செவ்வாய், 26 மே, 2009

முரண்பாடுகள் நிறைந்த பைபிள் : பாகம் 1

கிறிஸ்தவர்களால் புனித வேதமாக கருதப்படும் பைபிள், இந்த உலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்த இறைவனால் - கர்த்தரால் - அருளப்பட்டதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அக்காலத்தில் வாழ்ந்த பலரால் எழுதப்பட்ட பல புத்தகங்களின் தொகுப்பான பைபிளை - கர்த்தரின் பரிசுத்த ஆவியின் மூலம் உந்தப்பட்டு எழுதப்பட்டதால் இந்த பைபிள் முழுவதும் கர்த்தரின் வார்த்தை என்று அவர்களால் நம்பப்படுகின்றது.

இந்த பைபிள் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று பழைய ஏற்பாடு மற்றொன்று புதிய ஏற்பாடு.

புரொடஸ்டன்ட் பிரிவினரால் நம்பப்படும் பைபிளில் (பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 66 புத்தகங்களும், ரோமன் கத்தோலிக்கர்களால் நம்பப்படும் பைபிளில் (பழைய ஏற்பாட்டில் 46 புத்தகங்களும் புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 73 புத்தகங்களும் இடம் பெற்றுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய கிறிஸ்தவ சபையான கிழக்கு மரபுவழி திருச்சபையினரால் (Eastern Orthodox Church) நம்பப்படும் பைபிளில் (கத்தோலிக்கர்கள் ஏற்றுக்கொள்ளும் பழைய ஏற்பாட்டு நூல்கலான 46 நூல்களுடன் மேலும் 5 நூல்களை சேர்த்து) பழைய ஏற்பாட்டில் மொத்தம் 51 நூல்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் ஆக) மொத்தம் 78 புத்தகங்களும் இடம்பெற்றுள்ளது.

பைபிள் உள்ள புத்தகங்களை யார் யார் எழுதினார்கள்? மொத்தம் எத்தனைப்பேர் எழுதினார்கள்? ஒவ்வொரு புத்தகங்களையும் ஒருவர் மட்டும் எழுதினாரா அல்லது பலரும் சேர்ந்து எழுதினார்களா? அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியால் தான் எழுதினார்கள் என்பதற்கு என்ன சான்று? என்பன போன்ற கேள்விகளெல்லாம் ஒரு புறம் இருக்க, இவை அனைத்தும் கடவுளால் தான் அருளப்பட்டதென்றால் அவற்றில் கண்டிப்பாக முரண்பாடு என்பது இருக்க முடியாது - இருக்கவும்கூடாது என்பதை யாரும் மறுக்கவும் மாட்டார்கள் - மறுக்கவும் முடியாது.

காரணம் கர்த்தர் என்பவர் இவ்வுலகம் மற்றும் இந்த அண்டசராசரங்கள் அனைத்தையும் படைத்து பரிபாலித்து வருபவர். இதுவரை நடந்தவற்றையும் அறிந்தவர். இனி நடக்கப்போவதையும் அறிந்தவர். எல்லாவற்றையும் அடக்கி ஆளக்கூடிய - அனைத்துப் பொருட்களின் மீதும் சக்திபெற்ற கடவுள் - ஒரு சம்பவத்தையோ அல்லது வேறு ஒரு செய்தியையோ சொல்லும்போது மிகத்தெளிவாகச் சொல்லக்கூடியவராகத்தான் இருப்பார். அவருடைய வார்த்தையில் கண்டிப்பாக முரண்பாடோ அல்லது குழப்பங்களோ இருக்காது. இருக்கவும் முடியாது. அப்படி இருந்தால் அது இறைவனின் வார்த்தையாக ஒரு போதும் இருக்க முடிhயது.

இந்த பொதுவான நியதிக்கு மாற்றமாக பைபிளில் ஏராளமான முரண்பாடுகள் காணக்கிடைக்கின்றன. ஏராளமான குழப்பத்தை ஏற்படுத்தும் வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன. எந்த சம்பவம் உன்மை - எந்தச் சம்பவம் பொய் என்று புரியாத அளவுக்கு குழப்பத்தை விளைவிக்கும் ஆயிரக்கனக்கான வசனங்கள் இருக்கின்றன. இப்படி ஏராளமான முரண்பாடுகளைக் - குழப்பங்களையும் கொண்ட பைபிளை எப்படி கடவுளால் அருளப்பட்டது என்று ஏற்றுக்கொள்ள முடியும்?

சாதாரன மனிதனின் வார்த்தையிலோ அல்லது எழுத்திலோ முரண்பாடுகள் இருந்தால் அதை நம்பாத - ஏற்றுக்கொள்ளாத நாம், கடவுளின் வாத்தையில் மட்டும் முரண்பாடு இருக்கும் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? இன்று ஒருவனைக் குற்றவாளி என்று அடையாளம் கண்டுக்கொள்வதற்கு அவனது செல்பாடுகளில் உள்ள தவறுகளும் அவனது வார்த்தையில் உள்ள முரண்பாடுகளையுமே ஆதாரமாக கொள்ளப்படுகின்றது. அவ்வாறு இருக்கையில் ஒரு இறைவேதம் என்று சொல்லக்கூடிய புத்தகத்தில் ஆயிரக்கணக்கான முரண்பாடுகளும் ஏரளமான குளருடிகளும் இருக்கும் ஒரு புத்தகத்தை மட்டும் எப்படி கடவுளின் வேதமாக ஏற்க முடியும்?

இதனால் தான் வல்ல இறைவன் தனது இறுதி இறைவேதமான திருமறைக்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான்:

'அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) இறைவன் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்' (அல்குர்ஆன் 4 : 82)

அதாவது இந்த திருக்குர்ஆன் இறைவன் அல்லாதவர்களிடம் வந்திருந்தால் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள் என்று சொல்லும் வல்ல இறைவன், இந்த முரண்பாடின்மையே ஒரு இறைவேதத்திற்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான தகுதி என்றும் கூறுகின்றான்.

ஆனால் இந்த பொதுவான நியதிக்கு மாற்றமாக இருக்கும் பைபிள் முரண்பாடுகளின் பட்டியல்களை இனி தொடராக கான்போம்.

ஒரே சம்பவத்தை முரண்பாடாகச் சொல்லும் பழைய ஏற்பாட்டு புத்தகங்கள் :

முரண்பாடு 1:

இஸ்ரவேல் மக்கள் மீது கடவுள் கோபம் அடைந்தாராம். இஸ்ரவேலருக்கு எதிராகத் திரும்பும் படி தாவீது ராஜா கடவுளால் ஏவப்பட்டாராம். இதனால் தாவீது ராஜா தனது சேனாதிபதியாகிய யோவாபிடம் இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் தொகையை கணக்கெடுக்கும் படி ஆனையிட்டாராம். இதை பழைய ஏற்பாட்டின் 2 சாமுவேல் 24:1 பின்வருமாறு கூறுகின்றது:

'கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.' - 2 சாமுவேல் 24:1

இந்த வசனத்தில் கர்த்தருடைய கோபம் இஸ்ரவேலரின் மீது மூண்டதாகவும், அதன் தொடர்ச்சியாக இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களின் தொகையை கணக்கிடும் படி தாவீது ராஜா கர்த்தரால் ஏவப்பட்டதாகவும் இந்த வசனம் கூறுகின்றது. ஆனால் இதற்கு மாற்றமாக 1 நாளாகமம் 21:1ம் வசனம் தாவீதை கணக்கெடுக்கும் படி தூண்டியது கர்த்தரல்ல, சாத்தானே தூண்டினான் என்று கூறுகின்றது:

'சாத்தான் இஸ்ரவேலுக்கு விரோதமாய் எழும்பி, இஸ்ரவேலைத் தொகையிடுகிறதற்குத் தாவீதை ஏவிவிட்டது' - 1 நாளாகமம் 21:1

இந்த வசனத்தில் தாவீதை இஸ்ரவேலருக்கு எதிராக திருப்பியது கர்த்தரல்ல சாத்தானே என்கிறது. ஆனால் 2 சாமுவேல் 24:1ம் வசனமோ கர்த்தர்தான் தாவீதை ஏவினார் என்கிறது. உன்மையில் தாவீதை இஸ்ரவேலர்களுக்கு எதிராக திருப்பியது சாத்தானா? அல்லது கர்த்தரா? சாத்தான் தான் தூண்டினான் என்றால் 2 சாமுவேல் 24:1ல் கர்த்தர் என்று சொல்லப்படுவது எப்படி? சாத்தானுடைய இடத்தில் எப்படி கர்த்தர் வந்தார்? அல்லது கர்த்தருடைய இடத்தில் சாத்தான் வந்தானா? இந்த இரண்டு வசனங்களில் எது சரி?

முரண்பாடு 2:

தாவீது ராஜா தனது சேனாதிபதியாகிய யோவாபிடம் போர்வீரர்களின் கணக்கெடுக்க சொல்கின்றார். ஆந்த கணக்கெடுத்த சம்பவத்தை பழையஏற்பாட்டின் இரண்டு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது. அதன் படி அவர் கணக்கெடுத்து தாவீதிடம் கணக்கை ஒப்படைத்தாராம்.

இஸ்ரவேலர்களில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர்?

மொத்தம் '11 லட்சம் பேர்' என்று கணக்கு கொடுத்ததாக 1 நாளாகமம் 21:5 லும் அதற்கு மாற்றமாக மொத்தம் '8 லட்சம் பேர்' என்று கணக்கு கொடுத்ததாக 2 சாமுவேல் 24:9 லும் நேர் முரணாக சொல்லப்பட்டுள்ளது. உன்மையில் யோவாப் இஸ்ரவேலர்கள் பற்றி கணக்கெடுத்தது எவ்வளவு?

முரண்பாடு 3:

அதே யோவாப் யூதாவில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர் என்றும் கணக்கெடுத்து தாவீது ராஜாவிடம் கொடுத்தாராம்.

யூதா கோத்திரத்தில் உள்ள மொத்த போர்வீரர்கள் எத்தனைப் பேர்?

மோத்தம் '4 லட்சத்து எழுபதினாயிரம் பேர் இருந்தார்கள்' என்று கணக்கு கொடுத்ததாக 1 நாளாகமம் 21:5 லும் அதற்கு மாற்றமாக மொத்தம் '5 லட்சம் பேர் இருந்ததார்கள்' என்று கணக்கு கொடுத்ததாக 2 சாமுவேல் 24:9 லும் நேர் முரணாக சொல்லப்பட்டுள்ளது. உன்மையில் யோவாப், யூதாக் கோத்திரத்தில் உள்ள போர்வீரர்களைப் பற்றி கணக்கெடுத்தது எவ்வளவு?

முரண்பாடு 4:

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக காத் என்பவன் தாவீதிடத்தில் கார்த்தர் சொன்ன செய்தியை சொன்னதாக சொல்லப்படுகின்றது. அந்தச் செய்தியில் சில வருடங்களுக்கு பஞ்சம் வராலாம் என்று சொன்னதாக சொல்லப்படுகின்றது. அது எத்தனை வருடம் என்று காத் தாவீதிடத்தில் சொன்னான்?

ஏழு வருடங்களுக்கு பஞ்சம் வரும் என்று சொன்னான் - 2 சாமுவேல் 24:13

இல்லை இல்லை மூன்று வருடங்களுக்கு பஞ்சம் வரும் என்று சொன்னான் என்று 1 நாளாகமம் 21:12 ல் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?

முரண்பாடு 5:

அடுத்ததாக காத் என்பவன் மற்றொரு செய்தியையும் தாவீதினிடத்தில் சொன்னதாகவும், அதன் படி தாவீது எபூசியனாகிய அர்வான் என்பவனிடத்தில் கார்த்தருக்காக பலிபீடத்தை கட்டும் வகையில் ஒரு இடத்தை வாங்கியதாகவும் அதற்காக ஒரு தொகை கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகின்றது.

தாவீது எவ்வளவு தொகையை அர்வானிடத்தில் கொடுத்தான்?

ராஜா அர்வனாவைப் பார்த்து: அப்படியல்ல, நான் இலவசமாய் வாங்கி, என் தேவனாகிய கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகளைச் செலுத்தாமல், அதை உன் கையிலே விலைக்கிரயமாய் வாங்குவேன் என்று சொல்லி, தாவீது அந்தக் களத்தையும் மாடுகளையும் ஐம்பது சேக்கல் நிறை வெள்ளிக்குக் கொண்டான். - 2 சாமுவேல் 24:24

இந்த வசனத்தில் தாவீது அர்வானிடத்தில் 50 சேக்கால் நிறை வெள்ளியைக் கொடுத்து வாங்கிக்கொண்டதாக சொல்லப்படுகின்றது. ஆனால் 1 நாளாகமம் 21:25ல் 600 சேக்கல் நிறைபொன்னைக் கொடுத்து வாங்கியதாக சொல்லப்படுகின்றது.

தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக் கொடுத்து அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான் - 1 நாளாகமம் 21:25, 26

இதில் எது சரி? தாவீது அர்வானிடம் எவ்வளவு கொடுத்து வாங்கினான்?

சகோதரார்களே இந்த இரண்டு ஆகாமங்களிலும் தாவீதின் காலத்தில் நடந்த ஒரே சம்பவத்தை இரண்டு விதமாகச் சொல்லப்படுகின்றது. இதில் எது சரி?நாம் இதில் 1 நாளாகமம் 21:1-12 வரை சொல்லப்படுவது உன்மை என்று நம்புவதா அல்லது 2 சாமுவேல் 24:1-13 வரை சொல்லப்படுவது உன்மை என்று நம்புவதா? இவை அனைத்து கடவுள் தான் அருளினார் என்றால் எப்படி இந்த அளவுக்கு முரண்பாடுகள் வரும்? சிந்தியுங்கள் கிறிஸ்தவர்களே!

இறைவன் நாடினால் முரண்பாடுகள் தொடரும்

Thanks to : http://www.egathuvam.blogspot.com/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக