ஞாயிறு, 26 செப்டம்பர், 2010

மேரி மக்கில்லோப் கிறிஸ்தவ புரோகிதர்களின் சிறுவர் பாலியல் லீலைகளை வெளிப்படுத்தியவர்

சிட்னி,செப்.26:ஆஸ்திரேலியாவின் முதல் கத்தோலிக்க பரிசுத்தராக அறிவிக்கப்படவுள்ள மறைந்த கன்னியாஸ்திரி புரோகிதர்களின் சிறுவர் பாலியல் பலாத்காரங்களை வெளிக்கொணர்ந்ததற்காக சர்ச் அதிகாரிகளின் கோபத்திற்கு காரணமானார் என எ.பி.சி டாக்குமெண்டரி கூறுகிறது.

கல்வித் துறையில் பணியாற்றியவரும், சிஸ்டர்ஸ் ஆஃப் தின் செண்ட் ஜோஸஃப் ஆஃப் தி ஸேக்ரட் ஹார்ட் என்ற அமைப்பின் ஸ்தாபகரான மேரி மக்கில்லோப்பிற்கு போப் பெனடிக்ட் அடுத்தமாதம் பரிசுத்தர் பட்டத்தை வழங்கவுள்ளார்.

ஆனால், இவர் தனது வாழ்நாளில் புரோகிதர்களின் சிறுவர் பாலியல் லீலைகளை வெளிப்படுத்தியதால் சர்ச் அதிகாரிகளின் கோபத்திற்கு காரணமானார் என்ற செய்தியை எ.பி.சி ஒளிபரப்ப திட்டமிட்டுள்ள ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கில்லோப்பிற்காக பரிசுத்தர் பதவிக்கு பிரச்சாரம் நடத்தியிருந்த ஃபாதர் பால் கார்டினர்தான் ஆவணப்படத்தில் இதனை
வெளிப்படுத்தியுள்ளார்.

மக்கில்லோப்பும் இதர கன்னியாஸ்திரிகளும் புரோகிதர்களுக்கெதிராக பாலியல் புகார்களை மேலதிகாரிகளுக்கு அளித்தத்தைத் தொடர்ந்து ஒரு புரோகிதரை அயர்லாந்துக்கு அனுப்பினர். வேறு சிலருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து மக்கிலோப்பை பழிவாங்குவோம் என சம்பந்தப்பட்ட புரோகிதர்கள் முடிவுச் செய்தனர்.

மக்கிலோப்பிற்கு அவமரியாதைச் செய்ய அன்றைய பிஷப் அடலைட் லாரன்ஸ் ஷீலினிற்கு நிர்பந்தம் கொடுக்கப்பட்டது.

1871 ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. ஐந்து மாதத்திற்கு பிறகு தனது மரணப்படுக்கையில் வைத்து பிஷப் மக்கிலோப்பை மீண்டும் அழைக்க தீர்மானித்தார். 1909 இல் மக்கிலோப் மரணித்தார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக