புதன், 9 மார்ச், 2011

வன்புணர்வு முயற்சிக்காக இந்துமத சாமியாருக்கு அமெரிக்காவில் தண்டனை!




பிரகாஷானந்த் சரசுவதி என்பவர் அமெரிக்காவில் ஆஸ்டின் நகரில் 200 ஏக்கர் பரப்பில் ஆசிரமம் நடத்தி வருகிறார் . இவர் பக்தர்களால் ஸ்ரீ ஸ்வாமிஜி என்று அழைக்கப்படுகிறார். இவரது ஆசிரமம் ஹபர்சானா தாம்' என்று அழைக்கப்படுகிறது.



சாமியாரிடம் பக்தர்களாக இருந்த பலர் குடும்பத்துடன் இந்த ஆசிரமத்தில் வசித்து வந்தனர். அவர்களில் ஒரு தம்பதியின் மகள்கள் ஷியாமா ரோஸ் (வயது 30)இ வெஸ்லா டென்னிசன் கசிமீர் (27).

இந்த 2 பெண்கள் 12 வயது சிறுமிகளாக இருந்த காலம் தொடங்கி பல ஆண்டுகளாக இந்த பெண்களிடம் சாமியார் வன்புணர்வு செய்வதற்கான முயற்சியையும்இ பாலியல் பலாத்காரம் செய்வதற்கான முயற்சியையும் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த 2 பெண்களும் போலீசில் சாமியார் மீது புகார் கொடுத்ததைத் தொடர்ந்து சாமியார் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ரூ.5 கோடி ரொக்க ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதன்பிறகு 3-வதாக கதே டென்னிசன் என்ற பெண்ணும் சாமியார் மீது இதுபோல புகார் கொடுத்தார்.

சாமியார் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது.

அவருக்கு எத்தனை ஆண்டு ஜெயில் தண்டனை என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. 20 ஆண்டுகள் வரை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த தீர்ப்பை கேட்டு அவரது பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சாமியார் அப்பாவி என்று அவர்கள் கூறினார்கள். இதோடு முடிந்து விடப்போவதில்லை. நாங்கள் அப்பீல் செய்வோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக