
வாஷிங்டன்:உலகில்
கோடிக்கணக்கான கிறிஸ்தவர்களின் வழிப்பாட்டிற்குரியவராக கருதப்படும் இயேசு
கிறிஸ்து ஒரு முஸ்லிம் என பிரபல அமெரிக்க பேராசிரியர் தனது நீண்ட ஆய்வில்
கண்டுபிடித்துள்ளார்.
அமெரிக்காவில் அயோவா லூதர் கல்லூரியில் மத
விவகாரத்துறை பேராசிரியர் ராபர்ட் எஃப்.ஷெடிங்கர் தாம் இயேசு முஸ்லிம்
என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கிறார். was jesus a muslim? என்ற தனது புதிய
நூலில் அவர் இதனை தெளிவுப்படுத்துகிறார்.

மதங்கள் குறித்த ஷெடிங்கரின் கற்பித்தல்
குறித்து வகுப்பில் ஒரு மாணவி எழுப்பிய கேள்வியைத் தொடர்ந்து அவர்
இஸ்லாத்தைக் குறித்தும் இதர மதங்களைக் குறித்தும் அதிகமாக ஆராய
தீர்மானித்தார்.
“இஸ்லாம் மார்க்கத்துடன் தொடர்பில்லாத
காரியங்களை நான் கற்பிப்பதாக முஸ்லிம் மாணவி ஒருவர் சுட்டிக்காட்டியது
எனக்கு இஸ்லாத்தைக் குறித்து கூடுதலாக ஆராய தூண்டுகோலாக அமைந்தது”- என
ஷெடிங்கர் கூறுகிறார்.
ஃபாக்ஸ் சானலுக்கு அளித்த பேட்டியில்
ஷெடிங்கர் கூறியது: ‘எனது கற்பித்தல் முறை மற்றும் மதங்களைக் குறித்த
அனைத்து புரிதல்களையும் மீளாய்வுக்கு உட்படுத்த மாணவியின் தலையீடு
தூண்டுகோலாக அமைந்தது. இயேசுவிற்கு ஏற்ற மதம் இஸ்லாமாகும். ஏனெனில் அது ஒரு
மதம் அல்ல. மாறாக அது சமூக நீதிக்கான இயக்கமாகும். இயேசுவின்
வாழ்க்கையும், அவரது நீதிக்கான செயல்பாடுகளும் இஸ்லாத்தோடு ஒத்துப்போகிறது.
ஆகையால்தான் இயேசு முஸ்லிம் என நான் முடிவுச்செய்தேன்.’ இவ்வாறு லூதர்
கல்லூரியின் மத விவகார பாடத்துறையின் தலைவரான ராபர்ட் எஃப்.ஷெடிங்கர்
கூறினார்.
வகுப்பில் முஸ்லிம் மாணவி கேள்வி
எழுப்பியது 2001-ஆம் ஆண்டிலாகும். அதன் பின்னர் அவர் தனது உண்மையை தேடிய
ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் என ஃபாக்ஸ் சேனல் கூறுகிறது.
நன்றி :www.thoothuonline.com/jesus-was-a-muslim-claims-us-religions-professor/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக