இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 ஜூலை, 2012

இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம்! – நீண்ட ஆய்விற்கு பிறகு அமெரிக்க பேராசிரியர் தகவல்!

Religion Professor Robert Shedinger
வாஷிங்டன்:உலகில் கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராக கருதப்படும் இயேசு கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத விவகாரத்துறை பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் தாம் இயேசு முஸ்லிம் என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறார்.  was jesus a muslim? என்ற தனது புதிய நூலில் அவர் இதனை தெளிவுப்படுத்துகிறார்.
இயேசு முஸ்லிமா? என்ற கேள்வியுடன் அவர் நூலை துவக்குகிறார். ஆம்! அவர் முஸ்லிமே! என்பதுதான் தனது கேள்விக்கான பதிலாக இறுதியில் பேராசிரியர் ஷெடிங்கர் குறிப்பிடுகிறார்.
மதங்கள் குறித்த ஷெடிங்கரின் கற்பித்தல் குறித்து வகுப்பில் ஒரு மாணவி எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர் இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய தீர்மானித்தார்.
“இஸ்லாம் மார்க்கத்துடன் தொடர்பில்லாத காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது எனக்கு இஸ்லாத்தைக் குறித்து கூடுதலாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது”- என ஷெடிங்கர் கூறுகிறார்.
ஃபாக்ஸ் சானலுக்கு அளித்த பேட்டியில் ஷெடிங்கர் கூறியது: ‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான இயக்கமாகும். இயேசுவின் வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது. ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுச்செய்தேன்.’ இவ்வாறு லூதர் கல்லூரியின் மத விவகார பாடத்துறையின் தலைவரான ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் கூறினார்.
வகுப்பில் முஸ்லிம் மாணவி கேள்வி எழுப்பியது 2001-ஆம் ஆண்டிலாகும். அதன் பின்னர் அவர் தனது உண்மையை தேடிய ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என ஃபாக்ஸ் சேனல் கூறுகிறது.

நன்றி :www.thoothuonline.com/jesus-was-a-muslim-claims-us-religions-professor/

செவ்வாய், 28 பிப்ரவரி, 2012

முஹம்மது நபியை குறித்து இயேசு முன்னறிவிப்புச் செய்யும் பைபிள் கண்டுபிடிப்பு!

0 0


அங்காரா:இஸ்லாத்தின்
இறுதி தூதரான முஹம்மது நபியை குறித்து இயேசு(ஈஸா நபி) முன்னறிவிப்புச்
செய்யும் 15 நூற்றாண்டுகள் பழமையான பைபிள் துருக்கியில்
கண்டெடுக்கப்பட்டது.

பர்ணபாஸின் சுவிசேஷம் என்று அழைக்கப்படும்
இந்த நூல் 12 ஆண்டுகளாக துருக்கியில் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு
வந்துள்ளது. பைபிளில் கூறப்படும் பர்ணபாஸ் இயேசுவின் முக்கிய சீடராவார்.

இந்த நூலை பார்ப்பதற்கு 16-வது போப்
பெனடிக்ட் விருப்பம் தெரிவித்துள்ளார். இறுதி தூதர் முஹம்மது நபியின்
வருகையை குறித்தும், இயேசுவின் இஸ்லாம் குறித்த பார்வையை விளக்கும் இந்த
நூலின் உள்ளடக்கம், தற்போது நடைமுறையில் இருக்கும் பைபிளில் காணப்படும்
கருத்துக்களுடன் முரண்படுவதால், கிறிஸ்தவ தலைமை இந்நூலை மூடி மறைத்துள்ளது
என்று துருக்கியின் கலாச்சார-சுற்றுலா துறை அமைச்சர் உர்த்துக்ரூல் குனாய்
செய்தியாளர்களிடம் கூறினார்.

யேசு ஆரம்ப காலக்கட்டத்தில் கூறிய
கட்டளைகளும், முன்னறிவிப்புகளும் விலங்கின் தோலில் எழுதப்பட்டுள்ள
இந்நூலில் அடங்கியுள்ளன. இதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான்
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் குறித்த முன்னறிவிப்பாகும். யேசு பேசிய மொழியான
அராமிக்கில் எழுதப்பட்டுள்ள இந்த நூல் 12 ஆண்டுகளுக்கு முன்பு கள்ள
கடத்தல் காரர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது துருக்கி போலீஸ்
கண்டுபிடித்தது. இந்த புத்தகத்தின் மதிப்பு 22 மில்லியன் ஆகும். இந்த
நூலின் ஒரு பக்கத்திற்கான நகலுக்கு 2.4 மில்லியன் டாலர் மதிப்பாகும்.

யேசு(இறைத்தூதர் ஈஸா(அலை)) அவர்கள் இறுதி
தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை குறித்து தனது சீடர்களிடம் முன்னறிவிப்பு
செய்துள்ளார். இறுதி தூதர் வரும் வேளையில் அவரை நம்பி ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்று யேசு கூறியுள்ளார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள்.

புதன், 7 டிசம்பர், 2011

சினிமா நடிகையின் மன மாற்றம்!



ஒரு மனிதனின் மனத்தில் நேர் வழி வருவது எந்த நேரம் என்று யாருக்கும் தெரியாது. பிலிப்பைனில் மிகப் பிரபலமாக அறியப்பட்ட குயினி படில்லா தற்போது ஹதிஜாவாக தனது பெயரை மாற்றிக் கொண்டு இஸ்லாமிய சங்கமத்தில் ஐக்கியமாகி உள்ளார். கோடிக்கணக்கான வருமானம் பேரும் புகழும் இவரைத் தேடி வரும்பொழுது அனைததையும் உதறி விட்டு மறுமை வாழ்வே நிரந்தரம் என்ற முடிவுக்கு வந்துள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் ஹஜ் கடமையை முடிப்பதற்காக ஜெததா வந்த அவரை சகோதரர்கள் பேடடி எடுத்தனர். தனது பழைய வாழவில் செய்த தவறுகள் எல்லாம் புனித ஹஜ்ஜின் மூலம் துடைத்தெறியப்படடிருப்பதாகவும், இனி வரும் காலங்களில் உண்மையான முஸ்லிமாக வாழ முயற்ச்சிப்பேன் என்றும் ஆனந்த கண்ணீரோடு அந்த பெண் சொல்லும் அழகை பாருங்கள்.

சிலர் சொல்வது போல் ஒரு கையில் கத்தியும் மறு கையில் குர்ஆனையும் வைத்துக் கொண்டு எதை முடிவு செய்கிறாய் என்று யாரும் இவரை வற்புறுத்தவில்லை. தனக்கு இந்த முடிவால் எதிர்ப்புகளும் பண இழப்பும் ஏற்படும் என்று நன்றாகத் தெரிந்தே இந்த முடிவை எடுத்திருக்கிறார். பிலிப்பைன் இஸ்லாமிய நாடு கிடையாது. கிறித்தவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடு. எந்த நிலையில் இருந்து பார்த்தாலும் குர்ஆனை விளங்கி முகமது நபியின் போதனைகளை விளங்கியே இவர் தனது மார்க்கத்தை தேர்நதெடுத்தள்ளதை அறியலாம்.

'நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனததில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.'

குர்ஆன் 13:28


By DONNA CORPIN & RIMA AL-MUKHTAR | LIFE.STYLE@ARABNEWS.COM
Published: Dec 7, 2011 01:49 Updated: Dec 7, 2011 01:49

Queenie Padilla shares her rebirth after performing Haj in Makkah
By all accounts, a young Filipino singer-actress dubbed "the future leading lady" was on her way to stardom before she had a spiritual rebirth.

Queenie Padilla was starring in primetime TV shows and would sing and dance in production numbers on popular variety shows in the Philippines. She was the other half of a romantic pairing ("love team" in local showbiz parlance) meant to set hearts aflutter. At 20, she was living her dream — or so she thought.

"It was a deceiving dream," Queenie told Arab News as she sat wearing an abaya and a veil on her head. Devoid of makeup, her face is just as angelic and even more beautiful than when she was all dolled up for guest appearances and shows.
The Saudi media had recently picked up on the story of the Filipino celebrity who went to Makkah and came back with Islam reignited in her. After performing Haj for the first time, she declared to all and sundry that show business was now behind her. The YouTube video in which she tearfully shares her life-changing Haj experience was going somewhat viral; it was garnering likes and getting shared and re-shared among Muslims, and not just in the Kingdom. "Inspiring" was the consensus.
What triggered a 180-degree turn for the young lady who was dead-set on pursuing a showbiz career a mere four years ago? How did the decision come about? And, how did she break it to her fans?

Queenie said she had been so worried what the producers, directors, managers, and especially, her fans would think. Everyone had expectations of her and she was feeling the pressure. She had to ask herself: “Am I going to live my life disobeying Allah or am I going to make the final decision in living my life as a good Muslim and really practice Islam the right way? There was a struggle but I had to make a choice. So I made that choice. I quit.”

Queenie calls herself a revert to Islam because it was only eight months ago that she embraced her faith wholeheartedly after visiting her mother in Australia, where she grew up nominally Muslim with her two sisters and their youngest brother.
Her father Robin, who comes from a big showbiz clan, famously married Queenie's mother in Muslim rites inside prison as he was serving a 21-year sentence for illegal possession of firearms in the early 90s. He was pardoned by the then president, and he left jail in 1998 no less famous than when he entered it. He remains one of the Philippines' most bankable action movie and TV stars to date.
The busy life of a celebrity didn't leave much time for Robin to educate his family about Islam as much as he would want, but Queenie credits him nonetheless, because if it weren't for him they would not be Muslim.

“When I went to the Philippines, my father told me to wear a hijab and pray. But I didn't know why I was praying. I was ignorant about Islam and about being Muslim. At that time I hadn't yet tasted the sweetness of faith. I think that's why I was misguided.”

Their mother started practicing Islam herself just two months before Queenie did, and she let her eldest daughter know her desire for her children to become good, practicing Muslims. Queenie says that when she first saw her mother after the latter rediscovered Islam, she was pleasantly “shocked.”

“I saw this glow in her that I've never seen growing up as a child. Everything that came out from her mouth was all about Islam and Allah. And she was reading the Qur'an constantly and listening to lectures and she wore the hijab. I asked her if she was afraid of wearing the hijab in this society. She said she wasn't because she has piety, and that's all that matters."

Over dinner, they would have conversations about the Hereafter and whether or not they obeyed Allah with their deeds and actions.

“It got me thinking,” she said. “I started evaluating and asking myself if I was really happy with my job, and I realized that there was something missing in my life. There was emptiness inside. I wanted to feel what my mother was feeling because she was so happy and content — and peaceful. I told her, ‘Oh please, I want to learn more about Islam.”

And she did. As she learned more about Islam, she knew she had found what would fill the void she was feeling: renewed religious fervor.

“It was an amazing feeling. I think it was a calling from Allah. The more I learned about Islam, the more it became my passion. And every day, when I gained more and more knowledge, the missing parts of myself began to grow. The emptiness is gradually going away too,” she added.

Queenie went to the Kingdom solely as a pilgrim and not an actress, although she met the Filipino community just the same. She visited the International Philippine School in Jeddah and other Saudi private schools where the students' reception was uniformly warm.

Her most unforgettable experience in her brief two weeks here, however, took place in a hospital where she visited a 30-year-old Filipino woman with a rare form of cancer. Queenie prayed for the patient who dreamed of going to the Kaaba. Shortly after, the woman reverted to Islam and declared her formula of faith in Islam, making Queenie “the happiest person alive.”

“The patient awakened me in a way; she reminded me that sickness or death could hit us anytime. Every day as Muslims, we should prepare,” Queenie said.

Queenie’s parents, now married to different people, are very happy over her decision to fully practice her religion. Her next mission is to share more about Islam with her sister Kylie, who is an up-and-coming star in her own right back home. Queenie also plans to major in business, and at the same time, take up Islamic studies.
These days, Queenie speaks with a conviction not previously seen in some of her TV interviews, in which she appeared reserved and even a little nervous. She has transformed into a lady who conveys the message of Islam to people with courage and confidence, even if she admits her knowledge is still limited.

Queenie — or Khadija, the Muslim name she recently adopted — is sure to lose fans once she leaves the glare of klieg lights completely, but she looks to have gained new ones in her journey of proclaiming her faith.

-அரப் நியூஸ்
07-12-2011

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

இ.த.ஜ.தலைமையகத்தில் இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்



கடந்த 25.11.11 வெள்ளியன்று இ.த.ஜ தலைமையகத்தில் கார்த்திகேயன் எனும் இளைஞர் தன்னை முஹம்மத் இஸ்மாயில் ஆக மாற்றிக் கொண்டு இஸ்லாத்தில் நுழைந்தார்.அவருக்கு எஸ்.எம்.பாக்கர் ஏகத்துவ கலிமாவை சொல்லிக் கொடுக்கும் காட்சி.

புதன், 9 நவம்பர், 2011

மில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்




கனடா நாட்டைச் சேர்ந்த கிறித்துவப் பிரச்சார பீ
ரங்கி டாக்டர் மில்லர். பைபிளைக் கரைத்துக் குடித்தவர். அதே நேரத்தில் கணக்குப் பிரியர். இதனால் எதையும் தர்க்கரீதியாக அணுகுவதையே விரும்புவார்.
இவர் ஒருநாள் திருக்குர்ஆனை வாசிக்க நினைத்தார். அவரது எண்ணமெல்லாம், குர்ஆனில் தவறுகளைக் கண்டுபிடிக்க வேண்டுடும். முஸ்லிம்களைக் கிறித்துவ மதத்திற்கு அழைக்க இத்தவறுகள் நமக்கு உதவும் என்பதுதான். பதினான்கு நூற்றாண்டுகளாக ஓதப்பட்டுவரும் ஒரு பழைய நூலில் என்ன இருந்து விடப் போகிறது? பாலைவனம் பற்றியும் அது போன்ற செய்திகள் பற்றியுமே அது பேசும் என்பதே அந்தக் கணக்கரின் கணக்காக இருந்தது.
ஆனால், என்ன வியப்பு! உலகத்தில் வேற எந்த நூலிலும காணக்கிடைக்காத அற்புதத் தகவல்களைக் குர்ஆனில் கண்ட மில்லர், திகைப்பின் உச்சிக்கே சென்றுவிட்டார். நபி(ஸல்) அவர்களின் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களின் இறப்பு, அல்லது நபிகளாரின் புதல்வியர், புதல்வர்கள் ஆகியோர் மறைவு போன்ற சோகச் செய்திகள் குர்ஆனில் இருக்கக்கூடும் என எதிர்பார்த்திருந்தவருக்கு ஏமாற்றமே விடையானது.
நபியின் குடும்பத்தார் குறித்த தகவல்கள் இல்லாதது மட்டுமல்ல. குர்ஆனில் ஒரு முழு அத்தியாயமே அன்னை மர்யம் (அலை) அவர்களின் பெயரால் இடம்பெற்றிருந்தது மில்லரைத் திகைப்பில் ஆழ்த்தியது. அன்னை மர்யம் குறித்து கிறித்துவ நூல்களிலோ பைபிளிலோ கூறப்படாத அருமை பெருமைகள் இந்த அத்தியாயத்தில் சிறப்பாகக் கூறப்பட்டிருப்பதை மனிதர் கண்டார். ஆயிஷாவின் பெயரிலோ ஃபாத்திமாவின் பெயரிலோ ஓர் அத்தியாயம் கூட இடம்பெறாததையும் அவர் உணர்ந்தார்.
நபி ஈசா (அலை) அவர்களைப் பற்றி குர்ஆனில் 25 இடங்களில் பெயரோடு குறிப்பிடப்பட்டிருந்த அதே வேளையில், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் பெயர் ஐந்தே ஐந்து இடங்களில் மட்டுமே கூறப்படிருந்தது. மில்லரின் வியப்பைக் கூட்டியது.
“குர்ஆனைச் சற்று ஆழமாகப் படிக்கத் தொடங்கினார். ஏதேனும் குறைகள் கிடைக்காமலா போய்விடும்! ஆனால், திருக்குர்னில் ஒரு வசனம் அவரைத் தூக்கி வாரிப் போட்டது.

“இந்தக் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருப்பின், இதில் அதிகமான முரண்பாடுகளை அவர்கள் நிச்சயம் கண்டிருப்பார்கள்” (4:82)என அந்த வசனம் அறைகூவல் விடுக்கிறது.
இத்திருவசனம் குறித்து ஜாரி மில்லர் கூறுகிறார்: “இன்றைய அறிவியல் அடிப்படைகளில் ஒன்று என்னவென்றால், சிந்தனைகளில் தவறு இருக்கும். தவறு இல்லை என்பது நரூபிக்கப்படும்வரை. குர்ஆனோ, தன்னில் தவறுகளைக் கண்டுபிடியுங்கள் என முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாதோருக்கும் சவால் விடுக்கிறது. அவர்களால் தான் அது முடியவில்லை.
உலகில் எந்தப படைப்பாளனுக்கும், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு, அதில் தவறுகளே இல்லை என்று அறைகூவல் விடுக்கும் துணிவு இருந்ததில்லை. குர்ஆனோ இதற்கு நேர்மாறாக, தன்னில் தவறுகளே கிடையாது. இருந்தால் காட்டுங்கள் பார்க்கலாம் என்று சொல்வதுடன், காட்ட முடியாது என்று பறைசாற்றவும் செய்கிறது.
டாக்டர் மில்லரை நீண்ட நேரம் சிந்திக்கவைத்த மற்றொரு வசனம்:

“இறைமறுப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? வானங்களும் பூமியும் ஒன்றாக இணைந்திருந்தன. நாம்தான் அவற்றை வெடித்துச் சிதறவைத்தோம். உயிருள்ள ஒவ்வொன்றையும் நீரால் உருவாக்கினோம். அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?” (21:30}1973ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றுத் தந்த அறிவியல் ஆய்வே இந்தப் பொருள்தான். “பெருவெடிப்பு” (Big Bang) எனும் பிரபஞ்சக் கோட்பாடுதான் அது. மிகமிக அதிகமான வெப்ப நிலையும் அடர்வும் மிகுந்த ஒரு வெடிபொருள், பல கோடி ஆண்டுகளுக்குமுன் வெடித்துச் சிதறியதால் உண்டானதே இந்தப் பிரபஞ்சம் என்கிறது இக்கொள்கை.
‘இணைந்திருத்தல்’ என்பதைக் குறிக்க ‘ரத்க்’ எனும் சொல் வசனத்தைின் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது. இது, ஒன்றோடொன்று நன்குஇணைந்த பொருளைக் குறிக்கும். ‘சிதறல்’ என்பதைக் குறித்த மூலத்தில் ‘அல்ஃபதக்’ எனம் சொல் ஆளப்பட்டுள்ளது. வெடித்துச் சிதறுவதை இது குறிக்கும். {ரத்க், ஃபத்க் – சுப்ஹானல்லாஹ்!}
நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் குர்ஆனை ஷைத்தான்கள்தான் சொல்லிக்கொடுக்கின்றன என்று பலர் விமர்சித்தனர். டாக்டர் மில்லரும் கிட்டத்தட்ட இதை நம்பியிருந்தார் போலும், இவ்வாதத்தைத் திருக்குர்ஆன் தவிடுபொடியாக்குவதை கண்டு திகைத்துப் போனார் மில்லர்.

“இதை ஷைத்தான்கள் இறக்கிடவில்லை. அது அவர்களுக்குத் தகுந்ததும் அல்ல. அதற்கு அவர்களால் இயலவும் செய்யாது.” (26:210,211) என்று கூறும் குர்ஆன்,“(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவதானால், விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக!’ (18:98) என்ற கடடளையிடுகின்றது.ஷைத்தானே ஒரு வேதத்தை அருளிவிட்டு, அதை ஓதுவதற்கு முன் என்னை விட்டுப் பாதுகாப்புக் கோருவீராக என்று எப்படிச் சொல்வான்?
டாக்டர் ஜாரி மில்லரை யோசிக்க வைத்த நிகழ்வுகள் பல குர்ஆனில் இடம் பெறுகின்றன. அவற்றை ‘அற்புதங்கள்’ என்கிறார் அற்புதகக் கூட்டங்கள பல நடத்திய அவர். அவற்றில் ஒன்று, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர் அபூலஹப் தொடர்பான நிகழ்ச்சி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லையும் மறுப்பதே அபூலஹபின் வேலை. அபூலஹப் இறப்பதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே, அவரைச் சபிக்கும் அத்தியாயம் ஒன்று (தப்பத் யதா அபீ லஹப்) அருளப்பட்டிருந்தது. அபூலஹப் நரகம் செல்வான் என அந்த அத்தியாயம் வெளிப்படடையாகவே கூறுகிறது.
அபூலஹப் நினைத்திருந்தால், குர்ஆனைப் பொய்யாக்க ஒரே ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். அதுதான் கலிமா. கலிமாவைச் சொல்லி வெளிப்படையிலேனும் தன்னை அவன் முஸ்லிமாகக் காட்டிக் கொண்டு, அதன் மூலம் குர்ஆனின் கூற்றை – தான் நரகவாசி என்பதை பொய்யாக்கியிருக்கலாம்.
ஆனால், அவன் அப்படிச் செய்யவில்லை. ஏனெனில், குர்ஆன் நாலும் அறிந்த நாயகனால் அருளப் பெற்றது

சனி, 30 ஜூலை, 2011

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் இஸ்லாத்தை தழுவினார்



நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

இந்த இளம் கிரிக்கெட் வீரர், சில ஆண்டுகளுக்கு முன்பு, தான் சார்ந்த உள்ளூர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கு காரணம், இரவு விடுதியில் அவர் நடந்துக்கொண்டவிதம். இன்றோ அவர் ஒரு துளி மதுவைக்கூட தொடுவதில்லை என்று அவரது அணி நண்பர்கள் ஆச்சர்யத்தோடு கூறுகின்றனர்.

இந்த மாற்றத்திற்கு காரணம், இஸ்லாம்.

இந்த இளைஞர் வேறு யாருமல்ல. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் பிரபல வீரரான வேன் பார்னெல் (Wayne Parnell) தான் அவர்.



ஒருவருக்குள் இஸ்லாம் கொண்டு வரும் மாற்றங்கள் அற்புதமானவை. அதற்கு இன்னொரு உதாரணம் சகோதரர் பார்னெல்.

இருபத்தி இரண்டு வயதாகும் பார்னெல், தான் இஸ்லாமை தழுவியதை நேற்று வெளிப்படையாக அறிவித்தார்.

கடந்த ஜனவரி மாதத்தின்போதே தான் இஸ்லாத்தை தழுவிவிட்டதாகவும், அதனை இதுநாள் வரை தனக்குள்ளாகவே வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் குறித்து அதிக காலம் ஆராய்ந்ததாகவும், அதன் பிரதிபலிப்பே தன்னுடைய இந்த முடிவு என்று குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய பெயரை "வாலீத்" என மாற்றிக்கொள்ள விருப்பம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். வாலீத் என்றால் "புதிதாக பிறந்தவன்" என்று பொருள்.

பார்னெல்லின் முடிவு தென் ஆப்பிரிக்க (மற்றும் உலகளாவிய) முஸ்லிம்களுக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்துள்ள நிலையில், அவருடைய முடிவிற்கு சக தென்ஆப்பிரிக்க வீரர்களான ஹாசிம் அம்லாவோ அல்லது இம்ரான் தாஹீரோ காரணமல்ல என்று தென் ஆப்பிரிக்க அணியின் மேலாளரான முஹம்மது மூசாஜி குறிப்பிட்டுள்ளார்.

இதனை உறுதிப்படுத்தியுள்ள தென்ஆப்பிரிக்க வீரர்கள், பார்னெல்லின் மனமாற்றத்திற்கு ஹாசிம் அம்லா காரணமில்லாத அதே வேலையில், அம்லாவின் இஸ்லாம் மீதான பற்றைக்கண்டு தாங்கள் கவரப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

பயணத்தின்போது கூட தொழுகைகளை தவறாமல் நிறைவேற்றுவதும், மது பரிமாறப்படும் தங்களுடைய இரவு நேர கொண்டாட்டங்களில் கலந்துக்கொள்ளாமல் தவிர்ப்பதும், தென் ஆப்பிரிக்க அணியின் ஸ்பொன்சர்களான Castle Lager (பீர் நிறுவனம்) கொடுக்கும் ஆடைகளை அணிந்துக்கொள்ள மறுப்பதும் தங்களை மிகவும் கவர்ந்துள்ளதாக தென்ஆப்பிரிக்க வீரர்கள் கூறுகின்றனர்.

அல்ஹம்துலில்லாஹ், ஒருவர் முழுமையான முஸ்லிமாக வாழ முயற்சிக்கும்போது அவரைச் சுற்றி அவர் ஏற்படுத்தும் மாற்றங்கள் அற்புதமானவை.

தன்னுடைய முதல் ரமலானை எதிர்நோக்கி இருப்பதாக குறிப்பிடும் பார்னெல், தன்னுடைய முடிவு இந்த சிறப்பான நேரத்தில் மரியாதையுடன் பார்க்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா குறித்து பேசும்போது அஹ்மத் தீதத் அவர்களும், அவர் தொடங்கி வைத்த இஸ்லாமிய அழைப்பு அமைப்பான IPCI-யும் நினைவுக்கு வருகின்றது (இது குறித்த இத்தளத்தின் கட்டுரையை காண <<இங்கே>> சுட்டவும்). தென் ஆப்பிரிக்காவில் ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சமூகத்தை இறைவனின் கிருபையால் உருவாக்கியவர் தீதத். அவர் தொடங்கிய IPCI இன்றளவும் மிகச் சிறப்பாக செயல்பட்டு பலரையும் இஸ்லாமின்பால் கவர்ந்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்...

சகோதரர் பார்னெல்லின் இந்த பயணத்தை இறைவன் எளிதாக்கி வைப்பானாக...ஆமீன்.

சனி, 30 ஏப்ரல், 2011

சிறு வார்த்தைகள் -> சிறுவர்கள் -> இஸ்லாம்


அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..ஆமீன்.

முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாம் நோக்கி ஈர்க்கப்பட பல காரணங்கள் இருக்கலாம். குர்ஆன் முழுவதையும் படித்த பிறகு சிலர் கவரப்படுவார்கள், சிலரோ குர்ஆனின் சில வசனங்களை கேட்டதாலேயே ஈர்க்கப்பட்டிருப்பார்கள், வேறு சிலரோ முஸ்லிம்களின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டிருப்பார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

சமீபத்தில் நான் பார்த்த நபர் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற அந்த ஒரு வார்த்தை தன்னை நோக்கி கூறப்பட, அதனால் ஈர்க்கப்பட்டு, பின்னர் தான் சந்தித்த முஸ்லிம் சிறுவர்களின் நன்னடத்தைகளால் இஸ்லாத்தை கற்றுக்கொண்டு, பின்னர் சிறு போராட்டத்திற்கு பின் இஸ்லாமை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்.

இவர் இஸ்லாத்தை தழுவி ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகின்றது. இந்த கால இடைவெளியில் இவர் நம் உம்மத்திற்கு செய்துள்ள பணிகள் அளப்பரியவை. தாவாஹ் பணியில் சிறந்து விளங்கும் இவர், இன்றைய முஸ்லிம் தலைமுறையினருக்கு மிகப்பெரும் ஊக்கமாய் திகழ்கின்றார்.

நான் மேலே கூறியவற்றிற்கு சொந்தக்காரர் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் (Idris Towfiq) அவர்கள். கத்தோலிக்க பாதிரியாராக பணியாற்றிய இவர், தான் இஸ்லாமை தழுவியது குறித்து கூறிய கருத்துக்கள் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றது...இன்ஷா அல்லாஹ்....



"ஆன்மிகத்தில் மேலும் ஒரு அடி எடுத்து வைக்க விரும்பினேன். பாதிரியாராக வர வேண்டுமென்ற என்னுடைய ஆசையை பிஷப்பிடம் வெளிப்படுத்தினேன்.

ரோமில் என்னுடைய பயிற்சியை முடித்து விட்டு கத்தோலிக்க பாதிரியாராக பிரிட்டனில் பணியாற்ற துவங்கினேன். ஒரு பாதிரியாராக சிறப்பான நாட்கள் அவை. நல்ல மனிதர்களோடு பணியாற்றி கொண்டிருந்தேன்.

என்னை பார்த்து சிலர் ஆச்சர்யத்துடன் கூறுவார்கள் 'சகோதரர் இத்ரீஸ், உங்கள் வாழ்கையில் எவ்வளவு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நீங்கள் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தீர்கள். திடீரென வேறொரு பாதையில் திசை திரும்பிவிட்டீர்கள். என்னவொரு மாற்றம்!!!'

நான் எந்தவொரு மாற்றத்தையும் காணவில்லை. என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்கின்றேன். அவர்கள் எண்ணுவது போல நான் இரு வேறு பாதையில் இருந்ததில்லை. நேரான வழியில் இருந்ததாகவே நினைக்கின்றேன்.

செயின்ட் தாமஸ் அக்கொய்னஸ், பைபிள், சர்ச்சுகளின் வரலாறு ஆகியவற்றை பற்றி அன்று ரோமில் படித்து கொண்டிருந்தது, இன்று உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுவதற்குதான் என்று நினைக்கின்றேன்.

பாதிரியாராக வர எனக்கு பயிற்சி அளிக்கப்படவில்லை. இன்று, இங்கே, உங்களுடன் ஒரு முஸ்லிமாக பேசுபதற்கு பயிற்சியளிக்கப்பட்டதாகவே எண்ணுகின்றேன்.

சரி, ஏன் பாதிரியார் பணியை துறந்தேன்? சர்ச்சுகளுடன் எனக்கு எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ஒரு கத்தோலிக்க கிருத்துவனாக மகிழ்ச்சியாகவே இருந்தேன். என்னுடைய மதத்தை விட்டு விலகும் எந்தவொரு எண்ணமும் எனக்கு தோன்றியதில்லை.

தான் நாடுவோருக்கு வெவ்வேறு வழிகளில் நேர்வழி காட்டுகின்றான் இறைவன். உளவியல் ரீதியாக என்னை பாதிக்கப்பட செய்து நேர்வழி காட்டினான் அவன்.

நீங்கள் அறிந்திருக்கலாம், ஒரு கத்தோலிக்க பாதிரியார் மணம் முடித்து கொள்ள முடியாது. நான் தனிமையில் இருப்பதாக உணர்ந்தேன். கத்தோலிக்க சர்ச்சின் ஒரு அங்கமாக தொடரும் அதே வேலையில், பாதிரியார் பணியிலிருந்து விலகுவதென முடிவெடுத்தேன். மிக கடினமான முடிவு இது.என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்னுடைய முடிவு. இதிலிருந்து விடுபட வேண்டுமென்றால் எனக்கு புத்துணர்ச்சி தேவை. சுற்றுலா செல்வதென முடிவெடுத்தேன். என்னிடம் அப்போது அதிக பணமும் இல்லை. குறைந்த செலவில் எந்த இடம் விடுமுறைக்கு ஏற்றதென்று இன்டர்நெட்டில் தேடினேன். நான் கண்டு கொண்ட இடம் எகிப்து.

மணல், ஒட்டகங்கள், பிரமிடுகள் என்று இவை தவிர்த்து எகிப்தை பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது....

ஆ...இன்னொரு பிரச்சனையும் இருக்கின்றது....முஸ்லிம்கள்.....

நான் இதுவரை ஒரு முஸ்லிமை கூட என் வாழ்வில் சந்தித்ததில்லை. டி.வி.க்கள் என்ன சொல்கின்றனவோ அதுதான் நான் முஸ்லிம்களை பற்றி அறிந்திருந்தது. எகிப்திற்கு நான் செல்லும் பயணம் அபாயம் நிறைந்ததாக இருக்கலாம்.

என்னிடம் அப்போது பணமும் இல்லை...வேறு வழியும் இல்லை. எகிப்திற்கு செல்லுவதென முடிவெடுத்தேன்.

எகிப்தில் தங்கிருந்த அந்த ஒரு வாரம் என்னுடைய வாழ்க்கையையே மாற்றிவிட்டது. என் வாழ்வில் முதல் முறையாக இஸ்லாமை சந்தித்தேன்.

நான் முதன் முதலாக இஸ்லாத்தை பற்றி அறிந்து கொண்டது, இஸ்லாமை பற்றிய ஒரு புத்தகத்தாலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியாலோ அல்லது ஒரு முஸ்லிம் அறிஞராலோ அல்ல. காலணிகளை துடைத்து கொண்டிருந்த அந்த சிறுவனால் தான்.

அன்று அந்த சிறுவனை கடந்து சென்று கொண்டிருந்தேன்.

'அஸ்-------ஸ--------லாமு அலைக்கும்'

அவன் என்னை நோக்கி கூறிய வார்த்தைகள் இவை.

உங்கள் மீது அமைதி நிலவுவதாக என்ற அந்த வார்த்தைகள் அவன் உள்ளத்திலிருந்து வந்த வார்த்தைகள்.

என் ஓட்டலுக்கு அருகில் அவனது கடை இருந்ததால் நிறைய முறை அவனை கடந்து தான் செல்லுவேன். அவனிடம் பேசுவதற்கென்று சில அரபி வார்த்தைகளை கற்று கொண்டேன்.

அவனை கடந்து செல்லும்போது 'எப்படி இருக்கின்றாய்' என்று கேட்பேன்.

அவன் 'அல்ஹம்துலில்லாஹ் (எல்லாப் புகழும் இறைவனிற்கே)' என்று பதிலளிப்பான்.

ஆக, இஸ்லாம் எனக்கு அறிமுகமானது, அந்த சிறுவன் கூறிய "அஸ்ஸலாமு அலைக்கும்' மற்றும் 'அல்ஹம்துல்லில்லாஹ்' என்ற வார்த்தைகளால் தான்.

விடுமுறை முடிந்து என்னுடைய நாட்டிற்கு திரும்பினேன். இன்னும் எனக்கு இஸ்லாம் குறித்து தெரிந்திருக்கவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். முஸ்லிம்கள் என்பவர்கள் ஊடகங்கள் கூறுவது போன்று இல்லை.

கல்வி பயிற்றுவிப்பது (Idris Tawfiq has a degree in English language and Literature from the University of Manchester) என்னுடைய பின்னணியாக இருந்ததால் ஒரு பள்ளியில் ஆசிரியராக பணியில் அமர்ந்தேன். குறும்புக்கார சிறுவர்களை கொண்ட பள்ளி அது. மிகவும் குறும்புக்கார மாணவர்கள்.

அந்த சிறுவர்களில் அரபு மாணவர்கள் நிறைய பேர் இருந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள். என்னுடைய பணி, உலகின் ஆறு முக்கிய மதங்களான புத்தம், இந்து மதம், சீக்கியம், கிருத்துவம், யூத மதம் மற்றும் இஸ்லாம் குறித்து பாடம் எடுப்பது. கிருத்துவத்தை பற்றி நன்கு அறிந்தவன் நான். யூத மதத்தை பற்றியும் போதுமான அளவு அறிவு பெற்றிருந்தவன். மற்ற மதங்கள் குறித்து ஒன்றும் தெரியாது.

இஸ்லாம் குறித்து இந்த மாணவர்களுக்கு நல்ல முறையில் பாடமெடுக்க வேண்டுமென்றால் அந்த மார்க்கம் குறித்து நான் அறிந்திருக்கவேண்டும். ஆகையால், இஸ்லாம் குறித்து படிக்க ஆரம்பித்தேன்.

நிறைய படித்தேன். படித்த தகவல்களை விரும்ப ஆரம்பித்தேன்.

மூன்று, நான்கு மாதங்கள் சென்றிருக்கும்.....நாயகம் (ஸல்) அவர்களது பெயரை உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் என்னுள் தடுமாற்றத்தை உணர்வேன். அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் ஏதாவது செய்து சுதாரித்து கொள்வேன்.

ரமலான் மாதம் வந்தது....

இந்த சிறுவர்கள் என்னிடம் வந்தார்கள், 'சார், நாங்கள் தொழ வேண்டும். உங்கள் அறையில் தான் தரைவிரிப்பும் (Carpet), வாஷ்பேசினும் (Wash basin) உள்ளது. உங்கள் அறையில் நாங்கள் தொழலாமா?'

அனுமதித்தேன்.....

சிறுவர்கள் தொழுவதை பின்னால் உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். அவர்கள் தக்பீர் கட்டுவது, ருக்கூ(1) செய்வது என இவை என்னை வசீகரித்தது. அவர்களிடம் கூறாமல், இந்த சிறுவர்கள் தொழுகையில் என்னென்ன உச்சரிகின்றார்கள், அந்த வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்பது போன்றவற்றை இன்டர்நெட்டில் தேடி அறிந்து கொண்டேன்.

ரமலான் முடிவில், இந்த சிறுவர்கள் மூலமாக எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன்.

அது போல, ரமலான் மாத ஆரம்பத்திலேயே இந்த சிறுவர்களிடம் கூறியிருந்தேன், உங்களுடன் சேர்ந்து நானும் நோன்பு நோற்பேனென்று. அல்லாஹ்விற்காக அல்ல, இந்த சிறுவர்களை உற்சாகப்படுத்துவதற்காக...

ஆக, ராமலான் மாத முடிவில், எப்படி தொழ வேண்டுமென்பதை அறிந்திருந்தேன், நோன்பும் நோற்றிருந்தேன்.

மேலும் மாதங்கள் உருண்டோடின. முஸ்லிம்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை உணர்ந்திருந்தேன். அவர்கள் இனிமையானவர்கள் என்பதை அறிந்திருந்தேன். முஸ்லிம்களுடன் இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடியதாக இருந்தது.



இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்ள லண்டன் மத்திய மசூதிக்கு செல்ல ஆரம்பித்தேன். மாணவர்களுக்கு சொல்லி கொடுக்க அல்ல, நான் அறிந்து கொள்ள.

சில வாரங்களுக்கு பின்பு, யூசுப் இஸ்லாம் (பிரபல முன்னாள் பாடகரான கேட் ஸ்டீவன்ஸ்) அவர்களின் சொற்பொழிவை அந்த பள்ளிவாசலில் கேட்க கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. அந்த உரையின் முடிவில் அவரிடம் சென்றேன்.

'நான் முஸ்லிமல்ல. அறிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக கேட்கின்றேன், ஒருவர் முஸ்லிமாக என்ன செய்ய வேண்டும்'

அவர் கூற ஆரம்பித்தார்...

'இறைவன் ஒருவனே என்பதில் உறுதிப்பாடு கொண்டவர்கள் முஸ்லிம்கள்'

'நான் எப்போதும் ஒரு இறைவனின் மீதே நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்'

'முஸ்லிம்கள் ஐவேளை தொழுபவர்கள்'

'உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அரபியில் எப்படி தொழ வேண்டுமென்று எனக்கு தெரியும்'

என்னை புதிராக பார்த்தார் யூசுப் இஸ்லாம். தொடர்ந்தார்...

'முஸ்லிம்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள்'

'Actually, ரமலான் மாதம் முழுக்க நான் நோன்பு நோற்றிருக்கின்றேன்'

என் கண்களை நேரடியாக பார்த்த யூசுப் இஸ்லாம், ' சகோதரர், நீங்கள் ஏற்கனவே முஸ்லிம்தான். யாரை முட்டாளாக்க பார்க்கின்றீர்கள்"

பின்னால் 'அல்லாஹு அக்பர்(2) ' என்று மக்ரிப் தொழுகைக்கான அழைப்பை கூற ஆரம்பித்தார்கள். அனைவரும் தொழுகைக்காக செல்ல ஆரம்பித்தார்கள்.

நான் மது அருந்தியவனை போல அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர் கூறிய அந்த வார்த்தைகள் என்னை துளைத்து கொண்டிருந்தன.

தொழுகை நடக்கும் இடத்திற்கு சென்றேன். கீழே ஆண்களும், மேலே பால்கனியில், பெண்களும் தொழுகைக்காக அணிவகுக்க ஆரம்பித்தார்கள். பின்னால், தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன். தொழுகை ஆரம்பித்தது.

மிக மிக அழகான தருணம் அது. குரானின் வசனங்கள் ஓதப்பட..........அழ ஆரம்பித்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....அழுது கொண்டே இருந்தேன்....சிறு குழந்தையை போல அழுது கொண்டிருந்தேன்.....

உணர ஆரம்பித்தேன். இத்தனை நாளாக நான் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையின் அர்த்தம் இன்று இந்த அறையில் முடிவடைந்திருக்கின்றது.

தொழுகை முடிந்ததும் நேராக யூசுப் இஸ்லாமிடம் சென்றேன்.

'சகோதரர், நான் முஸ்லிமாக வேண்டுமென்று விரும்புகின்றேன். என்ன செய்ய வேண்டுமென்று சொல்லுங்கள்'

அவர் சொன்னார், 'நான் கூறுவதை திரும்ப கூறுங்கள். வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'

அவரை பின் தொடர்ந்து கூறினேன், 'வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவனே என்றும், முஹம்மது (ஸல்) அவர்கள் அவனது தூதர் என்றும் நான் சாட்சியம் கூறுகின்றேன்'

அங்கிருந்த சகோதரர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். அற்புதமான தருணம் அது.

முழுமையான முஸ்லிமாக வாழ்வது, முஸ்லிமல்லாதவரை இஸ்லாமை நோக்கி அழைக்கும் சிறப்பான யுக்தி என்று நான் உறுதியாக நம்புகின்றேன். அதனால், ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ விரும்புகின்றேன்.

நான் இப்போது மிகுந்த மன அமைதியுடன் உள்ளேன். நான் பெற்ற இந்த மகிழ்ச்சியை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். நான் நினைத்து கூட பார்த்திராத வழியில் அல்லாஹ் என்னை வழி நடத்தி கொண்டிருக்கின்றான்.

என்னுடைய அணுகுமுறை முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமல்லாது முஸ்லிம்களையும் குறிப்பாக இளைஞர்களை கவர்ந்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. இறைவன் நாடினால், தொடர்ந்து என்னுடைய அழைப்பு பணியை செய்து கொண்டிருப்பேன்"

சுபானல்லாஹ்...

இஸ்லாம் போதிக்கும் சிறு வார்த்தைகள் கூட ஒருவர் மனதில் ஊடுருவி இஸ்லாத்திற்கு நல்ல அறிமுகமாக இருப்பது ஆச்சர்யமடைய வைக்கின்றது.

முஸ்லிமல்லாதவரை நோக்கி நாம் சொல்லும் சலாம் கூட ஒரு சிறந்த அழைப்பு பணியாக இருப்பதற்கு சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களின் இஸ்லாம் நோக்கிய பயணம் ஒரு அழகிய உதாரணம்.

இஸ்லாம் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார் இத்ரீஸ் தவ்பிக். இவை மட்டுமல்லாது பத்திரிக்கைகள் மற்றும் இணைய தளங்களிலும் தன்னுடைய பங்களிப்பை செய்து வருகின்றார்.

உலகம் முழுதும் பயணம் செய்து அழைப்பு பணியில் ஈடுபட்டு வரும் சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் அவர்களை தங்கள் பகுதிக்கு/பல்கலைகழகத்திற்கு சொற்பொழிவாற்ற அழைக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அவருடைய தளத்தில் தங்களது விருப்பத்தை பதிவு செய்யலாம்.

சகோதரர் இத்ரீஸ் தவ்பிக் போன்றவர்களை தொடர்ந்து நம்மிடையே தோன்ற செய்து நம்முடைய ஈமானை அதிகரிக்க எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக..ஆமீன்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.



அரபி வார்த்தைகளுக்கான விளக்கங்கள்:
1. ருக்கூ - குனிந்த நிலையில் இறைவனை தொழுவது.
2. அல்லாஹு அக்பர் - இறைவனே மிகப் பெரியவன் (God is Great)

Brother Idris Towfiq's website:
1. idristawfiq.com. link

My sincere thanks to:
1. Canadian Dawah Association.

This article translated from (not a word to word translation):
1. Irish priest embraces Islam - Canadian Dawah Association website. link
2. IQRAA TV - British Catholic priest converted to Islam. link


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

thanks to : ஆஷிக் அஹமத் அ

திங்கள், 7 மார்ச், 2011

மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கான அழைப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!

சென்னையில் இயங்கி வரும் “இக்ராமுல் முஸ்லிமீன் சாரிடபுல் டிரஸ்ட்” என்ற அமைப்பின் சார்பாக “அற்புதப் படைப்பாளன்” – இப்பிரபஞ்சத்தின் இறைவன் பற்றிய கருத்தரங்கம் என்ற நிகழ்ச்சியை வரும் 13/03/2011 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடத்த உள்ளோம் – இன்ஷா அல்லாஹ். (கருத்தரங்கம் நடைப்பெறும் இடத்தின் முகவரி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)

நிகழ்ச்சியில்:-

1. சகோதரர் முஹிப்புல்லாஹ் (முன்னாள் புத்த பீட்சு – சுவாமி ஆனந்தாஜி),

2. சகோதரர் M. C. முஹம்மது (முன்னாள் கிருத்துவ போதகர் – கிருஸ்து ராஜா), .

3. சகோதரர் அஹமது சுஃபியான், ஆகியோர் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்துகின்றனர் மற்றும்

4. டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) &

5. முஃப்தி உமர் ஷெரிஃப் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

சகோதர, சகோதரிகளே! சென்னையை சேர்ந்த, தங்களுக்கு தெரிந்த, அறிமுகமான இஸ்லாத்தை அறிந்துக்கொள்ள நினைக்கும் மாற்று மத சகோதர, சகோதரிகளை இந்நிகழ்ச்சிக்கு அனுப்பி வையுங்கள். அல்லது எங்களுக்கு அவர்களின் முகவரி அல்லது மொபைல் எண் கொடுத்தால் அவர்களை நாங்கள் சந்தித்து / தொடர்பு கொண்டு அழைப்பிதழ் கொடுத்து வரவழைக்கின்றோம். பலர் இஸ்லாத்தை தெரிந்துக்கொள்ள விரும்புகின்றனர் ஆனால் அவர்களுக்கு சரியான தருணங்கள், விளக்கங்கள் கிடைப்பதில்லை.

எனவே இதுபோன்ற நிகழ்ச்சி அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையலாம். மாற்றார்களை இஸ்லாத்தின் பக்கம் வர தாஃவா செய்வது நமது கடமை; அதன் மூலம் அவர்களுக்கு இதாயத் தருவது இறைவனின் உரிமை.

இத்துடன் நிகழ்ச்சியின் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள: +91-91766 33023 – என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அன்புடன் சகோதரன்
ஹைதர் ஹுசேன் சென்னை

நன்றி : http://muthupet.org/

சனி, 12 பிப்ரவரி, 2011

கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாத்தை நோக்கி

இறைவன் மனிதனை உயர்ந்த நோக்கத்திற்காக படைத்துள்ளான். அவனை அறிந்து, நேசித்து, அவனை அடைவது தான் அவனது விருப்பம். பிறப்பின் மூலம் மனிதன் பல சமுதாயத்தில் சிதறி தோன்றியிந்தாலும் அவன் தான் நாடியவருக்கு நேர்வழி காட்டாமல் இல்லை...

அந்த அடிப்படையில் என்னையும் அவன் தேர்ந்தெடுத்து தான் விரும்பிய, அங்கீகரிகப்பட்ட மார்க்கமாம் இஸ்லாத்தில் இணைத்துள்ளான். நான் மட்டுமல்ல ஏராளமானோர் பல சமயங்களிலிருந்து இஸ்லாத்தை நோக்கி வந்த வண்ணமாகவே உள்ளனர். ஆனால் நான் வந்தது உலகத்தில் இன்று அதிகமானோர் இடம் பெற்றிருக்கும் கிறிஸ்தவத்திலிருந்து என்றால் அது இறைவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட மார்க்கம் இல்லையா என்ற கேள்வி தோன்றும். இதற்கு விடையாகத் தான் இந்த கட்டுரை இங்கே இடம் பெறுகிறது.

கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் வாழும் இந்த மனித இனம் ஒரு சிலரால் கவரப்பட்டு, தங்களின் வாழ்நாட்கள் மதத் தலைவர்களின் போதனையால் அடிமைப்படுத்தப்பட்டு, மன எழுச்சி குன்றிப்போய் வாழ்வதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம். ஏன் என்ற கேள்வியில்லாமல், தொலைந்து போன வாழ்வு வாடிய பயிராய் காய்ந்து போவதைவிட எதையும் ஏன், எதனால், எதற்காக என்ற பொதுவான கேள்வி கேட்டு அவரவர் தம் அறிவை கூர்மையாக்குவதே சிறந்தது. அப்போது அடிமைத்தளையில் ஒடுங்கிப்போன வாழ்வு புத்துயிர் பெற்று சீராக அமையும்.

யேசுநாதர் இந்த உலகில் ஒரு மதத்தை உருவாக்க வரவில்லை, மாறாக படைத்த இறைவனை மக்களுக்கு அறிமுகம் செய்யவும், அவனை மட்டும் வணங்கவும் கூறிச்சென்றார். பின்னால் வந்தவர்கள் கிரேக்க, ரோமானிய வழிபாடுகளை கிறிஸ்தவத்ததின் பெயரால் அரங்கேற்றினார்கள். அதற்கு உதாரணமாக யேசுநாதர் பேதுருவிடம் சொன்ன இறுதி பேரூரைதான் இத்தனை குழப்பத்திற்கும் காரணமானது. பேதுரு என்ற ராயப்பர் இறை தூதர் அல்ல, யேசுநாதரின் முதன்மை சீடர், அவருக்கு திருச்சபை உருவாக்க அதிகாரம் கொடுத்ததாக யோவான் தமது நூலில் யோவான் 21:15-17 வரை குறிப்பிடுகிறார். இந்த செய்தி வேறு எந்த எழுத்தாளரும் எழுதவில்லை!

இயேசுநாதர் உலகத்தை விட்டு செல்லுமுன் சீமான் பேதுருவைப் பார்த்து ”நீ என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக” என்ற மும்முறை மொழிந்ததை வைத்தே சிலர் இத்தாலியில் கத்தோலிக்க திருச்சபை என்ற பெயரில் தொடங்கினார்கள். இது நீகியா கருத்தரங்கு அரங்கேறிய கி.பி 325-க்குபின் என்பது குறிப்படத்தக்கது. அதுவரை போப் வகையறாக்கள் இருந்ததாக முறையான ஆதாரங்கள் எதுவும் இல்லை. திரித்துவம்—- அதாவது முக்கடவுள் கொள்கை என்ற போலிசித்தாந்தம் அதாவது ஏக இறைவனை மூன்றாகப்பிரித்து ஒன்றாக கருத வேண்டும் என்பதே நோக்கம். இதில் தான் மூச்சு முட்டுமளவு முடங்கி போய் மொத்த கிறித்தவரும் உள்ளனர். பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்ற மூன்றும் ஒருவர் தான் என்பது இவர்களின் வாதம். இதை எதிர்த்த பிஷப்புக்கள் அன்று கொல்லப்பட்டார்கள் என்பது வரலாற்று உண்மை. அர்யுஸ் என்ற பிஷப்பு கான்ஸ்டான்டி அரசனால் நாடு கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என்பதனை நமது நாட்டு வரலாற்றுப் புத்தகத்தில் கூட காணலாம்.

”நீ பூமியில் எதை கட்டுவாயோ அது பரலோகத்தில் கட்டப்படும். நீ பூமியில் எதை கட்டவிழ்ப்பாயோ அது பரலோகத்தில் கட்டவிழ்க்கப்படும்” என்று பேதுருவைப் பார்த்து இயேசுநாதர் கூறியதை இதற்கு ஆதாரமாக வைத்து (மத்தேயு 16:15-19) புதிய ஒரு சபையை இயேசுநாதர் பெயரால் அரங்கேற்றம் செய்தார்கள்

ஆனால் இயேசுநாதர் முஸ்லிமாக இருந்தார், விருத்தசேதனம் செய்யப்பட்டார். அவருடைய மார்க்கம் இஸ்லாமாக இருந்தது. அவர் தமக்கு முன் உள்ள வேதங்களை உண்மைப்படுத்தவே வந்தார் என்பது தான் உண்மை (மத்தேயு 5:17)

திருச்சபையின் நூதன உபதேசங்கள்:

ஞானஸ்நானம் : சிப்கத்
உறுதி பூசுதல் : பையத் (ஸ்திரப்படுத்தல்)
பச்சாத்தாபம் : தவ்பா (மனஸ்தாபப்படுதல்)
நற்கருணை : அப்பம், ரசம் (சிலுவை மரணம் நினைவு கூர்தல்)
அவஸ்தை பூசுதல் : சக்கராத் ஓதல்
குருத்துவம் : அஹ்பாரிஸம் (துறவறம்)
திருமணம் : நிக்காஹ்

இவையெல்லாம் கடைபிடித்து நடந்தால் சுவர்க்கம் போக டிக்கட் கிடைக்கும். மத குருமார்கள் இறைவனின் ஏஜென்டுகளாக செயல்படுகின்றார்கள்! துறவறத்துக்கு வித்திட்டதும், கிறிஸ்துவ சபை உருவாக வழி வகுத்ததும் பவுல் என்ற யூதன் ஆவார். இவர் இயேசுநாதரின் சீடரோ அல்லது தீர்க்கதரிசியோ இல்லை. இயேசுநாதரின் காலத்தில் கிறித்துவ எதிரியாக வாழ்ந்தவர் கிறிஸ்துவின் கொள்கைக்கு சுய விளக்கம் கொடுத்தும், சிலுவை மரணத்தை நியாயப்படுத்தியும், ஆப்ராஹாமின் கொள்கையையும், மோசேயின் நியாயப் பிரமாணத்தையும் நிறைவேற்ற முக்கியத்துவம் கொடுக்காமலும் இவராகவே பல கடிதங்கள் பல நாட்டவருக்கு எழுதி வேதவாக்கு என நம்பிடச் செய்தார்.

இவருடைய சித்தாந்தம் அன்றைய மத குருமார்களை பெரிதும் கவர்ந்ததால் பூசைப்பலி, திரித்துவக் கொள்கை, சிலுவை மரண வழிபாடு, பாவமன்னிப்பு ஆகியவை முக்கிய இடம் பிடித்தன.

கி.பி 1550 ஆண்டிற்கு பின்பு தான் திருச்சபை பல சபைகளாக பிரிந்தும் எதிர்த்தவர்கள் புரொட்டஸ்டன்டுகளாக மாறியும் கட்டுக் கோப்புகள் சீர்குலைந்தது இந்தியாவில் கிபி 1600-க்குப் பின்புதான் வெள்ளையர்கள் மூலமாக பல சபைகள் ஊடுருவின. பாமர மக்கள் பாவிகளாக இருந்தபடியால் இரட்சிப்பு இரத்தம் சிந்துதல் மூலம் தான் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று இயேசு நாதரை அதற்கு பலிகடாவாக்கி நம்பினார்கள்.

எனது மூதாதயரும் இந்த போலி சித்தாந்தத்துக்கு கட்டுப்பட்டு கிறிஸ்தவரானார்கள். நானும் நீண்ட காலமாய் இதை புரியாமல் தடுமாறி பல சபைகளின் உபதேசத்தை நாடி தேடி அலைந்து முடிவில் கிறிஸ்தவம் தான் உண்மை மார்க்கம் என குருட்டு நம்பிக்கையில் இருந்தேன்.

1995-ம் ஆண்டில் தான் திருக்குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தான் இயேசு நாதர் கூறிய அநேக உண்மைகள் இறைவன் மூலமாக அறிய முடிந்தது. போலியான உபதேசத்தால் வாழ்நாட்களின் பெரும் பகுதியை இழந்த நான் திருக்குர்ஆனை பல கோணங்களில் ஆய்வு செய்தேன். குர்ஆன் இறை தூதர் முஹம்மத்-வின் வார்த்தையாகவோ அல்லது தனி மனித கருத்தாகவோ அல்லாமல் அதன் பெரும்பாலான வசனங்கள் நபியே கூறுவீராக என்ற ஏவலின் அடிப்படையில் அமைந்த காரணத்தால் திருக்குர்ஆன் இறைவேதமே என புரிந்து கொண்டேன்.

இத்திருமறை தனி மனித வழிபாட்டை தரைமட்டமாக்கி சிந்திக்க தடையாக இருந்த புரோகித ஏஜென்டுகளையும், மத சித்தாந்தங்களையும், புறம் தள்ளி உண்மையை நன்கு உணர வைத்து விட்டது. அதாவது இயேசு நாதர் எப்படி பிறந்தார், இறைவன் மூலம் அவர் செய்த அற்புதங்கள், சிலுவையில் அறையவிடாமல் பாதுகாத்ததும் இதில் வருவதை காணலாம்.

இறைவனை எப்படி அறிவது, வணங்குவது என்பதையும் அவனை அடையவுள்ள எல்லா வழிமுறைகளையும் இறைதூதர் முஹம்மத் அவர்களுக்கு இறைவன் வழங்கியதை பார்க்கும் போது இயேசு நாதர் தமக்குப் பின்னால் வரவிருக்கும் ஒருவரை அறிமுகம் செய்தது இந்த முஹம்மத் நபியைத்தான் என பூரணமாக அறிந்து கொண்டேன். இதை மத்தேயு 21:33-44, யோவான் 16:7ல் காணலாம். திருமறை குர்ஆனில் 61:6ல் கூட இயேசுநாதரின் முன்னறிவிப்பைக் காணலாம்.

சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சாத்தியங்களுக்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாக பேசாமல் நாம் கேள்விப்பட்டவைகள் யாவையும் சொல்லி வரப்போகிற காரியங்களைக் குறித்து உங்களுக்கு அறிவிப்பார். யோவான் 16:13-ல் இதைப் பார்க்கிறோம். இதை சற்று விரிவுபடுத்தி படித்தால் திருமறை குர்ஆனில் 53:6-லி வரும் வசனங்கள் இதற்கு சான்றாய் அமைவதைக் காணலாம். சத்திய ஆவியானவர் கபிரியேல் என்ற வானவர் மூலம் இறை வசனங்கள் நபிக்கு வழங்கப்படுவதும், நபிநாதர் மன இச்சைப்படி பேசாமல், கேள்விப்பட்டதை பேசுவதையும் இறைவன் வெளிப்படுத்திய திருமறை குர்ஆனில் காணலாம்.

எனவே இறைவன் கூற்றுப்படி (2:79) தங்களின் கரங்களால் ஒரு நூலை எழுதி வைத்துக் கொண்டு, பின்னர் அது இறைவனிடமிருந்து வந்தது என்று சொல்லுகிறவர்களுக்கு கேடு என்பதை குர்ஆன் மூலம் புரிந்து கொண்டேன். சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக்கூடியதாகவே இருக்கிறது (17:81) எனவே கிறிஸ்தவத்திலிருந்து இஸ்லாம் நோக்கி வந்தது பெரிய வியப்பொன்றுமில்லை. தங்கள் சொந்த மக்களை சந்தேகமில்லாமல் அறிவதைப்போன்று

போன்று வேதம் கொடுக்கப்பட்டவர்கள் இந்த வேதத்தையம், இந்த நபியையும் அறிந்து கொள்வார்கள் (திருக்குர்ஆன்: 6:20)

மேலும் இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் அது ஒரு போதும் இறைவனால் அங்கீகரிக்கப்படமாட்டாது. மறுமைநாளில் அவர் நஷ்டவாளிகளில் ஒருவராய் இருப்பார் (அல்குர்ஆன் 3:85)

இப்படி அனேக வசனங்கள் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதினால் இயேசுநாதரைக் குறித்தும், அவருடைய தாயாரைக் குறித்தும் வரம்பு மீறாமல் இறைவனின் செய்திகளை நம்புவதே ஒரு உண்மை விசுவாசியின் நிலையாகும். இயேசு நாதர் இறைவனுமில்லை, இறைவனுடைய மகனுமில்லை, மாறாக மரியாளின் மைந்தனும், இறைவனுடைய வார்த்தையுமாவார். இதை அறிந்தவர் இயேசு நாதரின் மார்க்கமாம் இஸ்லாத்தில் இணைவது உறுதி. அந்த அடிப்படையில் நான் இஸ்லாத்தில் இணைத்தது மிகப்பெரிய வியப்பொன்றுமில்லை.

வியாழன், 6 ஜனவரி, 2011

பிரிட்டனில் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

லண்டன்,ஜன.5:கடந்த பத்தாண்டுகளில் பிரிட்டனில் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய ஆய்வில்தான் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை நினைத்தைவிட ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகம் என தெரியவந்துள்ளது.

இஸ்லாத்தை பற்றிய தவறான பிரச்சாரம் பிரிட்டனில் பரப்பப்பட்டு வந்தாலும் ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் இஸ்லாத்தை தங்களது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்கின்றனர் என ஃபைத் மேட்டர்ஸ் நடத்திய சுதந்திர ஆய்வு தெளிவுப்படுத்துகிறது.

பழைய புள்ளிவிபரங்களின் படி 14 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலான நபர்கள் இஸ்லாத்தை தழுவுவதாக கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால், மக்கள் தொகை கணக்கெடுப்பில் மதமாறுபவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடாதது சிக்கலை ஏற்படுத்துகிறது.

ஒரு லட்சம் பேராவது இதுவரை இஸ்லாத்தை ஏற்றிருக்கலாம் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு பிரிட்டனின் தலைநகரில் மட்டும் 1400 பேர் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.

பிரிட்டனில் தேசிய அளவில் வருடந்தோறும் 5200 பேர் இஸ்லாத்தை தழுவி வருகின்றனர். ஜெர்மனியிலும், பிரான்சிலும் இஸ்லாத்தை தழுவுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 4000 ஆகும்.

கடந்த 2001 ஆம் ஆண்டில் பிரிட்டனில் 60,699 பேர் இஸ்லாத்தை தழுவியதாக கணக்கிடப்பட்டுள்ளது.
source:times of India

சனி, 4 டிசம்பர், 2010

ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்?

"ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்? ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார்? என்று குழம்பிப் போய் இருந்தேன்" ஒரு சகோதரியிடமிருந்து நமக்கு வந்த கடிதம்!

என்னைக் கவர்ந்த இஸ்லாம்!
-ஹாஜரா (எ) ராஜபுஷ்பம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு. என்னுடைய பெயர் ஹாஜரா. நான் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவள். கிருஸ்த்துவப் பெண்ணாக திகழந்தேன். என் பெயர் ராஜபுஷ்பம். கிருஸ்துவ மதத்தில் அதிக பற்றுள்ளவளாக இருந்தேன். பருவப் பெண்ணாக இருந்தபோது அதிகமாக சர்ச்சுக்குப் போவேன். பிரார்த்தனை பண்ணுவேன். எனது தாய் இறந்த பிறகு எனது அக்காவின் வளர்ப்பில் வளர்ந்தேன். எனது அக்கா ஒரு கிருஸ்துவ பையனைப் பார்த்து திருமணம் செய்து வைத்தாள். எனது கணவருடன் பிறந்தவர்கள் 5 தங்கைகள். அதில் முதல் தங்கை எங்களுக்குத் தெரியாமலே இஸ்லாத்தில் இருந்திருக்கிறார்கள். அது தெரியாமலே எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். சிறுவயதில் இருந்தே எனக்கு முஸ்லிம்னாலே பிடிக்காது. அவர்கள் அணிந்து வரும் பர்தாவை நான் "இது என்ன? அங்கி போட்டுக் கொண்டு வருகிறார்கள்?" என்று கேலி பண்ணுவேன். எனக்கு திருமணம் ஆகி 3 மாதம் கழித்து அவருடைய முதல் தங்கை வீட்டிற்கு வந்து இருந்தார்கள். அவர்கள் பர்தா அணிந்து வந்தவுடன் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. நான் எனது அக்காவிடம் போய் கூறினேன். அவருடைய முதல் தங்கை முஸ்லிமாக இருக்கிறாள் என்று கூறினேன். அதற்கு எனது அக்கா, அவள் ஒருத்தி தானே அப்படியிருக்கிறாள் - நீ எதையும் கண்டு கொள்ளாதே! என்றும் அவளிடம் பேசாதே! அவளை வீட்டிற்குள் விடாதே! என்றும் கூறினாள். நான் கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் என்னால் அவளை வெறுக்க முடியவில்லை. பிறகு அவருடைய முதல் தங்கை என்னையும் இஸ்லாத்திற்கு வரச் சொன்னாள். ஆனால் இஸ்லாத்தின் மீது எனக்கு தப்பான கண்ணோட்டமும், இஸ்லாம்னாலே எனக்கு பிடிக்காது. எனவே அவள் அழைத்ததற்கு நான் வரமாட்டேன் என்று கூறினேன். என்னுடைய கணவரின் தங்கை மீதி 4 பேரும் இஸ்லாத்திற்கு வந்து விட்டார்கள். அப்போது நான் அவர்களிடம் சென்று நீங்கள் அனைவரும் எங்களை அநாதையாக விட்டு விட்டு இஸ்லாத்திற்குச் சென்று விட்டீர்களே? ஏன்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்று கூறினார்கள். பைபிளில் ஒரு தூதரைப் பற்றிக் கூறும்போது அவருடைய வயது 60 ஆகவும் இன்னொரு இடத்தில் 40 ஆகவும் வரும். இவ்வாறு முரண்பாடான சில விஷயங்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் குர்ஆன் எந்த வித முரண்பாடும் இல்லாமல் இருந்தது. அப்போது தான் எனக்கு இஸ்லாத்தின் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தது. எனது கணவரிடம் இஸ்லாத்தைப் பற்றி கூறினேன். அவரும் இஸ்லாத்தைப் பற்றி புரிந்து கொண்டார். தொழுவது, வீட்டை விட்டு வெளியேறும்போது, பர்தா போட்டுக் கொண்டு வெளியே போவது, யாராவது வீட்டிற்கு வந்தால் ஸலாம் கூறுவது, குர்ஆன் ஒதுவது, இதுபோன்ற நிறைய விஷயங்கள் இஸ்லாத்தில் பிடித்து இருந்தது. அல்லாஹ் ஒருவன்தான் இறைவன் என்று தெரிந்தது. இஸ்லாம் ஓர் உண்மையான மார்க்கம்! அது முழுமையான மார்க்கம் என்று எனக்குத் தெரிந்தது! முஸ்லிம்கள் நல்ல பாசமாக நடந்து கொள்கிறார்கள். பைபிளில் ஏசு எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார். ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்? ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார்? என்று குழம்பிப் போய் இருந்தேன். குர்ஆனைப் படித்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அந்த கர்த்தரே அல்லாஹ் என்று! பிறகு கலிமா சொல்லி இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். இன்னும் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன் நீங்களும் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று துஆ செய்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

நன்றி :
அபூ அப்திர்ரஹ்மான்
http://christianpaarvai.blogspot.com/2010/12/blog-post.html

புதன், 29 செப்டம்பர், 2010

இஸ்லாமிய வங்கி முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது

உலகம் முழுவதும் இஸ்லாமிய வங்கிகளில் முதலீடு அதி வேகமாக வளர்ந்து வருவதாக மாலிக் சர்வார் கூறியுள்ளார். இவர் ஐக்கிய அமீரகத்தில் உள்ள மிக முக்கிய வங்கியான அபுதாபி இஸ்லாமிய வங்கியின் முக்கிய தலைமை பிரதிநிதிகளில்ஒருவர் ஆவார்.

நிகழ்ச்சி ஒன்றில் பன்னாட்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இவர் "உலகம் முழுவதிலும் பொருளாதார பின்னடைவு நேர்ந்து வரும் வேளையிலும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய வங்கிகளின் முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது 1 ட்ரில்லியன் இருக்கும் இந்த முதலீடு 2015க்குள் 2.7 ட்ரில்லியன் தொட்டுவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. (ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு இலட்சம் கோடி ஆகும்). வருடா வருடம் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி இரட்டை இலக்கமுடைய வளர்ச்சியாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி பத்து மடங்காக வளர்ந்து உள்ளது" என்றுள்ளார்.

மேலும் வெளிப்படையான அறங்காவல், நெறியான நடைமுறை மற்றும் இஸ்லாமிய முறைப்படி தீர்வுகள் எதிர்பார்க்கும் வாடிக்கைக்காரர்களால், இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களால் அவர் தெரிவித்துள்ளார்.

புதன், 11 ஆகஸ்ட், 2010

குர்ஆன் = ஆச்சர்யங்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக..

குர்ஆன் அருளப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அது மிக ஆழமான ஆராய்ச்சிக்கு உட்படுத்த பட்டிருக்கிறது. அறிவியல், இலக்கியம் என பல பிரிவுகளில் அது ஆராயப்பட்டிருக்கிறது. உலகில் அதிகம் ஆராயப்பட்ட புத்தகங்களில் குரானும் ஒன்று.

குரானின் இலக்கிய (literary miracles) ஆச்சர்யங்களை இந்த பதிவில் சிறிது பார்க்கவிருக்கிறோம்.


1. குரானை எந்த மொழிகளிலும் முழுமையாக மொழிப்பெயர்க்க முடியாது என சிலர் சொல்லி கேட்டிருப்பீர்கள். அது முற்றிலும் உண்மைதான். நீங்கள் அரபி தெரியாமல் தமிழ் மொழிப்பெயர்ப்பை மட்டுமே படிப்பவரா? அப்படியெனில் நீங்கள் குரானின் அழகை மிக சொற்பமே உணர்கிறீர்கள்.

ஏன்? இந்த பதிவின் முடிவில் அறிந்துக்கொள்வீர்கள்.

குர்ஆன் அருளப்பட்ட சமயம், மக்கா நகரம் அரேபிய ஷேக்ஸ்பியர்கள் நிரம்பி இருந்த நேரம். அரபி மொழி புகழின் உச்சத்தில் இருந்த தருணம். அப்படிப்பட்ட சமயத்தில் தான் குரான் இறங்கி அரேபிய இலக்கியவாதிகளை ஆச்சர்யத்தில் அதிர்ச்சி அடையச்செய்தது. தாங்கள் இதுவரை நினைத்திராத எழுத்து நடை. கொள்ளை அழகான வார்த்தைகள். நெஞ்சை ஊடுருவ செய்யும் பொருள்கள்.

அரேபிய புலவர்களால் நம்ப முடியவில்லை, நேற்று வரை நம்முடன் இருந்த எழுதப் படிக்க தெரியாத முஹம்மதா இந்த அற்புத வாக்கியங்களை கற்பனை செய்தார்? நினைத்துக்கூட பார்க்க முடியாத அதிசயம் இது. வேறு வழியில்லாமல் நம்பினார்கள், ஏனென்றால் இறைவனிடத்தில் இருந்து வந்ததென நம்புவது இன்னும் கடினமானது. அதற்கு முஹம்மது (ஸல்) அவர்களின் கற்பனை வளத்தை பாராட்டுவது எவ்வளவோ மேல்.

நபிகள் நாயகம் (ஸல்) எவ்வளவோ எடுத்து கூறியும் இது இறைவனின் வார்த்தைகள் என்பதை நம்ப மறுத்து விட்டார்கள். குரான் அடுத்த அதிர்ச்சியை கொடுத்தது.

நீங்கள் உண்மையாளர்களாய் இருந்தால் இது போன்ற ஒரு புத்தகத்தை, அல்லது பத்து சூராக்களை அல்லது ஒரு சூராவையாவது கொண்டு வாருங்கள் என்று அந்த அரபு ஷேக்ஸ்பியர்களை சவாலுக்கு அழைத்தது.

இன்று வரை எந்த அரபியராலும் அல்லது அரபி தெரிந்த எவராலும் குரானின் சவாலை எதிர்க்கொள்ள முடியவில்லை.

நீங்கள் கேட்கலாம், சரி முஸ்லிம் அரபியரால் தான் குரான் போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை, ஏனென்றால் அது அவர்களது உயிர் மூச்சு, குரான் போன்ற ஒன்றை உருவாக்க அவர்கள் தயக்கம் காட்டலாம், ஆனால் வளைகுடாவில் தான் பத்து மில்லியன் அரேபிய கிருத்துவர்களும், யூதர்களும் இருக்கிறார்களே, அவர்களால் கூடவா குரானை போன்ற ஒன்றை உருவாக்க முடியவில்லை?.

மிகச்சரியான கேள்விதான். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், யாராலும் குரானின் சவாலை எதிர்க்கொள்ளமுடியாது , முறியடிக்கமுடியாது...

ஏன்?

இதற்கு ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் விடை சொல்லிவிடலாம்.

நாம் பல புத்தகங்களை படித்திருப்போம், புத்தகத்தின் ஆசிரியர் ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு சொல்லுக்கு அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த சொல்லுக்கு பக்கத்தில் ஒரு எண்ணை (called superscript, eg. Hello1) குறிப்பிட்டு அந்த எண்ணுக்கான விளக்கத்தை அந்த பக்கத்தின் அடியில் (footnote) விளக்கமாக எடுத்துரைப்பார். இதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கலாம்.



ஆனால் குரானிலோ இது வேறு விதமாக வியப்பளிக்கும் விதத்தில் கையாளப்பட்டிருக்கிறது. எப்படியென்றால், ஒன்றை கூறிக்கொண்டே வரும்போது நடுவில் ஒரு வார்த்தைக்கோ அல்லது ஒரு சம்பவத்திற்கோ அதிக விளக்கம் தேவைப்பட்டால் அந்த வாக்கியம் அதே இடத்திலேயே நிறுத்தப்பட்டு எந்த சொல்லுக்கு விளக்கம் தேவையோ அதை விளக்க சென்றுவிடுகிறது. அந்த சொல்லை விளக்கியபிறகு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது.

இங்கு நீங்கள் ஒன்றை மிக கூர்மையாக கவனிக்க வேண்டும். ஒன்றை முதலில் சொல்லிவிட்டு நடுவில் வேறொன்றை விளக்கிவிட்டு மறுபடியும் பழைய இடத்திலிருந்து தொடர்கிறது.

குரானின் தனித்துவம் என்ன தெரியுமா? சொன்னால் மிரண்டு விடாதீர்கள்....

ஒன்றை சொல்லிக்கொண்டே வரும்போது அதை ஒரு சத்தத்திலும் (ஒரு வார்த்தையை உச்சரிப்பதால் ஏற்படக்கூடிய சத்தம்), நடுவில் ஒரு சொல்லுக்கு விளக்கம் தேவைப்பட்டால் அந்த விளக்கத்தை வேறொரு சத்தத்திலும், அந்த விளக்கத்தை முடித்துவிட்டு பழைய இடத்திலிருந்து தொடரும்போது மறுபடியும் பழைய சத்தத்திலும் தொடர்கிறது (Qur'an distinguishes those in an amazing audio format).

எளிமையாக சொல்லப் போனால் இரண்டு பழைய சத்தத்திற்கு நடுவில் ஒரு புது சத்தம். புது சத்தம் ஒரு சொல்லுக்கான விளக்கத்தை நடுவிலே அறியவைப்பதற்காக.

குரானை ஓதுபவரும் எளிதிலே அறிந்து கொள்வார், இது ஒரு சொல்லுக்கான விளக்கம் என்று. என்ன வியப்பின் நுனிக்கே சென்று விட்டீர்களா? இது குரானின் அதிஅழகான (The royal literature) இலக்கணத்திற்கு ஒரு சிறிய உதாரணம் தான்.

இப்போது சொல்லுங்கள், எந்த அரேபிய புலவரால் சத்தத்தை மாற்றி மாற்றி, அதே சமயம் பொருளும் மாறாமல் ஒரு முழு சூராவை கொண்டுவரமுடியும். சத்தத்தை மாற்றுவதெல்லாம் அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்று. குரான் முழுக்க இந்த நடை பின்பற்றப்படுகிறது, பொருள் மாறாமல் சுவை மாறாமல். படிப்பவரை கட்டிப் போடும் வல்லமை. ஒரு சிறிய உதாரணம் தான் இது, இன்னும் பல பல காரணங்கள் இருக்கின்றன ஏன் அவர்களால் முடியவில்லையென்று. இன்ஷா அல்லாஹ் மற்றுமொரு பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

இப்போது என் முதல் கேள்விக்கு வாருங்கள், ஏன் தமிழிலோ அல்லது வேறொரு மொழியிலோ குரானை முழுமையாக மொழிப்பெயர்க்க முடியவில்லை?

விளக்கம் இந்நேரம் கண்டுபிடுத்திருப்பீர்கள், வார்த்தைகளை மொழிப்பெயர்க்கலாம் (இதுவும் குரானை பொறுத்தவரை கடினந்தான்), சத்தங்களை?

Qur'an is the most difficult book on the face of earth to translate...

இறைவனே எல்லாம் அறிந்தவன்....

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியை காட்டுவானாக...ஆமின்

இன்ஷா அல்லாஹ் தொடரும்...

Note:
My sincere thanks to Br.Nouman of Bayyinah Institute for inspiring me to write this article.

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

குழந்தை பிறக்கும் நேரத்தை இறைவன் மட்டுமே அறிவான் என்பது உண்மையா?

Thanks To : sister : Fathima Farhana



" ... அவன் அறியாமல் எந்தப் பெண்ணும் கருவுறுவதில்லை; பிரசவிப்பதுமில்லை ..." (அல்குர்ஆன் 35:11).

"நிச்சயமாக மறுமை பற்றிய முற்றான அறிவு அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன்தான் (சூல்கொண்ட... மேகத்திலிருந்து) மழையைப் பொழிவிப்பவன். மேலும் கருவறையில் உள்ளவற்றை அறிபவனும் அவனே ..." (அல்குர்ஆன் 31:34).

"ஒவ்வொரு பெண்ணும் (தன் கருவறையில்) சுமந்து கொண்டிருப்பதையும் அவை சுருங்கிக் குறைவதையும் விரிந்து கொடுப்பதையும் அல்லாஹ் நன்கறிவான். ஒவ்வொன்றுக்கும் அவனிடம் தீர்மானிக்கப் பட்ட அளவு இருக்கின்றது" (அல்குர்ஆன் 13:8).

"மனிதர்களே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி உங்களுக்கு ஐயமிருந்தால் (அறிந்து கொள்ளுங்கள்!) நாம் நிச்சயமாக உங்களை (முதன் முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், அடுத்த கட்டத்தில் அலக்கிலிருந்தும், அதையடுத்து அரைகுறைத் தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்). மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருவறையில் தங்கச் செய்து, பின்பு குழந்தையாக வெளிப்படுத்துகிறோம் ..." (அல்குர்ஆன் 22:5)

போன்ற இறைவசனங்கள் உங்களுடைய ஐயத்துக்கு அடிப்படையாக இருக்கக் கூடும் என்று நினைக்கிறோம்.

முதலாவதாக,

ஒரு பெண் கருத்தரித்தால் அப்பெண்ணுக்கு இயல்பாகக் குழந்தையைப் பெற்றெடுப்பதற்கான காலக்கெடு என்பது அப்பெண் கருத்தரித்ததிலிருந்து 9 மாதங்கள் 9 நாட்கள் எனப் பொதுவாகக் கூறுவர். இக்கணக்கு அப்பெண்ணுக்குக் கடைசியாக ஏற்பட்ட மாதவிலக்கை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கணக்கைச் சொல்வதற்கு ஒரு மகப்பேறு மருத்துவர்கூட இப்போது தேவையில்லை. http://www.babycenter.com/pregnancy-due-date-calculator என்ற தளத்தில் கடைசியாக மாதவிலக்கு ஏற்பட்ட நாளைக் குறிப்பிட்டால் குழந்தை பிறக்கப் போகும் தேதி, மாதம், ஆண்டு எல்லாம் சொல்லி விடும். அந்தக் கணக்குச் சரியாகவுமிருக்கும்; சற்றே முன்-பின்னும் இருக்கும்.

"கம்ப்யூட்டரே தெரிந்து கொண்டு சொல்லும்போது கடவுளுக்குத் தெரிந்தாலோ தெரியா விட்டாலோ நமக்கென்ன?" என்ற கேள்வி வரும்.

கம்ப்யூட்டரையும் அதற்கான மென்பொருளையும் உண்டாக்கியவன் மனிதன். அந்த மனிதனையே உண்டாக்கியவன் இறைவன் என்பது முஸ்லிம்கள் மட்டுமின்றி, கடவுளை நம்புகின்ற எல்லா ஆத்திகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

கம்ப்யூட்டருக்கும் மருத்துவருக்கும் ஒரு பெண் கருவடைவதற்கு முன்னர், இன்ன நாளில், இன்ன நேரத்தில், இன்ன இனத்தில், இன்ன இடத்தில், இன்ன வகையில் குழந்தை பெறுவாள் என்பதைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால், இறைவனுக்கு அவையனைத்தும் முதல் மனிதனைப் படைக்கும்போதே அவனுடைய எத்தனையாவது தலைமுறையில் இந்தப் பெண் பிறந்து எத்தனை பிள்ளகளை எவ்வாறு, எப்போது பெற்றெடுப்பாள் என்பது துல்லியமாகத் தெரியும் என்பது ஆத்திகர்களின் நம்பிக்கையாகும். துல்லியம்தான் இங்குத் தலையாய பேசுபொருள்.

குறிப்பாக, முஸ்லிம்களின் நம்பிக்கைக்கு, கி.பி எழுநூறுகளின் தொடக்கத்தில் அருளப்பட்டு, அவர்கள் இறைவேதம் என்று நம்புகின்ற குர்ஆன் அடிப்படையாகத் திகழ்கின்றது. ஒரு குழந்தை கருவுருவதைப் பற்றி அது கூறுவதைக் கேட்போம்:

"(பெண்ணின் சினைமுட்டையோடு) கலவையான விந்திலிருந்து நாமே மனிதனைப் படைத்தோம் ..." (அல்குர்ஆன் 76:2).

முதன் முதலாகக் கருவுலகைப் பற்றி அறிவியல் உலகம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் கி.பி.1615இல்தான். ஆனால், "பெண்ணுடைய சினை முட்டையோடு ஆணுடைய விந்து கலந்து குழந்தை உருவாகிறது" என்று குர்ஆன் அறிவிப்பது ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் என்பது வியக்க வைக்கும் செய்தியன்றோ!

There are a multitude of statements in the Quran on the subject of human reproduction which constitute a challenge to the embryologist seeking a human explanation for them. It was only after the birth of the basic sciences which contributed to our knowledge of biology and the invention of the microscope, that humans were able to understand the depth of those Quranic statements. It was impossible for a human being living in the early seventh century to have accurately expressed such ideas. There is nothing to indicate that people in the Middle-East and Arabia knew anything more about this subject than people living in Europe or anywhere else.

முழுதும் படிக்க http://www.sultan.org/articles/QScience.html

குர்ஆன் கூறுவதைக் கேட்ட விஞ்ஞானிகளின் வியப்பு ஆவணமாக்கப் பட்டுள்ளது. http://www.youtube.com/watch?v=XaSfE1DW2-w

http://www.slideshare.net/moralsandethics/scientists-comments-on-h-quran

இரண்டாவதாக,

உங்களுடைய கேள்வியான இயல்புக்கு மாற்றமாக நடைபெறும் சிஸேரியன் விஷயத்துக்கு வருவோம்.

கருவைச் சுமக்கும் தாயின் உயிருக்கோ கருவிலிருக்கும் மகவின் உயிருக்கோ ஆபத்து ஏற்படும் என்ற நிலை ஏற்படும்போது அந்த ஆபத்தைக் களைவதற்கான கடைசியாகக் கையாளும் முயற்சியாகத்தான் சிஸேரியன் முறை கண்டுபிடிக்கப்பட்டது.

நாளடைவில், அது நாள்-நட்சத்திரம் மீது மோகம் கொண்ட சிலரால், இயல்பான பேறுநாளைக்கு முன்னதாகத் தேதி நிர்ணயிக்கப்பட்டுச் செயற்கையாக சிஸேரியன் மூலம் குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது.

ஆனால், எல்லா சிஸேரியன்களும் பெற்றோர் தேர்ந்தெடுக்கும் நேரத்திலோ மருத்துவர்கள் நிர்ணயிக்கும் நேரத்திலோ துல்லியமாக நடைபெறுவதில்லை என்பதுதான் உண்மை. காரணம், மகப்பேற்றில் கடைசி நேர இடைஞ்சல்கள் பல உள்ளன. நீங்கள் ஒரு மகப்பேறு மருத்துவரிடம் இதை உறுதி செய்து கொள்ளலாம்.

துல்லியத்தில் மனிதர் தோற்பர்; இறைவன் தோற்பதில்லை. ஏனெனில், மனிதனின் அறிவு வரையறுக்கப் பட்டது; இறைவனின் அறிவுக்கு வரையறை இல்லை.

அவனே முற்றாய் அறிந்தவன்.

புதன், 4 ஆகஸ்ட், 2010

முஸ்லிம் அமெரிக்கர்கள் - ஓர் ஆய்வு



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.

உங்கள் அன்றாட வாழ்வில் மார்க்கம் முக்கிய பங்கு வகிக்கின்றதா?
இது, பிரபல காலப் (Gallup poll) நிறுவனத்தால் சென்ற வருடம் முஸ்லிம் அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று.

இதற்கான பதில் -
ஆம் - 80%

முஸ்லிம் அமெரிக்கர்களில் பத்தில் எட்டு பேர் இஸ்லாம் தங்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர்.

காலப் நிறுவனத்தின் முஸ்லிம் அமெரிக்கர்கள் குறித்த இந்த ஆய்வறிக்கை கவனிக்கத்தக்க பல தகவல்களை நமக்கு தருகின்றது. அவற்றில் சில உங்கள் பார்வைக்காக....


1. இனப் பின்னணி:

முஸ்லிம் அமெரிக்கர்கள் பல்வேறு இனப் பின்னணியை கொண்டவர்களாக இருக்கின்றனர். அமெரிக்காவில், ஒரு மார்க்கம் பலவித இன மக்களால் அதிகம் பின்பற்றபடுகிறதென்றால் (Most Racially Diverse Religious Group) அது இஸ்லாம் தான்.

முஸ்லிம் அமெரிக்கர்களில் 35% பேர் கறுப்பின மக்கள் (African Americans). இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாத்தை தழுவியவர்கள் அல்லது தழுவியவர்களின் வாரிசுகள்.

28% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை வெள்ளையர்கள் என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்.

முஸ்லிம் அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் ஆசியர். சுமார் 18% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை எந்தவொரு இனத்தோடும் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.

கடைசியாக, சுமார் 1% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்களை ஹிஸ்பானிக் (Hispanic - Spanish speaking people/ஸ்பானிஷ் மொழி பேசும் மக்கள்) என்று அடையாளப்படுத்தி கொண்டுள்ளனர்..


2. தினசரி வாழ்வில் இஸ்லாம்:

முஸ்லிம்களின் அன்றாட வாழ்வில் இஸ்லாம் பெரும் பங்காற்றுகிறது. இதற்கு முஸ்லிம் அமெரிக்கர்களும் விதிவிலக்கல்ல.

சுமார் 80% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்கு வகிப்பதாக கூறியுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 15% அதிகம்.


இன்னும் சற்று விரிவாக கூற வேண்டுமென்றால், முஸ்லிம் அமெரிக்கர்களில் பெண்கள் 82% பேரும், ஆண்கள் 78% பேரும் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளனர்.

இங்கு கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் முஸ்லிம் அமெரிக்கரில் ஆண் பெண் என்று வித்தியாசம் இல்லாமல் இருபாலருடைய கருத்துக்களும் கிட்டத்தட்ட ஒன்றாகவே உள்ளன. ஆனால் அமெரிக்காவின் மற்ற மார்க்க மக்களை எடுத்துக்கொண்டால் வித்தியாசத்தை காணலாம்.

அதாவது, மற்ற மார்க்கங்களில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இந்த கருத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உண்டு. உதாரணத்துக்கு, கத்தோலிக்கர்களை எடுத்துக்கொண்டால் 75% பெண்களும், 62% ஆண்களும் தங்கள் மதம் தங்களுடைய அன்றாட வாழ்வில் முக்கிய பங்காற்றுவதாக கூறியுள்ளனர்.

அமெரிக்க சராசரியை எடுத்துக்கொண்டால், 72% பெண்களும் 58% ஆண்களும் இதே கருத்தை கூறியுள்ளனர்.


ஆக, அமெரிக்காவை பொறுத்தவரை மார்க்கப்பற்று என்பது ஆண்களை விட பெண்களுக்கே அதிகமுள்ளது. ஆனால் முஸ்லிம் அமெரிக்கர்களை பொறுத்தவரை இந்த வித்தியாசம் இல்லாமல் இருபாலரும் கிட்டத்தட்ட சமமான நிலையிலேயே உள்ளனர்.

முஸ்லிம் அமெரிக்க இளைஞர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வும் (77%) இதே முடிவுகளைத்தான் தருகிறது.

80% முஸ்லிம் அமெரிக்கர்கள் தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாமிற்கு முக்கிய பங்குள்ளதாக கூறியிருந்தாலும் இந்த சதவிதம் மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது குறைவுதான். உதாரணத்துக்கு, இதே நிறுவனத்தால் வேறு சில நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இதே கேள்விக்கு, எகிப்தில் 100% முஸ்லிம்களும், இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷில் 99% முஸ்லிம்களும், ஜெர்மன் முஸ்லிம்கள் 82% பேரும் "தங்கள் தினசரி வாழ்வில் இஸ்லாம் முக்கிய பங்காற்றுவதாக" தெரிவித்துள்ளனர்.


3. பெண்கள்

யூதர்களுக்கு அடுத்து அமெரிக்காவில் அதிகம் படித்தவர்களாக இருப்பவர்கள் முஸ்லிம்கள் தான்.

அதிலும், மேற்படிப்பு முடித்த மற்றும் பட்டம் பெற்ற முஸ்லிம்களில் ஆண்களை (39%) விட பெண்களே (42%) அதிகம்.


முஸ்லிம் பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வு, மற்றொரு குறிப்பிடத்தக்க தகவலையும் தருகின்றது. என்னவென்றால், பெண்கள் (40%), ஆண்களுக்கு (42%) நிகரான அளவில் பள்ளிவாசலுக்கு வருகின்றனர். இது, காலப் நிறுவனத்தால் சில முஸ்லிம் நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளோடு ஒப்பிடும் போது வேறுபடுகின்றது. இந்த நாடுகளில் பெண்கள் பள்ளிக்கு வருவது (அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது) குறைவே. ஆனால் அமெரிக்காவில் அந்த நிலை இல்லை. அங்கு ஆண்களும் பெண்களும் சமமான அளவிலேயே பள்ளிக்கு வருகின்றனர்.


4. மற்றவைகள்:

  • 70% முஸ்லிம் அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். இது அமெரிக்க சராசரியை விட 6% அதிகம்.
  • அமெரிக்காவின் பள்ளிவாசல்கள் பல்நோக்கு கூடங்களாக உள்ளன.
  • மது அருந்துவோரின் சதவிதம் மற்ற மார்க்க மக்களுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே உள்ளது. அதே சமயம், நான்கில் ஒரு முஸ்லிம் அமெரிக்கர் புகை பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளார்.
  • முஸ்லிம் அமெரிக்க பெண்களில் மூன்றில் ஒருவர் "professional Job"பில் உள்ளார்.
  • கறுப்பின முஸ்லிம் அமெரிக்கர்கள் மார்க்கத்தின் மேல் அதிக பற்று கொண்டுள்ளனர் (87%). இவர்களைத் தொடர்ந்து ஆசியர்களும் (86%)வெள்ளையர்களும் (72%) வருகின்றனர்.

காலப் நிறுவனத்தின் இந்த ஆய்வறிக்கையை (140 பக்கங்கள்) முழுவதுமாக படிக்க விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் இருந்து அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் (File Size : ~5.2 MB).

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.


My Sincere Thanks to:
1. Sister Dalia Mogahed.
2. Gallup's Center for Muslim Studies.

Reference:
1. Muslim Americans: A National Portrait - The center for Muslim Studies, Gallup, 2009.

One can download the complete document from:
http://www.muslimwestfacts.com/mwf/116074/Muslim-Americans-National-Portrait.aspx


உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ.

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

ரமழானை வரவேற்போம்

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம், அவனது அருளும் சாந்தியும் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது தோழர்கள் குடும்பத்தினர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!

நம்மை நோக்கி வந்திருக்கும் இம்மாதம் பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட ஒரு மாதமாகும். இம்மாதத்தில் ஒரு முஸ்லிம் கடைபிடிக்கவேண்டிய அனைத்து ஒழுங்கு முறைகளையும் அல் குர்ஆனும், அஸ்ஸுன்னாவும் தெளிவு படுத்தியுள்ளது.

ரமழான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.
‘இறைவிசுவாசிகளே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது எப்படி நோன்பு விதியாக்கப்பட்தோ அதே போன்று உங்கள் மீதும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது நீங்கள் அதன் மூலம் இறையச்சமுடையவர்கள் ஆகலாம்’ (அல்பகரா 2:183).

ரமழான் மாதத்திற்குரிய பிறையை பார்ப்பதன் மூலமோ பிறை தென்படாத பொழுது ஷஃபானை முப்பதாக கணக்கிடுவதன் மூலமோ நோன்பு நோற்பது கடமையாகும். ‘பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள், மேக மூட்டம் போன்ற காரணங்களால் பிறை தென்பட வில்லையானால் ஷஃபானை முப்பதாகக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

ரமழான் மாதத்தின் சிறப்பு: ‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து அல்குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி)..

இச்செய்திகள் அல்குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. அல் குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது அல் குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்ளவேண்டும்.

இரண்டாவது சிறப்பு: ‘ரமழான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின வாசல்கள் திறக்கப்படும், நரகத்தின் வாசல்கள் மூடப்படும், ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

மூன்றாவது சிறப்பு: ‘ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் பகலிலும் நரகத்திற்குரியவர்கள் விடுதலைச் செய்யப்படுகின்றனர், இன்னும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு பிரார்த்தனை இருக்கிறது’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

நான்காவது சிறப்பு: ‘ஐந்து வேளைத் தொழுகை, ஒரு ஜும்ஆவிலிருந்து மற்றொரு ஜும்ஆ, ஒரு ரமழானிலிருந்து மற்றொரு ரமழான் அவைகளுக்கு மத்தியில் நிகழ்ந்த பாவங்களுக்கு பரிகாரமாகும். பெரும் பாவங்களைத் தவிர’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஐந்தாவது சிறப்பு: ரமழான் மாதத்தில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவு இருக்கிறது, அது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்ததாகும்.

இம்மாதத்தில் நோன்பு நோற்பதன் சிறப்பு:

1-நோன்பு பரிந்து பேசும்: ‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

2-நோன்பை போன்ற ஓர் அமல் இல்லை: ‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).

3-கனக்கின்றி கூலி வழங்கப்படும்: ‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

4-நோன்பின் கூலி சுவர்க்கம்: ‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

5-நரகத்தை விட்டு பாதுகாப்பு: ‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

6-’நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).

7-முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்: ‘எவர் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

8-மனோ இச்சைகளை விட்டுத் தடுக்கும்: ‘வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

9-நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: ‘நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது ரப்பை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

10-கஸ்தூரியை விட சிறந்த வாடை: ‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி, முஸ்லிம்).

மேற்கூறப்பட்ட ஹதீஸை சிலர் தவறாக விளங்கியதன் காரணத்தால், பஜ்ருக்கு அதான் சொன்னது முதல் நோன்பை திறக்கும் வரை பல் துலக்காமல் இருக்கின்றனர். இதனால் சிலர் முன்னால் இருந்து பேசுவதோ அவர்களுக்கு பக்கத்திலிருந்து தொழுவதோ பலருக்கு கஷ்டமாக இருக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்த நிலையில் கணக்கின்றி பல் துலக்குவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இவர்களுக்கு தெரியாததே இதற்குக் காரணம்.

ரமழான் நோன்புடன் தொடர்புடைய சில சட்ட திட்டங்கள்

நிய்யத்தின் அவசியம்: ‘எவர் பஜ்ருக்கு முன்னர் நோன்பிற்குரிய நிய்யத்தை ஏற்படுத்திக் கொள்ளவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நஸாஈ).

பெரும்பாலான முஸ்லிம்கள் நிய்யத்தை தவறாக விளங்கி வைத்துள்ளனர், ‘நவய்து ஸவ்ம அதன் பர்ல ரமழானி ஹாதிஹிஸ் ஸனதி லில்லாஹி தஆலா’ ரமழான் மாதத்தின் பர்லான நோன்பை நாளை பிடிக்க நிய்யத்து வைக்கிறேன் என்று பரவலாகச் சொல்லி வருகின்றனர். இதற்கு இஸ்லாத்தில் எந்த ஆதாரமோ அடிப்படையோ இல்லை, நபிகளார் (ஸல்) அவர்களிடமோ, ஸஹாபாக்களிடமோ இதற்கு எந்த முன்மாதிரியுமில்லை. நிய்யத்தை வாயால் மொழிவது நபி வழிக்கு முரணான பித்அத் வழிகேடாகும். ‘நமது விடயத்தில் எவர்கள் புதிய விடயங்களை ஏற்படுத்திச் செய்வார்களோ அது மறுக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

நிய்யத்தை ஒருவர் மனதால் ஏற்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர வாயால் மொழிவது மார்க்கத்துக்கு முரணான ஒரு செயலாகும்.

ஸஹர் உணவு உட்கொள்வதின் சிறப்பு: ‘நீங்கள் ஸஹர் உணவு உட்கொள்ளுங்கள் நிச்சயமாக அதில் பரகத் இருக்கிறது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

‘நமது நோன்புக்கும் வேதக்காhர்களுடைய நோன்புக்கும் மத்தியில் உள்ள வேறுபாடு ஸஹர் உணவு உட்கொள்வதாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூதாவுத்).

‘ஸஹர் உணவு பரக்கத் நிறைந்ததாகும், அதை நீங்கள் விட்டுவிட வேண்டாம். ஒரு மிடரு தண்ணீரையாவது குடிப்பதை கொண்டு ஸஹர் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஸஹர் செய்பவர்கள் மீது அருள்புரிகிறான், வானவர்கள் அல்லாஹ்விடத்தில் அவர்களுக்கு அருள்வேண்டி பிரார்த்திக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

முஸ்லிம்கள் பலர் இந்தப் பாக்கியங்களை தவற விடுவது கவலையான விடயமாகும்.

ஸஹர் செய்வதை பிற்படுத்துவதும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்துவதும்:

‘எனது சமுதாயத்தினர் ஸஹர் செய்வதை பிற்படுத்தும் காலம் வரையும், நோன்பு திறப்பதை அவசரப்படுத்தும் காலம் வரை நன்மையில் இருக்கின்றனர்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

நிச்சயமாக எனது அடியார்களில் எனது நேசத்திற்குரியவர்கள் நோன்பு திறப்பதை அவசரப்படுத்துபவர்களாவர்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

நோன்பு திறந்தவுடன் ஒருவர் ஓத வேண்டிய பிரார்த்தனை:

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

‘தஹபல் லமஉ வப்தல்லதில் உரூகு வஸபதல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ்’

பொருள்: நரம்புகள் நனைந்து விட்டன, தாகம் தீர்ந்து விட்டது, கூலி அல்லாஹ்வின் நாட்டத்தின் படி உறுதியாகி விட்டது’ இந்த பிரார்த்தனை உறுதியான அறிவிப்பாளர் தொடருடன் பதிவாகி இருக்கிறது. அபூதாவுதில் பதிவாகி இருக்கும் இவ் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது, வேறு சில பிரபலமான பிரார்த்தனைகள் ஓதப்பட்டு வந்தாலும் அவைகள் பலவீனமான ஹதீஸ்களாகும்.

ஒருவரை நோன்பு திறக்கவைப்பதன் சிறப்பு:

‘எவர் ஒருவரை நோன்பு திறக்க வைப்பாரோ அவருக்கு அந்த நோன்பாளிக்குக் கிடைக்கும் கூலியைப் போன்றே வழங்கப்படும். அவரது கூலியில் எந்த ஒன்றும் குறைக்கப்பட மாட்டாது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத், திர்மிதி).

இரவுக் காலங்களில் நின்று வணங்குவது: ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களுடைய ரமழான் கால (இரவுத்) தொழுகை எவ்வாறு இருந்தது எனக் கேட்கப்பட்டது, அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுடைய இரவுத் தொழுகை ரமழானிலும் ரமழான் அல்லாத காலங்களிலும் பதினொன்றாகவே இருந்தது’ என கூறினார்கள். (புஹாரி).

‘எவர் ரமழான் காலங்களில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவனாகவும் நின்று வணங்குவாரோ அவரது முன்னைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

உம்ராச் செய்வது:

‘எவர் ரமழானில் உம்ராச் செய்வாரோ அவர் என்னுடன் ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போன்றாவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

ஒரு நோன்பாளி செய்வதற்கு விரும்பத்தக்க விடயங்கள்:

அதிகமாக அல் குர்ஆனை ஓதுவது, அதை விளங்குவது, மார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்வது, பிரார்த்தனையில், திக்ர்களில் ஈடுபடுவது, நல்லவற்றையே பேசுவது, நன்மையை ஏவுவது தீமையைத் தடுப்பது, ஸதகாக்கள் கொடுப்பது.

‘நபி (ஸல்) ரமழான் காலங்களில் ஜிப்ரீல் (அலை)யை சந்திக்கும் போது வேகமாக வீசும் காற்றைவிட தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்’ (புஹாரி).

ஒரு நோன்பாளி செய்யக்கூடாதவை:

பொய், புறம் பேசுவது, கோள் சொல்வது, அநாகரீகமாக நடந்து கொள்வது, நேரத்தை வீணான காரியங்களில் செலவழிப்பது, பார்க்கக்கூடாதவைகளைப் பார்ப்பது, கேட்கக்கூடாதவைகளைக் கேட்பது. இவைகளை ஒரு முஸ்லிம் எல்லாக் காலங்களிலும் தவிர்ந்திருக்கவேண்டும்.

‘எவன் பொய் சொல்வதையும், அதன் படி நடப்பதையும், விட்டு விடவில்லையோ அவன் பசியோடும், தாகத்தோடும் இருப்பதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை, என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி).

‘எத்தனையோ நோன்பாளிகள் அவர்களது நோன்பின் மூலமாக அவர்கள் பெற்றுக் கொண்டது பசியையும், தாகத்தையும் தவிர வேறெதுவுமில்லை’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (அஹ்மத், இப்னுமாஜா).

நோன்பின் மூலம் அல்லாஹ் நம்மிடமிருந்து எதிர்ப்பார்க்கும் அந்த உயரிய பண்புகளை அடைய முயற்சிப்போமாக!


http://www.islamkalvi.com/portal/?p=3458