அன்பான சஹோதரர்களே
சாந்தமும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக !
ஒரு சஹோதரன் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டி இந்த இடுகை இடப்பட்டுள்ளது .இதோ அவரின் அனுபவம் .
அனைத்து சஹோதர சஹோதரிகளுக்கும் அன்பான வணக்கங்கள் .
நான் மதம் மாறினேன் என யாரும் சொல்லாதீர்கள் .நான் என் தாய் மதத்தை
தெரிந்து கொண்டு அதன் பக்கமே சென்று விட்டேன் என்பது தான் உண்மை .ஆம்
எல்லோரும் ஒரே மார்க்கத்தை பின்பற்ற படைக்கப்பட்டு பின்னர் மனிதன் தன் மனம்
போன போக்கில் பல மதங்களை உருவாக்கி விட்டான் .அந்த வழியில் வந்த நான்
மறுபடியும் சொந்த மார்க்கத்தை அடைந்து விட்டேன் .
நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் ? என்பதை உங்களுக்கு சொல்ல கடமை பட்டுள்ளேன்.
திண்டுக்கல் மாவட்டம் ,நிலக்கோட்டை வட்டம் முத்துலிங்க புறம் என்ற
கிராமத்தில் பிறந்த நான் செந்தில் குமார் என்ற பெயர் வைத்து
அழைக்கப்பட்டேன் .
சிறு வயது முதலே அவ்வளவாக கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பண்டிகை காலங்களில் கோவிலுக்கு போகும் வழக்கம் உடையவனாக இருந்தேன் .
எனது குல தெய்வம் கருப்பு சாமி என்ற கடவுள் என எனக்கு பயிற்றுவிக்க
பட்டது .அந்த கடவுளுக்கு சாராயமும் ,சுருட்டும் படைக்க பட்டது என்னை அந்த
சிறு வயதிலேயே சிந்திக்க வைத்தது .வழி நடத்துபவன் இறைவனா?? இல்லை வழி கெடுப்பவன் இறைவனா?? என ..
சில நேரங்களில் பெரிய கோவில்களுக்கும் போனது உண்டு அச்சமயத்தில் இறைவனை
தரிசிக்க பாமர மக்கள் வரிசையில் காத்து கொண்டிருக்கும் போது பணம் படைத்த
மக்கள் நேரடியாக கர்ப்ப கிரகத்திற்குள் நுழைவதையும் ,சில கோவில்களில்
,கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதையும் என்னால்
ஜீரணிக்க முடியவில்லை .
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பிரபலமான இன்ஜினியரிங் காலேஜ் ல் B.E
சேர்ந்தேன் .அப்போது கோவில்களுக்கு போவதை அறவே நிறுத்திவிட்டேன் .
ஆனாலும் கடவுள் நம்பிக்கை என்னை விட்டு அகலாமல் ஆழப்புதைந்து கிடந்தது
.மனிதன் படைத்த கடவுள்கள் தான் இப்படி தீண்டாமை ,வாழ்விற்கு பொருந்தாத
வழிகாட்டல்கள் ,வர்ணாசிரமம் என மனித குலத்தை சீரழிக்கும் கொள்கைகளோடு
இருக்கும் ஆனால் மனிதனை படைத்த கடவுள் கண்டிப்பாக இவர்கள் கூறும்
இலக்கணத்தின் படி இருக்காது எப்படியேனும் அந்த கடவுளை நான் கண்டறிவேன்
என்ற நம்பிக்கை என்னுள் இருந்தது .
எனது கல்லூரி படிப்பும் முடிந்தது ,அதுவரை கல்லூரியில் எனக்கு வெறும்
அறிமுகம் மட்டுமே ஆன ஒரு நண்பருடன் கல்லூரி படிப்பு முடிந்ததும்,அவருடனே
தங்கும் ஒரு வாய்ப்பை நான் தேடிய அந்த இறைவன் உருவாக்கி கொடுத்தான் என்று
சொல்வதுதான் சாலச்சிறந்தது .
ஆம் அவர் மூலமாக எனக்கு இறைவனை பற்றிய ஒரு தீர்க்கமான முடிவு கிடைத்தது
,அவர் கூறினார் எது உன் இறைவன் என நீயே தேடி கொள் உனது பகுத்தறிவை கொண்டு
என .
ஆம் .தெள்ள தெளிவான பதில் .இவர் தான்
இறைவன் என கூறாமல் இவைதான் இறைவனின் தன்மைகள் என கூறிய விதம் பகுத்தறிவு
உள்ளவர்களுக்கு கண்டிப்பாய் புரியவேண்டும் .
சில சமயங்களில் கிறிஸ்தவம் கூறும் கடவுள் உண்மை என நினைக்க தோணும் ஆனால்
கடவுளின் தன்மைகள் தெரிந்த எவரும் அதை ஒருகாலும் ஏற்றுகொள்ள மாட்டர் .
அந்த நேரத்தில் பகுத்தறிவு அறிஞர் பெரியார் தாசன் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றது எனக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது .
அமெரிக்காவில் உள்ள பல்கலைகழகத்தின் கௌரவ பேராசிரியர் ,பிரபல திரைப்பட
நடிகர் ,தனது 23 ம் வயதில் கிருபானந்த வாரியாருடன் மேடை விவாதம் கண்டு
வென்றவர் .பத்து வருடம் ஆய்வு செய்து தனது கடவுளை கண்டு கொண்டது எனது
ஆர்வத்தை தூண்டியது .
நான் கண்ட ஆய்வு
நான் தேடிய கடவுள் இந்து மதத்தில் இல்லை என்பது தெரிந்து விட்ட பின் எனது
கேள்விக்கு கிறிஸ்தவம் பதில் கொடுக்குமா என பார்த்தேன் ஆனால் அங்கேயும் அது
இல்லை
கடவுள் ஒருவன் தான் இருக்க முடியும் ,
அவனுக்கு பெற்றோரோ ,குடும்பமோ ,பிள்ளைகளோ இருக்கும் என்பது முட்டாள் தனமான நம்பிக்கை .
கடவுள் பிறப்பு இறப்பு இல்லாதவராய் இருத்தல் வேண்டும் .
கடவுள் இணை இல்லாதவராய் இருத்தல் வேண்டும் .
ஆனால் கிறிஸ்தவமும் இந்து மதம் போல் பல தெய்வ கொள்கைக்கு வித்திட்ட மதம்
தான் ,வர்ணாசிரமத்திற்கு வக்காலத்து வாங்கும் மதம் தான் ,விஞ்ஞானத்திற்கு
முரண்பட்ட மதம் தான் என்பது வேதங்களை படித்தவர்கள் அறிவார்கள் .
ஏன் இஸ்லாம் ?
வணக்கத்திற்கு உரியவன் இறைவன் ஒருவன்தான் ..
இறைவன் யாரையும் பெறவும் இல்லை ,யாராலும் பெறப்படவும் இல்லை
மனிதன் பிறப்பால் உயர்ந்தவனோ தாழ்ந்தவனோ இல்லை ...எவ்வளவு ஆணித்தரமான கொள்கை
யாருக்காகவும் இவர்களின் வழிபாடு நிறுத்தி வைக்கபடுவது இல்லை .குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்படும் தொழுகை .
மாற்றாரை மதிக்கும் சிறப்பு ,எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு ,என எல்லா விசயத்திலும் இஸ்லாம் என்னை ஈர்த்தது .
ஆம் நான் எனது மார்க்கத்தை கண்டுகொண்டேன்
..சத்திய இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் ..மனிதகுலம் செழிக்க வேண்டும் என்றால்
இஸ்லாம் தவிர வேறு எந்த கொள்கையும் வழிகாட்ட முடியாது .
ஆரம்பத்தில் எதிர்ப்புகளையும் சிலரின் வெறுப்புகளையும் சந்திக்க நேர்ந்தது ஆனால் சத்திய மார்க்கத்தை ஏற்காமல் நாம் அடையும் இறைவனின் வெறுப்பை விட நான் இஸ்லாத்தை ஏற்றதால் அடைந்த இவர்களின் வெறுப்புகள் ஒன்றும் பெரிது இல்லை .
அன்பான சகோதர,சகோதரிகளே !நான் உங்களுக்கு கூற விளைவது இது தான்
அசத்தியம் அழிந்தே தீரும் ,சத்தியம் நிலைத்து நிற்கும் .
உங்கள் இறைவன் உண்மையா என பகுத்தறிந்து கொள்ளுங்கள் .
நீங்கள் உண்மை உடையவர்களாய் இருந்தால் வேதங்களையும் அது காட்டும் மதங்களையும் ஆய்வு செய்யுங்கள் .
நமக்கு எதற்கு மதங்கள் என உங்களை புதுமைவாதிகள் என காட்ட முயல வேண்டாம் .
மதங்களை நானும் வெறுப்பவன் தான் ஆனால் மார்க்கத்தை அறிந்து கொள்ளுங்கள் .மனிதன் இறப்பிற்கு பின் என்ன நடக்கும் என உணருங்கள் .
நம்மை படைத்த இறைவனை அறிந்து கொள்ளுங்கள் .
இப்படிக்கு
உங்கள் அன்பு சஹோதரன்
உமர் அப்துல்லாஹ் (செந்தில் குமார் ) M.E.,
JJ Engineering college
http://www.amjat.blogspot.in/2012/01/blog-post_04.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக