நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்" - அல்-குர்ஆன்
புதன், 9 மார்ச், 2011
வன்புணர்வு முயற்சிக்காக இந்துமத சாமியாருக்கு அமெரிக்காவில் தண்டனை!
பிரகாஷானந்த் சரசுவதி என்பவர் அமெரிக்காவில் ஆஸ்டின் நகரில் 200 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் நடத்தி வருகிறார் . இவர் பக்தர்களால் ஸ்ரீ ஸ்வாமிஜி என்று அழைக்கப்படுகிறார். இவரது ஆசிரமம் ஹபர்சானா தாம்' என்று அழைக்கப்படுகிறது.
சாமியாரிடம் பக்தர்களாக இருந்த பலர் குடும்பத்துடன் இந்த ஆசிரமத்தில் வசித்து வந்தனர். அவர்களில் ஒரு தம்பதியின் மகள்கள் ஷியாமா ரோஸ் (வயது 30)இ வெஸ்லா டென்னிசன் கசிமீர் (27).
இந்த 2 பெண்கள் 12 வயது சிறுமிகளாக இருந்த காலம் தொடங்கி பல ஆண்டுகளாக இந்த பெண்களிடம் சாமியார் வன்புணர்வு செய்வதற்கான முயற்சியையும்இ பாலியல் பலாத்காரம் செய்வதற்கான முயற்சியையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த 2 பெண்களும் போலீசில் சாமியார் மீது புகார் கொடுத்ததைத் தொடர்ந்து சாமியார் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ரூ.5 கோடி ரொக்க ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதன்பிறகு 3-வதாக கதே டென்னிசன் என்ற பெண்ணும் சாமியார் மீது இதுபோல புகார் கொடுத்தார்.
சாமியார் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது.
அவருக்கு எத்தனை ஆண்டு ஜெயில் தண்டனை என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. 20 ஆண்டுகள் வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தீர்ப்பை கேட்டு அவரது பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சாமியார் அப்பாவி என்று அவர்கள் கூறினார்கள். இதோடு முடிந்து விடப்போவதில்லை. நாங்கள் அப்பீல் செய்வோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
திங்கள், 7 மார்ச், 2011
மாற்று மத சகோதர, சகோதரிகளுக்கான அழைப்பு
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்புக்குரிய சகோதர சகோதரிகளே!
சென்னையில் இயங்கி வரும் “இக்ராமுல் முஸ்லிமீன் சாரிடபுல் டிரஸ்ட்” என்ற அமைப்பின் சார்பாக “அற்புதப் படைப்பாளன்” – இப்பிரபஞ்சத்தின் இறைவன் பற்றிய கருத்தரங்கம் என்ற நிகழ்ச்சியை வரும் 13/03/2011 (ஞாயிற்றுக் கிழமை) அன்று நடத்த உள்ளோம் – இன்ஷா அல்லாஹ். (கருத்தரங்கம் நடைப்பெறும் இடத்தின் முகவரி இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது)
நிகழ்ச்சியில்:-
1. சகோதரர் முஹிப்புல்லாஹ் (முன்னாள் புத்த பீட்சு – சுவாமி ஆனந்தாஜி),
2. சகோதரர் M. C. முஹம்மது (முன்னாள் கிருத்துவ போதகர் – கிருஸ்து ராஜா), .
3. சகோதரர் அஹமது சுஃபியான், ஆகியோர் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்துகின்றனர் மற்றும்
4. டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) &
5. முஃப்தி உமர் ஷெரிஃப் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.
சகோதர, சகோதரிகளே! சென்னையை சேர்ந்த, தங்களுக்கு தெரிந்த, அறிமுகமான இஸ்லாத்தை அறிந்துக்கொள்ள நினைக்கும் மாற்று மத சகோதர, சகோதரிகளை இந்நிகழ்ச்சிக்கு அனுப்பி வையுங்கள். அல்லது எங்களுக்கு அவர்களின் முகவரி அல்லது மொபைல் எண் கொடுத்தால் அவர்களை நாங்கள் சந்தித்து / தொடர்பு கொண்டு அழைப்பிதழ் கொடுத்து வரவழைக்கின்றோம். பலர் இஸ்லாத்தை தெரிந்துக்கொள்ள விரும்புகின்றனர் ஆனால் அவர்களுக்கு சரியான தருணங்கள், விளக்கங்கள் கிடைப்பதில்லை.
எனவே இதுபோன்ற நிகழ்ச்சி அவர்களுக்கு ஒரு வாய்ப்பாகவும் அமையலாம். மாற்றார்களை இஸ்லாத்தின் பக்கம் வர தாஃவா செய்வது நமது கடமை; அதன் மூலம் அவர்களுக்கு இதாயத் தருவது இறைவனின் உரிமை.
இத்துடன் நிகழ்ச்சியின் அழைப்பிதழ் இணைக்கப்பட்டுள்ளது மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள: +91-91766 33023 – என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அன்புடன் சகோதரன்
ஹைதர் ஹுசேன் சென்னை
நன்றி : http://muthupet.org/