வியாழன், 20 அக்டோபர், 2011

பவுலும் கிறிஸ்தவமும்! (பாகம் - 1)

இன்றைய கிறிஸ்தவமதத்தின் அனைத்து கோட்பாடுகளுக்கும் சொந்தக்காரர்...

கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் புதிய ஏற்பாட்டின் அதிகமான புத்தகங்களுக்கு ஆசிரியர் என்று நம்பப்படுபவர்...

இயேசுவே அறியாத பல புதிய கொள்கைகளை அவரின் பெயராலேயே போதித்தவர்...

இவர் இல்லையேல் இன்றைய கிறிஸ்தவமதமோ அதன் கொள்கைகளோ இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அந்த மதத்தில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்...

இயேசு, சத்தியத்தை உரத்து போதித்தார் என்பதன் காரணமாக யூதர்களின் கொலை வெறிக்கு ஆளாகி (பைபிளின் படி) சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை, ஆதாம் செய்த பாவத்தின் காரணமாக - அந்த பாவத்தைப் போக்கும் வகையில், இயேசு நமக்காக தன்னைத்தானே பலியிட்டுக்கொண்டார் என்று சொல்லி, அந்த கொலை சம்பவத்தை தியாகத்தின் சின்னமாக மாற்றி பிரச்சாரம் செய்தவர் ...

முன்னர் உள்ள தீர்க்கதரிசிகளும் இயேசுவும் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்ட பழைய ஏற்பாட்டையோ அல்லது அதன் கட்டளைகளையோ நாம் பின்பற்றத் தேவையில்லை, அது பலவீனமடைந்துவிட்டது, அது பயனற்று போய்விட்டது என்று போதித்தவர் ... அவற்றில் தடுக்கப்படவைகளை அனுமதித்தவர்... அவற்றில் செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டதை செய்யலாம் என்று போதித்தவர்...

இவர் எதை போதித்தாரோ அதுதான் இன்றைய கிறிஸ்தவமதத்தின் ஆணிவேர், அது தான் இன்றைய கிறிஸ்தவ மதத்தின்தலையாய கொள்கை, இவர் சொன்ன கொள்கைகளை நம்பாதவன் கிறிஸ்தவனே அல்ல, அவன் இரட்சிப்பை பெற முடியாது - அவன் நித்திய ஜீவனை அடைய முடியாது என்று சொல்லப்படும் அளவுக்கு கிறிஸ்தவ மதத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் அவர் யார்? என்றால்,


அவர் தான் கிறிதவர்களால் மிக உயர்வாக மதிக்கப்படும் புனிதப் பவுல் !

இப்படி சொன்னது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். ஆனால் அது தான் மறுக்கமுடியாத சத்தியமான உன்மை!

இவரைப்பற்றி வரலாற்று ஆசிரியர் மைக்கேல் ஹெச். ஹார்ட் அவர்கள் தனது 'THE 100'என்ற புத்தகத்தில் சொல்லும்போது,

'புதிய கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதில் முன்னனியில் இருந்தவர். பிற கிறிஸ்தவ எழுத்தாளரையும் சிநிதனையாளரையும் விட இவரே கிறிஸ்துவ இறையியலில் நிலையான, மிகப் பரந்த விளைவுகளை ஏற்படுத்தியவராவார்' என்கிறார். மற்றோர் இடத்தில்,

'கிறிஸ்துவத்தின் முக்கியமான அறநெறி, ஒழுக்க இயல் ஆகியவற்றுக்கு இயேசுநாதரே காரணமாக இருந்தாலும், அதன் இறைமையியலை (THEOLOGY) உருவாக்கியதில் முதன்மையானவரும், அதன்பால் மக்கள் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவரும், புதிய ஏற்பாட்டின் பெரும் பகுதியின் ஆசிரியருமான தூய பவுல்தான்' என்கிறார்.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா பவுலைப் பற்றிக் கூறும் போது :

எழுத்தாளர்களின் ஒரு அங்கம், உதாரணத்திற்கு W. Wrede அவர்களைப் போன்றவர்கள் பவுலை கடுமையாக எதிர்க்கின்றார்கள். கிறிஸ்தவ மதத்தின் இரண்டாவது நிறுவனர் என்று ஆகும் அளவுக்கு பவுல் அதை மாற்றி விட்டார் என அவர்கள் கருதுகின்றனர்.உண்மையைச் சொல்லப் போனால், அவர் தான் சர்ச்சினுடைய கிறிஸ்தவ மதத்தின் நிறுவனரே ஆவார். அந்த சர்ச்சினுடைய கிறிஸ்தவமோ இயேசு போதித்த கிறிஸ்தவத்திற்கு முற்றிலும் முரணானதாகும். நீங்கள் இயேசுவைப் பின்பற்றலாம் அல்லது பவுலைப் பின்பற்றலாம். ஆனால் இருவரையும் ஒரே நேரத்தில் பின்பற்ற முடியாது என அவர்கள் கூறுகின்றார்கள்.

தலைசிறந்த கிறிஸ்தவ வரலாற்றாசிரியரான ஜேம்ஸ் மாக்கினோன் பகிரங்கமாக உன்மைகளை ஒப்புக்கொள்கின்றார் :

'அவர் போதித்த கருத்தோட்டஙகள் அவரிலிருந்து உதித்தது தான் என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. அவருக்கு இயேசு நேரடியாகப் போதித்தார் என்று அவர் கூறினாலும் அவர் போதித்தது இயேசுவின் போதனைகளுக்கு ஒத்ததா என்பது தெளிவில்லாமல் இருக்கின்றது. அதே நேரத்தில், நியாயப் பிரமாணம் பற்றி இயேசுவின் கொள்கை பவுலின் கொள்கையோடு ஒத்துப் போகவில்லை. இதை வைத்துப் பார்க்கும் போது, தான் இயேசுவிடமிருந்து நேரடியாக செய்திகளைப் பெற்றேன் என்று பவுல் கூறுவது பிரச்சினைக்குரிய ஒன்றாகத் தான் இருக்கின்றது'என்று கூறுகின்றார்.

இன்றைய கிறிஸ்தவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பைபிளின் புதிய ஏற்பாட்டின் மொத்தமுள்ள 27 புத்தகங்களில் 14 புத்கங்களுக்கு சொந்தக்காரர் இந்த பவுல் என்று சொல்லப்படுகின்றது. இவர் எழுதியதாக சொல்லப்படும் புத்தகங்கள் அவர் வாழ்ந்த காலத்தில் உள்ளவர்களுக்கு கடிதங்களாக எழுதப்பட்டது என்றாலும், அவற்றையே தற்போது வேதம் என்றப்பெரில் பைபிளில் இனைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், புதிய ஏற்பாடு முழுவதும் இயேசுவுக்கோ அல்லது இயேசுவின் சீடர்களுக்கோ சொந்தமானதல்ல. (இது குறித்து மேலும் விரிவான கட்டுரை விரைவில் இன்ஷா அல்லாஹ்) மாறாக இவரும் இவரைச்சார்ந்தவர்களும் எழுதியதே. இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், இவரும் இவரைச் சார்ந்தவர்களும் ஏற்படுத்தியதே புதிய ஏற்பாடும், அதைச் சார்ந்துள்ளதாக சொல்லப்படும் இன்றைய கிறிஸ்தவ மதமும்.

பவுலின் நன்பரான லூக்காவால் எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டின் - அப்போஸ்தலர்களின் செயல் பாடுகள் பற்றி கூறும் - Acts of Appostle - என்ற புத்தகத்தில் மற்றவர்களைக் காட்டிலும் பவுலுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. Acts of Appostle என்ற ஆகாமம் இயேசுவின் சீடர்களின் செயல்பாடுகளைப் பற்றிக் கூறப்படும் புத்தகம் என்று கிறிஸ்தவர்கள் நினைத்துக்கொண்டிருந்தாலும் 28 அதிகாரங்கள் உள்ள புத்தகத்தில் 9 முதல் 28 வரையிலான அதிகாரங்கள் - கிட்டத்தட்ட 19 அதிகாரங்கள் - பவுலின் செயல்பாடுகள் பற்றித்தான் பேசுகின்றது. இந்த புத்தகத்தை அப்போஸ்தலர்களின் செயல் பாடுகள் என்று குறிப்பிடுவதை விட பவுலின் செயல்பாடுகள் என்று குறிப்பிட்டால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்றுச் சொல்லலாம், என்கிற அளவுக்கு அந்த புத்தகத்தில் இவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பவுலும் பவுலைச் சார்ந்தவர்களும் எதை எல்லாம் எழுதிவைத்தார்களோ அவை அனைத்துமே வேதவாக்கியம் என்ற சாயத்தை பூசி அவை அனைத்தும் கடவுளால் அருளப்பட்டது என்று சான்றிதழ் கொடுத்தவரும் இவரே. அதனால் தான் புதிய ஏற்பாட்டாளர்கள் எதை எழுதிவைத்தாலும் எப்படி எழுதி வைத்திருந்தாலும், அது எந்த அளவுக்கு முரண்பாடாகவும் குழப்பமானதாகவும் அறிவுக்கு பொருந்தாததாக இருந்தாலும், ஏன் இயேசுவின் வார்த்தைகளுக்கும் அவரது போதனைகளுக்குமே நேர் முரணாக இருந்தாலும் அவை அனைத்தையும் இன்றைய கிறிஸ்தவர்கள் அப்படியே கண்மூடி பின்பற்றுவதற்கு காரணம், பவுல் 2 திமோத்தேயு 3:16ன் மூலம் 'அவை அனைத்து வேதவாக்கியங்கள்' என்று கொடுத்த சான்றிதழே.

பவுலும் அவர் சொன்ன கொள்கைகளும் இல்லையேல் இன்றைய கிறிஸ்தவமதமே இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்கிற அளவுக்கு அம் மதத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்தவராக கருதப்படும் பவுல் என்பவர் யார்? அவர் இயேசுவின் சீடரா? அல்லது இயேசுவின் உறவினரா? அல்லது இயேசு வாழ்ந்த காலத்தில் ஏதாவது ஒரு வகையில் அவருக்கு உதவி செய்தவரா? உன்மையில் அவர் யார்?

செவ்வாய், 11 அக்டோபர், 2011

கேரளாவில் 5ம் வகுப்பு மாணவியை கடத்தி பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியார் கைது

கொல்லம்: கேரளாவில் 5ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற பாதிரியாரை போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம் கண்ணூர் அருகே உள்ள வடக்கஞ்சேரியைச் சேர்ந்தவர் சாம்சன். இவர் அங்குள்ள கிறிஸ்தவ குருத்துவ மடத்தில் உள்ள இளநிலை குருத்துவ கல்லூரியில் ஆசிரியராக உள்ளார்.

இந்த நிலையில் வடக்கஞ்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்ற சாம்சன் அந்த வழியாக சென்ற 5ம் வகுப்பு மாணவியை வழிமறித்தார். அதன்பின்பு அந்த மாணவியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்றார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு சென்றதும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் மாணவி சத்தம் போட்டாள். அப்போது அங்கு திரண்ட பொதுமக்கள் சாம்சனை பிடித்தனர். மேலும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சாம்சனை கைது செய்தனர்

நன்றி : http://thatstamil.oneindia.in/news/2011/10/12/christian-priest-held-trying-rape-girl-aid0175.html