புதன், 31 அக்டோபர், 2012

ஹைதராபாத்தை சேர்ந்த ஒர் கிறிஸ்தவ குடும்பமே துபையில் இஸ்லாத்தை தழுவியது...

மாஷாஅல்லாஹ்..!!



துபையில் உள்ள இஸ்லாமிய வழிகாட்டி மையத்தில் ஹைதராபாத்தை சார்ந்த கிருஸ்தவ (புரட்டஸ்டன்ட்) பிரிவில் இருந்து, ஐந்து உறுபினர்களை கொண்ட ஒரு குடும்பமே இஸ்லாத்தை தழுவியது. இந்த மையத்தில் தினமும் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது வழக்கம் என்றாலும் இது போன்று முழு குடும்பமுமே இஸ்லாத்தை தழுவியது மகிழ்ச்சி அடைய செய்கின்

றது.


ஹைதராபாத்தை சேர்ந்த ஜேம்ஸ் என்கின்றவர் தன் குடும்பத்துடன் துபையில் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவியும், மகளும், மகனும் உள்ளனர். மகன் திருமணமாகி இவரும் மனைவியுடன் வசித்து வருகின்றார். இந்த குடும்பம்தான் தற்போது இஸ்லாத்தை தழுவி முறையே தந்தை முஹம்மது என்றும், இவரின் மனைவி மரியம் என்றும், மகள் ஆயிஷா என்றும் மகன் ஈஸா என்றும் இவரின் மனைவிக்கு சாரா என்றும் அழகான இஸ்லாமிய பெயர்களை சூட்டி தங்களை இஸ்லாமிய குடும்பத்துடன் இணைத்து கொண்டுள்ளனர்.


இஸ்லாத்தை ஏற்ற இவர்களைப்பற்றி துபாய் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் தலைமை வழிகாட்டி ஹுதா அல் காபி கூறுகையில், இவர்களாகவே இங்கு வந்து கலிமாவை முன்மொழிந்து தாங்களாகவே இஸ்லாமிய பெயர்களை சூட்டி கொண்டதாகவும், இவர்களுக்கு இங்கு யாரும் இஸ்லாத்தை போதிக்கவில்லை என்றும் இவர்களின் ஆர்வம் தம்மை பிரமிக்க வைத்ததாகவும் கூறி, ஒரு கைப்பெட்டி நிறைய இஸ்லாமிய வாழ்க்கை புத்தகங்கள் மற்றும் சி.டிக்களை வழங்கியதாகவும் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை தழுவியதும் இவர் இங்குள்ள கலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், கடவுள் இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ இருக்க முடியாது என்றும், ஒரே கடவுள் கொள்கைதான் சரியான தேர்வு என்றும் கூறியுள்ளார். மேலும் இவர் கூறுகையில் கடந்த இரண்டு வருடமாக தான் இஸ்லாமிய புத்தகங்களை படித்து இஸ்லாத்தை அறிந்து கொண்டதாகவும் குரானின் ஆங்கில பதிப்பை படித்து இஸ்லாத்தை உணர்த்து கொண்டதாகவும், தன்னுடைய சுயவிருப்பத்தின் பெயரிலேயே இஸ்லாத்தை ஏற்றதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு அஹமது தீதாத், ஜாகீர் நாயக் மற்றும் யூசுப் எஸ்டேட் போன்ற மத வழிகாட்டிகளின் பேச்சுக்கள் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.


தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதை இந்தியாவில் உள்ள தங்களின் மற்ற உறவினர்களுக்கு தெரியும் என்றும், இதைபற்றி அவர்கள் ஒன்றும் கூறவில்லை என்றும், ஊரில் உள்ள அவர்களுக்கும் இஸ்லாத்தை எத்தி வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். நாமும் இவர்களுக்காக துவா செய்து இவரின் மற்ற குடும்ப உறுப்பினர்களும் இஸ்லாத்தை ஏற்று அதன் தூய வடிவில் வாழ துவா செய்வோம்.

அதிரை முஜீப்.
source:http://www.khaleejtimes.com/kt-article-display-1.asp?xfile=data%2Ftodayevent%2F2012%2FOctober%2Ftodayevent_October32.xml&section=todayevent
 
NANTRI - அதிரை MUJEEB
புதன், 31 அக்டோபர், 2012

செவ்வாய், 23 அக்டோபர், 2012

இஸ்லாத்தை ஏற்ற பிரபல ஃப்ரெஞ்ச் ராப் பாடகி டயாம்ஸ்

பிரான்ஸ் அரசாங்கம் பெண்கள் முகத்தையும் சேர்த்து மூடி ஹிஜாப் அணிவதை தடை செய்கிறது. இதை மீறுபவர்கள் அரசால் தண்டிக்கப்படுவார்கள் என்று அரசாணை கூறுகிறது. தனி மனித சுதந்திரத்தில் எப்படி பிரான்ஸ்
 அரசு மூக்கை நுழைக்கலாம் என்று நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்வோர் யாரும் கேள்வி கேட்பதில்லை. ஒருக்கால் அரசுக்கு இதன் மூலம் சில தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற எச்சரிக்கை உணர்வாகவும் இருக்கலாம். குர்ஆன் முகத்தை மூடச் சொல்லி கட்டளையிடவில்லை என்பதையும் இங்கு கவனிக்க வேண்டும்.

அதே ஃபிரான்ஸில் அதிரடியாக பிரபல ராப் பாடகி டயாம்ஸ் தனது வாழ்வியலை இஸ்லாமாக மாற்றிக் கொண்டு சமீபத்தில் ஹிஜாபோடு கண்ணியமான தோற்றத்தில் தொலைக் காட்சியில் பேட்டியளித்து பரபரப்பை உண்டு பண்ணியுள்ளார்.

32 வயதாகும் இவரது இயற்பெயர் மெலோனி ஜியார்ஜியடிஸ். சில காலம் போதை மருந்துக்கும் அடிமையாய் இருநதார். கடுமையான மன அழுத்தத்துக்கும் ஆளாகியிருந்தார். மன நிம்மதி இழந்து தவித்து பல இடங்களிலும் சிகிச்சை பெற்றார். எந்த பலனும் இல்லை. ஒரு முறை இவரது தோழி இவரோடு பேசிக் கொண்டிருக்கும் போது இடையில் 'இரு தொழுது விட்டு வருகிறேன்' என்று சென்றதை ஆச்சரியத்தோடு பார்த்தார். இந்த அளவு இந்த தொழுகைக்கு முக்கியத்துவமா? அப்படி என்ன இருக்கிறது இந்த குர்ஆனில் என்று தொடர்ந்து குர்ஆனை படிக்க ஆரம்பித்தார். குர்ஆன் அவரது மனதை ஆட்கொண்டது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தார். குர்ஆனை நன்கு படித்து தெளிந்தவுடன் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக சுவீகரித்துக் கொண்டார். இவரது முடிவை இவரது ரசிகர்கள் பலரும் கடுமையாக எதிர்த்துள்ளனர். எவரைப் பற்றியும் கவலைப்படாமல் முழு ஹிஜாபோடு சமீபத்தில் தொலைக் காட்சிக்கு பேட்டியும் கொடுத்துள்ளார். திருமணமான இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

'சிலர் சொல்வது போல் எவரது மிரட்டலுக்காகவும் நான் இஸ்லாத்தை ஏற்கவில்லை. குர்ஆனை ஆராய்ந்து தெளிவு கிடைத்த பிறகே எனது வாழ்க்கையை மாற்றிக் கொண்டுள்ளேன். எனது முடிவால் சிலருக்கு வருத்தம் உள்ளதை அறிவேன். எனக்கு தேவை மன நிம்மதி. அது இஸ்லாத்தில் கிடைத்துள்ளது. இறைவன் இட்ட கட்டளைகளை நான் அடி பிறழாது பின்பற்றுவேன். இஸ்லாத்தை ஏற்று முதன் முதலாக எனது நெற்றி இறைவனை வணங்க தரையை தொட்டபோது இனம் புரியாத சந்தோஷம் என்னுள் பரவுவதை உணர்ந்தேன். அந்த உணர்வுகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது. எனக்கு எனது அமைதியான வாழ்வுதான் முக்கியம். மற்றவை எல்லாம் பிறகுதான். இதை அனைவரும் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.' என்கிறார் டயாம்ஸ்.

இஸ்லாத்தை ஏற்ற பிறகு போன மாதம் அளித்த பேட்டி.

சாதாரண ஒரு மனிதன் இஸ்லாத்தை ஏற்றால் அது அவனுக்கு மறுமை வாழ்வை சிறப்பாக்குவதோடு அவனது உலக வாழ்விலும் அழகிய வாழ்க்கை நெறியைப் பெற்றுக் கொள்கிறான். ஆனால் இந்த பெண்மணி புகழின் உச்சியில் இருக்கும் போது இந்த முடிவை எடுக்கிறார். இதனால் இசைத் துறையை கை கழுவ வேண்டி வரும். பொது மக்கள் முன்னிலையில் பல ஆண்களோடு இனி நடனமாட முடியாது. மிகப் பெரும பொருளாதார இழப்பும் ஏற்படும். ஃப்ரெஞ்ச் அரசாங்கத்தின் கோபத்துக்கும் ஆளாக நேரிடும். பேரும் புகழும் இனி இந்த மங்கையை தேடி இந்த உலகில் வராது. இருந்தும் அதை அனைத்தையும் தூர எறிந்து அழகிய வாழ்வு முறையை இவ்வுலகத்துக்கும் மறு உலகத்துக்கும் தேர்ந்தெடுத்துள்ள இந்த சகோதரியை இரு கரம் நீட்டி அரவணைத்துக் கொள்வோம்.

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இவரை யாரும் கத்தியை காட்டி மிரட்டி இஸ்லாத்தை ஏற்கச் சொல்லவில்லை. பணம் காசு தருகிறோம் இங்கு வந்து விடு என்று யாரும் ஆசை காட்டவில்லை. 'வாளாலும் பணத்தாலும் இஸ்லாம் வளர்ந்தது' என்று கூறுபவர்களுக்கு இந்த பெண்மணி அழகிய பதிலை அளித்துக் கொண்டிருக்கிறார்.


'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது,

முஹம்மதே! இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்'

-குர்ஆன் 110:1,2,3.

Reference By : http://suvanappiriyan.blogspot.com/ &
http://english.alarabiya.net/articles/2012/10/01/241253.html


இவன்

முஹம்மது இக்பால், (MIB)
அமீர் , இஸ்லாமிய தவாஹ் குழுமம் http://www.facebook.com/groups/islamicdawah1


Join our Islamic Dawah Group: http://www.facebook.com/groups/islamicdawah1/

Join with us : http://www.facebook.com/CuddaloreMuslimFriend

Join via Mobile : http://m.facebook.com/a/profile.php?fan&id=330540656965013&gfid=AQBUn7a3fLJdzZtd