நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" - அல்-குர்ஆன்
சனி, 23 ஜனவரி, 2010
கோவையில் இஸ்லாத்தை ஏற்ற வினோத்
திங்கள், 18 ஜனவரி, 2010
இஸ்லாத்தை ஏற்ற ஆப்பிரிக்க குத்துச்சண்டை வீரர்கள்
விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெறுபவர்கள் தங்களது சாதனைகளின் மூலம் மக்களின் இதயங்களை கவர்வது வாடிக்கை.
ஆனால் அந்த விளையாட்டு வீரர்களை இஸ்லாமிய நெறி கவர்ந்து ஈர்த்ததால் இஸ்லாமிய மார்க்கத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்ட நிகழ்வு கடந்தவாரம் அரங்கேறியது.
பாகிஸ்தானின் துறைமுக நகரான கராச்சியில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டை போட்டிக்காக வருகை தந்த ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஒன்பது பேர் இஸ்லாத்தை இதய பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து பாகிஸ்தானிய குத்துச்சண்டைக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து வந்த 6 பேரும் காமரூன் நாட்டைச் சேர்ந்த மூன்று பேரும் முஃப்தி முஹம்மது நயீம் கலீமா சொல்லிக் கொடுக்க 9 வீரர்களும் முஸ்லிம்களாக மாறினர். அனைத்து விளையாட்டு வீரர்களும் பாரம்பரிய இஸ்லாமிய உடைகளை அணிந்து இருந்தது நெகிழ்ச்சியடைய செய்த நிகழ்ச்சியாக நடைபெற்றதாகவும் பாகிஸ்தானிய குத்துச்சண்டை கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆப்பிரிக்க நாடுகளின் வீரர்கள் 9 பேருக்கும் இஸ்லாமிய பெயர் சூட்டப்பட்டது.
அலி அக்பர், முஹம்மது அலி, தைமூர் ஹுஸைன், ஃபசுர் ரஹ்மான், இக்பால் ஹுஸைன், முஹம்மது அக்ரம், முஹம்மது சமி, முஹம்மது யாசிர், முஹம்மது அர்ஷக் என இனி இவர்கள் அழைக்கப்படுவார்கள்.
மத்திய ஆப்பிரிக்க குடியரசின் குத்துசண்டைக் கழக சேர்மன் முஸ்லிம் உம்மாவில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புவதாக பாகிஸ்தான் குத்துச்சண்டைக் கழக துணைத் தலைவர் இக்பால் ஹுஸைன் தெரிவிக்கி றார்.
பிற நாடுகளை விட முஸ்லிம் நாடுகளில் தங்களுக்கு கிடைத்த கண்ணியமும் விருந்தோம்பலும் முஸ்லிம்களின் அன்றாட வழிபாட்டு முறைகளும் தங்களை இஸ்லாத்தின்பால் ஈர்த்ததாக குத்துச்சண்டை வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
திங்கள், 11 ஜனவரி, 2010
கர்நாடக TNTJ தஃவா மையத்தில் இஸ்லாத்தை தழுவிய பல்வீனா
கர்நாடக மாநிலம் பெங்களுரு மாவட்டத்தில் கர்நாடக TNTJ வின் தாஃவா மையத்தில் கடந்த 07-1-20100 அன்று லிங்கராஜபுரத்தை சேர்ந்த சகோதரி பல்பீனா சத்திய இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுகொண்டார். மேலும் தமது பெயரை மாஹிரா என்று மாதிக்கொண்டார். அவருக்கு திருக் குர்ஆண் தமிழாக்கமும், இஸ்லாமிய நூல்களும் வழங்கப்பட்டது. மேலும் அஃப்பிடவிட், பெயர் மாற்றம் உள்ளிட்ட அணைத்து பணிகளையும் கர்நாடக TNTJ பொறுப்பேற்றுக்கொண்டது. இந்த நிகழ்ச்சின் போது கர்நாடக TNTJ பெங்களுரு மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
புதன், 6 ஜனவரி, 2010
அபுதாபியில் இஸ்லாத்தை ஏற்ற பழனியப்பன்
அபுதாபி மண்டலத்தில் அமைந்திருக்கும் தாஸ் தீவில் வேலை பார்த்து வரும் தூத்துக்குடி முத்தையாபுரத்தைச் சார்ந்த சகோ.பழனியப்பன் கருப்பையா அவர்கள் திருமறைக்குர்ரானை படித்து அதன் மூலம் தெளிவு பெற்று தூய இஸ்லாத்தினை ஏற்க விரும்புவதாக அபுதாபி தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் நிர்வாகிகளுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்தார்கள்.
சகோதரர் அவர்களுக்கு தக்க விளக்கம் அளிக்கப்பட்டதென் பேரில் தாஸ் தீவில் அமைந்திருக்கும் பள்ளிவாசலில் வைத்து 30/12/2009 அன்று இஸ்லாத்தினை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை அப்ரதுர்ரஹீம் என் மாற்றிக்கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்…
இதனை தொடர்ந்து தாயகம் செல்வதற்காக 02/01/2010 அன்று அபுதாபி நகருக்கு வருகை தந்த சகோதரர் அவர்களை அபுதாபி தமிழ்நாடு தவ்ஹீத ஜமாஅத் சகோதரர்கள் நேரில் போய் சந்த்திதனர்.
சந்திப்பின் போது சகோதரர் அவர்களுக்கு ஏராளமான மார்க்க விளக்க புத்தகங்களும் குறுந்தகடுகளும் வழங்கப்பட்டது. மேலும் சகோதரர் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படைகள் குறித்து கேட்ட கேள்விகளுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டது.
மேலும் அவரிடம் “நீங்கள் எதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டீர்கள்” என்று கேட்ட போது “ எனக்கு ஆரம்பம் முதலே கடவுள் மீது நம்பிக்கை இருந்தாலும், காலில் விழுவது , வரிசையில் இருந்து கடவுளை வணங்குவது என்பது போன்ற செயல்கள் எனக்கு பிடிக்கவில்லை என்றும் பகவத்கீதையை விட திருக் குர்ஆனைத்தான் நான் அதிகமாக படித்திருக்கின்றேன் என்றும், ஆயிரத்து நானுறு வருடத்திற்கு முன்பு இறக்கப்பட்ட குரான் இன்னமும் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் இருப்பதையும் அதை ஒரு எழுதப்படிக்க தெரியாத முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாமாகவே இதை கட்டாயமாக எழுதியிருக்க முடியாது என்பதையும் சிந்தித்து இதுதான் ஒரு உண்மையான வேதம் என்று ஏற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.