புதன், 29 செப்டம்பர், 2010

இஸ்லாமிய வங்கி முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது

உலகம் முழுவதும் இஸ்லாமிய வங்கிகளில் முதலீடு அதி வேகமாக வளர்ந்து வருவதாக மாலிக் சர்வார் கூறியுள்ளார். இவர் ஐக்கிய அமீரகத்தில் உள்ள மிக முக்கிய வங்கியான அபுதாபி இஸ்லாமிய வங்கியின் முக்கிய தலைமை பிரதிநிதிகளில்ஒருவர் ஆவார்.

நிகழ்ச்சி ஒன்றில் பன்னாட்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இவர் "உலகம் முழுவதிலும் பொருளாதார பின்னடைவு நேர்ந்து வரும் வேளையிலும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய வங்கிகளின் முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது 1 ட்ரில்லியன் இருக்கும் இந்த முதலீடு 2015க்குள் 2.7 ட்ரில்லியன் தொட்டுவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. (ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு இலட்சம் கோடி ஆகும்). வருடா வருடம் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி இரட்டை இலக்கமுடைய வளர்ச்சியாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி பத்து மடங்காக வளர்ந்து உள்ளது" என்றுள்ளார்.

மேலும் வெளிப்படையான அறங்காவல், நெறியான நடைமுறை மற்றும் இஸ்லாமிய முறைப்படி தீர்வுகள் எதிர்பார்க்கும் வாடிக்கைக்காரர்களால், இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களால் அவர் தெரிவித்துள்ளார்.

ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

மேரி மக்கில்லோப் கிறிஸ்தவ புரோகிதர்களின் சிறுவர் பாலியல் லீலைகளை வெளிப்படுத்தியவர்

சிட்னி,செப்.26:ஆஸ்திரேலியாவின் முதல் கத்தோலிக்க பரிசுத்தராக அறிவிக்கப்படவுள்ள மறைந்த கன்னியாஸ்திரி புரோகிதர்களின் சிறுவர் பாலியல் பலாத்காரங்களை வெளிக்கொணர்ந்ததற்காக சர்ச் அதிகாரிகளின் கோபத்திற்கு காரணமானார் என எ.பி.சி டாக்குமெண்டரி கூறுகிறது.

கல்வித் துறையில் பணியாற்றியவரும், சிஸ்டர்ஸ் ஆஃப் தின் செண்ட் ஜோஸஃப் ஆஃப் தி ஸேக்ரட் ஹார்ட் என்ற அமைப்பின் ஸ்தாபகரான மேரி மக்கில்லோப்பிற்கு போப் பெனடிக்ட் அடுத்தமாதம் பரிசுத்தர் பட்டத்தை வழங்கவுள்ளார்.

ஆனால், இவர் தனது வாழ்நாளில் புரோகிதர்களின் சிறுவர் பாலியல் லீலைகளை வெளிப்படுத்தியதால் சர்ச் அதிகாரிகளின் கோபத்திற்கு காரணமானார் என்ற செய்தியை எ.பி.சி ஒளிபரப்ப திட்டமிட்டுள்ள ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கில்லோப்பிற்காக பரிசுத்தர் பதவிக்கு பிரச்சாரம் நடத்தியிருந்த ஃபாதர் பால் கார்டினர்தான் ஆவணப்படத்தில் இதனை
வெளிப்படுத்தியுள்ளார்.

மக்கில்லோப்பும் இதர கன்னியாஸ்திரிகளும் புரோகிதர்களுக்கெதிராக பாலியல் புகார்களை மேலதிகாரிகளுக்கு அளித்தத்தைத் தொடர்ந்து ஒரு புரோகிதரை அயர்லாந்துக்கு அனுப்பினர். வேறு சிலருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து மக்கிலோப்பை பழிவாங்குவோம் என சம்பந்தப்பட்ட புரோகிதர்கள் முடிவுச் செய்தனர்.

மக்கிலோப்பிற்கு அவமரியாதைச் செய்ய அன்றைய பிஷப் அடலைட் லாரன்ஸ் ஷீலினிற்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டது.

1871 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. ஐந்து மாதத்திற்கு பிறகு தனது மரணப்படுக்கையில் வைத்து பிஷப் மக்கிலோப்பை மீண்டும் அழைக்க தீர்மானித்தார். 1909 இல் மக்கிலோப் மரணித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

விடுதி மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கிறிஸ்தவ போதகர், அவரது மகன் கைது

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே விடுதியில் தங்கி படித்த மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கிறிஸ்தவ போதகர், அவரது மகன் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மணி நகரில் உள்ள தோட்டத்தில் கிறிஸ்தவ ஜெபகூடம் மற்றும் அனாதை விடுதி உள்ளது. இதை அன்புநகரைச் சேர்ந்த போதகர் சவுந்திர ராஜன் என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.

இங்கு கிருஷ்ணகிரி, ஓசூர், பவானி, தர்மபுரி, ஈரோடு, தாளவாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் தங்கி அன்புநகர் பள்ளியில் படித்து வருகிறார்கள். மொத்தம் 12 மாணவிகள், 22 மாணவர்கள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இங்குள்ள மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதில் ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த 15 வயது மாணவி கர்ப்பம் அடைந்ததாகவும், இது அவரது பெற்றோருக்கு தெரிய வந்ததால் போலீசில் புகார் கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவி பாலியல் தொல்லை குறித்து அவரது தந்தையிடம் கூறவே அவர் சென்ற வாரம் தனது மகளை விடுதியில் இருந்து அழைத்து சென்றுவிட்டார். இது குறித்த தகவல் தட்டார்மடம் போலீசுக்கு தெரிய வந்தது.

இதையடுத்து சாத்தான்குளம் டி.எஸ்.பி. அந்த விடுதிக்குச் சென்று விசாரணை நடத்தியபோது முறைகேடு நடத்திருப்பது தெரிய வந்தது. நேற்று முன்தினம் திருச்செந்தூர் ஆர்.டி.ஓ. பாக்கியம் தேவகிருபை, சாத்தான்குளம் தாசில்தார் ஹாரிஸ், வருவாய் ஆய்வாளர் விஜய குமாரி, வி.ஏ.ஓ. வேல்சுந்தரம் ஆகியோர் மணி நகரில் உள்ள அந்த விடுதியை ஆய்வு செய்தனர். அப்போது மாணவிகள் பலர் விடுதியில் நடந்தவற்றை கூறி அதிகாரிகளிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

இதனையடுத்து அங்கு தங்கி படித்து வந்த 12 மாணவிகள், 22 மாணவர்கள் ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள அரசு விடுதிக்கு நேற்று மாற்றப்பட்டனர். மேலும் இது தொடர்பாக விடுதி காப்பாளர் சவுந்திர ராஜன், அவரது மகன் கிறிஸ்டோபர் ஆகியோரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சவுந்திராஜனின் இன்னொரு மகன் உதய பாலஜெயசி்ங்கை தேடி வருகின்றனர்

புதன், 22 செப்டம்பர், 2010

நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே இஸ்லாத்துக்கு தாங்கள் புரிந்த சேவைக்காக

நன்றி பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் அவர்களே இஸ்லாத்துக்கு தாங்கள் புரிந்த சேவைக்காக
(செப்டம்பர் 11 அன்று குரானை எரிக்க போவதாக சொன்னவர் இப்பாதிரியார்)





1. குரான் அதிக விற்பனையானது : அமேசான், உள்ளூர் மற்றும் வெளியூர் கடைகளிலும் இணையம் மூலமாகவும் குரான் அதிக அளவு விற்பனையானது. மனித இனத்தின் நேர்வழிக்காக அருளப்பட்ட குரானை மானுடம் சிந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது.

2. வியாபரம் சூடு பிடித்தது : நிறைய குரான்கள் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் விற்பனையானதின் மூலம் இஸ்லாமிய நிறுவனங்களின் உரிமையாளர்களூக்கு நல்ல லாபம் கிடைத்தது.

3. பள்ளிவாயில்களுக்கு அதிகமானோர் வருகை : உங்கள் சர்ச்சையால் இஸ்லாத்தை அறிந்து கொள்ள பள்ளி வாயில்களுக்கு அதிகமானோர் வருகை புரிந்ததின் மூலம் இஸ்லாத்தின் செய்தியை பெற்று கொன்டனர்.

4. இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன்கள் பிஸியானது : இஸ்லாமிய அழைப்பு நிலையங்களின் ஹாட்லைன் மற்றும் தொலைபேசிகள் இஸ்லாத்தை அறிய விரும்புவோரின் அழைப்புகளால் பிஸியாக இருந்தன.

5. கூகுளில் குரான் மற்றும் இஸ்லாம் தேடப்பட்டன : நீங்கள் குரானை பற்றியும் இஸ்லாத்தை பற்றியும் விமர்சனம் செய்ய செய்ய கூகுளில் இஸ்லாம் மற்றும் குரான் குறித்து தேடுவோரின், இஸ்லாத்தை குறித்து இணையதளங்களில் தேடுவோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

6. நூலகங்களில் குரான் காணாமல் போயின : எத்துணை பிரதிகள் வாங்கிய போதும் ஐரோப்பா, கனடா, அமெரிக்காவில் உள்ள நூலகங்களில் குரானை அனைவரும் எடுத்து கொண்டு போவதால் குரான் ஸ்டாக் இல்லாமல் போனது.

7. முஸ்லீம்களுக்கு மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சம் : மில்லியன் கணக்கான டாலர்கள் செலவழித்து செய்ய வேண்டிய தஃவா பிரச்சாரத்தை தங்களின் வெறும் அறிக்கைகள் உண்டாக்கியதால் தஃவாவில் செலவழிக்க வேண்டிய மில்லியன் கணக்கான டாலர்கள் மிச்சமாயின.

8. முஸ்லீம்கள் உணர்வுகள் தூக்கத்திலிருந்து எழுந்தன : உலகெங்கும் வாழும் முஸ்லீம் சமூகம் உங்களின் உரைக்கு பின் தன் தூக்கத்தை கலைத்து குரானின் செய்தியை அறிந்து கொள்வதில், குரானுடனான தங்கள் உறவை புதுப்பித்து கொள்வதில், குரானின் செய்தியை பிற மக்களுக்கு அறிமுகம் செய்வதில் முனைப்பு காட்டின.

9. நிறைய மக்கள் இஸ்லாத்தை ஏற்றனர் : முன்பை காட்டிலும் இஸ்லாத்தை ஆராய்வதன் மூலம் இஸ்லாத்தை ஏற்று கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

10. நீதியை நேசிப்பவர்களை ஒன்றிணைத்தது : இஸ்லாம், கிறிஸ்துவம், யூதர்கள், ஹிந்துக்கள், இறை மறுப்பாளர்கள் என அனைத்து பிரிவிலும் உள்ள நீதியை நேசிப்பவர்களை இக்கொடுமைகளை கண்டித்ததன் மூலம் ஒன்றிணைத்தது.

பாதிரியார் டெர்ரி ஜோன்ஸூக்கு ஒரு வேண்டுகோள் : நீங்கள் எரிக்க நினைத்த அக்குரானை திறந்த மனதோடு படியுங்கள். இயேசுவை பின்பற்றுபவராக இருந்தால் இயேசுவின் மார்க்கமான, நூஹ், இப்ராஹீம், மூஸா, ஈஸா, முஹம்மது (ஸல்) போன்ற நபிமார்களின் மார்க்கமான இஸ்லாத்தை ஏற்று கொள்ளுங்கள்.

குரானோடு மோதியவர்கள் ஒன்று குரானால் ஈர்க்கப்பட்டிருக்கிறார்கள் அல்லது அழிந்து போயிருக்கின்றார்கள். எது வேண்டும் என்று தீர்மானிப்பது உங்கள் கையில் தான் உள்ளது சகோதரரே

(Gain peace.org எனும் இணையத்தில் வெளியான மடலை தழுவி சில மாற்றங்களுடன் எழுதப்பட்டது)

செவ்வாய், 14 செப்டம்பர், 2010

கிறிஸ்தவ சகோதரர்களே பைபிலில் உள்ள இந்த கதையை உங்கல் மகளுக்கு சொல்லிக்கொடுக்க முடியுமா.......?

அப்பாவைக் கற்பழித்த மகள்கள்

ஆதியாகமம்(GENESIS)19-வது அதிகாரம் வசனம் 31 முதல் 38 முடிய
...
31. அப்பொழுது மூத்தவள் இளையவனைப் பார்த்து நம்முடைய தகப்பன் முதிர்வயதானார். பூமியெங்கும் நடக்கிற முறைமயின் படியே நம்மோட சேர பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.

32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு அவருக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்து, அவரோட சயனிப்போம் வா என்றாள்.

33. அப்படியே என்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். மூத்தவள் போய் , தன் தகப்பனோட சயனித்தாள். அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து நேற்று ராத்திரி நான் தகப்பனோட சயனித்தேன். இன்று ராத்திரியும் மதுவைக் குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படி நீ போய் அவரோட சயனி என்றாள்.

35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது இளையவள் எழுந்துபோய் அவனோட சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.

36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்ப்வதியானார்கள்.

37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பெயரிட்டாள். அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியாருக்குத் தகப்பன்.

38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள். அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

கன்னியாஸ்திரிகளுக்கு “செக்ஸ்” கொடுமை: பாதிரியார் எழுதும் பரபரப்பு புத்தகம்- கேரளாவில் மீண்டும் சர்ச்சை

திருவனந்தபுரம், செப். 1-
கேரளாவை சேர்ந்த முன்னாள் கன்னியாஸ்திரி ஜெஸ்மி தனது வாழ்க்கை வரலாறு பற்றி புத்தகம் எழுதி வெளியிட்டு இருந்தார்.
அதில் கிறிஸ்தவ பாதிரியார்கள் கன்னியாஸ் திரிகளை “செக்ஸ்” கொடு மைக்கு ஆளாக்கு வதாக கூறி இருந்தார். இந்த புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்போது இதே போன்ற புத்தகம் ஒன்றை பாதிரியார் ஒருவர் எழுதி இருக்கிறார். அவரது பெயர் கே.பி.சிபு.
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த அவர் 11 ஆண்டுகள் பாதிரியாராக இருந்து அதில் இருந்து விலகியவர். தற்போது அரபு நாடான கத்தாரில் இந்திய பள்ளி ஒன்றில் ஆசிரியராக இருக்கிறார்.
அவர் வேத பள்ளிகளில் படித்த காலத்திலும், அடுத்து பாதிரியாராக இருந்த காலத்திலும் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்து அந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.
புத்தகத்தில் பாதிரி யார்கள் இல்லம் மற்றும் கான்வென்டில் நடக்கும் சம்பவங்களை விவாதித்து உள்ளார்.
பாதிரியார்கள் செய்யும் அடக்கு முறை, பணம் கையாடல், போன்ற விவரங்களை தனியாக குறிப்பிட்டு இருக்கிறார். அடுத்து சில பாதிரியார்கள் கன்னியாஸ்திரிகள் மற்றும் பணி செய்யும் பெண்களை செக்ஸ் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும், பெரிய இடத்து பெண்களிடம் செக்ஸ் தொடர்பு வைத்து இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். பாதிரியார் இல்லங்களில் ஒரின சேர்க்கை சம்பவங்கள் நடப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.
இந்த புத்தகம் நாளை வெளியிடப்படுகிறது. முத லாவதாக 100 புத்தகம் மட்டும் அச்சிடப்பட்டுள்ளது. அடுத்து 10 ஆயிரம் பிரதிகள் அச்சிட திட்டமிட்டு உள்ளது.
இந்த புத்தகம் கேரள மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

புதன், 1 செப்டம்பர், 2010

நினைவெல்லாம் நித்யா

பெங்களூர் M.Sகமாலுத்தீன்

“உடுத்தும் உடையில் மாற்றம் மட்டும் சந்நியாசம் ஆகாது, வீட்டைத் துறப்பதும் சந்நியாசமில்லை; உண்மையில் மனதிலுள்ள பாசத்தையும், பந்தத்தையும், ஆசையையும், கோபத்தையும், காமத்தையும் துறப்பதே உண்மையான சந்நியாசமாகும்’ ஸ்ரீரமணமகரி´.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக நம் கழுத்தை பிடித்துக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் கலாச்சாரத்தின் கோரமுகங்களில் ஒன்று மன அழுத்தம் (Tension). ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேர்கள் மன அழுத்தத்தால் மருத்துவர்களை நாட, திகைத்து போனது மருத்துவ உலகம். மருந்து கண்டுபிடிக்க கால அவகாசம் எடுத்த நேரத்தில் நீண்டது வரிசை. அழுத்தம் தாங்காமல் அலறினார்கள் பலர். சிலர் சுய வைத்தியமாக “தற்கொலை’ செய்துகொள்ள ஆன்மீகத்தை நாடும்படி அறிவுறுத்தப்பட்டது. துரித உணவு (Fast food) கலாசாரத்தில் பழகிப் போனவர்கள் ஆன்மீகத்திலும் அதையே எதிர் பார்த்தார்கள். அங்குதான் போனியாகாமல் கிடந்த யோகா (Yoga)வுக்கு புது வாழ்வு கிடைத்தது.

இந்து மதத்தின் மிகச்சிறந்த கலையாக யோகா முன் நிறுத்தப்பட்டது. இதைக் கற்றுக் கொண்டால் எல்லா நோய்களிலிருந்தும் விடுபடலாம். ஆயுள் அதிகரிக்கும், ஆரோக்கியம் நிலைத்திருக்கும் என சொன்னதோடு நில்லாமல் ஊடகங்கள் மூலம் உயர்த்தியும் பிடித்தார்கள். “அவாள்’ நடத்தும் பத்திரிக்கைகளில் முன்னுரிமை தந்தார்கள். சிறு செய்திகளையும் கட்டம் போட்டு கவனம் ஈர்த்தார்கள். விளைவு பலர் காவி உடை தரித்து களம் இறங்கி கோடி கோடியாகக் காசு பார்த்தார்கள். அத்தகையவர்களில் ஒருவன்தான் திருவண்ணாமலையை சேர்ந்த அருணாச்சலம் முதலியாரின் மகன் ராஜசேகர்.

ஜெயின் ஸ்கூலில் ஆரம்பக் கல்வியை முடித்து, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக்கில் டிப்ளமோவை அரைகுறையாக முடித்து 16 வயதில் வீட்டை விட்டு ஓடி சாமியார்களிடம் சில சித்து விஷயங்களை கற்று புத்தாயிரம் தினமான 2000 ஜனவரி 1ம் தேதி ஞானம் பிறந்ததாக பொய் சொல்லி “பரம ஹம்ஸா நித்யானந்தாவாக’ தன்னை அறிமுகம் செய்து கொண்டு 2003ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் பள்ளிப் பாளையத்தில் முதல் ஆசிரமத்தை பெங்களூர் புறநகர் பகுதியான “பிடுதி’யில் 14 ஏக்கரில் தலைமை நித்தியானந்த பீடம் அமைத்தது வரை சந்தேகம் ஏற்படாத கெட்டிகாரத் தனம். இது பிரசங்கத்திலும் தியானம், யோகா, ஹீலிங் பயிற்சி தருவதிலும் தென்பட்டது.

முப்பத்தி மூன்று நாடுகளில் 1500க்கும் மேற்பட்ட கிளைகளையும் இருபது ஆயிரம் கோடி சொத்து மதிப்போடு இயங்கிய 2010 ஆசிரமத்தின் கதவை திறந்தால் காற்று வரவில்லை. காமக் காட்சிகள் தான் சி.டி.யாக வெளி வந்தன. மார்ச் 3ம் தேதி நக்கீரன் இதழிலும 4ம் தேதி சன் தொலைக் காட்சியிலும் கண்றாவிக் காட்சிகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பி மக்களை கொதிப்படைய வைத்தார்கள். ஆசிரமங்கள் அமைந்த பகுதிகளில் எல்லாம் மக்கள் காரித் துப்பி செருப்பால் அடித்து தீ வைத்தார்கள். சீடர்கள் ஞானம் அடைவதற்கு பிரம்மச்சாரியத்தை கடைப்பிடிக்க வேண்டும். பெண்களோடு பேசக் கூடாது, தொடக்கூடாது ஏன் பெண் வாசனையே கூடாது என வழிமுறை வகுத்தவன் தன் தியான கூட்டத்துக்கு வரும் அழகான பெண்களை கட்டிப்பிடித்து ஆசீர்வதிப்பான்.

ஆசிரமத்தில் நூறுக்கும் மேற்பட்ட இளம் சந்நியாசினிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இவர்களிடம் “நான் கிருஷ்ணனின் அவதாரம்; நான் கொஞ்சும் பெண்கள் எல்லாம் கோபியர்கள். உங்கள் நினைவெல்லாம் நித்யாவாக இருக்க வேண்டும், அது உங்கள் பெயர்களிலும் பிரதி பலிக்க வேண்டும். அப்போதுதான் ஆன்மா ஆனந்தமடையும், அது ஞானத்தை அடைய வழிகாட்டும்; என் நிலையே நீ அடைய என் விருப்பத்தை நிறைவேற்று.’

தெய்வத்தோடு இரண்டரக் கலப்பதாக நினைத்துக்கொண்டு பல இளம் பெண்கள் கற்பை இழந்த கதைகள் நிறைய உண்டு, பல ஆயிரம் சீடர்கள் தங்கள் வாழ்வை இவனுக்காக அர்ப்பணித்ததன் மூலம் ஆன்மீகத்தில் ஏதோ சாதித்து விட்டதாக மனப்பால் குடித்துள்ளார்கள். எந்த மன நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நித்யானந்தாவை தேடி வந்தார்களோ அவர்களில் சிலருக்கு இவன் பொய்யன் என்பது புலனாகியது. அவர்கள் வெளியேற முயற்சிக்க சிலர் கொலை செய்யப்பட்டார்கள். அது தற்கொலையாக பதிவு செய்து கொண்டது போலீஸ்; வெளியேறும் எண்ணமுடைய பலர் உயிர் வாழ ஆசைப்பட்டு ஊமையானார்கள்.

ஊர் ஊராக சென்று “சத்சங்கம்’ நிகழ்ச்சி நடத்துவதன் மூலம் பொருளாதாரம் சுரண்ட புதிய சீடர்கள் கிடைத்துக் கொண்டே இருந்தார்கள். தன் சூன்ய பேச்சால் சீடர்களை சுத்தமான மடையர்களாக்குவதன் மூலம் தன் சுக வாழ்வின் எல்லை விரிந்து கொண்டே போகும். இதுதான் 99 சதவிகித சாமியார்களின் இலக்கு. இதற்காக இடைவிடாது முயற்சிக்கிறார்கள். இவர்களை மக்கள் முற்றும் துறந்த முனிவர்களாகவும், தேவதூதர்களாகவும், சாப விமோசனம் தரும் ஜீவன் முக்தர்களாகவும், காவி உடையில் நடமாடும் போலிகளை யோகிகளாக நம்பி மோசம் போகிறவர்களை யார் காப்பாற்றுவது?

இறைக் கொள்கை சரியில்லாத எல்லா மதங்களிலும் ஏமாற்று வேலையுண்டு. இந்து மதத்தில் இது சற்று அதிகம். சிக்குவது சிலர்தான். மடங்களிலும், ஆதினங்களிலும் சிக்க வேண்டியவர்கள் நிறைய பேர்கள் உள்ளார்கள். இவர்கள் சிக்கினாலும் கூட ஒருமாத பரபரப்புச் செய்தி அவ்வளவே! இதற்கு நிரந்தர தீர்வு என்ன?

1431 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் மிக தெளிவாக சொல்லிவிட்டது இப்படி; “துறவித் தனத்தை நாம் (அகில உலகத்தின் இறைவனாகிய அல்லாஹ்) அவர்கள் மீது கடமையாக்கவில்லை. அதனை அவர்களே கடமையாக்கிக் கொண்டார்கள். அதனை பேண வேண்டிய அளவுக்கு அவர்கள் சரிவரப் பேணவில்லை’ (திருகுர்ஆன் 57:27)

32 வயதுக்குள்ளாக புகழின் உச்சத்தை அடைந்த நித்யானந்தா இல்லறத்தில் பகிரங்கமாகவே ஈடுபட்டிருக்கலாம். திருமணத்தை யாரும் தடுக்கப்போவதில்லை. போலியான வழிமுறையை உருவாக்கி கொண்டு பொய்யும் புரட்டையும் மூலதனமாக்கி கொண்டு ஞானம் அடைந்து விட்டதாக சொல்வது மிகப் பெரிய ஏமாற்று வேலை. ஆசை, பாசம், அன்பு, கோபம், மகிழ்ச்சி இவை எல்லாம் மனித இயல்புகள். இதை மீறி வாழ முடியாது. இதை ஊருக்கு உபதேசிப்பவனும் ஒழுங்காக பின் பற்ற முடியாது என்பதை நித்தியானந்தா விவகாரம் மீண்டும் நிரூபித்துள்ளது. இஸ்லாத்தில் இத்தகைய மோசடிகள், ஏமாற்று வேலைகள் என எதுவுமில்லை. எல்லாமே மிகத் தெளிவானவை. அப்படியானால் முஸ்லிம்கள் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்கிறார்கள்?! இறைப் புகழ்ச்சியும் உடல் பயிற்சியும் இணைந்த தொழுகையும் “துஆ’வும்தான் மன நிம்மதியை தருகிறது. ஐவேளை தொழுகை தரும் ஆறுதலை எந்த தியானமும், யோகாவும் தந்துவிடாது. இதை 1431 வருடங்களாக முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறார்கள். தங்கள் பொருளாதாரமும் பொன்னான வாழ்வும் ஆன்மீக ஆசாமிகளிடம் அடகு வைத்து விடாமல் அரணாக இஸ்லாம் காக்கிறது.

சகோதர சமுதாயத்தவர்களுக்கு நாம் சொல்வது இதுதான். இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்! இவ்வுலகிலும் மறு உலகிலும் மகத்தான வெற்றி பெறுவீர்கள். இந்த நிஜமான வெற்றியை யாரும் பெற்றுத் தந்துவிட முடியாது. இறைவனுக்கு முழுமையாக கட்டுப்பட்டு வாழ்வதன் மூலமே நிஜமான ஆன்மீக வெற்றி சாத்தியம். இது பற்றி இறுதி நெறிநூலான திருகுர்ஆன் சொல்கிறது இப்படி;

“இந்த குர்ஆனில் மனிதர்களுக்காக ஒவ்வோர் உதாரணத்தையும் அவர்கள் உபதேசம் பெறுவதற்காகத் திட்டமாக நாம் விளக்கியுள்ளோம்’ (குர்ஆன் 39:27) “மனிதர்களே! உங்களுடைய (ஒரே) இறைவனை வணங்குங்கள்; அவன் எத்தகையவனென்றால் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்தான்; (அவனை வணங்குவதால்) நீங்கள் இறையச்சம் உடையோராகலாம்’ (உங்கள் இறைவனாகிய அல்லாஹ்) அவன் உங்களுக்கு பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானிலிருந்து மழையைப் பொழியச் செய்து அதன் மூலம் கனி வகைகளிலிருந்து உங்களுக்கு உணவை வெளிப்படுத்தினான்; எனவே (இவற்றை) அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு எதனையும், எவரையும் இணை ஆக்காதீர்கள். (திருகுர்ஆன் 2:21,22)

இன்னும் (இந்நெறிநூலின் மீது) நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்வோருக்கு அதன் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனச் சோலைகள் நிச்சயம் அவர்களுக்கு உண்டு என்று (இறைத்தூதரே!) நற்செய்தி கூறுவீராக (நெறிநூல் 2:25) இந்த மகத்தான வெற்றியின்பால் அனைவரையும் அழைக்கிறோம் வாருங்கள்!

யு.ஏ.இ யில் 14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு!

14 ஆவது சர்வதேச புனித குர்ஆன் ஓதும் போட்டி மற்றும் பரிசளிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் 30.08.2010 திங்கட்கிழமை துபை சேம்பர் ஆப் காமர்ஸ் அன்டு இன்டஸ்ட்ரீஸில் நடைபெற்றது. அதில் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த 20 வயது இளைஞர் முதல் பரிசை தட்டிச் சென்றார்.

முதல் 10 இடங்களைப் பெற்றவர்களின் விபரம்.

1. முஹம்மது இர்சாத் மர்பாய் - 20 அல்ஜீரியா - 2,50,000 திர்ஹம்

2. மஸ்வூத் ரித்வான் -13, வங்கதேசம் - 2,00,000 திர்ஹம்

3. முஸ்அப் ஈஸா அலி - 20, பஹ்ரைன் - 1,50,000 திர்ஹம்

4. அஹமது யசூரி முஹம்மது 18, எகிப்த் - 65,000 திர்ஹம்

5. காலிது அபூபாகிர் ஸலிம் 19, யமன் - 60,000 திர்ஹம்

6. கலீல் இப்ராஹீம் அஹமது 20, லிபியா - 55,000 திர்ஹம்

7. மப்வானா அஸா மப்வானா, 15 - தான்சானியா - 50,000 திர்ஹம்

8. அம்மார் ஸாலீஹ் அத்தீன் 16, ஸவுதி அரேபியா - 45,000 திர்ஹம்

9. நாசர் பதிர் முஹம்மது 20, குவைத் - 40,000 திர்ஹம்

10. முஹம்மது அல் அத்ராஸ் 16, மொராக்கோ - 35,000 திர்ஹம்

10. முஹம்மது உதுமான் அப்துல்லாஹ் 18, சூடான் - 35,000 திர்ஹம்

மேலும் 80 சதவிகித மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தலா 30,000 திர்ஹம்

70 - 79 சதவிகித மதிப்பெண் எடுத்தவர்களுக்கு தலா 25,000 திர்ஹம்

70 சதவிகிதத்திற்கு குறைவான மதிப்பெண் பெற்றவர்களுக்கு தலா 20,000 திர்ஹம் என வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இதில், இந்நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்திவரும் அமீரகப் போட்டியாளர்களும் அரபுலக போட்டியாளர்களும் பின்னுக்கு தள்ளப்பட்டு மற்ற நாட்டைச் சேர்ந்தவர்கள் வெற்றியை தட்டிச் சென்றிருப்பது, இந்தப் போட்டியில் வங்கதேச போட்டியாளர்கள் தொடர்ந்து ஏதேனும் பரிசுகளை வெல்வது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சிறப்பம்சமாக சிறந்த இஸ்லாமியன் விருது வழங்கப்பட்டது. இவ்விருதை சூடான் நாட்டைச் சேர்ந்த முன்னால் அதிபர் ஃபீல்டு மார்ஸல் அப்துல் ரஹ்மான் சிவார் அல் தஹப் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இஸ்லாமிய உலகத்திற்கு பயன்படுத்தும் விதமாக இவருக்கு 1 மில்லியன் திர்ஹம் பரிசளிக்கப்பட்டது.