புதன், 27 ஜூன், 2012

கர்நாடகா : பாங்கு சொல்ல தடை விதித்த 3 நாட்களில்இஸ்லாத்தை ஏற்ற மூவர்!

கர்நாடக மாநிலத்தில் கடந்த 17ந்தேதி முதல் ஒலி பெருக்கியில் பாங்கு சொல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரு நிகழ்ச்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள், கலிமா சொல்லி இஸ்லாத்தை தழுவினர். பெங்களூருவை சேர்ந்த "மேகநாதன் தாகூர்" என்பவர் தனது பெயரை "முஹம்மத் யூசுப்" என்று மாற்றிக்கொண்டார். அவரது மற்ற இரண்டு சகோதரர்களான "சரவணத் தாகூர்" "முஹம்மத் யூனுஸ்" என்றும் "ஜூவால தாண்டன்" தனது பெயரை "முஹம்மத் யாகூப்" என்றும் மாற்றம் செய்துக்கொண்டனர். அதே நேரம் இவர்களது தாயார் "சுமத்ரா தேவி" மட்டும் இன்னும் இஸ்லாத்தை ஏற்கவில்லை. தந்தை "காஷி நாத் தாகூர்" பல ஆண்டுகளுக்கு முன்பே மரணித்து விட்டார். படத்தில் உள்ள முஹம்மத் யூசுப் கூறுகையில், தனக்கு ஜமீல் என்ற நெருங்கிய முஸ்லிம் பல மாதங்களாக இஸ்லாத்தின் பல விஷயங்களை போதித்து வந்ததாகவும் "நரகத்தின் அச்சம் மற்றும் சொர்கத்தின் ஆசை" தான், நான் இஸ்லாத்தை ஏற்க முக்கிய காரணம் என்றார், யூசுப். ஒரு பக்கம், ஒலி பெருக்கியில் அதிகாலை பாங்கு சொல்வதையும் பொறுக்க முடியாதவர்கள் உள்ள அதே பெங்களூருவில், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் படைத்தவர்களும் இருப்பதை பார்க்கும் போது நெஞ்சம் நெகிழ்கிறது.
http://maruppu.in/

வெள்ளி, 22 ஜூன், 2012

கருணை இல்லத்தில் பாலியல் தொல்லை : கிருஸ்தவ மதபோதகர் மகன் கைது

சென்னை அருகே உள்ள அரக்கோணத்தை சேர்ந்தவர் ஜார்ஜ் ஞானசேகரன். கிறிஸ்தவ மத போதகரான இவர் நாமக்கல் அருகே உள்ள வசந்தபுரம் போலீஸ் காலனியில் வாடகை வீட்டில் ஜாய் கருணை இல்லம் என்ற பெயரில் அனாதை குழந்தைகளை பராமரிக்கும் இல்லத்தை நடத்தி வருகிறார்.

இந்த இல்லத்தில் 18 மாணவிகளும், 6 மாணவர்களும் தங்கி படித்து வருகிறார்கள். இவர்கள் நாமக்கல்லில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து வருகின்றனர். ஜார்ஜ் ஞானசேகரனின்  மகன்  ஜானி (28). இவர் அங்குள்ள மற்றொரு வீட்டில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்த இல்லத்தை சேர்ந்த 14 வயது மாணவி ஒருவர் நாமக்கல்லில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கமாக பள்ளிக்கு வேனில் சென்று வரும் இவர் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் பஸ்நிலையத்தில் அழுது கொண்டு இருந்தார்.

இதுகுறித்து தகவல் தெரியவந்ததும் அனைத்து  மகளிர் போலீசார் விரைந்து சென்று அந்த மாணவி யை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், சக மாணவிகளுடன் கருணை இல்லத்தில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்ததாகவும், அப்போது இரவு 10 மணியளவில் அங்கு வந்த நிர்வாகியின் மகன் ஜானி தன்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்றதாகவும், பின்னர் அங்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் அடிக்கடி இது போல் தொல்லை கொடுப்பதால் அங்கு தங்கி படிக்க விருப்பம் இல்லாமல் வெளியே வந்து விட்டதாக கூறினார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் லலிதா வழக்குப்பதிவு செய்து ஜானியை கைது செய்தார். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.



http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=77899

புதன், 13 ஜூன், 2012

பலமுறை சீரழித்ததாக பெண் புகார்...சென்னையில் பாதிரியார் கைது

சென்னை: தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக சென்னை பரங்கிமலையைச் சேர்ந்த பாதிரியார் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்தார். இதன் பேரில் அந்தப் பாதிரியாரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சென்னை பரங்கிமலையைச் சேர்ந்தவர் ரெஜினா. இவர் புனித மேரி என்ற பள்ளியில் பணியாற்றியவர். இவர் பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் பரங்கிமலையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தி்ல பாதிரியாராக பணியாற்றி வரும் பிரேம்குமார் தன்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், கல்யாணம் செய்து கொள்ள மட்டும் மறுப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இந்தப் புகாரைப் பதிவு செய்த போலீஸார் பிரேம்குமாரைக் கைது செய்தனர். அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன. இந்த சம்பவத்தால் பரங்கிமலையில் பரபரப்பு ஏற்பட்டது.
http://tamil.oneindia.in/news/2012/06/13/tamilnadu-christian-priest-arrested-rape-case-155639.html