை நான் கண்டறிவேன் என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது .
எனது கல்லூரி படிப்பும் முடிந்தது ,அதுவரை கல்லூரியில் எனக்கு வெறும் அறிமுகம் மட்டுமே ஆன ஒரு நண்பருடன் கல்லூரி படிப்பு முடிந்ததும்,அவருடனே தங்கும் ஒரு வாய்ப்பை நான் தேடிய அந்த இறைவன் உருவாக்கி கொடுத்தான் என்று சொல்வதுதான் சாலச்சிறந்தது .
ஆம் அவர் மூலமாக எனக்கு இறைவனை பற்றிய ஒரு தீர்க்கமான முடிவு கிடைத்தது ,அவர் கூறினார் எது உன் இறைவன் என நீயே தேடி கொள் உனது பகுத்தறிவை கொண்டு என .

ஆம் .தெள்ள தெளிவான பதில் .இவர் தான் இறைவன் என கூறாமல் இவைதான் இறைவனின் தன்மைகள் என கூறிய விதம் பகுத்தறிவு உள்ளவர்களுக்கு கண்டிப்பாய் புரியவேண்டும் .
சில சமயங்களில் கிறிஸ்தவம் கூறும் கடவுள் உண்மை என நினைக்க தோணும் ஆனால் கடவுளின் தன்மைகள் தெரிந்த எவரும் அதை ஒருகாலும் ஏற்றுகொள்ள மாட்டர் .
அந்த நேரத்தில் பகுத்தறிவு அறிஞர் பெரியார் தாசன் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது எனக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது .
அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகத்தின் கௌரவ பேராசிரியர் ,பிரபல திரைப்பட நடிகர் ,தனது 23 ம் வயதில் கிருபானந்த வாரியாருடன் மேடை விவாதம் கண்டு வென்றவர் .பத்து வருடம் ஆய்வு செய்து தனது கடவுளை கண்டு கொண்டது எனது ஆர்வத்தை தூண்டியது .
நான் கண்ட ஆய்வு 
நான் தேடிய கடவுள் இந்து மதத்தில் இல்லை என்பது தெரிந்து விட்ட பின் எனது கேள்விக்கு கிறிஸ்தவம் பதில் கொடுக்குமா என பார்த்தேன் ஆனால் அங்கேயும் அது இல்லை 
கடவுள் ஒருவன் தான் இருக்க முடியும் ,
அவனுக்கு பெற்றோரோ ,குடும்பமோ ,பிள்ளைகளோ இருக்கும் என்பது முட்டாள் தனமான நம்பிக்கை .
கடவுள் பிறப்பு இறப்பு இல்லாதவராய் இருத்தல் வேண்டும் .
கடவுள் இணை இல்லாதவராய் இருத்தல் வேண்டும் .
ஆனால் கிறிஸ்தவமும் இந்து மதம் போல் பல தெய்வ கொள்கைக்கு வித்திட்ட மதம் தான் ,வர்ணாசிரமத்திற்கு வக்காலத்து வாங்கும் மதம் தான் ,விஞ்ஞானத்திற்கு முரண்பட்ட மதம் தான் என்பது வேதங்களை  படித்தவர்கள் அறிவார்கள் .
ஏன் இஸ்லாம் ?
வணக்கத்திற்கு உரியவன் இறைவன் ஒருவன்தான் ..
இறைவன் யாரையும் பெறவும் இல்லை ,யாராலும் பெறப்படவும் இல்லை 
மனிதன் பிறப்பால் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை ...எவ்வளவு ஆணித்தரமான கொள்கை 

யாருக்காகவும் இவர்களின் வழிபாடு நிறுத்தி வைக்கபடுவது இல்லை .குறித்த  நேரத்தில் ஆரம்பிக்கப்படும் தொழுகை .
மாற்றாரை மதிக்கும் சிறப்பு ,எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு ,என எல்லா விசயத்திலும் இஸ்லாம் என்னை ஈர்த்தது .

ஆம் நான் எனது மார்க்கத்தை  கண்டுகொண்டேன் ..சத்திய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் ..மனிதகுலம் செழிக்க வேண்டும் என்றால் இஸ்லாம் தவிர வேறு எந்த கொள்கையும் வழிகாட்ட முடியாது .

ஆரம்பத்தில் எதிர்ப்புகளையும் சிலரின் வெறுப்புகளையும் சந்திக்க நேர்ந்தது ஆனால் சத்திய மார்க்கத்தை ஏற்காமல் நாம் அடையும் இறைவனின் வெறுப்பை விட  நான்  இஸ்லாத்தை ஏற்றதால் அடைந்த இவர்களின் வெறுப்புகள் ஒன்றும் பெரிது இல்லை .

அன்பான சகோதர,சகோதரிகளே !நான் உங்களுக்கு கூற விளைவது இது தான் 
அசத்தியம் அழிந்தே தீரும் ,சத்தியம் நிலைத்து நிற்கும் .
உங்கள் இறைவன் உண்மையா என பகுத்தறிந்து கொள்ளுங்கள் .
நீங்கள் உண்மை உடையவர்களாய் இருந்தால் வேதங்களையும் அது காட்டும் மதங்களையும் ஆய்வு செய்யுங்கள் .
நமக்கு எதற்கு மதங்கள் என உங்களை புதுமைவாதிகள் என காட்ட முயல வேண்டாம் .
மதங்களை நானும் வெறுப்பவன் தான் ஆனால் மார்க்கத்தை அறிந்து கொள்ளுங்கள் .மனிதன் இறப்பிற்கு பின் என்ன நடக்கும் என உணருங்கள் .
நம்மை படைத்த இறைவனை அறிந்து கொள்ளுங்கள் .
இப்படிக்கு 
உங்கள் அன்பு சஹோதரன் 
உமர் அப்துல்லாஹ் (செந்தில் குமார் ) M.E.,
JJ Engineering college
http://www.amjat.blogspot.in/2012/01/blog-post_04.html

வியாழன், 1 நவம்பர், 2012

சர்வதேச அளவில் பிரபல இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மரியம் ஜமீலா மரணம்




லாகூர் : சர்வதேச அளவில் பிரபல இஸ்லாமிய பெண் எழுத்தாளர் மற்றும் அறிஞராக விளங்கிய மரியம் ஜமீலா இன்று (31.10.2012) லாகூரில் மரணமடைந்தார். சில மாதமாக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த மரியம் ஜமீலா தன்னுடைய 78வது வயதில் இன்று காலமானார்.

மே 23, 1934 ஆம் ஆண்டு அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் உள்ள ஒரு யூத குடும்பத்தில் பிறந்த மார்கரெட் மார்கெஸ் எனும் இயற்பெயர் கொண்ட மரியம் ஜமீலா தன்னுடைய 19வது வயதிலிருந்து மதங்களை குறித்து ஆராய தொடங்கினார். மர்மடுகே பிக்தாலால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குரானும் யூதராக இருந்து இஸ்லாத்தை தழுவிய முஹம்மது அஸதின் புத்தகங்களும் தாம் மரியம் ஜமீலாவை இஸ்லாத்தை நோக்கி ஈர்த்தன.

மே 24, 1961ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்று கொண்ட மரியம் ஜமீலா தென் ஆப்பிரிக்காவில் இருந்து வெளியாகும் முஸ்லீம் டைஜஸ்டில் எழுத தொடங்கினார். அதே பத்திரிகைக்கு எழுதி கொண்டிருந்த ஜமாத்தே இஸ்லாமியின் நிறுவனர் மவுலானா சையது அலா மெளதூதியின் எழுத்துகளில் தன்னை பறி கொடுத்தார் மரியம் ஜமீலா.

மெளதூதியின் அறிவுரையின் பேரில் பாகிஸ்தானுக்கு 1962ல் சென்று மெளலானாவின் வீட்டோடு தன்னை இணைந்து கோண்டார். பின் பு முஹமது யூசுப் கான் என்பவருக்கு இரண்டாம் தாரமாக தானே முன் வந்து மணமுடித்து கொண்டார்.

மிகச் சிறந்த சிந்தனையாளரான மரியம் ஜமீலா எழுதிய புத்தகங்களில் சில பின்வருமாறு :

§  Islam and modernism
§  Islam versus the west
§  Islam in theory and practice
§  Islam versus ahl al kitab past and present
§  Ahmad khalil
§  Islam and orientalism
§  Western civilization condemned by itself
§  Correspondence between maulana maudoodi and maryum jameelah
§  Islam and western society
§  A manifesto of the Islamic movement
§  Is western civilization universal
§  Who is Maudoodi ?
§  Why I embraced Islam?
§  Islam and the Muslim woman today
§  Islam and social habits
§  Islamic culture in theory and practice
§  Three great Islamic movements in the Arab world of the recent past
§  Shaikh hasan al banna and ikhwan al muslimun
§  A great Islamic movement in turkey
§  Two mujahidin of the recent past and their struggle for freedom against  foreign rule
§  The generation gap its causes and consequences
§  Westernization versus Muslims
§  Westernization and human welfare
§  Modern technology and the dehumanization of man
§  Islam and modern man
அல்லாஹ் அவரின் பாவங்களை மன்னித்து சுவனத்தை அளிப்பானாக.

புதன், 31 அக்டோபர், 2012

ஹைதராபாத்தை சேர்ந்த ஒர் கிறிஸ்தவ குடும்பமே துபையில் இஸ்லாத்தை தழுவியது...

மாஷாஅல்லாஹ்..!!



துபையில் உள்ள இஸ்லாமிய வழிகாட்டி மையத்தில் ஹைதராபாத்தை சார்ந்த கிருஸ்தவ (புரட்டஸ்டன்ட்) பிரிவில் இருந்து, ஐந்து உறுபினர்களை கொண்ட ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. இந்த மையத்தில் தினமும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம் என்றாலும் இது போன்று முழு குடும்பமுமே இஸ்லாத்தை தழுவியது மகிழ்ச்சி அடைய செய்கின்

றது.


ஹைதராபாத்தை சேர்ந்த ஜேம்ஸ் என்கின்றவர் தன் குடும்பத்துடன் துபையில் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவியும், மகளும், மகனும் உள்ளனர். மகன் திருமணமாகி இவரும் மனைவியுடன் வசித்து வருகின்றார். இந்த குடும்பம்தான் தற்போது இஸ்லாத்தை தழுவி முறையே தந்தை முஹம்மது என்றும், இவரின் மனைவி மரியம் என்றும், மகள் ஆயிஷா என்றும் மகன் ஈஸா என்றும் இவரின் மனைவிக்கு சாரா என்றும் அழகான இஸ்லாமிய பெயர்களை சூட்டி தங்களை இஸ்லாமிய குடும்பத்துடன் இணைத்து கொண்டுள்ளனர்.


இஸ்லாத்தை ஏற்ற இவர்களைப்பற்றி துபாய் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் தலைமை வழிகாட்டி ஹுதா அல் காபி கூறுகையில், இவர்களாகவே இங்கு வந்து கலிமாவை முன்மொழிந்து தாங்களாகவே இஸ்லாமிய பெயர்களை சூட்டி கொண்டதாகவும், இவர்களுக்கு இங்கு யாரும் இஸ்லாத்தை போதிக்கவில்லை என்றும் இவர்களின் ஆர்வம் தம்மை பிரமிக்க வைத்ததாகவும் கூறி, ஒரு கைப்பெட்டி நிறைய இஸ்லாமிய வாழ்க்கை புத்தகங்கள் மற்றும் சி.டிக்களை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை தழுவியதும் இவர் இங்குள்ள கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், கடவுள் இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ இருக்க முடியாது என்றும், ஒரே கடவுள் கொள்கைதான் சரியான தேர்வு என்றும் கூறியுள்ளார். மேலும் இவர் கூறுகையில் கடந்த இரண்டு வருடமாக தான் இஸ்லாமிய புத்தகங்களை படித்து இஸ்லாத்தை அறிந்து கொண்டதாகவும் குரானின் ஆங்கில பதிப்பை படித்து இஸ்லாத்தை உணர்த்து கொண்டதாகவும், தன்னுடைய சுயவிருப்பத்தின் பெயரிலேயே இஸ்லாத்தை ஏற்றதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு அஹமது தீதாத், ஜாகீர் நாயக் மற்றும் யூசுப் எஸ்டேட் போன்ற மத வழிகாட்டிகளின் பேச்சுக்கள் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.


தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதை இந்தியாவில் உள்ள தங்களின் மற்ற உறவினர்களுக்கு தெரியும் என்றும், இதைபற்றி அவர்கள் ஒன்றும் கூறவில்லை என்றும், ஊரில் உள்ள அவர்களுக்கும் இஸ்லாத்தை எத்தி வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். நாமும் இவர்களுக்காக துவா செய்து இவரின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இஸ்லாத்தை ஏற்று அதன் தூய வடிவில் வாழ துவா செய்வோம்.

அதிரை முஜீப்.
source:http://www.khaleejtimes.com/kt-article-display-1.asp?xfile=data%2Ftodayevent%2F2012%2FOctober%2Ftodayevent_October32.xml&section=todayevent
 
NANTRI - அதிரை MUJEEB
புதன், 31 அக்டோபர், 2012

செவ்வாய், 23 அக்டோபர், 2012

இஸ்லாத்தை ஏற்ற பிரபல ஃப்ரெஞ்ச் ராப் பாடகி டயாம்ஸ்

பிரான்ஸ் அரசாங்கம் பெண்கள் முகத்தையும் சேர்த்து மூடி ஹிஜாப் அணிவதை தடை செய்கிறது. இதை மீறுபவர்கள் அரசால் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசாணை கூறுகிறது. தனி மனித சுதந்திரத்தில் எப்படி பிரான்ஸ்
 அரசு மூக்கை நுழைக்கலாம் என்று நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஒருக்கால் அரசுக்கு இதன் மூலம் சில தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற எச்சரிக்கை உணர்வாகவும் இருக்கலாம். குர்ஆன் முகத்தை மூடச் சொல்லி கட்டளையிடவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

அதே ஃபிரான்ஸில் அதிரடியாக பிரபல ராப் பாடகி டயாம்ஸ் தனது வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டு சமீபத்தில் ஹிஜாபோடு கண்ணியமான தோற்றத்தில் தொலைக் காட்சியில் பேட்டியளித்து பரபரப்பை உண்டு பண்ணியுள்ளார்.

32 வயதாகும் இவரது இயற்பெயர் மெலோனி ஜியார்ஜியடிஸ். சில காலம் போதை மருந்துக்கும் அடிமையாய் இருநதார். கடுமையான மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருந்தார். மன நிம்மதி இழந்து தவித்து பல இடங்களிலும் சிகிச்சை பெற்றார். எந்த பலனும் இல்லை. ஒரு முறை இவரது தோழி இவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் 'இரு தொழுது விட்டு வருகிறேன்' என்று சென்றதை ஆச்சரியத்தோடு பார்த்தார். இந்த அளவு இந்த தொழுகைக்கு முக்கியத்துவமா? அப்படி என்ன இருக்கிறது இந்த குர்ஆனில் என்று தொடர்ந்து குர்ஆனை படிக்க ஆரம்பித்தார். குர்ஆன் அவரது மனதை ஆட்கொண்டது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தார். குர்ஆனை நன்கு படித்து தெளிந்தவுடன் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக சுவீகரித்துக் கொண்டார். இவரது முடிவை இவரது ரசிகர்கள் பலரும் கடுமையாக எதிர்த்துள்ளனர். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் முழு ஹிஜாபோடு சமீபத்தில் தொலைக் காட்சிக்கு பேட்டியும் கொடுத்துள்ளார். திருமணமான இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

'சிலர் சொல்வது போல் எவரது மிரட்டலுக்காகவும் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை. குர்ஆனை ஆராய்ந்து தெளிவு கிடைத்த பிறகே எனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டுள்ளேன். எனது முடிவால் சிலருக்கு வருத்தம் உள்ளதை அறிவேன். எனக்கு தேவை மன நிம்மதி. அது இஸ்லாத்தில் கிடைத்துள்ளது. இறைவன் இட்ட கட்டளைகளை நான் அடி பிறழாது பின்பற்றுவேன். இஸ்லாத்தை ஏற்று முதன் முதலாக எனது நெற்றி இறைவனை வணங்க தரையை தொட்டபோது இனம் புரியாத சந்தோஷம் என்னுள் பரவுவதை உணர்ந்தேன். அந்த உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது. எனக்கு எனது அமைதியான வாழ்வுதான் முக்கியம். மற்றவை எல்லாம் பிறகுதான். இதை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.' என்கிறார் டயாம்ஸ்.

இஸ்லாத்தை ஏற்ற பிறகு போன மாதம் அளித்த பேட்டி.

சாதாரண ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்றால் அது அவனுக்கு மறுமை வாழ்வை சிறப்பாக்குவதோடு அவனது உலக வாழ்விலும் அழகிய வாழ்க்கை நெறியைப் பெற்றுக் கொள்கிறான். ஆனால் இந்த பெண்மணி புகழின் உச்சியில் இருக்கும் போது இந்த முடிவை எடுக்கிறார். இதனால் இசைத் துறையை கை கழுவ வேண்டி வரும். பொது மக்கள் முன்னிலையில் பல ஆண்களோடு இனி நடனமாட முடியாது. மிகப் பெரும பொருளாதார இழப்பும் ஏற்படும். ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தின் கோபத்துக்கும் ஆளாக நேரிடும். பேரும் புகழும் இனி இந்த மங்கையை தேடி இந்த உலகில் வராது. இருந்தும் அதை அனைத்தையும் தூர எறிந்து அழகிய வாழ்வு முறையை இவ்வுலகத்துக்கும் மறு உலகத்துக்கும் தேர்ந்தெடுத்துள்ள இந்த சகோதரியை இரு கரம் நீட்டி அரவணைத்துக் கொள்வோம்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இவரை யாரும் கத்தியை காட்டி மிரட்டி இஸ்லாத்தை ஏற்கச் சொல்லவில்லை. பணம் காசு தருகிறோம் இங்கு வந்து விடு என்று யாரும் ஆசை காட்டவில்லை. 'வாளாலும் பணத்தாலும் இஸ்லாம் வளர்ந்தது' என்று கூறுபவர்களுக்கு இந்த பெண்மணி அழகிய பதிலை அளித்துக் கொண்டிருக்கிறார்.


'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது,

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்'

-குர்ஆன் 110:1,2,3.

Reference By : http://suvanappiriyan.blogspot.com/ &
http://english.alarabiya.net/articles/2012/10/01/241253.html


இவன்

முஹம்மது இக்பால், (MIB)
அமீர் , இஸ்லாமிய தவாஹ் குழுமம் http://www.facebook.com/groups/islamicdawah1


Join our Islamic Dawah Group: http://www.facebook.com/groups/islamicdawah1/

Join with us : http://www.facebook.com/CuddaloreMuslimFriend

Join via Mobile : http://m.facebook.com/a/profile.php?fan&id=330540656965013&gfid=AQBUn7a3fLJdzZtd

சனி, 1 செப்டம்பர், 2012

துபாயில் இவ்வாண்டு 1500 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்!

The Islamic Information Centre of the Dar Al Ber Society
துபாய்:ஐக்கிய அரபு அமீரகத்தின் மாநிலமான துபாயில் இவ்வாண்டு மட்டும் 1500 க்கும் மேற்பட்ட நபர்கள் இஸ்லாத்தை தழுவியுள்ளனர். இத்தகவலை தார் அல் பிர் செய்தி தொடர்பாளர் ராஷித் அல் ஜுபைபி தெரிவித்துள்ளார்.
கடந்த ரமலான் மாதத்தில் மட்டும் 300க்கும் அதிகமான மாற்று மதத்தினர் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக மனமுவந்து ஏற்றுக் கொண்டுள்ளனர் என் ஜுபைபி தெரிவிக்கிறார்.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் இதில் அடங்குவர். இஸ்லாத்தின் மகத்துவத்தைபுரிந்துகொண்டு அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக அவர் கூறினார்.
தார் அல் பிர் மையத்திற்கு வருகை தருவோரிடம் இஸ்லாத்தைக் குறித்தும், இறுதித் தூதரைக் குறித்தும் அவர்களின் உள்ளங்களில் எழும் சந்தேகங்களுக்கு உரிய முறையில் பதில் அளிக்கப்பட்டு விளக்கமளிக்கப்படுகின்றன. திருக்குர்ஆனின்  மொழிப்பெயர்ப்புகள்,  நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைக் குறித்த பல்வேறு மொழிகளிலான நூற்களும் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
ஜசக்கல்லாஹ் ஹைர ....
http://www.thoothuonline.com/1500-people-accept-islam-in-dubai/