திங்கள், 25 அக்டோபர், 2010

இஸ்லாமிய மதத்துக்கு மாறிய டோனி பிளேரின் உறவினர்

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமராக இருந்தவர் டோனி பிளேர். இவரது மனைவி செர்ரி பிளேரின் ஒன்று விட்ட சகோதரி லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மதத்துக்கு தான் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார். லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள பாத்திமா மாசூம் என்ற சன்னதியில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தனது மத மாற்றத்திற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். தற்போது ஹிஜாப் எனும் இஸ்லாமிய ஆடையை அணிவதாகவும் 5 வேளை தொழுவதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது மது அருந்துவதில்லை என குறிப்பிட்ட அவர் 25 வருடங்களாக இருந்த இந்த தீய பழக்கத்தை தற்போது விட்டுவிட்டதாக குறிப்பிட்டார். தினமும் மது அருந்தாமல் இருக்க முடியாத தான் இஸ்லாத்திற்கு மாறிய பிறகு அந்த எண்ணம் கூட இல்லாமல் இருப்பது கண்டு ஆச்சர்யப்படுவதாக கூறினார். குர்ஆனை தினமும் படித்து வருவதாகவும் கூறியுள்ள லாரன் தற்போது 60 பக்கங்கள் வரை படித்து விட்டதாக தெரிவித்துள்ளார். வரும்காலங்களில் பர்தா அணிவீர்களா என்ற கேட்கப்பட்டதற்கு வரும்காலத்தில் தனது ஆன்மீகப் பாதை எங்கே அழைத்துச் செல்லும் என யார் அறிய முடியும் என பதிலளித்தார். காஸாவின் மீதான இஸ்ரேலின் பொருளாதாரத் தடையை எதிர்த்து 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 46 நபர்களுடன் சைப்ரஸிலிருந்து காஸாவுக்கு சென்றுள்ளார் லாரன் பூத். ஈராக்கிற்கு எதிரான யுத்தத்தையும் எதிர்த்தவர் பூத்.

செவ்வாய், 12 அக்டோபர், 2010

திருச்சி புனித வளனார் கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார்



திருச்சி புனித வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் மீது, பிரான்சிஸ் மேரி என்பவர் கற்பழிப்பு மற்றும் கரு கலைப்பு புகார் கொடுத்துள்ளார்.


அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் தொகுதிக்கு உட்பட்ட தஞ்சை சாவடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் பிரான்சிஸ் மேரி. இவர் திருச்சி கோட்டை காவல் நிலையத்தில் ஏ.சி. சினிவாசனிடம் புகார் கொடுத்துள்ளார்.


புகாரில், மேலபுதூர் புனித அன்னை சகோதரிகள் இல்லத்தில், அருட் சகோதரியாக உள்ளேன். சமூக சேவை செய்து நான், திருச்சி கலைக் காவேரி கல்லூரியில் பி.ஏ, இசைப் பட்டப் படிப்பு படித்து வருகிறேன்.


திருச்சி புனித வளனார் கல்லூரி முதல்வர் ராஜரத்தினம் அவ்வப்போது, திருச்சி கலைக் காவேரி கல்லூரிக்கு வருவார். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்பட்டது. 22.01.2006 அன்று கல்லூரிக்கு என்னை அழைத்தார். அப்போது கூல்ரிங்ஸ் கொடுத்தார். அதில் நான் மயக்கம் அடைந்தேன். அப்போது என்னை அவர் கற்பழித்தார். இதை செல்போனில் படம் பிடித்துக் காட்டி, பலமுறை என்னிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.


இதனால் 2008ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கற்பமானேன். தென்னூரில் உள்ள கே.எம்.சி.



திருமணம் செய்யக் கோரி அவரிடம் சென்னேன். இதற்கு அவர் என்னை மிரட்டினார். மதுரை மாநில சேசு சபை தலைவர் தேவதாஸ் மற்றும் ஊழியர்கள் சேவியர், சேவியர் வேதம் இவர்களிடம் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று புகாரில் கூறியுள்ளார்.


புகாரை ஏற்ற போலீசார், பிரான்சிஸ் மேரி மருத்துவப் பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கல்லூரி முதல்வர் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

பெண்களின் நிலை - ஹிந்து மதத்தில்!




மனுஸ்மிர்தி கூறுகின்றது:

பெண்களை ஒரு போதும் நம்பாதே! ஒரு பெண்ணோடு தனித்து அமாராதே! அது உன் தாயாக இருந்தாலும் சரியே. அவள் உன்னை தகாத செயலுக்குத் தூண்டுவாள்.

உன்னுடைய மகளோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள்.

உன்னுடைய சகோதரியோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள். இன்னும் மனுஸ்மிர்தி கூறுகின்றது.

நாஸ்த்ரீ சுவாதந்திரிய மார்காதி!

சமுதாயத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் கிடையாது.

ஆனால் இவர்கள் அடிக்கடி முஸ்லிம் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று பீற்றிக் கொள்கின்றார்கள்.

பிராமணர்களின் கைகளிலிருந்து இயங்கும் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் ஷாபானு வழக்கில் தங்களது துறுத்திகளை அளவுக்கு மீறியே ஊதின.

அத்தனைப் பத்திரிக்கைகளும் ஒட்டுமொத்தமாய் முஸ்லிம் பெண்களுக்கு உரிமைகள் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேசின. ஆனால் முஸ்லிம் பெண்களுக்கு என்னென்ன உரிமைகளை இஸ்லாம் வழங்கி இருக்கின்றது என்பதை அவர்கள் எப்போதும் அறிந்ததில்லை. அதற்கான சில தகவல்களைத் தருகின்றோம்.

ஹிந்து பெண்களுக்கு தங்கள் கணவனை விவாகரத்து செய்து கொள்ளும் உரிமை இல்லை.

அவளுக்கு சொத்துரிமையோ வாரிசுரிமையோ கிடையாது

அவள் தன் ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும். அவளுடைய ஜாதகம் யாருடைய ஜாதகத்தோடு பொருந்தி வருகின்றதோ அவனையே மணம் முடிக்க வேண்டும்.

அவள் வரதட்சணை என்றும சீர் என்றும் பெரும் பணத்தைக் கொண்டு வந்து கொட்ட வேண்டும்.

அவளுடைய கணவன் இறந்து போனால் அவளும் உடன்கட்டை ஏறி தன்னை அழித்துக் கொள்ள வேண்டும்.

அவள் மறுமணம் செய்து கொள்ளக் கூடாது.

விதவைகள் சமுதாயத்தின் சாபங்கள் எனக் கருதப்படுகின்றார்கள். அவர்கள் சமுதாயத்தில் புழங்கக் கூடாது. அவள் வண்ணப் புடவைகளைக் கட்டக் கூடாது. அவள் அணிமணிகள் அணியக்கூடாது.

ஹிந்துக்கள் இந்தக் கொடுமையைச் செய்து கொண்டே இருக்கின்றார்கள். இது பத்திரிக்கைகள் நாள் தவறாமல் தரும் செய்தி.

உயர்ஜாதி ஹிந்துக்கள் தங்கள் பெண்களை ஆடு, மாடுகளை விட கேவலமாக நடத்துகின்றார்கள்.

பிராமணர்களின் பத்திரிக்கைகள் இத்தனையையும் மறைத்துவிட்டு முஸ்லிம் பெண்களின் உரிமையைப் பற்றி பேசி நம்மை திசை திருப்பி விட்டன.

உடன் கட்டை ஏற்றும் கொடுமை

ஓர் ஹிந்துவின் மனைவி இறந்து விட்டால் அவன் தாரளமாக ஒரு பெண்ணை வேண்டும் போல் வரதட்சணை வாங்கி மறுமணம் செய்து கொள்ளலாம்.

ஆனால் ஒரு ஹிந்து பெண்ணின் கணவன் இறந்துவிட்டால், அவள் மறுமணம் செய்து கொள்ளக்கூடாது என்பது மட்டுமல்ல, அவளை அந்த கணவனோடு சேர்த்து எரித்தேயாக வேண்டும்.

ஹாரியவின்படி கணவன் இறந்தவுடன் உடன் கட்டை ஏறும் பெண் மூன்று குடும்பங்களைத் தூய்மைப்படுத்துகின்றாள்.

அவளுடைய தந்தையின் குடும்பம், தாயாரின் குடும்பம், தன் கணவனின் குடும்பம்.

பிராமண வேதாந்திகள் கூறுகின்றார்கள்: வேதத்தின் வாக்காக நின்று அவர்கள் பேசுகின்றார்கள். கணவணோடு தன்னை எரித்துக் கொள்ளாத பெண்கள் மீண்டும் பெண்ணாகப் பிறக்கும் வாய்ப்பை இழந்துவிடுவார்கள்.

ஒரு பெண்ணின் கணவன்-பிராமணன் ஒருவனைக் கொலை செய்துவிட்டான். இவன் இறந்விட்டான். இந்தக் கொலையாளியின் மனைவி அவனோடு கொள்ளிக்கட்டையில் வெந்து விடுவாளேயானால் அவனுடைய இந்தப் பாவம் கழுவப்பட்டுவிடும்.

ஆமாம். கணவனோடு மனைவியும் இறந்துவிட்டால் அவர்களின் குழந்தைகளின் கதி என்ன?

இந்தக கேள்வியைப் பூரிசங்கராச்சாரியார் அவர்களிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் இதோ:

அது விதி! அந்தக் குழந்தைகள் தாயில்லாமல் கஷ்டப்படட்டும். சாகட்டும். அதைப்பற்றிக் கவலை இல்லை. ஆனால் உடன்கட்டை ஏறும் விதியைச் செயல்படுத்தியேயாக வேண்டும்.

''உடன் கட்டை ஏறுதல்" – 'சதி" அந்த மாதாவுக்கு ஜே! 14-9-87இல் டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில இதழ் பின்வரும செய்தியைத் தருகின்றது.

ஜெய்ப்பூர்: மூடத்தனமாக உடன்கட்டை ஏறுதல் என்ற பழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இராஜஸ்தானிலுள்ள ஓர் ஹிந்துப் பெண் தன்னுடைய கணவனின் இறந்த உடல் எரிந்து கொண்டிருக்கும்போது தானும் ஏறி எரிந்துவிட்டாள்.

18 வயதான இந்தப் பெண்ணின்பெயர் ரூப்கான்வர். இவளது கணவன் மான்சிங் மருத்துவமனையிலிருந்த போது இறந்து விட்டான்.

மான்சிங்கின் உடல் அவருடைய சொந்த ஊரான திர்வாலாவுக்கு எடுத்து வரப்பட்டது. எரிய+ட்டும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நெருப்பு எரிந்து கொண்டிருக்கும் போது ரூப்கான்வர் தானும் அதனுள் ஏறி தன்னையும் எறித்துக் கொண்டாள். அந்த கிராமத்து மக்களுக்கு அவள் உடன்கட்டை ஏறப்போகின்றாள் என்பது ஏற்கனவே தெரிந்திருந்ததால், அங்கு பெருவாரியாக குழுமி இருந்தார்கள். பலர் முழக்கங்களை எழுப்பி அதனை வரவேற்றார்கள்.

உடன்கட்டை ஏறிய இந்தத் தகவல் காவல்துறைக்கு மிகவும் காலதாமதமாகவே கிடைத்ததாம். அவர்கள் ரூப்கான்வரை உடன்கட்டை ஏற கட்டாயப்படுத்திய மான்சிங்கின் உறவினர்கள் 4 பேர் மீத வழக்குப் பதிவு செய்ய முயற்சி செய்தார்களாம்.

இப்படி கணவனோடு எரிய+ட்டப்பட்ட ரூப்கான்வர் மணமகளாக வரும்போது ரொக்கமாக ரூபாய் ஒரு லட்சமும், 23 தோலா தங்கமும், டிவி குளிர்சாதன பெட்டி ஆகியவற்றைக் கொண்டு வந்தாளாம்.

இது சம்பந்தமாக சீட்டா சிங் என்ற கிராமத்து ஆசிரியர் ஒருவரைக் கேட்டபோது அவர் இப்படி பதில் சொன்னார்.

ரூப்கான்வர் உடனேயே உடன்கட்டை ஏறாவிட்டாலும் அவளுக்கு வேறு வாழ்க்கை கிடையாது. ஹிந்து சமுதாயத்தில் மறுமணம் என்பதற்குத்தான் வாய்ப்பே கிடையாதே!

இன்னும் அந்த ஆசிரியர் கூறுகின்றார்:

சமுதாயம் ஒரு விதவையை 'குலச்சனி" என்றே கூறுகின்றது. அவள் தேவை இல்லாத ஒரு பொருளாதார சுமை! அவள் பாதங்களில் செருப்பு அணிந்து கொள்ளக் கூடாது. அவள் வெற்றுத் தரையில் தூங்க வேண்டும். அவள் வெளியே வர முடியாது. அவள் வேறு ஆடவரோடு பேசக்கண்டால் அவள் மீது ஐயமும் அவதூறும் பாயும். அவள் அத்தகையதொரு கேவலமான வாழ்க்கையை வாழ்வதைவிட உடன்கட்டை ஏறுவது எவ்வளவொ உத்தமம்.

உடன் கட்டை ஏறுவது கட்டாயத் தேவை

ராய்டர் செய்தி நிறுவனம் 25-9-87இல் வெளியிட்ட செய்தியில் இப்படிக் கூறுகின்றது.

ரூப்கான்வர் விருப்பப்படி உடன்கட்டை ஏறவில்லை. அவள் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவே முயற்சி செய்தாள். ஆனால் அவள் கடைசி வரை உடன்கட்டை ஏறும்படி நிர்பந்திக்கப்பட்டாள். இன்னும் சில கிராமவாசிகள் கூறுகின்றார்கள்: ரூப்காள்வர் எரிந்து கொண்டிருந்த தணலில் திணிக்கப்பட்டாள். அவள் கடைசி வரை தனது உயிருக்காகக் கதறினாள்.

காவல்துறையினர் நடத்திய புலன் விசாரணையில் ரூப்கான்வர் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள முயன்றது உண்மை என்றும், தெளிவாகத் தெரியவந்தது. இது காவல்துறையில் 4-10-87 தகவலறிக்கையில் தெளிவாகப் பதியப்பட்டுள்ளது.

மிகவும் கோரமானதோர் தகவலையும் காவல் துறையின் தகவலறிக்கை தெரிவிக்கின்றது.

ரூப்கான்வர் தன்னைச் சுற்றி இருந்த கட்டைகளை தீ வைக்கப்படும் முன் அவற்றிலிருந்து தப்பித்துவிட முயன்றாள். ஆனால் அவளுடைய கழுத்துவரை கட்டடைகள் அடுக்கப்பட்டிருந்ததால் அவளால் எதுவும் செய்திட இயலவில்லை. அவள் அழுத போது கருணை கேட்டு மன்றாடியபோது சுற்றி நின்ற ஹிந்து பெருமக்கள் அவள் காயத்திரி மந்திரத்தை உச்சரிக்கின்றாள் என்றார்கள்.

அவளுடைய அழுகுரல் வெளியே கேட்காத அளவில் சுற்றி நின்றவர்கள் சதி மாதாவுக்கு ஜே! என அலறி அவளது அபயக்குரலை வெளியே கேட்காமல் அடக்கிவிட்டார்கள்.

சட்டத்தின் பிடியில் பிடிபடாமலிருக்க எல்லோரும் அவளது வயது 18 முடிந்து விட்டது என்றார்கள். ஆனால் அவளது பள்ளிச் சான்றிதழ்கள் படி அவளது வயது 15 மட்டுமே!

கல்கத்தாவைச் சார்ந்த பெண்கள் இயக்கம் நடத்திய ஆய்வு ஒன்றில் 'சதி" என்ற உடன்கட்டை ஏறுதல் மணமகனின் வீட்டார் காட்டும் பிடிவாதத்தால் தான் நடைபெறுகின்றது. இதில் விதவையாகிவிட்டவள் காட்டும் எதிர்ப்பை அவள் கருணைகாட்ட சொல்லி வடிக்கும் கண்ணீரை யாரும் ஏறெடுத்தப் பார்ப்பதில்லை.

இந்தியாவில இது கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்றாலும், இன்றுவரை யாரும் இந்தக் குற்றத்திற்காக தண்டிக்கப்படவில்லை.

இதே ரூப்கான்வர் ஒரு விபத்தில் இறந்திருந்தால் அவளது கணவன் நெருப்பின் நடுவே அமர்ந்து மாண்டிருக்கமாட்டான். மாறாக அவன் மணப்பந்தலில் அமர்ந்து இன்னொரு பெண்ணைக் கைப்பிடித்திருப்பான். இந்த இரண்டாவது திருமணத்திற்காகவும் அவன் இன்னொரு லட்சம் ரூபாயை வரதட்சணையாய் பெற்றிருப்பான்.

இதில் இன்னும் கொடுமை என்னவெனில் மான்சிங்கின் இல்லத்தார் ரூப்கான்வர் எரிந்து முடியும்வரை இந்த தகவல் ரூப்கான்வரின் பெற்றோருக்குத் தெரியாமல் தடுத்துவிட்டார்கள்.

எல்லாம் முடிந்த பின்னர் தான் ரூப்கான்வரின் பெற்றோருக்குத் தெரியும். அதன் பின்னர் தான் காவல் துறைக்குத் தெரியுமாம்.

ரூப்கானவரின் பெற்றோர்கள் தங்களது ஒரே மகளை இவ்வளவு கோரமாக இழந்து கதறி அழுதனர். இத்தனைக்கும் காரணம் எந்த அடிப்படையும் இல்லாத ஹிந்து மதத்தை அவர்கள் சார்ந்திருந்தது தான்.

ஹிந்துப்பெண்ணாக இருப்பது ஒரு சாபக்கேடு!

டாக்டர் லட்சுமி என்ற மகப்பேறு மருத்துவ நிபுணர். ஒரு பிராமணப் பெண். இவர் பிராமணப் பெண்களுக்கு ஓர் அழைப்பை விடுக்கின்றார். அதில்

பிராமணப் பெண்கள் தங்கள் தயக்கங்களிலிருந்து வெளி வந்து ஹிந்து மதம் பெண்களுக்கெதிராக வகுத்துள்ள விதிகளுக்கெதிராகப் போராட வேண்டும் என்றும் அறைகூவல் விடுக்கின்றார்.

ஜாதகப் பொருத்தம், வரதட்சணை, சீரம் வரிசையும் பிராமணப் பெண்களை 30 வயதுக்குள் திருமணம் செய்ய விடுவதில்லை.

டாக்டர் லட்சுமி அவர்களே 37வது வயதில் தான் திருமணம் செய்து கொள்ள முடிந்தது.

இதனால் பலர் கற்பிழக்க வேண்டியதிருக்கின்றது திருமணத்திற்கு முன்னால்

இதற்குக் காரணம் பிராமண ஆண்களே?
!

Source: உண்மை இஸ்லாம்,nidur.info