புதன், 29 செப்டம்பர், 2010

இஸ்லாமிய வங்கி முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது

உலகம் முழுவதும் இஸ்லாமிய வங்கிகளில் முதலீடு அதி வேகமாக வளர்ந்து வருவதாக மாலிக் சர்வார் கூறியுள்ளார். இவர் ஐக்கிய அமீரகத்தில் உள்ள மிக முக்கிய வங்கியான அபுதாபி இஸ்லாமிய வங்கியின் முக்கிய தலைமை பிரதிநிதிகளில்ஒருவர் ஆவார்.

நிகழ்ச்சி ஒன்றில் பன்னாட்டு ஊடகங்களுக்கு பேட்டி அளித்த இவர் "உலகம் முழுவதிலும் பொருளாதார பின்னடைவு நேர்ந்து வரும் வேளையிலும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய வங்கிகளின் முதலீடு வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது 1 ட்ரில்லியன் இருக்கும் இந்த முதலீடு 2015க்குள் 2.7 ட்ரில்லியன் தொட்டுவிடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. (ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு இலட்சம் கோடி ஆகும்). வருடா வருடம் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி இரட்டை இலக்கமுடைய வளர்ச்சியாக இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமிய வங்கிகளின் வளர்ச்சி பத்து மடங்காக வளர்ந்து உள்ளது" என்றுள்ளார்.

மேலும் வெளிப்படையான அறங்காவல், நெறியான நடைமுறை மற்றும் இஸ்லாமிய முறைப்படி தீர்வுகள் எதிர்பார்க்கும் வாடிக்கைக்காரர்களால், இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களால் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக