வெள்ளி, 24 டிசம்பர், 2010

TNTJ தலைவர் அல்தாஃபியும் 40 பாதிரியார்களும்

கும்பகோணத்தில் 40 பாதிரியார்களுடன் டிஎன்டிஜே நடத்திய நேரடி விவாதம்.

கடந்த 14-12-2010 செவ்வாய்க் கிழமை அன்று தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் கிறிஸ்தவ பாதிரியார்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் குடந்தை மறை வட்டத்தில் உள்ள சுமார் நாற்பது பாதிரியார்கள் கலந்து கொண்டு இஸ்லாம் சம்மந்தப்பட்ட கேள்விகள் கேட்டனர். இதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி, கேள்விகளுக்கு பதில் அளித்தார்.


பாதிரியார்கள் பங்கேற்ற கேள்வி – பதில் நிகழ்ச்சி

தஞ்சை வடக்கு மாவட்டம் கும்பகோணத்தில் இருந்த நமது மாவட்ட நிர்வாகிகளை கடந்த 13-12-2010 அன்று சந்தித்த ஒரு கிறிஸ்தவ சகோதரர், 14.12.10 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11 மணியளவில் குடந்தை மறைவட்ட பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும், இந்த நிகழ்ச்சி குறித்த ஆலோசனை நடைபெற்ற போது, இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அறிஞர் ஒருவரை அழைத்து "உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?" என்பதனை அறிய ஒரு உரை நிகழ்த்த சொல்ல வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டதாகவும் அதில் தங்களது அமைப்பை சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறீர்களா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

அதைத்தொடர்ந்து, ஃபாதர் மார்ட்டின் அவர்கள் நமது மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து, குடந்தை மறைவட்ட பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில் தஞ்சை சுற்று வட்டார பகுதியில் சர்ச்சுகளில் பொறுப்பாளராகவுள்ள 40க்கும் மேற்பட்ட பாதிரிமார்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், அதில் தங்களது அமைப்பு சார்பாக உங்களது மார்க்க அறிஞர் வந்து “உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்த வேண்டும் என்ற வேண்டுகோளை நேரில் வைத்தார்.

அதற்கு பதிலளித்த நமது தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், நாங்கள் வெறுமனே உரை நிகழ்த்திவிட்டு மட்டும் செல்ல மாட்டோம். இஸ்லாத்திற்கும் கிறிஸ்துவ மார்க்கத்திற்கும் மத்தியில் எண்ணற்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன; எனவே அவற்றை கேள்விகளாக நாங்கள் எழுப்புவோம். அதற்கு பாதிரிகளாக இருக்கக்கூடிய நீங்கள் பதிலளிக்கவேண்டும்.

அதைப்போன்று உங்களுக்கு இஸ்லாம் மார்க்கம் குறித்து இருக்கக்கூடிய எத்தகைய குற்றசாட்டுகளையும் கேள்விகளாக நீங்கள் எழுப்பலாம். அதற்கு நாங்கள் பதிலளிப்போம். இந்த நிலைப்பாட்டிற்கு தாங்கள் தயாரா? என்று கேள்வியெழுப்ப, தாங்கள் தாராளமாக கேள்விகளை எழுப்பலாம். நாங்களும் கேள்விகளை கேட்கின்றோம், நீங்களும் பதிலளியுங்கள் என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதைத்தொடர்ந்து, மாநில நிர்வாகத்தை தொடர்புகொண்ட தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளிடம் இந்த நிகழ்ச்சியில் மாநிலத் தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல் தாஃபி கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

மறுக்கப்பட்ட பொன்னாடை வரவேற்பு:



மாநிலத் தலைவரோடு, தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் இம்தியாஸ், செயலாளர் ராசிக், மற்றும் சுவாமிமலை ஜாஃபர் ஆகி யோர் நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றனர். கும்பகோணம் காமராஜர் சாலையில் அமைந் துள்ள தூய மரியன்னை பேராலய வளாகத் தில் 14-12-2010 செவ்வாய்க்கிழமை அன்று காலை 11மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பமானது. நிகழ்ச்சியில் தஞ்சை சுற்றுவட்டார பகுதியில் சர்ச்சுகளில் பொறுப்பாளராகவுள்ள 40க்கும் மேற்பட்ட பாதிரிமார்கள் குழுமியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பொறுப்பாளராகவுள்ள ஃபாதர் பீட்டர் பிரான்சிஸ் அவர்கள் முதலில் நமது அழைப்பை ஏற்றுவந்துள்ள பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தப்படும் என்று அறிவிப்பு செய்தார். அவர் அறிவிப்பு செய்தவுடனேயே இது எங்களது மார்க்க நெறிமுறைகளுக்கு எதிரானது, எனவே இத்தகைய பொன்னாடை களை நாங்கள் ஏற்பதில்லை என்று கூறியவுடன் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.

உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த உரை:

அதைத்தொடர்ந்து, மாநிலத்தலைவர் சகோதரர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர் கள், உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி னார்.



உரைக்கு முன்னால், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பல்வேறு விஷயங்களில் ஒன்றுபட்டு இருப்பதை பட்டியலிட்டார்.

1. நியாயந்தீர்க்கப்படும் நாளை நம்புதல்
2. இறந்த பிறகு பரலோக ராஜ்ஜியம் உண்டு என்பதை நம்புதல்
3. தீர்க்கதரிசிகளுக்கு இறைவனிடத்திலிருந்து வேதம் வருகின்றது என்பதை நம்புதல்
4. ஏசு தந்தையின்றி பிறந்தார் என்பதை நம்புதல்
5. குழந்தை ஏசு பேசினார் என்பதை நம்புதல்

இதுபோன்ற நம்பிக்கையில் நாம் ஒன்று பட்டு இருந்தாலும், ஏசுவை நீங்கள் இறைவனுடைய மகன் என்று சொல்கின்றீர்கள், அவரை வணங்குகின்றீர்கள், கடவுள் மூன்று என்று கூறுகின்றீர்கள் இதுபோன்ற பல விஷயங்களில் முரண்பாடுகளும் இருக்கின்றன.

எனவே நமக்குள் இருக்கும் முரண்பாடுகளை களையும் விதமாக கிறிஸ்தவ பாதிரிமார்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் ஒன்றாக அமர்ந்து நமக்கு மத்தியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களையும் விதமாக ஒரு முழு அளவிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் உங்களுக்கும், எங்களுக்கும் மத்தியில் இருக்கும் கருத்து வேறு பாடுகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும்.

எனவே இதுபோன்றதொரு கலந்துரையாடல் காலத்தின் கட்டாயம் என்பதையும் அந்த கலந்துரையாடலுக்கு நாங்கள் தயாராக இருப்பதாகவும் தனது கருத்தையும் வேண்டு கோலையும் முன்வைத்துவிட்டு தனது உரையை ஆரம்பித்தார்.

உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?

அல்தாஃபி அவர்கள் தனது உரையில் உலகில் அமைதி நிலவ வேண்டும் என்றால் தீவிரவாத செயல்கள் குறைய வேண்டும். நாடு பிடிக்க வேண்டும், அடுத்தவர்களுடைய பொருளாதாரத்தை சுரண்ட வேண்டும், அடுத்த நாடுகளுடைய வளத்தை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில கிறிஸ்தவ நாடுகள் தங்களது தீவிரவாதத்தை கட்ட விழ்த்து விடுகின்றன.



இந்த தீவிரவாத செயல்கள் ஒழிக்கப்பட்டாலே உலக நாடுகளில் நடைபெற்று வரும் 50 சதவீதத்திற்கும் மேற்பட்ட தீவிரவாத செயல்கள் அழித்தொழிக்கப்பட்டு உலகத்தில் அமைதி நிலவும். இதை இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களது இறுதிப் பேருரையில், அடுத்தவருடைய மானம், மரியாதை, பொருள் மற்றவருக்கு ஹராம் (அதாவது தடுக்கப்பட்டது) என்று கூறிச் சென்றுள்ளார்கள்.
ஒருவருடைய மானம், மரியாதை, பொருள், உடைமைகள் அனைத்தும் புனித மானவை. அந்த புனிதம் பேணப்பட வேண்டும் என்றும், இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே, இந்த நிலைப்பாட்டை ஒவ்வொரு நாடுகளும் மேற்கொண்டாலே, இந்த அறிவுரையை ஒவ்வொரு நாடுகளும் கடை பிடித்தாலே உலகத்தில் அமைதி நிலவும் என்று அழுத்தமாக இஸ்லாத்தின் நிலைப் பாட்டை பதிய வைத்தார்.

பாவம் ஒரு பக்கம், பழி ஒரு பக்கம்:

நிலைமை இவ்வாறிருக்க கிறிஸ்தவ நாடுகளோ தாங்கள் செய்யும் தீவிரவாத செயல்களை மறைத்துவிட்டு, தாங்கள் எந்த நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு நடத்துகின்றார்களோ, எந்த நாட்டின் வளத்தை சுரண்டுவதற்காக அவர்கள் மீது போர் தொடுக்கின்றார்களோ அந்த அப்பாவி நாட்டுமக்கள் இவர்களை எதிர்த்து ஆயுதம் தாங்கினால் தாங்கள் செய்த தீவிரவாத செயலை மறைக்க முஸ்லிம்களின் மீது அந்த பழியைப் போட்டுவிட்டு தங்களை சாந்த சொரூபிகளைப் போன்று உலக மக்களுக்கு காட்டிக் கொள்கின்றனர்.
தங்களது தீவிரவாத முகத்தை மறைப்பதற்காக தங்களை சாந்த சொரூபிகளைப்போல வேடமிட்டு இரண்டு வேடம் போட்டு முஸ்லிம்களின் மீது பழிபோடும் செயலை கிறிஸ்தவ உலகம் தான் செய்து வருகின்றது என்ற குற்றச்சாட்டை பகிரங்கமாக வைத்தார்.



மேலும், உலக நாடுகள் மீது அநியாயமாக போர் தொடுக்கும் கிறிஸ்தவ நாடுகளில் யாரும் தீவிரவாதிகள் என்று கூறுவதில்லை. அதே நேரத்தில் நாடுபிடிக்க வந்த கொள்ளயர்களை நாட்டைவிட்டு விரட்டும் புனித வேலையை செய்பவர்களை தீவிரவாதிகள் என்று மீடியாக்களும் குற்றம் சுமத்தி அபாண் டத்தை வீசுகின்றன என்றும், அதே நேரத்தில் இத்தகைய நிலையை முஸ்லிம்கள் விஷயத்தல் மட்டும்தான் இத்தகையோர் எடுக்கின்றனர் என்றும், அதே நேரத்தில் மாவோயிஸ்ட்டுகள், நக்சலைட்டுகள், விடுதலைப்புலியினர், போன்றோர் போராட்டக்களத்தில் குதிக் கும்போது அவர்களாக தங்களது மதத்தோடு இணைத்து இந்து தீவிரவாதிகள் என்றோ, அல்லது கிறிஸ்தவ நாடுகள் இத்தகைய ஆக்கிரமிப்பை செய்யும்போது கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்றோ கூறுவதில்லை என்பதையும் வேதனையோடு தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

அதே நேரத்தில் எதிர்த்து போரிடுபவர்களை மட்டும்தான் தீவிரவாதிகள் என்று கூறும் பழக்கம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும், வியட்நாம், கௌதமாலா போன்ற கிறிஸ்தவ நாடுகளை அமெரிக்கா ஆக்கிரமிக்கும்போதாவது அவர்களை எதிர்த்து போரிட்ட வியட்நாம், மற்றும் கௌதமாலாவை சேர்ந்த கிறிஸ்தவர்களை கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று யாரும் கூறவில்லை என்பதையும் தனது உரையில் பதிய வைத்தார்.

மேலும், நமது இந்திய நாட்டையும் ஆக்கிரமிக்க வந்த கிறிஸ்தவர்களை யாரும், கிறிஸ்தவ தீவிரவாதிகள் என்று கூறவில்லை. அவர் களை எதிர்த்து போரிட்ட இந்துக்கள், மற்றும் முஸ்லிம்களை இந்து தீவிரவாதி என்றோ முஸ்லிம் தீவிரவாதி என்றோ கூறவில்லை என்பதையும் தனது உரையில் சுட்டிக் காட்டி னார்.

ஆக மொத்தத்தில், உலகத்தில் நடக்கும் பெருவாரியான தீவிரவாத செயல்களுக்கு கிறிஸ்தவ நாடுகளே காரணம் என்றும், அவர்கள் தங்களது தீவிரவாத செயல்களை நிறுத்திக் கொண்டால் உலகில் நடைபெறும் தீவிரவாதத்தில் பெருவாரியானவை குறைந்து விடும் என்பதையும் அழுத்தம் திருத்தமாக பதிய வைத்தார்.

அனல்பறந்த கேள்வி – பதில் நிகழ்ச்சி:

கூடியிருந்த கூட்டமோ கிறிஸ்தவத்தை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டு, அதை பிரச்சாரம் செய்யும் பாதிரியார் களின் கூட்டம். அங்கு இறைவனது மாபெரும் அருளைக் கொண்டு உண்மைக் கருத்துகளை போட்டு உடைத்தால் பாதிரியார்கள் சும்மா இருப்பார்களா என்ன? குழுமியிருந்த பாதிரியார்கள் ஒவ்வொருவரிடத்திலிருந்தும் கேள்விக்கணைகள் நம்மை நோக்கி பாய்ந்தன.



அவர்களது அத்தனை கேள்விகளுக்கும் அறிவிப்பூர்வமாகவும், ஆக்கப்பூர்வமாகவும் அல்தாஃபி அவர்கள் பதிலளித்தார். இஸ்லாம் மார்க்கம் குறித்த பாதிரிமார்களின் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்க கேள்வி-பதில் நிகழ்ச்சி அனல் பறந்தது.

--------------------------------------------------------------------------------------------------------------
Thanks :- tntj.net & tvtntj.net (as copied and pasted with pictures)
--------------------------------------------------------------------------------------------------------------
டிஸ்கி:
1 - எனது ஊருக்கு அடுத்த குடந்தையின் பாதிரியார் பெருமக்கள், தங்கள் பாதிரியார்கள் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சியில், இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த அறிஞர் ஒருவரை அழைத்து "உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ன?" என்பதனை அறிய ஒரு உரை நிகழ்த்த சொல்ல வேண்டும் என்று முடிவெடுத்தது என்னை கவர்ந்தது. நிச்சயமாக இது சமூக ஒற்றுமைக்கு மிகச்சிறந்ததொரு எடுத்துக்காட்டு. எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது.

2 - அதற்கு உடனே இசைவு தந்ததோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு தமிழக அளவில் பிரபலமான ஓர் இஸ்லாமிய அமைப்பின் மாநிலத்தலைவரே உடனடியாக-நேரடியாக சென்று அங்கே உரை நிகழ்த்தியதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

3 - அதுமட்டுமின்றி, அவர் நிகழ்த்திய உரை எனக்கு மிக மிக பிடித்திருந்ததால், அது மேலும் பலரை சென்றடைய வேண்டும் என நான் கருதியதால்தான் இந்த காபி/பேஸ்ட் பதிவு. (வண்ணம் தீட்டி படம் காட்டியது மட்டும் நம் வேலை..!).

நன்றி :

திங்கள், 20 டிசம்பர், 2010

கிறிஸ்துமசும் இஸ்லாமும்!

நன்றி : அபூ அப்திர்ரஹ்மான்

ஒவ்வொரு வருடமும் டிஸம்பர் மாதம் 25 ஆம் நாள் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகின்றனர். அவர்கள் கடவுளாகக் கருதும் இயேசு கிறிஸ்து அன்று பிறந்ததாகவும் அவர்கள் நம்புகின்றனர். அவர்களோடு நட்பு கொண்ட பிற மதத்தவரும் அவர்களுக்கு அந்நாளில் வாழ்த்து கூறுகின்றனர். அவர்களால் அன்றைய தினம் சிறப்பாக தயாரிக்கப்படும் இனிப்புகளையும் உணவுகளையும் வாங்கி புசித்து மகிழ்கின்றனர். பல முஸ்லிம்களும் கிறிஸ்தவ அன்பர்களுடன் நெருங்கிப் பழகியும் அன்பு பாராட்டியும் கலந்துறவாடியும் வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்துமஸின் போது அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான எளியதொரு வழிகாட்டுதலே இக்கட்டுரை!

இஸ்லாம் படைத்த இறைவனின் இயற்கை மார்க்கமாகும். அதனை ஏற்றுக்கொண்டவனே முஸ்லிம். ஒரு முஸ்லிமின் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் இஸ்லாம் முறையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. பிற மதத்தவர்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதற்கும் இஸ்லாம் வழிகாட்டுகிறது. மேன்மை மிக்க அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

"மார்க்க விஷயத்தில் உங்களுடன் எவர் போரிடவில்லையோ, இன்னும் உங்களுடைய வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றவில்லையோ அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதை விட்டும், அவர்களின் பால் நீங்கள் நீதி செலுத்துவதை விட்டும் அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்" (அல்குர்ஆன் 60 அல் மும்தஹினா:8)

இஸ்லாமல்லாத பிற மதத்தவர்கள் பகிரங்கமாக இஸ்லாமுடன் போர் தொடுக்காத வரை அவர்களுக்கு நன்மை செய்வதை அல்லாஹ் தடுக்கவில்லையென்றும் அவர்களுடன் நீதியுடன் நடந்து கொள்வதை அல்லாஹ் விரும்புகின்றான் என்றும் நீதிமான்களுக்கெல்லாம் நீதிபதியாகிய அல்லாஹ் அறிவிக்கின்றான்.

தெளிவான நீதி மிக்க ஓரிறைக் கோட்பாட்டைக் கொண்ட இஸ்லாம் பிற மதத்தவர் வணங்கும் கடவுளர்களை ஏசுவதையும் தடை செய்துள்ளது.

அல்லாஹ்வையன்றி அவர்கள் அழைத்துக் கொண்டிருப்போர நீங்கள் திட்டாதீர்கள், அப்போது அவர்கள் அறிவின்றி, வரம்பு மீறி அல்லாஹ்வை திட்டுவார்கள் (6 அல்அன்ஆம் 108)

ஒரு பன்மைச் சமூகத்தில் வாழும் முஸ்லிம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று வழிகாட்டும் இஸ்லாம் எந்நிலையிலும் அதன் கொள்கைக் கோட்பாடுகளில் சிஞ்சிற்றும் விட்டுக்கொடுத்தல்களை ஏற்பதில்லை. அக்காரணத்தால் தான் இஸ்லாம் அதன் கொள்கையில் தனித்து விளங்குகிறது. தெளிந்த நீரோடை போன்ற குழப்பமற்ற இறைகொள்கையில் அது என்றும் நிலைத்து நிற்கிறது. காரணம் அது வணக்கத்திற்குரிய உண்மையான இறைவனிடமிருந்துள்ள வழிகாட்டுதல் ஆகும்.

இது (ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் உண்மையானவன், அவனையன்றி நிச்சயமாக எதை அவர்கள் அழைக்கின்றார்களோ அது பொய்யானதாகும், நிச்சயமாக அல்லாஹ் அவன்தான் உயர்வானவன், மிகப்பெரியவன் என்ற காரணத்தினாலாகும் (22 அல்ஹஜ் 62 மேலும் பார்க்க 31:30)

இஸ்லாமும் கிறிஸ்தவமும் முற்றிலும் முரண்பட்ட இரண்டு கொள்கைகளாகும். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது இஸ்லாம். வணக்கத்திற்குரிய கடவுள்கள் மூன்று என்ற திரித்துவக் கொள்கையை உடையது கிறிஸ்தவம். அத்துடன் இயேசு அல்லாஹ்வின் புதல்வன் என்பதும் கிறிஸ்தவ மதத்தின் அடிப்படைக் கொள்கையாகும். இன்னும் மனிதர்களின் பாவத்தைப் போக்குவதற்காக இயேசு சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதும் கிறிஸ்தவத்தின் அடிப்படைக் கோட்பாடு ஆகும். ஆனால் இஸ்லாம் இவற்றை வன்மையாக மறுப்பதுடன் இவை அனைத்தும் குஃப்ர் எனும் நிராகரிப்புக் கொள்கை என்றும் கூறுகிறது.

"நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் மர்யமுடைய குமாரர் மஸீஹ் என்று எவர்கள் கூறுகிறார்களோ அத்தகையோர் திட்டமாக நிராரித்து விட்டனர்" (5 அல்மாஇதா 17, 72)

"நிச்சயமாக அல்லாஹ் - மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் திட்டமாக (அவனை) நிராகரித்து விட்டனர்" (5 அல்மாஇதா 73)

(நபியே!) நீர் கூறுவீராக: அவன் - அல்லாஹ் ஒருவனே! அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்! அவன் (எவரையும்) பெறவுமில்லை, அவன் (எவராலும்) பெறப்படவுமில்லை! இன்னும் அவனுக்கு நிகராக எதுவுமில்லை! (அல்குர்ஆன் 112: 1-4)

இஸ்லாமின் உறுதியான இறைக் கோட்பாட்டையும் கிறிஸ்தவ நம்பிக்கைகள் குறித்த இஸ்லாமிய நிலைபாட்டையும் மேற்கண்ட வசனங்கள் தெளிவாக விளக்குகின்றன!

அடுத்ததாக, கிறிஸ்துமஸ் என்பது என்ன? இயேசுவின் பிறந்த தினம்! இதனை அவர்கள் கொண்டாடுகின்றனர்! இதற்காக வாழ்த்துக்கள் பரிமாறப்படுகின்றன! ஒருவரின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு மார்க்கம் அனுமதிக்கிறதா? என்பது ஒருபுறம் இருக்கட்டும். இங்கே யாருக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது? எந்த நம்பிக்கையின் அடிப்படையில் அது கொண்டாடப்படுகிறது? என்பதுதான் முக்கியம்.

கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை இயேசுவை அல்லாஹ்வின் மகன் என்று அவர்கள் நம்புகின்றனர். இன்னும் அவரையே கர்த்தர் என்றும் நம்புகின்றனர். அப்படியானால் டிஸம்பர் மாதம் 25 ஆம் தேதி அவர்களின் நம்பிக்கைப் படி அல்லாஹ்வுடைய மகனுக்குப் பிறந்த நாள் கொண்டாடுகின்றனர். அவர்களின் இந்த நம்பிக்கையை வல்லமை மிக்க அல்லாஹ் இவ்வாறு மறுத்துக் கூறுகின்றான்.

உஸைர் அல்லாஹ்வுடைய மகன் என்று யூதர்கள் கூறுகின்றனர், (அவ்வாறே ஈஸா) மஸீஹ் அல்லாஹ்வுடைய மகன் என்று கிறிஸ்தவர்கள் கூறுகின்றனர், இது அவர்களுடைய வாய்களால் கூறும் (ஆதாரமில்லா வெற்றுக்) கூற்றாகும். (இவ்விஷயத்தில் அவர்களுக்கு) முன்பிருந்த நிராகரிப்பாளர்களின் சொல்லுக்கு அவர்கள் ஒப்பாகின்றனர். அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எவ்வாறு அவர்கள் (சத்தியத்தை விட்டும்) திருப்பப்படுகின்றனர்? (9 அத்தவ்பா 30)

அல்லாஹ்வுடைய தூதரான ஈஸா மஸீஹ் (இயேசு) அல்லாஹ்வுடைய மகன் என்ற அவர்களின் கூற்று ஆதாரமற்ற இட்டுக் கட்டுதல் என்பது மட்டுமல்ல, இது அல்லாஹ்வின் உயர்ந்த தன்மைகளில் அவர்கள் ஏற்படுத்திய களங்கமாகும்! இப்பேரணடத்தையே அதிர வைக்கும் மிகப்பெரிய அபாண்டமாகும்! வல்லமையும் மேன்மையும் மிக்க அல்லாஹ் பறைசாற்றுகிறான்:

இன்னும், "அர்ரஹ்மான் (தனக்கென) ஒரு குமாரனை எடுத்துக் கொண்டுள்ளான்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "நிச்சயமாக நீங்கள் அபாண்டமான (ஒரு கூற்றைக்) கொண்டு வந்திருக்கிறீர்கள். இவர்களின் இந்தக் கூற்றினால் வானங்கள் வெடித்து பூமி பிளந்து மலைகள் சிதறுண்டு விடும் போலும்!. அவர்கள் அர்ரஹ்மானுக்கு ஒரு குமாரன் உண்டென்று அவர்கள் அழைப்பதனால்-(இவை நிகழ்ந்து விடக்கூடும்) ஒரு குமாரனை எடுத்துக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தேவையில்லாதது. ஏனென்றால் வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அர்ரஹ்மானிடம் அடிமையாய் வருபவரேயன்றி வேறில்லை. நிச்சயமாக அவற்றையெல்லாம் அவன் சூழ்ந்தறிகிறான்; இன்னும் அவற்றைத் துல்லியமாகக் கணக்கிட்டு வைத்திருக்கிறான். கியாம நாளில் அவர்களில் ஒவ்வொருவரும் தனித்தனியாக அவனிடம் வருவர். (19 மர்யம் 88-95)

அது மட்டுமல்ல, அவர்களுடைய இந்த இட்டுக்கட்டுதலைக் கூறும் இடங்களில் அதைவிட்டும் அல்லாஹ் மிகத்தூயவன் என்று அவனது பரிசுத்தத் தன்மையைப் பறைசாற்றுகிறான்.

மேலும், அல்லாஹ் (தனக்கு) புதல்வனை ஏற்படுத்திக்கொண்டான் என்று அவர்கள் கூறுகின்றனர், (அவர்கள் கூறுவதை விட்டும்) அவன் மகாத் தூய்மையானவன் - அன்றியும் வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியவை, அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன. (2 அல்பகரா: 116) மேலும் (10:68, 21:26)

இன்னும் உயர்ந்தோனாகிய அல்லாஹ் அவனது வல்லமைகளையும் திருநாமங்களையும் பற்றி எடுத்துக் கூறும் இடங்களிலும் அவன் தனக்கு ஒரு பிள்ளையை எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவ்வாறு நாடியிருந்தால் அவன் அதை செய்திருப்பான், ஆனால் அதை விட்டும் அவன் தூய்மையானவனாக இருக்கிறான் என்றும் பறைசாற்றுகிறான்.

"அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அமைத்தும்" என்று (நபியே!) நீர் கூறுவீராக இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப் படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக! (17 அல்-இஸ்ரா 111)

அவன் எத்தகையவன் என்றால் வானங்கள், பூமி (ஆகியவற்றின்) ஆட்சி அவனுக்கே உரியது அவன் (தனக்கென) ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை அவனுடைய ஆட்சியில் அவனுக்கு கூட்டாளி எவருமில்லை அவனே எல்லாப் பொருட்களையும் படைத்து, அவற்றை அதனதன் அளவுப் படி அமைத்தான்! (25:2)

"இன்னும் நிச்சயமாக எங்கள் இறைவனுடைய மகத்துவம் மிக்க மேலானது, அவன் எவரையும் (தன்னுடைய) மனைவியாகவோ, புதல்வனாகவோ எடுத்துக்கொள்ளவில்லை. (72 அல்ஜின்னு 3)

அவன் வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்தவன். அவனுக்கு மனைவி, எவரும் இல்லாதிருக்க, அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். இன்னும் அவன் எல்லாப் பொருட்களையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (6 அல்அன்ஆம்: 101)

இன்னும் பின் வரும் வசனம் மிகவும் சிந்தனைக்குரியதாகும்!

நபியே!) நீர் கூறும்; "அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்!" (43:81)

முஹம்மத் (ஸல்) அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள். இந்த சமுதாயத்துக்கு எல்லா வகையிலும் சிறந்த முன்மாதிரி ஆவார்கள். அல்லாஹ்வுக்கு ஒரு பிள்ளை என்று இருந்திருந்தால் அதை நானே முதலில் வணங்கி உங்களுக்கு முன்மாதிரியாக இருந்திருப்பேன் என்று கூறுமாறு வல்லமை மிக்க அல்லாஹ் அவர்களிடம் கட்டளையிடுகிறான். அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக்கொள்ளவில்லை என்றும் அவ்வாறு அவன் எடுத்துக் கொண்டான் என்ற கிறிஸ்தவக் கோட்பாட்டுக்கு இவ்வசனம் தெளிவான உறுதியான, அறிவுப்பூர்வமான மறுப்பாகவும் இருந்துகொண்டிருக்கிறது.

மேலும் குர்ஆன் இறக்கப்பட்டதன் நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் கூறும் போது இவ்வேதமானது - அல்லாஹ் தனக்கு ஒருமகனை எடுத்துக் கொண்டான் என்று சொல்லக்கூடியவர்களை எச்சரிப்பதற்காகவும் இறக்கப்பட்டது என்று கூறுகிறான்.

"புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது! அவன் எத்தகையோனென்றால் தன் அடியார் மீது இவ்வேதத்தை இறக்கி வைத்தான் - அதில் எத்தகைய கோணலையும் அவன் ஆக்கவில்லை. மிக்க உறுதியானதாக - அவனிடமிருந்து கடினமான தண்டனையை எச்சரிக்கை செய்வதற்காகவும், நற்செயல்கள் செய்கின்ற நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக அவர்களுக்கு அழகிய நற்கூலி உண்டு என்று நற்செய்தி கூறவதற்காகவும் (இதனை இறக்கினான்) அதில் என்றென்றும் அவர்கள் தங்கியவர்களாக இருப்பர். அன்றியும், அல்லாஹ் மகனை எடுத்துக் கொண்டான் என்று கூறுபவர்களை எச்சரிப்பதற்காகவும் (இதனை இறக்கிவைத்தான்) அவர்களுக்கு இதைப்பற்றி எவ்வித அறிவும் இல்லை, அவர்களுடைய மூதாதையர்களுக்கும் இல்லை, அவர்களுடைய வாய்களிலிருந்து புறப்படும் (இந்த வாக்கியம்) மாபெரும் (பாவமான) வாக்கியமாகும்.; அவர்கள் கூறுவது பொய்யேயன்றி வேறில்லை. (18 அல்கஹ்ஃப்: 1-5)

ஒரு தனிநபருடைய சந்தோஷமான நிகழ்ச்சிக்கு அவருடைய நண்பரோ அல்லது உறவினர்களோ வாழ்த்து கூற வேண்டும் என்றால் வாழ்த்து கூறுபவர் உளப்பூர்வமாக அந்த நிகழ்ச்சியை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அதில் அவர் திருப்தி கொண்டிருக்க வேண்டும். இல்லையெனில் அது உளப்பூர்வமான வாழ்த்தாக அமைவதில்லை. வெறும் முகஸ்துதிக்காக அமைந்து விடும்! இது ஒரு நயவஞ்சகத்தனமான செயல்பாடு ஆகும். இத்தகைய போலியான பாசாங்குகளை இஸ்லாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வதில்லை. இஸ்லாம் தனது கொள்கையில் வெளிப்படையானது! களங்கமற்றது. அல்லாஹ் தனக்கொரு மகனை எடுத்துக் கொண்டான் என்பதை வன்மையாகக் கண்டித்து மறுக்கும் இஸ்லாம் அதைப் பின்பற்றுபவர்கள் அப்படிப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படும் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதை விரும்புமா? நிச்சயமாக இல்லை! அவ்வாறு சொல்லப்பட்டாலும் அது உண்மையான வாழ்த்தாக அமைவதில்லை.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ் கூறுகிறான்: "ஆதமின் மகன் (மனிதன்) என்னை நம்ப மறுத்தான். ஆனால், அதற்கான உரிமை அவனுக்கில்லை. அவன் என்னை ஏசினான். ஆனால் அதற்கான உரிமை அவனுக்கில்லை. அவன் என்னை மறுத்தது, "ஏற்கெனவே இருந்ததைப் போன்று மீண்டும் உயிர் கொடுத்து அவனை எழுப்ப என்னால் முடியாது" என்று அவன் எண்ணியதாகும். அவன் என்னை ஏசியது, "எனக்குக் குழந்தை உண்டு" என்று அவன் சொன்னதாகும். ஆனால், நான் ஒரு மனைவியையோ குழந்தையையோ ஏற்படுத்திக்கொள்வதை விட்டும் தூய்மையானவன் ஆவேன்" (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் (ரழி) நூல் புகாரி - ஹதீஸ் எண் 4482)

ஆக கிறிஸ்துமஸ் விழா என்பது அல்லாஹ்வுடைய மகனாக அவர்கள் ஏற்படுத்திய இயேசுவின் பிறந்த நாளாகும். அதை ஏற்றுக்கொண்ட நிலையில் அல்லது மறுத்துக் கொண்டு பாசாங்கான நிலையில் அன்றி ஒரு முஸ்லிமால் வாழ்த்து சொல்ல இயலாது. இந்த இரண்டு நிலைகளுமே இஸ்லாமுக்கு முரணானதாகும்.

இது அல்லாமல் கிறிஸ்தவ அன்பர்களிடம் மனிதாபிமான அடிப்படையில் நன்மை செய்வதையும் நல்லுறவைப் பேணுவதையும் இஸ்லாம் தடை செய்யவில்லை. எனவே உங்கள் கிறிஸ்தவ அன்பர்கள் கிறிஸ்துமஸ் விசேட நிகழ்ச்சிக்கு அல்லது விருந்துக்கு உங்களை அழைத்தால் அல்லது அதற்கான உணவுகளை உங்களுக்கு அழைத்தால் அதை மவுனமாக ஏற்றுக்கொள்வதை விடுத்து இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்பபடுத்தி நேர்வழியின் பால் அவர்களுக்கு அழைப்பு விடுப்பதே ஏற்றமான செயலாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நேர்வழியில் நிலைத்திலருக்கும் நன்மக்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக!

http://christianpaarvai.blogspot.com/2010/12/blog-post_20.html

சனி, 4 டிசம்பர், 2010

ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்?

"ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்? ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார்? என்று குழம்பிப் போய் இருந்தேன்" ஒரு சகோதரியிடமிருந்து நமக்கு வந்த கடிதம்!

என்னைக் கவர்ந்த இஸ்லாம்!
-ஹாஜரா (எ) ராஜபுஷ்பம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹு. என்னுடைய பெயர் ஹாஜரா. நான் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்தவள். கிருஸ்த்துவப் பெண்ணாக திகழந்தேன். என் பெயர் ராஜபுஷ்பம். கிருஸ்துவ மதத்தில் அதிக பற்றுள்ளவளாக இருந்தேன். பருவப் பெண்ணாக இருந்தபோது அதிகமாக சர்ச்சுக்குப் போவேன். பிரார்த்தனை பண்ணுவேன். எனது தாய் இறந்த பிறகு எனது அக்காவின் வளர்ப்பில் வளர்ந்தேன். எனது அக்கா ஒரு கிருஸ்துவ பையனைப் பார்த்து திருமணம் செய்து வைத்தாள். எனது கணவருடன் பிறந்தவர்கள் 5 தங்கைகள். அதில் முதல் தங்கை எங்களுக்குத் தெரியாமலே இஸ்லாத்தில் இருந்திருக்கிறார்கள். அது தெரியாமலே எனக்கு திருமணம் செய்து வைத்து விட்டார்கள். சிறுவயதில் இருந்தே எனக்கு முஸ்லிம்னாலே பிடிக்காது. அவர்கள் அணிந்து வரும் பர்தாவை நான் "இது என்ன? அங்கி போட்டுக் கொண்டு வருகிறார்கள்?" என்று கேலி பண்ணுவேன். எனக்கு திருமணம் ஆகி 3 மாதம் கழித்து அவருடைய முதல் தங்கை வீட்டிற்கு வந்து இருந்தார்கள். அவர்கள் பர்தா அணிந்து வந்தவுடன் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. நான் எனது அக்காவிடம் போய் கூறினேன். அவருடைய முதல் தங்கை முஸ்லிமாக இருக்கிறாள் என்று கூறினேன். அதற்கு எனது அக்கா, அவள் ஒருத்தி தானே அப்படியிருக்கிறாள் - நீ எதையும் கண்டு கொள்ளாதே! என்றும் அவளிடம் பேசாதே! அவளை வீட்டிற்குள் விடாதே! என்றும் கூறினாள். நான் கூட்டுக் குடும்பமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் என்னால் அவளை வெறுக்க முடியவில்லை. பிறகு அவருடைய முதல் தங்கை என்னையும் இஸ்லாத்திற்கு வரச் சொன்னாள். ஆனால் இஸ்லாத்தின் மீது எனக்கு தப்பான கண்ணோட்டமும், இஸ்லாம்னாலே எனக்கு பிடிக்காது. எனவே அவள் அழைத்ததற்கு நான் வரமாட்டேன் என்று கூறினேன். என்னுடைய கணவரின் தங்கை மீதி 4 பேரும் இஸ்லாத்திற்கு வந்து விட்டார்கள். அப்போது நான் அவர்களிடம் சென்று நீங்கள் அனைவரும் எங்களை அநாதையாக விட்டு விட்டு இஸ்லாத்திற்குச் சென்று விட்டீர்களே? ஏன்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இஸ்லாம்தான் உண்மையான மார்க்கம் என்று கூறினார்கள். பைபிளில் ஒரு தூதரைப் பற்றிக் கூறும்போது அவருடைய வயது 60 ஆகவும் இன்னொரு இடத்தில் 40 ஆகவும் வரும். இவ்வாறு முரண்பாடான சில விஷயங்களை நான் பார்த்துள்ளேன். ஆனால் குர்ஆன் எந்த வித முரண்பாடும் இல்லாமல் இருந்தது. அப்போது தான் எனக்கு இஸ்லாத்தின் மேல் ஒரு நல்ல அபிப்பிராயம் வந்தது. எனது கணவரிடம் இஸ்லாத்தைப் பற்றி கூறினேன். அவரும் இஸ்லாத்தைப் பற்றி புரிந்து கொண்டார். தொழுவது, வீட்டை விட்டு வெளியேறும்போது, பர்தா போட்டுக் கொண்டு வெளியே போவது, யாராவது வீட்டிற்கு வந்தால் ஸலாம் கூறுவது, குர்ஆன் ஒதுவது, இதுபோன்ற நிறைய விஷயங்கள் இஸ்லாத்தில் பிடித்து இருந்தது. அல்லாஹ் ஒருவன்தான் இறைவன் என்று தெரிந்தது. இஸ்லாம் ஓர் உண்மையான மார்க்கம்! அது முழுமையான மார்க்கம் என்று எனக்குத் தெரிந்தது! முஸ்லிம்கள் நல்ல பாசமாக நடந்து கொள்கிறார்கள். பைபிளில் ஏசு எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார். ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்? ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார்? என்று குழம்பிப் போய் இருந்தேன். குர்ஆனைப் படித்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அந்த கர்த்தரே அல்லாஹ் என்று! பிறகு கலிமா சொல்லி இஸ்லாமை ஏற்றுக்கொண்டேன். இன்னும் இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன் நீங்களும் இஸ்லாத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்று துஆ செய்கிறேன். அல்ஹம்துலில்லாஹ்.

நன்றி :
அபூ அப்திர்ரஹ்மான்
http://christianpaarvai.blogspot.com/2010/12/blog-post.html